BREAKING NEWS
Search

ச்சும்மா.. நெனச்சிப் பார்த்தேன்!

சும்மா.. நெனச்சிப் பார்த்தேன்!

22jaya2 (1)

1996 ஜெயலலிதா ஆட்சி போய் கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்ற நேரம்..  முன்னாள் முதல்வராகிவிட்ட ஜெயலலிதா மீது அடுத்தடுத்து வழக்குகள்.

இவர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பொறுப்பு எனக்கும் கானுக்கும் இன்னொரு நபருக்கும் தரப்பட்டிருந்தது. அலைச்சல் பிடித்த வேலை என்பதால் அந்த இன்னொரு நபர் பார்ட்டி ஆபீஸ் பீட்டுக்குப் போறேன் என்று சொல்லிக் கிளம்பிவிடுவார்.

போயஸ் கார்டன், சாஸ்திரி பவன், கமிஷனர் அலுவலகம், மத்திய சிறைச்சாலை என மாறி மாறிப் பறக்க வேண்டும். ஆனால் குறைந்தபட்சம் பைக் கூட இல்லை. பஸ்ஸில்தான்.

இரவு 10 மணிக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்வார்கள். போனால், பத்து, பதினொன்று, பனிரெண்டெல்லாம் தாண்டும். கடைசியில் ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தது அடுத்த நாள் காலையில்! இரவெல்லாம் காத்திருந்தவனை அனுப்பிவிட்டு டூட்டி மாறுவேன்..

இது ஒரு முறை இருமுறை அல்ல.. பல நாட்கள் தொடர்ந்தது. திடீரென நள்ளிரவில், ‘ஓடுங்க ஓடுங்க.. ஃபெர்ரா கேஸுக்காக ஜெயலலிதா வர்றாங்களாம்’ என்று விரட்டுவார் குமார் ராமசாமி. ஆபீஸ் காரில் போய் இறங்கிக் கொள்வோம். ஆனால் ஜெயலலிதா வரமாட்டார்… திரும்பி வர பஸ் கிடைக்காமல் நடந்து வந்த நாட்களும் உண்டு.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் மத்திய சிறை பாலமே கதி என்று கிடந்திருக்கிறோம்.

1996-ல் ஒவ்வொரு முறை ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்ட போதும், அது தொடர்பான செய்தியைச் சேகரித்தவர்களில் நானும் நண்பன் கானும் இருந்திருக்கிறோம்!

1996-ல் தொடரப்பட்ட இந்த வழக்குகள் அந்த ஆண்டு, அல்லது அடுத்த ஆண்டே முடிந்து ஜெயலலிதா, சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் அது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்று, பெரும் பலத்துடன், மக்களின் அபிமான தலைவியாக, முதல்வராகத் திகழும் சூழலில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, எப்போதும் ஒருவித ஆராதனை மனநிலையில் உள்ள இந்த மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

அடுத்த சில நாட்களுக்கு வெளியில் செல்ல முடியுமா தெரியவில்லை… தமிழகம் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது!

-வினோ
4 thoughts on “ச்சும்மா.. நெனச்சிப் பார்த்தேன்!

 1. குமரன்

  ஒரு செய்தியாளர் படும் அவஸ்தைகளை மிக அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்.

  பத்திரிகைகள் என்பது ஜன நாயகத்தின் ஒரு தூண் என்று சொன்னவர் நன்கு உணர்ந்தே சொல்லி இருக்கிறார். அரசியல் அதிகாரம், ஆட்பலம், கும்பல் சூழ ஆதரவு, பண பலம், ஆடம்பரம்,படாடோபம், அதிகார பலம், வழக்கறிஞர் -பத்திரிக்கை அதிபர்-பணக்காரர்- தொழிலதிபர் என்று மேல்மட்ட ஆதரவு – இவற்றை எல்லாம் வைத்துக் கொண்டு ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகள் செய்யும் உழல குறித்து வெளிவரும் செய்திகளுக்குப் பின்னால் ….

  போக்குவரத்துக்குக் கால்நடையாய், பஸ் கிடைப்பதே “luxury” எனும் அளவுக்கு, தூக்கம் இல்லாமல் உணவு இல்லாமல் சேவை செய்யும் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஜன நாயக சமுதாயம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

 2. குமரன்

  தாமதமாக வந்தாலும் சிறப்பான தீர்ப்பு. யார், எவர் என்று பாராமல், விருப்பு வெறுப்பின்றி பார்த்தால், உழல செய்பவர்கள் இனி கொஞ்சமாவது யோசிப்பார்கள் என்பது மிக்க மன நிறைவைத் தருகிறது.

  அந்த நீதிபதி எத்தனை விதமான அழுத்தங்களைச் சந்தித்திருப்பார் என்று சிந்தித்துப் பார்த்தால், அவருக்கு நமது ஜனநாயக சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருப்பது புரிகிறது. மைக்கேல் குன்ஹாவும், அவருக்கும் முன்னர் வழக்கை விசாரித்த 13 நீதிபதிகளுக்கும் பாராட்டுக்கள்.

  டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு உதவிய காஞ்சி சங்கராச்சாரியாரை இந்த முறை அணுக இயலாமல் போனது நாட்டின் தேசத்தின் அதிர்ஷ்டம். இறைவனின் செயல்பாடுகள் என்றுமே விசித்திரமானவை. இறுதித் தீர்ப்பு எவரையுமே அகங்காரத்தில் இருந்து மீண்டு உண்மை நிலையை உணர வழிகோலும். ஜெயாவுக்கு அந்தத் தருணம் இது.

 3. kumaran

  JJ இக்கு இது சாதகமா போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *