தமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றினார் ஜெ.. 2 அமைச்சர்கள் நீக்கம்; இலாகாக்கள் மாற்றம்!!
Thursday, January 26, 2012 at 10:00 pm | 274 views
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்.. 2 அமைச்சர்கள் நீக்கம்; இலாகாக்கள் மாற்றம் – நாளை பதவி ஏற்பு
சென்னை: தமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றி அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றி அமைத்துள்ளார்.
இந்த முறை, தமிழக அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்துள்ளார் ஜெயலலிதா. இவர்கள் இருவரின் பொறுப்புக்களையும் கடந்த ஜனவரி 19-ம் தேதிதான் மாற்றி அமைத்தார் ஜெயலலிதா. இப்போது முற்றாகவே நீக்கியுள்ளார்.
என் ஆர் சிவபதியை பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நல அமைச்சராக்கியுள்ளார். முசிறி தொகுதி எம்எல்ஏ இவர்.
முக்கூர் சுப்பிரமணியத்துக்கு தகவல் தொழில் நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றவர் முக்கூர் சுப்பிரமணியம்.
அமைச்சர் செங்கோட்டையன் வருவாய்த்துறை அமைச்சராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த ‘ஆலோசனையை’ ஆளுநர் ரோசைய்யா ஏற்றுக் கொண்டதாகவும், புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்கு வந்த 7 மாதங்களில் 7 வது முறையாக அமைச்சரவையை மாற்றியும் அமைச்சர்களை நீக்கியும் உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. 7 மாற்றங்களில் 5 முறை அமைச்சர்கள் நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு முறை இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
கடந்த நவம்பரில் நீக்கப்பட்ட சிவபதிக்கு இந்த முறை மீண்டும் பதவி அளித்துள்ளார் ஜெயலலிதா என்பது கவனிக்கத்தக்கது.
-என்வழி செய்திகள்





அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




யாரை நம்புவது, நம்ப முடியாது என்று தெரியாத ஒரு முதல்வர் வேறு என்ன செய்வார். எந்த அமைச்சராவது முதல்வரிடம் அரை மணி நேரமாவது சம்மந்தப்பட்ட துறை குறித்து ஆலோசனை நடத்தியிருப்பாரா? அதற்கெல்லாம் முதல்வரின் நேரம் இருக்குமா?
அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சி சம்மந்தமாகவாவது அவர்கள் கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் முதல்வரிடம் பேச முடியுமா?
எல்லாமும் முதல்வரின் தனிப்பட்ட முடிவு – செயல்படுத்துவது அதிகாரிகள் – அமைச்சர்கள் வெறும் அலங்கார பொம்மைகள் மட்டுமே என்ற போது, அவ்வப்போது பொம்மைகளை இஷ்டம் போல் மாற்றி வைப்பது இயற்கைதானே..