BREAKING NEWS
Search

‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’ – ஊடகங்களை வெளுத்த நீதிபதி பத்மநாபன்

‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’

justice

டிகர் சங்கத் தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம்… செய்தியாளர்கள் இருவர் இப்படிப் பேசிக் கொண்டனர்.

“வட நாட்டில் செய்திச் சேனல்கள் பார்ப்பவர்கள், ‘என்ன இன்னிக்கு தமிழ்நாட்டில் தேர்தலா… தேர்தல் கமிஷன் அறிவிக்கவே இல்லையே? என ஆச்சரியப்படுகிறார்கள்”.

இதில் மிகை ஏதுமில்லை. அந்த அளவு முக்கியத்துவம் இந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு தரப்பட்டது.

காரணங்கள் இரண்டு:

நடிகர் நடிகைகளைப் பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பார்ப்பது, படிப்பது.

கன்டென்ட் எனப்படும் விஷயம்.. அதுவும் சுவாரஸ்யமான விஷயம் கிடைக்காமல் ஊடகங்கள் திண்டாடுவது.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்கள் அனைவருமே ஈடுபாடு காட்டிய இந்தத் தேர்தலுக்கு தினமும் முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிட்டவர்கள், தேர்தலையும் அதன் முடிவு அறிவிப்பையும் நேரடி ஒளிபரப்பாகவே காட்டினர்.

மீடியா உலகில் இது உச்சபட்சமாகப் பார்க்கப்பட்டது. ஒரு சாதாரண நடிகர் சங்கத் தேர்தலுக்கு இத்தனை முக்கியத்துவம் தருவது அவசியமா? மீடியாக்கள் மக்களை சினிமாவின் அடிமைகளாக்கிவிட்டனவே என்ற குமுறலும் எழுந்தது.

“இது மிகப் பெரிய அநியாயம். நாட்டில் இன்று பருப்பு விலை ஐந்து மடங்கு உயர்ந்து மக்களை பயமுறுத்திக் கொண்டுள்ளது. பல்வேறு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிலையில் ஒரு சாதார சங்க தேர்தலை, பொதுமக்களுக்கு எந்த வகையில் பலனில்லாத விஷயத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருவது அநியாயம் மட்டுமல்ல, அயோக்கியத்தனம்,” என்றார் பேராசிரியர் சுபவீ.

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனுக்கும் இந்தக் கோபம் இருந்திருக்கும் போல.

தேர்தல் நடந்த பள்ளி வளாகத்துக்குள் குவிந்திருந்த தனியார் சேனல் கேமராக்கள்,. நேரடி ஒளிபரப்பு வாகனங்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எண்ணிக்கையைப் பார்த்து அவர் திகைத்துப் போய்விட்டார். இதற்கு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள்? நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அளவுக்கு முக்கிய நிகழ்வா இது? மக்கள் பிரச்சினை இல்லையே? என்று அவர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தார்.

ஒவ்வொரு முறையும் அவர் நடிகர்கள் பெற்ற வாக்குகளை அறிவிக்க வரும்போதும் நிருபர்களும் ஒளிப்பதிவாளர்களும் முட்டி மோதி பெரும் சத்தத்துடன் அவர் மீது விழப் போக, கடுப்பான அவர், “நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா… எத்தனை முறை சொல்றேன். உங்க நடத்தையை மாத்திக்கங்க. இது ஒரு சின்ன விஷயம்.. கொஞ்சம் காத்திருந்தா சொல்லப் போறேன். அல்லது நான் சொல்ல வேண்டும் என்றால் அமைதியா இருங்க…திருந்தப் பாருங்க,” என்றார்.

அத்தனை சீக்கிரம் திருந்திடுவாங்களா என்ன…  கூச்சலும் முட்டல் மோதலும் தொடர்ந்தது!

-விதுரன்

என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’ – ஊடகங்களை வெளுத்த நீதிபதி பத்மநாபன்

 1. arulnithyaj

  நல்ல சொன்னீங்க விதுரன் அண்ணா …ரெம்ப மோசமாக இருக்கு இப்போ ஊடக தர்மம் செயல்பாடு
  🙁

 2. குமரன்

  நடிகர் சங்கத்தில் மொத்தமாக மூவாயிரம் உறுப்பினர் கூட இல்லை.

  வாக்களித்தவர்கள் இரண்டாயிரத்துச் சொச்சம்தான். இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? ஒரு ஞாயிற்றுக் கிழமை முழுக்க எல்லா தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பாகவே செய்தது அருவருப்பைத்தான் தந்தது.

  ஊடகங்கள் இப்போதெல்லாம் பரபரப்பைத்தான் செய்தி என்று நினைக்கின்றன.
  அதுமட்டும் அல்ல. ஊடகங்கள் பரபரப்பான சுழல் அமைத்துவிட்டால் ஒரு விசாரணையை நடத்தித் தீர்ப்பையும் வழங்கி விடுகின்றன. உண்மை வெளிவந்து, இவர்கள் தண்டித்த அந்த நபர் அப்பாவி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், மக்கள் மத்தியில் அந்த ஆள் குற்றவாளிதான், என்ன அநியாயம்? இவர்களுக்கு இந்த அதிகாரம் எப்படி வந்தது? யார் தந்தது? இவர்களாக எடுத்துக் கொண்டதுதான்.

  ராஜ்தீப் சர்தேசாய், பார்க்கா தத், அர்னாப் கோஸ்வாமி, வீரபாண்டியன், ரபி பெர்னார்ட் என்று வரிசையாக வந்த இந்த “மீடியா நீதிபதிகள்” தீர்ப்பால் குற்றவாளிகளாக மக்கள் மனதில் பதிந்தவர்களுக்கு யார் உண்மையான நீதியை வழங்குவார்கள்?

 3. மிஸ்டர் பாவலன்

  “ஊடகங்கள் இப்போதெல்லாம் பரபரப்பைத்தான் செய்தி என்று நினைக்கின்றன.” (அறிஞர் குமரன்)

  அருமையான கருத்து! நெற்றி அடி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. குமரன்

  நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடந்ததில் ஒரு நல்லது நடந்திருக்கிறது …..

  பாவலனை அடிக்கடிப் பார்க்கிறோம் ….. வாழ்க உலகநாயகன் …….

  என்ன அவர் நடிப்பதெல்லாம் லோக்கல் படம்……. (நடிப்பது லோக்கல் படம் என்ற இந்தக் கருத்து எனது நண்பர் ஒருவருடையது….)

 5. enkaruthu

  நான் கொஞ்ச நாட்கள் முன்பு வரை அனைத்து பத்திரிகைகளும் படித்து வந்தேன்.அதில் நான் கண்டுகொண்டது நாட்டில் என்ன நடந்தாலும் அதை எப்படியாவது தி .மு.க. விற்கு சாதகமாக கொண்டு போகும் வேலையை நக்கீரன் பத்திரிகை செய்கிறது.அ.தி.மு.க விற்கு சாதகமாக கொண்டு போக குமுதம்,தின மலர் போன்ற பத்திரிகை செய்கிறது.சரி இந்த தொலைகாட்சியில் வரும் நிகழ்ச்சியை பாருங்கள் இவர்களின் அறிவு புலமையை காட்டுவதற்காக அங்கு வரும் பிரபலங்களை பேசவே விடாமல் இவர்களே பேசி இவர்களே ஒரு முடிவு எடுத்துவிடுவர்.மீடியா இந்த நாட்டை மறைமுகமாக தன கட்டுப்பாடில் கொண்டு வர முயற்சி செய்கிறது.என்ன பண்ணுவது காமராஜர் காலத்திலேயே கலைஞரைதனே பத்திரிகைகள் muniruthun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *