BREAKING NEWS
Search

கோச்சடையான் ஸ்பெஷல் -1: ஜெயா டிவிக்கு ஒளிபரப்பு உரிமை!

‘கோச்சடையான் ஆட்சி’ ஆரம்பம்…  

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இது. ஒவ்வொரு செய்தியும் ஆனந்தத்தில் ரசிகர்களை அதிர வைக்கும் அளவுக்கு விசேஷமானவை.

இந்த செய்திகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமானவை. படத்தின் தயாரிப்பாளர்கள் ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளவை!

ஜெயாவுக்கு ஜாக்பாட்!

ரஜினி, தீபிகா, சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி, ஜாக்கி ஷெராப் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள 3டி படமான கோச்சடையான் உரிமையை வாங்க பெரிய தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆர்வம் காட்டின.

ஆனால் படத்தின் தொலைக்காட்சி உரிமை என்ற ஜாக்பாட் இந்த முறை ஜெயா தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா மட்டுமல்ல.. இந்திய சினிமாவில் எந்தப் படத்துக்கும் தராத அளவுக்கு பெரும் விலையை இந்தப் படத்துக்கு தந்துள்ளது ஜெயா தொலைக்காட்சி. ஆனால் என்ன தொகை என்பதை தயாரிப்பாளர்கள் குறிப்பிடவில்லை.

இந்தி மற்றும் தெலுங்கு ஒளிபரப்பு உரிமைக்கு ஜீ, சோனி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகள் மோதி வருகின்றன.

அடுத்த அப்டேட் விரைவில்…

-என்வழி ஸ்பேஷல்




7 thoughts on “கோச்சடையான் ஸ்பெஷல் -1: ஜெயா டிவிக்கு ஒளிபரப்பு உரிமை!

  1. nutton

    வினோ நீங்கள் மட்டும் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக (அப்படி சொல்வதை விட கருனாநேதிக்கு ஆதரவாக ) விமர்சனம் எழுதுகிறிர்கள் ஆனால் உங்கள் மேலிடம் அப்படி இல்லை ஆடுற கோவிலுக்கு தீவெட்டி பிடிப்பார்கள் அது தவறு அல்ல அதான் பிழைக்கிற வழி.

  2. மு. செந்தில் குமார்

    முன்பு ஒரு முறை தலைவரா ? முன்னணி தொலைக்காட்சியின் மார்க்கெட்டிங் மசுலா ? என்ற விவாதம் நடந்தது.

    இப்பொழுது தெரியும் அதற்கான பதில் (மற்றவர்களுக்கு)

  3. kumaran

    நான் ஜெயா டிவி விரும்பி பார்ப்பதே இல்லை, இனிமேல் ஜெயா டிவி தான்.

  4. மிஸ்டர் பாவலன்

    //ஆனால் படத்தின் தொலைக்காட்சி உரிமை என்ற ஜாக்பாட் இந்த முறை ஜெயா தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ளது.// (செய்தி)

    சூப்பர்! ரவி பெர்னார்டு எப்படிக் கலக்கறார்னு பார்ப்போம்!

    -மிஸ்டர் பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *