BREAKING NEWS
Search

ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்

ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்

டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடர்ந்து நடக்கும். அதற்கு இனி இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முதல் முறையாக கடந்த ஆண்டு 2 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது சசிகலா வாக்குமூலம் அளித்து வருகிறார்.

ஆரம்பத்தில் தொடர்ந்து வாக்குமூலம் அளித்து வந்த சசிகலா, கேள்விகளுக்குப் பதில் தர அதிகம் நேரம் எடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் பொறுமையைச் சோதித்து வருகிறார். பல முறை நீதிபதியே கோபப்படும் அளவுக்கு அவரது செயல்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் திடீரென புதிதாக ஒரு கோரிக்கையை அவர் தனி நீதிமன்றத்தில் வைத்தார்.

அதில் தனக்கு முறையாக பதிலளிக்க வசதியாக வழக்கின் ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தரவேண்டும் என்று குண்டைப் போட்டார். ஆனால் இதை தனி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் போனார். அங்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் சசிகலா.

தனது மனுவில்,  விசாரணை நீதிமன்றம் நான் கேட்ட ஆவணங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தர மறுக்கிறது. இதனால் என்னால் அரசுத் தரப்பு கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதை சந்தித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

ஏற்கெனவே தரப்பட்ட தமிழ் ஆவணங்கள்…

ஏற்கெனவே தனக்கு ஆங்கிலம் தெரியாது எனக் கூறி, சசிகலா கோஷ்டி சாதித்ததையடுத்து, தனியாக ஒரு அலுவலகமே அமைத்து, மொத்த குற்றப்பத்திரிகை மற்றும் தொடர்புடைய ஆவணங்களையும் தமிழில் தந்தது கர்நாடக சிறப்பு நீதிமன்றம்.

ஆனால் இப்போது வழக்குக்காக தாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் மீண்டும் தமிழில் கேட்டு வருகிறார்.

-என்வழி செய்திகள்
8 thoughts on “ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்

 1. chenthil UK

  நீதிமன்றதால் ஒன்றும் செய்து விட முடியாது… உலகமே நாடக மேடை.. நீதிமன்றங்கள் விதிவிலக்கல்ல

 2. Rajkumar.V

  PAVALAN Nadunilyalar mugamudi potu ura emathitu irukaru. Why Jaya pathuna negative news kelam avar coment podaratu illa? engada karunanidiya pathi news varum thiti comment podalam nu than irukanga. Karunanidiya thiti comment potavanenlam Nadunilaiyalara? APA dinamalar, NamathuMGR, Dinamani than Ulagathulaye nadunilai pathirikaikal.

 3. பாவலன்

  //பாவலன் நடுநிலையாளர் முகமூடி போட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்காரு// (ராஜ்குமார்)

  1) நான் நடுநிலையாளர் என்று என்னை முன்பு குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். மறுக்கவில்லை. கடந்த பல மாதங்களாக அவ்வாறு
  எழுதுவதை முற்றிலும் நிறுத்தி இருக்கிறேன். இடைத் தேர்தல்களில்
  AIADMK வெற்றி பெற்ற போது நான் பாராட்டி ஒரு வரி எழுதினேன் என்று
  நீங்கள் காட்ட முடியாது. கவுன்சிலர்களுக்கு முதல்வர் மீட்டிங் போட்டு
  அவர்களது தவறான நடவடிக்கைகளை கண்டனம் செய்தபோது பலரும்
  பாராட்டியபோதும் ‘இது அவர் கடமை, தனியாக பாராட்டு எதுக்கு?’
  என்று நான் காமென்ட் போடவில்லை. “அரசியல் எழுதுவது வேண்டாம்,
  ஒதுங்கி விடலாம்” என்பதே எனது சமீபத்திய நிலையாக உள்ளது.

  2) கோர்ட் சம்பந்தமான ஜெயா செய்திகளுக்கெல்லாம் ‘நீதிக்கு
  தலைவணங்கு’ என்று ஒரு கமெண்ட் போடுவேன். இவ்வாறு எழுதி எழுதி
  எனக்கே போர் அடித்து விட்டது. அதனால் எழுதுவதில்லை. அவ்வளவு தான்.

  3) நான் ஊரை ஏமாற்றுவதாக எழுதி உள்ளீர்கள். இதை மறுக்கிறேன்.
  நான் ஒரு scientist என்பதால் செய்தித்தாள்களை அலசிப் படிக்கவோ,
  TV பார்க்கவோ கூட எனக்கு நேரமில்லை. குமரன், கிருஷ்ணன், கணேஷ்
  ஷங்கர் போன்ற நண்பர்களுக்கு நான் மதிப்பு கொடுப்பதால் அவர்களுடன்
  சேர்ந்து வினோ கட்டுரைகளைப் படித்து சிலவற்றிற்கு பதில் கொடுக்கிறேன். எனக்குப் பெரும் அரசியல் அறிவு, ஈடுபாடு கிடையாது.
  நான் எழுதுவது பிடிக்கவில்லை என்றால் படிக்கவேண்டாம்.
  சிறப்பாக எழுதும் மற்றவர்களைப் படியுங்கள். நன்றி.

  -பாவலன்

 4. தினகர்

  /பாவலன் நடுநிலையாளர் முகமூடி போட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்காரு//

  ராஜ்குமார் – பாவலன் தனது நிலையை மாற்றிக்கொண்டு வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் போல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வரும் அவரது கருத்துக்களும் அதே அடிப்படையில் தான் இருக்கிறது. அரசியல் தொடர்பாக அவரது அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது என்பது கண்கூடாக தெரிந்த பிறகும் இப்படி சொல்வது முறையல்ல..

  மேலும் , இப்படி யாரையும் நேரடியாக குற்றம் சாட்டி பேசுவதற்கு நாமெல்லாம் அரசியல்வாதிகள் அல்லவே.. முடிந்தவரை கருத்துக்களை மட்டுமே விமரிசிக்கலாமே.. தவறாக எடுத்துக்க வேண்டாம் ப்ளீஸ் 🙂

 5. பாவலன்

  தினகரின் கருத்தான விளக்கத்திற்கு நன்றி.

  திருவள்ளுவர் சொல்வது போல்:

  “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்.”

  ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து
  அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு
  அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். நன்றி.

  -பாவலன்

 6. enkaruthu

  தினகர் சொல்வதை ஒப்புகொள்கிறேன்.ஒரு வேலை பாவலன் அவர்கள் முன்பு போட்ட கம்மேட்டை நினைத்து கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.என்னை பொறுத்த வரை இங்கே பாவலன் என்ற பெயருக்கு பதிலாக கிருஷ்ணன் என்ற பெயரை ராஜ்குமார் அவர்கள் போட்டிருந்தால் ஓரளவுக்கு தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து போயிருக்கும்(இதற்க்கு என்ன என்ன ஆங்கில பத்திரிகையை மேற்கோள் காட்டி நண்பர் கிருஷ்ணன் அவர்கள் பதில் போட போறாரோ தெரியவில்லை).

 7. பாவலன்

  என்னைப் பற்றி மேலே ‘என் கருத்து’ அவர்கள் எழுதிய கருத்தில்
  “ஓரளவுக்கு’ என்ற சொல்லையும், கிருஷ்ணன்-ஆங்கிலப் பத்திரிக்கை
  மேற்கோள் என எழுதி இருந்ததையும் மிகவும் ரசித்துப் படித்தேன்.

  இந்த வலையில் பலர் எழுதும் காமேன்ட்டுகளை நான் வேகமாக
  வாசித்தாலும் ‘என் கருத்து’ அவர்கள் எழுதுவதை தான் பல தடவை
  படிக்கிறேன். அவரிடம் உள்ள honesty, naivety சிறப்பானவை.

  -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *