BREAKING NEWS
Search

வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா!

வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா!

seeks-compensation

சென்னை: சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆகி வந்த தன்னை வாழ்த்தி வரவேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுதலையான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

அதில், “நீங்கள் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நல்ல நேரம் அமைவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலம், அமைதி கிடைக்க வாழ்த்துகிறேன்,’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபோல் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும், ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், ‘‘தங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன், எனது ஆதரவு, அனுதாபம் ஆகியவை எப்போதும் தங்களுக்கு உண்டு. இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். மீண்டும் உங்கள் தலைமையில் ஆட்சி நிர்வாகம் அமைவதைப் பார்க்க முடியும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்,’’ என்றார்.

இருவருமே ஜெயலலிதா மீது அன்பும், பரிவும் காட்டி இருந்தனர். இதற்காக இருவருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

Rajini-invites-jayalalitha

அன்பான வார்த்தைகளுக்கு நன்றி…

ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா அனுப்பி உள்ள கடிதத்தில், “நேற்று தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு என் மீதான கனிவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது வாழ்த்துக்களை உங்களது குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்,’’ என்று கூறியுள்ளார்.

நெகிழ வைத்தது…

மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தங்களது கடிதம் என் மனதை ஆழமாகத் தொட்டு நெகிழ வைத்து விட்டது. பணிச் சுமைக்கிடையிலும் என்னை நினைத்து கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இறைவன் நன்மை புரியவும் வாழ்த்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

– என்வழி




3 thoughts on “வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா!

  1. மிஸ்டர் பாவலன்

    “பண்புடையார் பட்டுண்டு உலகம்”

    – மிஸ்டர் பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *