BREAKING NEWS
Search

ஆர்கே நகர் இடைத் தேர்தல்: அபாரமாய் வென்றார் முதல்வர் ஜெயலலிதா

ஆர்கே நகர் இடைத் தேர்தல்: அபாரமாய் வென்றார் முதல்வர் ஜெயலலிதா

jaya

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரனை விட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

16 வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,60921 வாக்குகள் பெற்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 9,669   வாக்குகள் பெற்றுள்ளார். டிராபிக் ராமசாமி 4,145 வாக்குகள் பெற்றுள்ளார்.

1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  தனக்கு வாக்களித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா  நன்றியை தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலையே அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஆர்.கே.நகர். தொகுதியில் அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள்  வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ஜெயலலிதா இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் இந்த முறைதான் இவ்வளவு அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

-என்வழி

 




One thought on “ஆர்கே நகர் இடைத் தேர்தல்: அபாரமாய் வென்றார் முதல்வர் ஜெயலலிதா

  1. குமரன்

    ஜெயலலிதா குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தபோது பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தார், நீதிமன்றங்களும் அவருக்கு வசதியாக ஒத்துழைத்தன,

    2014 செப்டம்பர் 27 ஆம் தேதி அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வந்து சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, வழக்கு தினமும் அவசர கதியில் விரைவாக நடந்து அவருக்கு 28 நாளில் உச்ச நீதி மன்றம் பெயில் கொடுத்தது. இதே உச்ச நீதி மன்றம் குற்றம் சாட்டப் பட்டவர் என்ற நிலையிலிருந்த ஆ. ராசாவுக்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்துத்தான் லியில் கொடுத்தது என்பதை ஒப்பு நோக்க வேண்டும்.

    ஜெயா அப்பீலை டிசம்பர் 18 ஆம் தேதி தாக்கல் செய்ய, விரைவாக வழக்கை நடத்தி, புகார்தாரரான சுப்பிரமணியம் சாமியையும், அன்பழகனை அண்ட விடாமல் உயர் நீதிமன்றமும் உச்ச நீதி மன்றமும் அரணாய் இருக்க, ஜெயா அரசே நியமித்த அரசு வழக்கறிஞராக ஒப்புக்குச் சப்பாணியாய் போடத் தெரியாத பர்சண்டேஜ் நீதிபதி குமாரசாமி இந்த ஜெயாவை விடுவிக்க எடுத்துக் கொண்ட காலம் வெறும் ஐந்து மாதம் மட்டுமே!

    பதினெட்டு ஆண்டுகள் இளுத்தடித்தபோது ஜெயா குற்றம் சாட்டப்பட்டவர்.
    அவரை விடுதலை செய்ய வெறும் ஐந்து மாத நீதிமன்ற நடவடிக்கைகள், எத்தனை அப்பட்டமான சட்டத்தை வளைத்த செயல்கள், இவற்றுக்கு உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உடந்தை.

    பிறகு வெறும் ஒன்றரை மாதத்தில் இடைத் தேர்தல், ஜெயா வெற்றி. இப்போது இந்த அழுகுணி ஆட்டத்தில் ஜெயாவுக்கு தேர்தல் கமிஷன் உடந்தை.

    இதற்குப் பெயர் அபார வெற்றி என்று எப்படி வினோ எழுதினீர்கள்?

    இதற்குப் பெயர் அநியாய, அக்கிரம, அராஜக, அதர்ம வெற்றி.

    இறைவன் போடும் கணக்கில் எவரும் தப்ப முடியாது. ஜெயா உள்பட. அந்த நாள் விரைவில் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *