BREAKING NEWS
Search

‘வேட்பு மனு தாக்கல் செய்த பின் தேர்தலிலிருந்து சங்மா விலக வேண்டும்’ – ஜெ போண்ட குண்டு; அப்படியே ‘ஷாக்கான’ அத்வானி!!

குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து சங்மா விலக வேண்டும்-அத்வானிக்கு ஜெ. வேண்டுகோள்


டெல்லி: குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பி.ஏ.சங்மா விலகிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததால் பாஜக கூட்டணி ஸ்தம்பித்து நிற்கிறது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் ஜெயலலிதா பேசியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா போட்டியிடுவதாகவும் அவரைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் முதலில் அறிவித்தவர்கள் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும்தான். அதைத் தொடர்ந்து சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியிலும் இருவரும் இறங்கினர். மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களிடம் ஜெயலலிதாவே  சங்மாவுக்கு வாக்குக் கேட்டார்.

ஆனால் ஜெயலலிதா முயற்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு அத்தனையும் காங்கிரஸ்
பக்கம் போய் விட்டது.

அதேசமயம், அப்துல் கலாம் பெயரை வைத்து மமதா பானர்ஜி புதிய விளையாட்டை ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

பிரணாப் முகர்ஜியை பாஜக கூட்டணியின் முக்கிய கட்சிகளும்கூட பகிரங்கமாக ஆதரிக்க, சங்மா தோற்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் போலத் தெரிகிறது. தான் ஆதரவளித்துள்ள சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக புதிய பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று தன்னிடம் தொலைபேசியில் அத்வானியிடம் ஜெயலலிதா கூறுகையில், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு பின்னர் சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டு அத்வானி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இன்று சங்மா வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அப்போது ஜெயலலிதாவும் டெல்லியில் இருக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக ஜெயலலிதாவுக்குப் போன் செய்தபோதுதான் அத்வானிக்கு இந்த ‘அதிர்ச்சியைக்’ கொடுத்தாராம் ஜெயலலிதா. மேலும் தான் டெல்லிக்கு வர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.

கொடநாடு எஸ்டேட்டில் தான் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு தன்னால் எங்கும் பயணம் செய்ய முடியாது என்றும் அத்வானியிடம் ஜெயலலிதா கூறியதாக தெரிகிறது.

ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதையடுத்து பாஜக  என்ன செய்வதெனத் தெரியாமல் கைபிசைந்து நிற்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கிடையில் இன்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார் சங்கா. அத்வானி உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

சங்மா யாரென்றே தெரியாது.. அவரை யார் நிற்கச் சொன்னது என கொட நாட்டிலிருந்து அறிக்கை வருவதற்குள் வாபஸ் வாங்கிடுங்க!!

-என்வழி செய்திகள்
70 thoughts on “‘வேட்பு மனு தாக்கல் செய்த பின் தேர்தலிலிருந்து சங்மா விலக வேண்டும்’ – ஜெ போண்ட குண்டு; அப்படியே ‘ஷாக்கான’ அத்வானி!!

 1. enkaruthu

  உண்மையாளுமேவா சார்.நல்ல வேலை அப்துல் கலாம் உஷாராகிவிட்டார் .இல்லை என்றால் அடுத்தவருக்கு எப்படி மரியாதையை தரவேண்டும் என்று தெரியாத ஜெயலலிதாவிடம் எல்லாம் அசிங்கபட்டிருப்பார்.எல்லோரையும் இவரின் ஜால்ரா சட்டசபை உறுப்பினர் போல் நினைதுவிட்டார்போலும்.இது மட்டும் உண்மையாக இருந்தால் கேலிகூத்துதான்.

 2. குமரன்

  திடமான முடிவுகள் ….
  திடமான நடவடிக்கைகள் …..
  …………… சோ பாராட்டுக்கள் …..

 3. பாவலன்

  Rediff.Com என்ற இணைய தளம் இந்த வதந்தியை இன்று காலை
  வெளியிட்டதாக என் நினைவு. இன்னும் official ஆக இந்த வதந்தி
  பற்றி எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.

  -பாவலன்

 4. Krishna

  //Rediff.Com என்ற இணைய தளம் இந்த வதந்தியை இன்று காலை
  வெளியிட்டதாக என் நினைவு. இன்னும் official ஆக இந்த வதந்தி
  பற்றி எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை. – பாவலன்//

  இந்த செய்தி உண்மையாக மட்டும் இருந்திருந்தால் ஆங்கில சேனல்களான Times Now, Headlines Today, NDTV, NEWS X போன்றவை Breaking News என்ற பெயரில் நாள் முழுவதும் இதை பற்றியே விவாதம் செய்து மொக்கை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் breaking news பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்துக்கு முன் தான் NDTV-யில் சங்மா வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தம்பிதுரையும் உடன் இருந்ததை காட்டினார்கள். ஜெயலலிதா அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தால் தம்பிதுரையை வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும்போது அனுப்பி இருக்க மாட்டார். Rediff இணைய தளத்தை பொறுத்தவரையில் அவர்களின் செய்திகள் நம்பகத்தன்மை உடையது அல்ல. அக்டோபர் 2002-ல் முரசொலி மாறன் காலமானதாக செய்தி போட்டார்கள். பிறகு திமுக தலைமை அண்ணா அறிவாலயத்திலிருந்து மறுப்பு வெளியிட்டதும், அந்த செய்தியை சத்தம் காட்டாமல் தூக்கி விட்டார்கள். தவறான செய்திக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. எனவே இது ஒரு வதந்தி தான் என்று நினைக்கிறேன்.

 5. s venkatesan, nigeria

  //நல்ல வேலை அப்துல் கலாம் உஷாராகிவிட்டார் .இல்லை என்றால் அடுத்தவருக்கு எப்படி மரியாதையை தரவேண்டும் என்று தெரியாத ஜெயலலிதாவிடம் எல்லாம் அசிங்கபட்டிருப்பார்.எல்லோரையும் இவரின் ஜால்ரா சட்டசபை உறுப்பினர் போல் நினைதுவிட்டார்போலும்//
  அப்துல் கலாம் உஷாராகிவிட்டார் ஆனால் அத்வானி ???

 6. பாவலன்

  ///சிறிது நேரத்துக்கு முன் தான் NDTV-யில் சங்மா வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தம்பிதுரையும் உடன் இருந்ததை காட்டினார்கள். ஜெயலலிதா அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தால் தம்பிதுரையை வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும்போது அனுப்பி இருக்க மாட்டார். /// (கிருஷ்ணா)

  நீங்கள் சொன்னது மிகவும் சரியே. இன்றும் கூட நாளேடுகளில் நான்
  செக் செய்த போது இந்த வதந்தி பற்றி புதிய தகவல் எதுவும் இல்லை.
  இது வெறும் வதந்தி தான் என்பது இப்போது தெரிகிறது. நன்றி

  -பாவலன்

 7. தினகர்

  அத்வானிக்கு தான் ’செலக்டீவ் அம்னீஷியா’ என்று அம்மா முன்னாடி சொல்லியிருந்தாங்க. ஒருவேளை ’அம்மாவுக்கும்’ அது தொற்றிக்கொண்டதோ.?. சங்மாவை தான் ஆதரித்ததை மறந்து அத்வானிக்கு போன் போட்டு விட்டாரோ?.. அப்புறம் நிலைமை அறிந்து ‘ நியூஸை’ அப்படியே ‘ஆஃப்’ செய்து விட்டார்கள் போலும் 🙂

 8. chozan

  இப்படி தவறான உறுதி இல்லாத தகவலை என்வழி வெளியிடுவது நல்லது இல்லை. உங்களின் நம்பக தன்மை போய்விடும்.
  _______________
  உறுதியற்ற தகவல் என்றால் வெளியிட்டிருக்க மாட்டோம். பல ஊடகங்களில் வந்த செய்திதான். ஜெயலலிதாவோ அத்வானியோ மறுக்கவில்லையே.

  -என்வழி

 9. Ganesh Shankar

  இந்த செய்தி சுத்த வதந்தி என்று தெரிகிறது.
  ஒன்றும் பெரிதாக நடக்க வில்லை.
  முதலமைச்சர் அவர்கள் முடிவில் தெளிவாக இருகிறார்கள்.
  இவ்வாறு நடபதற்கு ஒரு அசைவு கூட தெரியவில்லை.

  //உறுதியற்ற தகவல் என்றால் வெளியிட்டிருக்க மாட்டோம். பல ஊடகங்களில் வந்த செய்திதான். ஜெயலலிதாவோ அத்வானியோ மறுக்கவில்லையே.//(என்வழி)

  இதை எவ்வாறு உறுதியான செய்தி என்று சொல்லுகிறேர்கள் என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் சரி,இது உறுதியற்ற தகவல் தான் என்று இப்போது எல்லாருக்கும் தெரிகிறது.
  இதை மறுக்க வில்லையே அவர்கள் என்றால்,இது மறுக்கும் அளவுக்கு ஒரு உண்மையோ இல்லை பல பத்திரிகையில் செய்தி பரவி ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிதாக போய் விடவில்லை.
  செய்திகளை மறுபதற்கு முதலில் அந்த செய்தியும் சரி,அதை வெளியிட்ட இடமும் மிக பெரும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு அது இல்லை என்றால் அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து கொண்டிருந்தால் அந்த செய்தி அப்போது தான் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு.
  இன்றைய தொழில்நுட்ப உலகில்,ஏதாவது ஒரு சில வலை தளங்களில் ஒன்றன் பின் ஒன்றாக எதை பற்றியாவது போட்டு கொண்டு தான் இருப்பார்கள்.
  எடுத்து கொள்பவர்களை பொறுத்து தான் இருக்கிறது.ஆனால்,இதை போய் என்வழி பெரிதாக போடுவதை பார்த்தால் ஆச்சரியம் தான்.போக போக தான் பார்க்க வேண்டும்.ஒரு செய்தியினால் ஒன்றும் நிகழ்ந்துவிடாது.ஆனால், விடயம் தெரிந்த பின்பு தன்னை மாற்றி கொள்ள எல்லாருக்குமே(என்னை உட்பட) உரிமை இருக்கிறது,பத்திரிக்கைக்கு அது மிகவும் அவசியம் வேண்டும்.

 10. குமரன்

  ///இந்த செய்தி உண்மையாக மட்டும் இருந்திருந்தால் ஆங்கில சேனல்களான Times Now, Headlines Today, NDTV, NEWS X போன்றவை Breaking News என்ற பெயரில் நாள் முழுவதும் இதை பற்றியே விவாதம் செய்து மொக்கை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் breaking news பார்க்க முடியவில்லை. ///

  எத்தனையோ வதந்திகளுக்கும் கூட இப்படிப்பட்ட விவாதங்களை இன்றைய ஊடகங்கள் நடத்தி இருக்கின்றன, நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

  ஒரு செய்தி வதந்தியா இல்லையா என்பதை அறிந்துகொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை.

  ஹிந்து பத்திரிக்கை போல எல்லா பத்திரிகையிலும் வந்து விட்டதா என்று பார்த்து செய்தி போட்டால் இப்படிப்பட்ட நிலை வரவே வராது.

  ஆனால் செய்திகளை முந்தித்தரும் ஆர்வம் இருந்தால், சில சமயம் வதந்திகள் சிக்குதல் நடக்கத்தான் செய்யும்.

  அவசர, அண்மைச் செய்திகள் விஷயத்தில் ….

  இதெல்லாம் சாதாரணமப்பா… (கவுண்டர் பாணியில்)

 11. Krishna

  //ஒரு செய்தி வதந்தியா இல்லையா என்பதை அறிந்துகொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை. – குமரன்//

  உண்மை தான், ஏப்ரல் 1997 – ல் ஜூனியர் விகடன் “ஜெயலலிதா ராஜீவ் கொலையாளிகள் சிவராசன் மற்றும் சுபாவுடன் இருக்கிறார்”என்று செய்தி போட்டு அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படமும் வெளியிட்டது. இதே புகைப்படம் Indian Express மற்றும் தினமணியிலும் அதே நாளில் வெளியாகியது. ஆனால் இரு நாட்களிலேயே உண்மை வெளி வந்து விட்டது. சிவராசன் போல் இருப்பவர் ஹோசூர் மாவட்ட அதிமுக உறுப்பினர் என்றும் சுபா போல் இருப்பவர் இந்த போட்டோ பிரசுரமாவதற்கு சிறிது வாரங்களுக்கு முன் தான் அதிமுகவிலிரிந்து திமுகவுக்கு தாவியவர் என்றும் தெரிய வந்தது. ஆனால் இந்த விஷயம் அமுங்கிவிட்டது – காரணம், அதே நாளில் தான் காங்கிரஸ் தேவ கௌடா ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கி மத்திய அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த செய்தி முந்திக்கொண்டு இந்த செய்தி அமுங்கிவிட்டது.

 12. பாவலன்

  கிருஷ்ணாவின் English newspapers, magazines பற்றிய அறிவு
  என்னை பிரமிக்க வைக்கிறது.

  -பாவலன்

 13. குமரன்

  கிருஷ்ணாவின் ஞாபக சக்தி அருமை.

  கலைஞரிடம் இருக்கும் தனிச் செயலாளர் போல அருமையான ஞாபக சக்தி.

  ///சிவராசன் போல் இருப்பவர் ஹோசூர் மாவட்ட அதிமுக உறுப்பினர் என்றும் சுபா போல் இருப்பவர் இந்த போட்டோ பிரசுரமாவதற்கு சிறிது வாரங்களுக்கு முன் தான் அதிமுகவிலிரிந்து திமுகவுக்கு தாவியவர் என்றும் தெரிய வந்தது. ஆனால் இந்த விஷயம் அமுங்கிவிட்டது ///

  ஆக அப்போது வந்த இந்த செய்தி வதந்தி என்று திட்ட வட்டமாக நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா.

  இதுதான் சில நேரங்களில் செய்திகளை முந்தித் தரும்போது நடக்கிறது. ஒருவேளை அப்போது எதோ உள்நோக்கத்தோடு இந்த வதந்தியை செய்தி நிறுவனங்களுக்கு vested interests உடையவர்கள் புகுத்தி இருக்கக் கூடும், ஏனெனில் அப்போது தேர்தல் நேரம், அது தவிர ராஜீவ் கொலை மிகப் பரபரப்பாக பேசப்பட்ட நேரம் அது.

  பொதுவாகவே பரபரப்பான செய்திகள் வரும்போது இப்படிப்பட்ட வதந்திகள் எந்த வித ஆதாரமும் இல்லாமலே இடைச் செருகப் படுகின்றன. காரணம், அரசியல் ஆதாயம்.

 14. Krishna

  என்வழியில் நான் எழுத்தும் கருத்துக்களை கூர்ந்து கவனித்து constructive feedback கொடுக்கும் பாவலன் அவர்களுக்கும் குமரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் எல்லா நிகழ்வுகளும் எனக்கு நினைவில்லை என்றாலும் நினைவில் வைத்துக்கொள்ளும் படி பல நிகழ்வுகள் நடப்பதுண்டு.

  //ஆக அப்போது வந்த இந்த செய்தி வதந்தி என்று திட்ட வட்டமாக நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா.//

  சிவராசன் மற்றும் சுபா போல் இருப்பவர்களை போயஸ் தோட்டத்திற்கே அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டு ஜெயலலிதா இதை வதந்தி என்று நிரூபித்தது நினைவுக்கு வருகிறது. ஒரே நாளிலே மூன்று வெவ்வேறு ஏடுகளுக்கு இந்த புகைப்படம் கிடைத்தது என்பதால் இது ஒரு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்று நம்புவதற்கு இடம் இருக்கிறது.

  //பொதுவாகவே பரபரப்பான செய்திகள் வரும்போது இப்படிப்பட்ட வதந்திகள் எந்த வித ஆதாரமும் இல்லாமலே இடைச் செருகப் படுகின்றன. காரணம், அரசியல் ஆதாயம்.//

  சில ஊடகங்கள் தங்களுக்கு கிடைத்த செய்தி உண்மை என்று நம்பி பிரசுரிக்கின்றன. அது தவறு என்று தெரியும் பட்சத்தில் மன்னிப்பு வெளியிடுகின்றன. வேறு சில ஏடுகளோ எதிர்க்கட்சியில் குழப்பம் விளைவிப்பதற்கு இது போல் செய்கின்றன. ஆனால் print media, visual media, மற்றும் Electronic media (வலைதள செய்திகள்) என்று மக்களுக்கு நிறைய சாய்ஸ் இருப்பதால் மக்களால் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது.

 15. பாவலன்

  //கிருஷ்ணாவின் ஞாபக சக்தி அருமை.// (குமரன்)

  இது நல்ல பாராட்டு – சரி.

  //கலைஞரிடம் இருக்கும் தனிச் செயலாளர் போல அருமையான ஞாபக சக்தி.//

  கிருஷ்ணனுக்கு தி.மு.க., கலைஞர் பிடிக்காத நிலையில் (அவர் ஆங்கிலப்
  பத்திரிகைகள் படிக்கிறார்!) இப்படி ஒரு பாராட்டு தேவையா? நன்றி.

  -பாவலன்

 16. Ganesh Shankar

  //செய்திகளை முந்தித்தரும் ஆர்வம் இருந்தால், சில சமயம் வதந்திகள் சிக்குதல் நடக்கத்தான் செய்யும்.//(குமரன்)

  ஆம்,இப்போது ஊடகங்களில் பல விடயங்கள் இவ்வாறு தான் நடந்து கொண்டிருகிறது.
  இப்போது சில வருடங்களாகவே ஹிந்து பத்திரிக்கை கூட உண்மையை பல முறை சொல்வதில்லை.முன்பு போல் அதனை நம்ப இயலவில்லை.பொய் செய்தி வருகிறது.
  நாகரீகம் இல்லாமல் அப்போ அப்போ என்று செய்திகள் ஒரு பரபரப்புக்காக போடுவதும் இருக்கிறது ஹிந்துவில்.அது வேறு கதை.
  இரண்டு வருடம் முன்பு,ஒரு முறை “Air – India” விமானம் 14 மணி நேரம் தாமதம்.
  ஆனால்,அந்த தாமதம் தவிர்க்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கு தயாநிதி மாறன்,பிரபுல் படேல் தொடர்பு கொண்டு எடுத்த நடவடிக்கை என்றும் கூறி இருந்தார்கள்.
  ஆனால்,உண்மையாகவே தாமதம் தவிர்க்கப்படவில்லை.
  இதை ஒரு வாரம் கழித்து வேறு ஒரு பத்திரிகையில்,ஹிந்து செய்தி பொய் என்று செய்தி வந்தது.
  இது மட்டும் அல்ல,இன்னும் சில செய்திகள் கூட இருக்கிறது.
  ஆகவே,ஹிந்துவே இவ்வாறு இருக்கிற பொழுது,மிகவும் ஆராய்ந்து உண்மை இல்லாமல் இருக்கும் செய்தியை தவிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து வெளியிட்டால் இது தவிர்க்கப்படலாம்.

 17. பாவலன்

  ///என்வழியில் நான் எழுத்தும் கருத்துக்களை கூர்ந்து கவனித்து constructive feedback கொடுக்கும் பாவலன் அவர்களுக்கும் குமரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்./// (கிருஷ்ணன்)

  நான் இந்த வலையைத் தொடர்ந்து படிப்பதற்கு உங்கள் போன்ற
  நண்பர்கள் காரணம். நான் அனைவருக்கும் constructive feedback தான்
  கொடுத்து வருகிறேன். எதிர்நீச்சல் போட்டு எழுதும் உங்கள் பாணி
  சிறப்பாக இருக்கிறது! நன்றி.

  -பாவலன்

 18. Krishna

  //கிருஷ்ணனுக்கு தி.மு.க., கலைஞர் பிடிக்காத நிலையில் (அவர் ஆங்கிலப்
  பத்திரிகைகள் படிக்கிறார்!) இப்படி ஒரு பாராட்டு தேவையா? நன்றி.//

  ஒரு அரசியல் தலைவரை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பது சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். எனக்கு 1996, 1999, 2004 இந்த மூன்று ஆண்டுகளிலும் திமுக மற்றும் கலைஞரை பிடித்திருந்தது. இந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன். தற்போது இருக்கும் சூழ்நிலை தான் என் கணிப்பில் வேறு மாதிரி இருக்கிறது. இது மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

 19. பாவலன்

  //இந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன்.// (கிருஷ்ணன்)

  நண்பர் AK இது பற்றி என்ன சொல்றார்னு பார்ப்போம்! நன்றி.

  நான் இதுவரை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களித்ததில்லை!
  தேர்தல் பூத் சென்றதில்லை. TV-ல் பார்ப்பதோடு சரி, அவ்வளவு தான்!

  -பாவலன்

 20. Krishna

  பாவலன் அவர்களே, தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த மனிதர் மீதும் வெறுப்பு இல்லை. கலைஞர் போன்றவர்களிடம் உள்ள திறமை என்னிடம் இருக்கிறது என்று குமரன் போன்றவர்கள் சொன்னால் அதை ஒரு பெருமையாக நினைப்பேனே தவிர அதை நிச்சயம் இழிவாக நினைக்க மாட்டேன்.

 21. குமரன்

  பாவலன் அவர்களே

  எவரானாலும் அவரது நல்ல குணத்தையும் திறமையையும் பாராட்டி அதனை நாமும் கடைப்பிக்க முயல்வது நல்லதுதானே.

  கருணாநிதியின் பலமே அவரது நினைவாற்றல்தான். அத்துடன் இல்லாது அவருடன் இருக்கும் சண்முக சுந்தரம் என்ற தனிச் செயலரின் நினைவாற்றலும் அவருக்கு உற்ற துணை, கூடுதல் பலம்.

  பல சமயங்களில் பொதுக்கூட்ட மேடைகளில் பிற பேச்சாளர் பேசும் பொது அவர் சற்றே பின் திரும்பி சண்முக சுந்தரத்திடம் ஏதோ கேட்பதையும் அவர் பதில் சொல்வதையும் கண்டிருக்கலாம். பின்னர் தனது உரையில் அப்பேச்சாளரின் பேச்சைக் குறிப்பிட்டுப் பழைய நினைவையோ செய்தியையோ எடுத்தாண்டு அந்த அரங்கத்தையே கருணாநிதி தன வசப்படுத்துவதையும் கண்டிருக்கலாம். அனைத்தும் அவரது / சண்முக சுந்தரத்தின் நினைவாற்றலால் வரும் வெற்றிகள். (கலாம், கலாம் என்று இங்கு வருவது கருணாநிதிக்குப் பிடிக்காமல் போ’கலாம்’, ஆனால் இங்கே ‘கலாம்’ என்று முடியும் சொல்லால்தானே இந்த செய்தி சொல்ல முடியும்!! அப்படித்தான் !!)

  கருணாநிதியின் நினைவாற்றலைப் போல, அவரது செயலர் சண்முக சுந்தரத்தின் நினைவாற்றலைப் போல உங்கள் நினைவாற்றல் என்றாலோ, அல்லது ஜெயலலிதாவின் தைரியம் போல உங்கள் தைரியம் என்றாலோ அது மிகவும் பெருமைப்படத்தக்க பலம் ஆகும். கருணாநிதியின் குடும்பங்கள் போல, அவரது குடும்பத்தாரின் ஊழல் போல என்றாலோ, ஜெயலலிதாவின் ஆணவம் போல என்றாலோதான் வருத்தப்பட வேண்டும்.

 22. பாவலன்

  ///கருணாநிதியின் பலமே அவரது நினைவாற்றல்தான். அத்துடன் இல்லாது அவருடன் இருக்கும் சண்முக சுந்தரம் என்ற தனிச் செயலரின் நினைவாற்றலும் அவருக்கு உற்ற துணை, கூடுதல் பலம்./// (குமரன்)

  இந்த சண்முகசுந்தரம் என்பவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.
  ஆனால் Google -ல் தட்டிப் பார்த்ததில் கலைஞர் ஆட்சியில் Public
  Prosecutor ஆக சண்முக சுந்தரம் என ஒருவர் பணியாற்றியதாகப் படித்தேன்.
  இவரை நீங்கள் அறிந்திருப்பதால் இவர் ஒரு வழக்கறிஞர் ஆக இருந்திருக்க
  வாய்ப்பு கூட. ஒரு பெரிய பொறுப்பில் (Public Prosecutor) பணி செய்தவர்
  கலைஞரின் Personal Secretary ஆனது வியப்பாக உள்ளது.

  -பாவலன்

 23. பாவலன்

  //பாவலன் அவர்களே, தனிப்பட்ட முறையில் எனக்கு
  எந்த மனிதர் மீதும் வெறுப்பு இல்லை.// (கிருஷ்ணன்)

  இது நல்ல குணம்! நான் உங்களைப் பாராட்டுகிறேன்.

  -பாவலன்

 24. Krishna

  //இந்த சண்முகசுந்தரம் என்பவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.
  ஆனால் Google -ல் தட்டிப் பார்த்ததில் கலைஞர் ஆட்சியில் Public
  Prosecutor ஆக சண்முக சுந்தரம் என ஒருவர் பணியாற்றியதாகப் படித்தேன்.
  இவரை நீங்கள் அறிந்திருப்பதால் இவர் ஒரு வழக்கறிஞர் ஆக இருந்திருக்க
  வாய்ப்பு கூட. ஒரு பெரிய பொறுப்பில் (Public Prosecutor) பணி செய்தவர்
  கலைஞரின் Personal Secretary ஆனது வியப்பாக உள்ளது.//

  குமரன் மற்றும் பாவலன் அவர்களே, கலைஞரின் தனி செயலாளரின் பெயர் சண்முகநாதன், சண்முகசுந்தரம் அல்ல. சண்முகநாதன் வேறு, public prosecutor ஆக இருந்த சண்முகசுந்தரம் என்பவர் வேறு. – நன்றி.

 25. தேவராஜன்

  இன்று வரை இந்த செய்திக்கு ஜெயலலிதா தரப்பிலிருந்து பதில் இல்லை. அத்வானியை, சங்மாவை விடுங்கள், பாஜக செய்தித் தொடர்பாளரிடமிருந்துகூட மறுப்பில்லையே. சங்மாதான் வேட்பாளர் என அறிவித்தவர் இவர்தான். வேட்புமனு தாக்கலுக்கு இவரல்லவா முதலில் போயிக்க வேணும். கொடநாட்டில் போய் படுத்துக் கொண்டது இந்த செய்திக்கு இன்னும் வலு சேர்க்கவே செய்யும். நீங்கள் ஏன் கிடந்து குதிக்க வேண்டும்?

 26. Ganesh Shankar

  //கலைஞரின் தனி செயலாளரின் பெயர் சண்முகநாதன், சண்முகசுந்தரம் அல்ல. சண்முகநாதன் வேறு, public prosecutor ஆக இருந்த சண்முகசுந்தரம் என்பவர் வேறு.//(கிருஷ்ணா)

  அப்படியா.என்ன இவ்வளவு தெரிஞ்சு வைத்து இருகிறீர்கள்.
  மௌனமாக,உங்கள் கருத்துகளை படித்து கொண்டு இருக்கிறேன்.
  வியக்க வைக்கும் ஞாபக சக்தி உங்களிடம் இருக்கிறது.
  இது மட்டும் இல்லாமல்,பல முன்னால் நிகழ்வுகளிலும் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கிறது.
  இது ஒரு சாதாரண பொது மக்களாகவே தேவை.
  பல விடயங்களுக்கு எதுவும் இல்லாத போது,நாம் வரலாற்றை வைத்து தான் செயல் பட முடியும்.அது ஒரு உடம்புக்கு முதுகு எலும்பு எவ்வாறோ,அவ்வளவு முக்கியம்.

 27. தேவராஜன்

  //கலைஞரின் தனி செயலாளரின் பெயர் சண்முகநாதன், சண்முகசுந்தரம் அல்ல. சண்முகநாதன் வேறு, public prosecutor ஆக இருந்த சண்முகசுந்தரம் என்பவர் வேறு.//(கிருஷ்ணா)

  அந்த வக்கீல் சண்முகசுந்தரத்தை ஆத்தா ஆட்சி குண்டர்கள் படுத்தின பாடு தெரியுமா? முகத்திலும் உடலிலும் 18 வெட்டுகள். அதிசயமாக உயிர்பிழைத்தார். காரணம்.. 1995-ல் ஜெ ஆட்சியில் அவரும் சசி கும்பலும் வளைத்துப்போட்ட டான்சி நில முறைகேடு வழக்கில் ஜெக்கு எதிராக அவர் ஆதாரங்கள் திரட்டியது. ஆத்தா ஆதரவாளர்களுக்குதான் எவ்வளவு தேர்ந்த ஞாபக மறதி!

 28. Krishna

  //இன்று வரை இந்த செய்திக்கு ஜெயலலிதா தரப்பிலிருந்து பதில் இல்லை. அத்வானியை, சங்மாவை விடுங்கள், பாஜக செய்தித் தொடர்பாளரிடமிருந்துகூட மறுப்பில்லையே. //

  பத்திரிகைகள் அல்லது தொலைக்காட்சிகளில் ஏதேனும் ஒன்றிலோ வந்திருந்தால் கூட, நிச்சயம் அவர்கள் சார்பில் மறுப்பு வந்திருக்கும். வலை தளங்களில் சிலவற்றில் மட்டும் தான் வந்தது. ஆயிரம் ஆயிரம் வலை தளங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் பார்த்து அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், இந்தியாவில் உள்ள எந்த அரசியல் வாதியாலும் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது, மறுப்பு வெளியிட்டு கொண்டிருப்பதே ஒரு வேலையாக போய் விடும். அதுவும் Rediff போன்ற வலைதளங்களுக்கு credibility என்பது துளியும் கிடையாது. வாய்க்கு வந்ததை செய்தியாக போட்டுக்கொண்டிருக்கும் வேலையை வெகு ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

  //சங்மாதான் வேட்பாளர் என அறிவித்தவர் இவர்தான். வேட்புமனு தாக்கலுக்கு இவரல்லவா முதலில் போயிக்க வேணும். கொடநாட்டில் போய் படுத்துக் கொண்டது இந்த செய்திக்கு இன்னும் வலு சேர்க்கவே செய்யும். நீங்கள் ஏன் கிடந்து குதிக்க வேண்டும்?//

  அப்படி ஒன்றும் ஒரு protocol கிடையாது. அவர் representative தம்பிதுரையை அனுப்பி வைத்தாரே, அது போதும். அவர் கொடநாடு போகிறார் என்றால், ஒவ்வொரு முதல்வரும் ஒவ்வொரு மாதிரி. சிலருக்கு கொடநாடு பொழுதுபோக்கு. வேறு சிலருக்கு மானாட மயிலாட, நமிதா குத்தாட்டம் ஒரு பொழுது போக்கு.

  //அந்த வக்கீல் சண்முகசுந்தரத்தை ஆத்தா ஆட்சி குண்டர்கள் படுத்தின பாடு தெரியுமா? முகத்திலும் உடலிலும் 18 வெட்டுகள். அதிசயமாக உயிர்பிழைத்தார். காரணம்.. 1995-ல் ஜெ ஆட்சியில் அவரும் சசி கும்பலும் வளைத்துப்போட்ட டான்சி நில முறைகேடு வழக்கில் ஜெக்கு எதிராக அவர் ஆதாரங்கள் திரட்டியது. ஆத்தா ஆதரவாளர்களுக்குதான் எவ்வளவு தேர்ந்த ஞாபக மறதி!//

  அவரை தாக்கிய குண்டர்கள் எல்லாம் எப்போதோ திமுகவில் தஞ்சமாகி புனிதவாங்கலாகிவிட்டார்கள்.

 29. தினகர்

  ”அந்த வக்கீல் சண்முகசுந்தரத்தை ஆத்தா ஆட்சி குண்டர்கள் படுத்தின பாடு தெரியுமா? முகத்திலும் உடலிலும் 18 வெட்டுகள். அதிசயமாக உயிர்பிழைத்தார். காரணம்.. 1995-ல் ஜெ ஆட்சியில் அவரும் சசி கும்பலும் வளைத்துப்போட்ட டான்சி நில முறைகேடு வழக்கில் ஜெக்கு எதிராக அவர் ஆதாரங்கள் திரட்டியது.”

  ”பல விடயங்களுக்கு எதுவும் இல்லாத போது,நாம் வரலாற்றை வைத்து தான் செயல் பட முடியும்.அது ஒரு உடம்புக்கு முதுகு எலும்பு எவ்வாறோ,அவ்வளவு முக்கியம்.” – வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் கணேஷ் ஷங்கர், தேவராஜன் சொன்ன மேற்கொண்ட வரலாற்றையும் தெரிந்து கொண்டால் நல்லது.

 30. தேவராஜன்

  ஜெயலலிதா என்று வந்துவிட்டால் பாதார விந்தங்களே சரணம். அவர் என்ன செய்தாலும் நியாயமே. நூலகத்தை கல்யாண மண்டபமாக்கி நாறடித்தாலும் நறுமணம்தான் இவர்களுக்கு (அந்த நியூஸை என்வழில ஏங்க போடலை?)

  ஏன் குஷ்பு முதுகை வைத்து ஜெயா டிவியில் விதவிதமாக ஜாக்கெட் ஷோ நடந்தபோது உங்களுக்கு தற்காலிகமாக கண் தெரியாமலா போய்விட்டதா?

  மானாட மயிலாட நிகழ்ச்சியால் யார் முகத்திலும் ரத்தம் வடியவில்லை. யாருக்கும் ஹைஹீல்ஸ் செருப்படிகளும் கிடைக்கவில்லை. அது ஒரு கமர்ஷியல் நிகழ்ச்சி. கருணாநிதியா அதை டைரக்ட் பண்றார்? பிடிக்காத ஒன்றை எதற்காக வேலை மெனக்கெட்டு பாக்கறீங்க?

  கருணாநிதி குடும்பமே நாட்டைக் கொள்ளையடித்ததாக கூடவே உட்கார்ந்து கணக்குப் பார்த்த மாதிரி சொல்லும் கணக்குப்புள்ளைங்களுக்கு இன்னிக்கு வரை ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. 1.76 லட்சம் கோடிக்கு கணக்கு காட்டுங்கடான்னா, அதான் கணக்குன்னு கவுண்டர் – செந்தில் வாழப்பழ சோக்கு மாதிரி சொல்லிக்கிட்டே திரியறாங்க..

  ஆனால் ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் வசமாக மாட்டிக் கொண்டு, முழிபிதுங்கும் ஆத்தாக்கள் வாய்தா மேல் வாய்தா கேட்டு, நாட்டின் அத்தனை கோர்ட்டுகளிடமும் கேவலப்பட்டு நிற்பதை எத்தனை சாதுர்யமாக மறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.

  //பத்திரிகைகள் அல்லது தொலைக்காட்சிகளில் ஏதேனும் ஒன்றிலோ வந்திருந்தால் கூட, நிச்சயம் அவர்கள் சார்பில் மறுப்பு வந்திருக்கும். வலை தளங்களில் சிலவற்றில் மட்டும் தான் வந்தது. ஆயிரம் ஆயிரம் வலை தளங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் பார்த்து அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், இந்தியாவில் உள்ள எந்த அரசியல் வாதியாலும் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது, மறுப்பு வெளியிட்டு கொண்டிருப்பதே ஒரு வேலையாக போய் விடும். அதுவும் Rediff போன்ற வலைதளங்களுக்கு credibility என்பது துளியும் கிடையாது. வாய்க்கு வந்ததை செய்தியாக போட்டுக்கொண்டிருக்கும் வேலையை வெகு ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்கள். //

  ரீடிப் மட்டுமா இந்த செய்தியைப் போட்டது? இந்துஸ்தான் டைம், பயனீர் உள்பட பல பத்திரிகைகளின் தளங்களில் இந்த செய்தி வந்ததே. டைம்ஸ் ஆப் இந்தியாவின் தளத்தில் வந்ததே. அவர்களெல்லாம் credibility-க்கு உங்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டுமா என்ன?

  சிஎன்என் ஐபிஎன்னெல்லாம் உங்களுக்கு தொலைக்காட்சி கணக்கில் வராதோ?

  உங்கள் ஆங்கில அறிவு அவ்வளவுதானா? போய் அவர்களிடம் இதையே சொல்லிப் பாருங்களேன். உங்களுக்கு பிடித்த மாதிரி செய்தி போடுவதா ஊடகங்களின் வேலை?

  படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது புள்ளையார் கோயில்னு சொல்ற மாதிரி, நாளெல்லாம் இந்த ஊடகங்களில்தான் செய்தியைப் பார்க்கிறீர்கள். அப்புறம் அதில ஆயிரம் நொட்டை. கருணாநிதியை திட்டி வந்தா அப்படியே ஜில்லுனு இருக்கும். அதை மட்டும் ஆனந்தமா மேற்கோள் வேற காட்டுவீங்களோ?

  ஏதேது.. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீங்களெல்லாம் தமிழ்நாட்டை விட்டே ஒழிந்துவிடுவீர்களா?

 31. Rajkumar

  why all hues and cries on this news item? Is Jaya such a credible person? Isn’t she spoke lie in her life? Isn’t she never took back from her stand? Jayalalitha never be a reliable person. Definitely I believe this.

 32. Krishna

  //வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் கணேஷ் ஷங்கர், தேவராஜன் சொன்ன மேற்கொண்ட வரலாற்றையும் தெரிந்து கொண்டால் நல்லது.//

  வரலாறு அத்துடன் நிற்கவில்லை, தினகர் அவர்களே, 2001 தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று (நான் உட்பட) எல்லோரும் நம்பியிருந்தோம். ஏனெனில் கடந்த திமுக ஆட்சி போல் மோசமாக இல்லாமல் (1996-2001) ஆட்சியில் நல்ல திட்டங்கள் (சமத்துவபுரம், உழவர் சந்தை, கிராமங்களுக்கு சிற்றுந்துகள்) என்று கொண்டுவந்தார்கள். ஆனால் திமுக தோற்றதற்கு என்ன காரணம்? அன்றைய ஏடுகளில் தெளிவாக காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அது இது தான்: 1991-96 அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில முன்னாள் அமைச்சர்களையும் மற்றும் அதே ஆட்சியில் வக்கீல்கள் தாக்குதல் (வக்கீல் சண்முகசுந்தரம், விஜயன்) மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் தாக்குதலில் குற்றம் சாற்றப்பட்ட பலரை திமுகவில் சேர்த்துக்கொண்டது, அவர்களின் அராஜகங்கள் தொடர வழி வகுத்தது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது என்று அன்றைய ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகளில் வந்தது.

  ஒரு மனிதர் தாக்கப்பட்டால் அதை எந்த சக மனிதரும் பொறுத்து கொள்ள கூடாது. ஆனால், அவர்கள் தாக்கப்பட்டதற்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா தான் காரணம் என்று நிரூபணம் ஆகவில்லை. கடந்த திமுக ஆட்சியிலும் தான் செம்மொழி மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது பழ.கருப்பையா தாக்கப்பட்டார். ஆனால் அதை திமுக தலைவருடன் முடிச்சு போடுவது சரியாக இருக்குமா? அது போல் தான் இதுவும். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பல ஆண்டுகளாக இருக்கும் அரசியல் தலைவர்கள் நேரடியாக ஒருவரை தாக்குங்கள் என்று ஆள் அனுப்பமாட்டார்கள். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் சினிமாவில் தான் வரும்.

  ஆனால் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் இது போன்று தாக்குதல்கள் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். தன் பெயரை சொல்லி யாரும் இது போன்று செய்து விடக்கூடாது என்று. இதிலிருந்து அவர் இந்த வரலாற்றிலிருந்து பாடம் கற்று கொண்டார் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.

 33. தினகர்

  ”பத்திரிகைகள் அல்லது தொலைக்காட்சிகளில் ஏதேனும் ஒன்றிலோ வந்திருந்தால் கூட, நிச்சயம் அவர்கள் சார்பில் மறுப்பு வந்திருக்கும்”

  அங்கெல்லாம் செய்திகளே வரவிடாமல் ‘ஆஃப்’ செய்து விட்ட பிறகு மறுப்பு எப்படி அனுப்பமுடியும்..

  ”அப்படி ஒன்றும் ஒரு protocol கிடையாது. அவர் representative தம்பிதுரையை அனுப்பி வைத்தாரே, அது போதும்.”

  அதாவது சங்மாவுக்கு ’தம்பிதுரை’ அளவுக்கு மரியாதை போதும். அது சரி எப்படியும் சங்மா குடியரசு தலைவர் ஆகப்போவதில்லை. எதற்காக டெல்லிக்கு சும்மா போய் உடம்பை கெடுத்துக்கொள்ள வேண்டும்.

  ”அவரை தாக்கிய குண்டர்கள் எல்லாம் எப்போதோ திமுகவில் தஞ்சமாகி புனிதவாங்கலாகிவிட்டார்கள்.”

  அப்போ இந்த குண்டர்களை ஏவியவர் ஜெ. தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் என்று எடுத்துக்கொள்ளலாமா? கொலை செய்யும் கூலிப்படையை விட, அதை ஏவியர் தான் முதல் குற்றவாளியாமே?

 34. Krishna

  /அங்கெல்லாம் செய்திகளே வரவிடாமல் ‘ஆஃப்’ செய்து விட்ட பிறகு மறுப்பு எப்படி அனுப்பமுடியும்..//

  இன்று டில்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாஜகவால் செய்திகளை எப்படி ‘ஆஃப்’ செய்ய முடியும்? தவிர இந்த செய்திகளை ‘ஆஃப்’ செய்தார்கள் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? சங்மா வேட்புமனு தாக்கல் செய்யும் போது தம்பிதுரையும் உடன் இருந்தாரே, ஒரு வேளை ஜெயலலிதா சங்மாவை வாபஸ் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஏன் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு செல்கிறார்? ஜெயலலிதாவை பொறுத்த வரையில் ஒருவரிடம் நட்பாக இல்லாவிட்டால் தன் கட்சிக்காரர்களை எக்காரணத்தையும் கொண்டு அவர்களை சந்திக்க விட மாட்டார் என்பது போல் தானே இதுவரை அவர் நடந்து கொண்டுள்ளார்?

  //அப்போ இந்த குண்டர்களை ஏவியவர் ஜெ. தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் என்று எடுத்துக்கொள்ளலாமா? கொலை செய்யும் கூலிப்படையை விட, அதை ஏவியர் தான் முதல் குற்றவாளியாமே?//

  அந்த குண்டர்களை ஏவியவர் ஜெ தான் என்று நிரூபிக்கப்படவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே.

 35. Krishna

  //மானாட மயிலாட நிகழ்ச்சியால் யார் முகத்திலும் ரத்தம் வடியவில்லை. யாருக்கும் ஹைஹீல்ஸ் செருப்படிகளும் கிடைக்கவில்லை. அது ஒரு கமர்ஷியல் நிகழ்ச்சி. கருணாநிதியா அதை டைரக்ட் பண்றார்? பிடிக்காத ஒன்றை எதற்காக வேலை மெனக்கெட்டு பாக்கறீங்க?//

  நீங்கள் கொடநாட்டை பற்றி சொன்னதால், நான் மானாட மயிலாட நிகழ்ச்சியை பற்றி தெரிவித்தேன். ஒவ்வொரு முதல்வரும் எவ்வாறு ஓய்வு எடுத்து கொள்வார்கள் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன்.

  //கருணாநிதி குடும்பமே நாட்டைக் கொள்ளையடித்ததாக கூடவே உட்கார்ந்து கணக்குப் பார்த்த மாதிரி சொல்லும் கணக்குப்புள்ளைங்களுக்கு இன்னிக்கு வரை ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. 1.76 லட்சம் கோடிக்கு கணக்கு காட்டுங்கடான்னா, அதான் கணக்குன்னு கவுண்டர் – செந்தில் வாழப்பழ சோக்கு மாதிரி சொல்லிக்கிட்டே திரியறாங்க..//

  இதை பற்றி CAG இது எப்படி ஏற்பட்டது என்ற விவரங்களை கூறி இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது அதை படியுங்கள். ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்றால் ராசா ஏன் கோர்ட்டில் “நான் வாயை திறந்தால், பலர் “உள்ளே” போவார்கள்” என்று சிபிஐ கோர்ட்டிலேயே சூளுரைத்தாரே? அப்படி உள்ளே போகிறவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

  /ரீடிப் மட்டுமா இந்த செய்தியைப் போட்டது? இந்துஸ்தான் டைம், பயனீர் உள்பட பல பத்திரிகைகளின் தளங்களில் இந்த செய்தி வந்ததே. டைம்ஸ் ஆப் இந்தியாவின் தளத்தில் வந்ததே. அவர்களெல்லாம் credibility-க்கு உங்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டுமா என்ன?

  Rediff வலை தளத்தில் மட்டும் தான் வந்தது என்று நான் எங்கே சொன்னேன்? வலை தளங்களில் சிலவற்றில் மட்டும் தான் வந்தது என்று தானே தெரிவித்தேன்? வலை தளங்களில் வருவதை பொதுவாக அரசியல் வாதிகள் ignore தான் செய்வார்கள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பயனீர் ஆசிரியர்கள் ஆங்கில தொலைக்காட்சிகளில் வரும் பேட்டிகளில் எப்படி காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதை 2004-ல் இருந்து பார்த்து கொண்டு தானே இருக்கிறேன்?

  //சிஎன்என் ஐபிஎன்னெல்லாம் உங்களுக்கு தொலைக்காட்சி கணக்கில் வராதோ?////

  CNN-IBN நானும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்வழியில் இந்த செய்தியை பார்த்த போது, அதே சமயத்தில் இது வரவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து சங்மாவின் மகள் அகதா சங்மா, NDA வில் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்று தெரிவித்ததை காட்டினார்கள். அவர் இதற்கு ஒரு clarification கொடுத்த பிறகு ஜெயலலிதா எதற்காக தனியாக ஒரு clarification கொடுக்க வேண்டும்?

  //படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது புள்ளையார் கோயில்னு சொல்ற மாதிரி, நாளெல்லாம் இந்த ஊடகங்களில்தான் செய்தியைப் பார்க்கிறீர்கள். அப்புறம் அதில ஆயிரம் நொட்டை. கருணாநிதியை திட்டி வந்தா அப்படியே ஜில்லுனு இருக்கும். அதை மட்டும் ஆனந்தமா மேற்கோள் வேற காட்டுவீங்களோ?//

  செய்திகளை தெரிந்து கொள்வதற்கு வேறு வழி இல்லையே? இவற்றை தானே பார்க்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு கருணாநிதி, ஜெயலலிதா என்றெல்லாம் பாகு பாடு கிடையாது. இவர்களின் பரபரப்புக்கு யார் உதவுவார்களோ, அவர்களை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். இதில் கருணாநிதியை பற்றி வந்தால் தனியாக ஆனந்தப்படுவதற்கு என்று ஒன்றும் கிடையாது.

  //ஏதேது.. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீங்களெல்லாம் தமிழ்நாட்டை விட்டே ஒழிந்துவிடுவீர்களா?//

  அது போன்ற கொடுமை இனி நடக்காது. மக்களின் வீடு மற்றும் நிலங்கள் மீண்டும் இந்த ஆட்சியில் தான் அவர்களுக்கு கிடைத்துள்ளன. ஆகவே, ஒழிய வேண்டிய நிலையில் இருப்பது திமுக தானே தவிர மக்கள் அல்ல.

 36. தினகர்

  “எதிர்க்கட்சி பிரமுகர்கள் தாக்குதலில் குற்றம் சாற்றப்பட்ட பலரை திமுகவில் சேர்த்துக்கொண்டது, அவர்களின் அராஜகங்கள் தொடர வழி வகுத்தது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது என்று அன்றைய ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகளில் வந்தது.”

  வரலாற்றை திரித்துக்கூறுவதிலும் நீங்கள் வல்லவர் தான் போலும். அதாவது நீங்க சொன்ன இந்த காரணங்களால் தான் திமுக தோற்றது?. யப்பா பெரிய மலையையே பூசணிக்காய் உள்ளே மறைக்கப் பார்க்கிறீங்களே.

  திமுக வை தனிமரமாக்கி, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என்று இரு கட்சிகள் மட்டுமே ஆதரவு என்ற நிலையில் ஒட்டுமொத்த தமிழக கட்சிகளும் ஒரணியில் திரட்டி, மொத்தமாக அதை ஜெ கையில் கொடுத்தாரே மூப்பனார் என்ற பெரிய மனிதர். அது தான் திமுக தோல்வி பெற ஒரே காரணம். அந்த மூப்பனாரை, வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்னரே தூக்கி வீசினாரே, அந்த ஜெ. பழைய வரலாற்றிலிருந்து பாடம் படிகக்வில்லை கூட்டணி குறித்து புதிய வரலாறை எழுதினார். தேசிய அளவில், காமராஜருக்கு அடுத்தபடியாக பெரும் மரியாதையை பெற்றிருந்த மூப்பனார், ஜெ தந்த அவமானம் தாங்க முடியாததால் தான் என்னவோ உடனடியாகவே இந்த உலகை விட்டே சென்று விட்டார்.

  ஒவ்வொரு உதிரிக்கட்சிகளின் வாக்கு வங்கியையும் உறுதி செய்த தேர்தல் அது. கட்சிகளின் கூட்டல் கழித்தல் தான் சட்டமன்றத்தை நிர்ணயிக்கும் என்ற உண்மையை பறைசாற்றியதும் அந்த தேர்தல்.

  அன்றைக்கு மூப்பனாருக்கு நேர்ந்த அவமானத்தை , வருடாவருடம் அவருக்கு நினவை அஞ்சலி செலுத்தும் விஜயகாந்த் ஒரு கணம் நினைத்திருந்தால், இப்போது அதிமுக ஆட்சியும் கிடையாது..தனித்து போட்டி என்று ஒரளவுக்கு பெயர் பெற்றிருந்த விஜய்காந்த்தும் கேலிக்குரியவராகி இருக்க மாட்டார்.

 37. தினகர்

  //1.76 லட்சம் கோடிக்கு கணக்கு காட்டுங்கடான்னா, அதான் கணக்குன்னு கவுண்டர் – செந்தில் வாழப்பழ சோக்கு மாதிரி சொல்லிக்கிட்டே திரியறாங்க..//

  இதை பற்றி CAG இது எப்படி ஏற்பட்டது என்ற விவரங்களை கூறி இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது அதை படியுங்கள். //

  CAG குழுவிற்கு உள்ளேயே நடந்துள்ள குளறுபடியை நீங்கள் படியுங்கள் . 1 .76 லட்சம் கோடி நஷ்டம் என்று கோர்ட்டில் வந்து வாக்குமூல்ம் சொல்ல வேண்டியது தானே இந்த சி.ஏ.ஜி ரிப்போர்ட் எழுதியவர். அங்கே சொல்ல என்ன தயக்கம். யாரோ ஒரு ரிப்போர்ட் எழுதிவிட்டால் அது தான் தீர்ப்பு என்று நம்ப வேண்டுமா?.. அப்போ நீதிமன்றங்கள் எதற்கு..? நீதிமன்றத்தில் 1 .76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று தீர்ப்பு வரட்டும் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கான தண்டனையையும் நீதிமன்றம் கண்டிப்பாக கொடுக்கட்டும்.

 38. தினகர்

  ”ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பயனீர் ஆசிரியர்கள் ஆங்கில தொலைக்காட்சிகளில் வரும் பேட்டிகளில் எப்படி காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதை 2004-ல் இருந்து பார்த்து கொண்டு தானே இருக்கிறேன்?”

  நண்பரே, மற்றவர்கள் யாரும் ஆங்கில பத்திரிக்கையையே பார்த்ததில்லை என்ற ரீதியில் அளக்கவேண்டாம். யார் யாருக்கு ஜால்ரா என்று எல்லோருக்கும் தெரியும். வாதம் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் உண்மையை பல தடவைகள் நீங்கள் மறைத்து, திரித்து எழுதுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஜெ. வை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம் மட்டுமே தெரிகிறது. ஒரு நாள் தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்..

 39. தினகர்

  ”ஆனால் ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் வசமாக மாட்டிக் கொண்டு, முழிபிதுங்கும் ஆத்தாக்கள் வாய்தா மேல் வாய்தா கேட்டு, நாட்டின் அத்தனை கோர்ட்டுகளிடமும் கேவலப்பட்டு நிற்பதை எத்தனை சாதுர்யமாக மறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.”

  தேவராஜனின் கருத்தை வரிவரியாக பிரித்து விலாவாரியாக பதில் சொன்ன கிருஷ்ணா மேலே உள்ளவற்றிற்கு மட்டும் பதில் சொல்லவில்லையே ஏன்? ஓ.. இது தான் ‘அம்மா’ பாசமா? 🙂

 40. தினகர்

  “அந்த குண்டர்களை ஏவியவர் ஜெ தான் என்று நிரூபிக்கப்படவில்லை”

  ஏவியவர் ஜெ. தான் என்று நிருபிக்கப்பட்டிருந்தால் அவர் இருந்திருக்க வேண்டிய இடம் ஜார்ஜ் கோட்டை அல்ல, வேலூர் கோட்டை என்று குழந்தைக்கும் தெரியும்..அதற்காக அவர் ஏவவில்லை என்று எப்படி நம்புவது. சண்முகசுந்தரம் மட்டுமா தாக்கப்பட்டார். சுப்பிரமணியன் சாமி, சேஷன், விகடன் அலுவலகம், தராசு அலுவலகம் தாக்குதல்கள் மற்றும் வீடு வீடாக ஆட்டோக்கள் அனுப்பி புதிய புதிய சாதனைகள் படைத்தவரல்லவா.

 41. தேவராஜன்

  //Rediff வலை தளத்தில் மட்டும் தான் வந்தது என்று நான் எங்கே சொன்னேன்? வலை தளங்களில் சிலவற்றில் மட்டும் தான் வந்தது என்று தானே தெரிவித்தேன்? வலை தளங்களில் வருவதை பொதுவாக அரசியல் வாதிகள் ignore தான் செய்வார்கள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பயனீர் ஆசிரியர்கள் ஆங்கில தொலைக்காட்சிகளில் வரும் பேட்டிகளில் எப்படி காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதை 2004-ல் இருந்து பார்த்து கொண்டு தானே இருக்கிறேன்?//

  -ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் என்பார்களே, அதற்கு உதாரணம் தெரிய வேண்டுமென்றால் மேற்கண்ட மேற்கோளைப் படியுங்கள் நண்பர்களே.

  இந்த நபர்தான் முதலில் சொன்னார், ரீடிப் தவிர வேறு யாரும் செய்தி வெளியிடவில்லை என்று. அதிலும் ரீடிப் நம்பகத்தன்மை இல்லாத தளம் என்ற ரீதியில். இப்போது இந்துஸ்தான் டைம்ஸ், பயனீர், கேள்விக்குறியோடு வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை கூட ஜெயலலிதாவுக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகக் கூறுகிறார். போதாக்குறைக்கு அந்த பத்திரிகையின் ஆசிரியர்களையும் சாடுகிறார். என்னா ஒரு வில்லத்தனம்!

  இவர் ஆங்கிலப் பத்திரிகை அல்லது அந்த பத்திரிகையின் வலைத்தளங்கள் படிக்கும் லட்சணம் தெரிகிறதா (அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளும் தங்கள் அச்சு ஊடகத்தில் வந்ததைத்தான் 99 சதவீதம் ஆன்லைனில் தருவார்கள்). இந்தப் பத்திரிகைகள் அனைத்துமே சந்தர்ப்பம் வாய்த்தால் ஜெயலலிதாவை மகாராணி ரேஞ்சுக்கு தூக்கி வைத்துக் கொண்டாடியவைகளே. கடந்தமுறை திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா டெல்லிக்கு வந்தபோது The Queen Arrives Capital என எட்டு பத்திக்கு தலைப்பாக்கியது டைம்ஸ் ஆப் இந்தியா. Jaya gets royal reception என எழுதி மகிழ்ந்தது இந்துஸ்தான் டைம்ஸ். நேரமிருந்தா ஏதாவது நல்ல லைப்ரரியில போய் இதையெல்லாம் தேடி எடுத்து படிங்க. தேடற கஷ்டம் கூட வேணாம்… மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி லைப்ரரில பீரியாடிக்கிள்ஸ் பகுதிக்குப் போங்க. அந்தக் கால சுதேசமித்திரன்லருந்து உங்க விருப்பமான அத்தனை ஆங்கிலப் பத்திரிகைகளின் 60 வருஷ பதிப்புகளும் கிடைக்கும்!

  குதிரைக்கு சேனம் போட்ட மாதிரி உங்களுக்கு கருணாநிதி எதிர்ப்பு என்ற சேனம் மாட்டப்பட்டுள்ளது. அதை நீக்கிவிட்டுப் பார்த்து கருத்தெழுதுங்கள். இல்லாவிட்டால் அசிங்கப்படுவது தொடரும்!

 42. தினகர்

  மகாராணி வந்து விட்டார்ன்னு ஜெயலலிதாவுக்கு தானே தலைப்பு போட்டாங்க. அதை சோனியா என்று தப்பாக நினைத்து விட்டார் போலும். அதான் காங்கிரஸ் சார்பு செய்தித்தாள் என்று சொல்லிவிட்டாரோ..

  சும்மா ஆதாரங்களை அள்ளி வீசுகிறீர்கள் தேவராஜன்.. மெட்ராஸ் யுனிவர்சிட்டி காலத்தையும் நினைவுபடுத்தி விட்டீர்கள்.. ஒருவேளை நாம் அங்கே அறிமுகமாகி இருந்திருக்கக் கூடும்

 43. மிஸ்டர் பாவலன்

  தேவராஜனும் DMK – போலத் தெரிகிறது! 🙂

  -பாவலன்

 44. தினகர்

  அப்போ கிருஷ்ணாவும் கணேஷ் ஷங்கரும், பாவலனும் பக்கா ஏ.டி.எம்.கே தானா? 🙂

 45. தேவராஜன்

  நான் திமுகவோ இல்லையோ – கண்டிப்பாக அதிமுக அல்ல. எதையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பவனும் அல்ல. நான் வாழும் நாட்டுக்கு எது நல்லதோ, யார் தேவையோ அதை – அவர்களை ஆதரிப்பவன்!

 46. மிஸ்டர் பாவலன்

  ///அப்போ கிருஷ்ணாவும் கணேஷ் ஷங்கரும், பாவலனும் பக்கா ஏ.டி.எம்.கே தானா? // (தினகர்)

  மற்றவர்களைப் பற்றி நான் எழுத முடியாது. நான் அ.தி.மு.க.
  உறுப்பினரோ, தொண்டரோ, ஆதரவாளரோ கிடையாது. இதுவரை
  நான் எந்தக் கட்சிக்கும் வோட்டுப் போட்டதில்லை. ‘Issue based support’
  என்பது போல் ஆக்கபூர்வமான அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து
  எழுதி வருகிறேன். அண்ணா நூற்றாண்டு நூலகம், சமச்சீர் கல்வி
  போன்ற தி.மு.க. அரசின் திட்டங்களை நான் ஆதரித்து எழுதியுள்ளேன்.
  அதிமுக அரசின் தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களை
  பாராட்டியுள்ளேன்.

  -மிஸ்டர் பாவலன்

 47. Krishna

  //இந்த நபர்தான் முதலில் சொன்னார், ரீடிப் தவிர வேறு யாரும் செய்தி வெளியிடவில்லை என்று. அதிலும் ரீடிப் நம்பகத்தன்மை இல்லாத தளம் என்ற ரீதியில். இப்போது இந்துஸ்தான் டைம்ஸ், பயனீர், கேள்விக்குறியோடு வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை கூட ஜெயலலிதாவுக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகக் கூறுகிறார். போதாக்குறைக்கு அந்த பத்திரிகையின் ஆசிரியர்களையும் சாடுகிறார். என்னா ஒரு வில்லத்தனம்!//

  Rediff தவிர வேறு எந்த வலை தளத்திலும் பார்க்கவில்லை என்று தான் சொன்னேன் தவிர rediff மட்டும் தான் போட்டார்கள் என்று சொல்லவில்லை. எப்படியோ, இது பொய் செய்தி என்று அகதா சங்மா தெரிவித்து விட்டார். ஆகவே இது ஒரு closed chapter.

  //இவர் ஆங்கிலப் பத்திரிகை அல்லது அந்த பத்திரிகையின் வலைத்தளங்கள் படிக்கும் லட்சணம் தெரிகிறதா (அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளும் தங்கள் அச்சு ஊடகத்தில் வந்ததைத்தான் 99 சதவீதம் ஆன்லைனில் தருவார்கள்). இந்தப் பத்திரிகைகள் அனைத்துமே சந்தர்ப்பம் வாய்த்தால் ஜெயலலிதாவை மகாராணி ரேஞ்சுக்கு தூக்கி வைத்துக் கொண்டாடியவைகளே. கடந்தமுறை திமுக ஆட்சியின்போது ஜெயலலிதா டெல்லிக்கு வந்தபோது The Queen Arrives Capital என எட்டு பத்திக்கு தலைப்பாக்கியது டைம்ஸ் ஆப் இந்தியா. Jaya gets royal reception என எழுதி மகிழ்ந்தது இந்துஸ்தான் டைம்ஸ்//

  மீண்டும் என் பதிவை படியுங்கள். Hindustan Times வினோத் ஷர்மா வாதங்களை 2004-ல் இருந்து கேட்டு கொண்டிருக்கிறேன். அவர் ஜெயலலிதாவுக்கு எதிரானவர் என்று எங்கே சொன்னேன்? காங்கிரசுக்கு ஜால்ரா என்று தானே சொன்னேன். அவர் பேசுவதை நீங்கள் கேட்டால் நீங்களும் அந்த முடிவுக்கு தான் வருவீர்கள்.

  //குதிரைக்கு சேனம் போட்ட மாதிரி உங்களுக்கு கருணாநிதி எதிர்ப்பு என்ற சேனம் மாட்டப்பட்டுள்ளது. அதை நீக்கிவிட்டுப் பார்த்து கருத்தெழுதுங்கள். இல்லாவிட்டால் அசிங்கப்படுவது தொடரும்!//

  கருணாநிதி எதிர்ப்பு என்பது இன்று பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டம். அதிலும் தங்கள் வீடு மட்டும் நிலங்களை இழந்த ஏழை மக்களின் எண்ண ஓட்டம். வீரபாண்டி ஆறுமுகத்தின் கைது அன்று சேலமே கொண்டாடியது பற்றி அங்கு இருக்கும் என் நண்பர்கள் சொல்கிறார்கள். 1996-2001 திமுக ஆட்சி போல் கடந்த திமுக ஆட்சி நடந்திருந்தால் திமுக எதிர்ப்பு என்பது இருந்திருக்காது. இந்த ஆட்சியில் பாலும் தேனும் ஓடுகிறது என்று யாரும் சொல்லவில்லை. அதிருப்தி கூட இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அந்த அதிருப்தி, திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்கிற அளவுக்கு மக்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.

 48. குமரன்

  மிக்க நன்றி கிருஷ்ணா

  நான் முன்னமே சொன்னது போல …. சண்முகநாதன் என்ற பெயரை சரியாகச் சொல்லி ….
  உங்கள் நினைவாற்றலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

 49. குமரன்

  கிருஷ்ணா….

  சறுக்குகிறீர்கள்.

  ///கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பல ஆண்டுகளாக இருக்கும் அரசியல் தலைவர்கள் நேரடியாக ஒருவரை தாக்குங்கள் என்று ஆள் அனுப்பமாட்டார்கள். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் சினிமாவில் தான் வரும்.///

  இருவரைப் பற்றியும் நீங்கள் முழுமையாக அறியவில்லை.

  சிதம்பரத்து உதயகுமார் பற்றித் தெரியுமா?
  அண்ணாநகர் ரமேஷ் கதை தெரியுமா?
  அண்மைக்கால சாதிக் கதிதான் தெரியுமா?
  தமிழ்க்குடிமகன் திமுகவை விட்டு விலகக் காரணம் அவர் காலணியால் அடிபட்டது என்பது தெரியுமா?

  பூலாவாரி சுகுமாரன் கதை தெரியுமா?
  விஜயலட்சுமி பழனிசாமியும் வீரபாண்டி ஆறுமுகமும் நெருங்கிய உறவினர்கள் தெரியுமா? ஆனாலும் அவர்களுக்குள் ஏன் பெரும்பகை என்று தெரியுமா?

  ஜெயலலிதாவின் 1991 -96 ஆட்சி நினைவில் இல்லையா?
  நீதிபதி சீனிவாசன் வீடு தாக்கப்பட்டது நினைவில் இல்லையா?
  வக்கீல் விஜயனுக்கு சவுக்குகட்டை அடியால் ஏன் இருபத்து எட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது தெரியுமா?
  வக்கீல் சண்முக சுந்தரத்துக்கு கத்திக் குத்தால் ஏன் நுரையீரலில் எட்டு பங்க்சர் செய்யப்பட்டது என்பது தெரியுமா?
  சைதை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த பாலன் கொல்லப்பட்டு உடலும் கூட ஏன் கிடைக்க வில்லை எனத்தெரியுமா?
  ஜெயலலிதாவின் கருப்பு முகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள
  இன்னும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது.
  இங்கே எழுத இடமில்லை.
  எனக்கும் எழுத்தில் துணிவிருந்தாலும் எலும்பில் பலமில்லை!!

 50. குமரன்

  ///ஆனால் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் இது போன்று தாக்குதல்கள் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். ///

  மிகவும் சரிதான்.

  2001 -06 ஆட்சியிலும், இப்போதும் ஜெயா குண்டர்களை அனுப்புவதில்லை. போலீசை அனுப்புகிறார்.

  கிரிமினல் மூளை தேறிவிட்டது. முதிர்ச்சி அடைந்து போலீசை ஏவுகிறது.

 51. குமரன்

  தேவராஜன்

  என்னை என்ன சொல்லப் போகிறீர்கள்? திமுக என்றா, அதிமுக என்றா?

  நான் சொல்வது ஒரு பொது மனிதனாக என்றா?

 52. தினகர்

  “எப்படியோ, இது பொய் செய்தி என்று அகதா சங்மா தெரிவித்து விட்டார். ஆகவே இது ஒரு closed chapter.”

  உலகமகா உத்தமி அகதா சொல்லிவிட்டதால் closed chapter . அந்தம்மா காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு தந்தைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் மூடி மறைத்துக்கொண்டு அலைகிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு தந்தைக்கு பிரச்சாரம் பண்ண போக வேண்டியது தானே?.

  அப்பாகாரர்கிட்டே கேட்டா, என் பொண்ணு விவரம் தெரிஞ்ச் பொண்ணு அதுக்கு என்ன செய்யனும் ன்னு தெரியும் நான் ஆதரவு கேட்க மாட்டேன்னு அள்க்கிறார். கேவலம் ஒரு மந்திரி பதவிக்காக குடும்பமே கூட்டாக வேஷம் போட்டு கிட்டு இருப்பதை பார்த்து சங்மா மீது இருந்த மரியாதை போய் விட்டது

  எதிராளி கொடுத்த பதவியும் வேணும். அப்பாவும் ஜெயிக்கனும் என்று டபுள் ஆக்ட் கொடுத்து கிட்டு இருக்கும் இந்த அகதாம்மா வேறு எப்படி சொல்லுவாங்க..

 53. தினகர்

  ”மற்றவர்களைப் பற்றி நான் எழுத முடியாது. நான் அ.தி.மு.க.
  உறுப்பினரோ, தொண்டரோ, ஆதரவாளரோ கிடையாது. இதுவரை
  நான் எந்தக் கட்சிக்கும் வோட்டுப் போட்டதில்லை”

  நான் அதிமுக அனுதாபி(sympathy உண்டு ) என்று தங்கள் திருக்கரங்களால் இந்தவலையில் எழுதியிருந்ததை படித்த ஞாபகம் 🙂

  எந்த கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்றால் அரசியல் கருத்துக்கள் சொல்லாமல் இருப்பது நலம். 🙂 ஓட்டு போடுவது என்ற ஜனநாயக கடமையை செய்யாமல், ஆட்சியையோ, அரசையோ விமர்சிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என்பதே பொதுவான கருத்து.

 54. மிஸ்டர் பாவலன்

  //தேவராஜன்:
  என்னை என்ன சொல்லப் போகிறீர்கள்? திமுக என்றா, அதிமுக என்றா?
  நான் சொல்வது ஒரு பொது மனிதனாக என்றா?// (நண்பர் குமரன்)

  இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு ரீமிக்ஸ் பாடல்:

  கட்சி பேரைச் சொல்ல ஒரு கணம் போதும்
  கட்சி பெரும் தொல்லை – தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் நமக்கோர் ஜன்மம் வேண்டும்
  என்ன சொல்லப் போகிறாய்?

  சாதனை நண்பரை கட்சியில் சேர்ப்பது நியாயமா? நியாயமா?
  குமரனின் கேள்விக்கு மின்வலை பதில் என்ன கோபமா ? சாபமா?
  நண்பா வலையில் பதிலொன்று போட நொடி ஒன்று போதுமே
  அதை நாமே மெய்ப்பிக்கத் தானே பல ஆயுள் வேண்டுமே.

  கட்சி பேரைச் சொல்ல ஒரு கணம் போதும்
  கட்சி பெரும் தொல்லை – தாங்குவதென்றால்
  இன்னும் இன்னும் நமக்கோர் ஜன்மம் வேண்டும்
  என்ன சொல்லப் போகிறாய்?

  ——-என்ன சொல்லப் போகிறாய்?——–

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 55. மிஸ்டர் பாவலன்

  தினகருக்கு சில பதில்கள்!

  //நான் அதிமுக அனுதாபி(sympathy உண்டு ) என்று தங்கள் திருக்கரங்களால் இந்தவலையில் எழுதியிருந்ததை படித்த ஞாபகம் 🙂 ///

  இது முற்றிலும் உண்மை. பார்லிமென்ட் தேர்தலிலும், அடுத்த சட்டசபை
  தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றால் நல்லது என நினைக்கிறேன்.
  ஆனால் நான் அந்த கட்சியின் ஆதரவாளர் இல்லை. ஓட்டுச் சாவடிக்கு
  சென்று ஓட்டுப் போடப் போவதும் இல்லை.

  ///எந்த கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்றால் அரசியல் கருத்துக்கள்
  சொல்லாமல் இருப்பது நலம். 🙂 ஓட்டு போடுவது என்ற ஜனநாயக கடமையை செய்யாமல், ஆட்சியையோ, அரசையோ விமர்சிப்பதற்கு
  தார்மீக உரிமை இல்லை என்பதே பொதுவான கருத்து.///

  எனக்கு எந்தக் கட்சியும் பிடிக்கவில்லை என்றால் யாருக்கு ஓட்டுப்
  போடுவது என்பதால் தான் இது வரை யாருக்கும் ஓட்டுப் போட்டதில்லை.
  (என் போல ஓட்டுப் போடாமல் பலரும் இருக்கிறார்கள் – பார்த்திருக்கிறேன்).
  ஆனால் துக்ளக் வார இதழையும், தினமலர் நாளேடையும், அதில்
  வரும் கட்டுரைகளையும், கடிதங்களையும் படிப்பதால் என்னால்
  கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை.

  என்னை நடுநிலையாளர் என நான் சொல்வதில்லை. வேறு யாரும்
  அப்படி சொன்னாலும் நான் அதை ஏற்பதும் இல்லை. நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 56. தினகர்

  “எனக்கு எந்தக் கட்சியும் பிடிக்கவில்லை என்றால் யாருக்கு ஓட்டுப்
  போடுவது என்பதால் தான் இது ”

  எந்த கட்சியும் பிடிக்கவில்லை என்பதற்கும் ஒரு படிவம் இருக்கிறதே. உங்களை ப்போன்றவர்கள் வாக்கு சாவடிக்கு செல்லாமல் இருப்பது தான் அரசியல் சீரழிவிற்கு முக்கிய காரணம்.

 57. தினகர்

  ”இது முற்றிலும் உண்மை. பார்லிமென்ட் தேர்தலிலும், அடுத்த சட்டசபை
  தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றால் நல்லது என நினைக்கிறேன்.
  ஆனால் நான் அந்த கட்சியின் ஆதரவாளர் இல்லை”

  இது துக்ளக் ’சோ’ வின் பாதிப்பா?. அதிமுக வெற்றி பெற்றால் நல்லது என்று சொல்லும் போதே அதற்கு ஆதரவாளர் ஆகிவிட்டீர்களே. மேலும் உங்கள் பதிவுகள் பலவும் திமுக தோற்க வேண்டும், அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற ரீதியில் தானே இருக்கிறது. நான் நடுநிலையாளர் அல்ல என்றும் சொல்கிறீர்கள்.. சோ வை விட மகா குழப்பசாலியோ? 🙂

 58. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே:

  இன்றைய தினத்தில் நாம் ஒரு டீக்கடையில் காணும் காட்சி என்ன என்றால் – A, D என்றi இரு கட்சிகளின் ஆதவாளர்கள் பேசிக்கொண்டால்:

  D: என்னப்பா.. உங்க தலைவர் ஆட்சி இப்படி இருக்கு?
  கரண்ட் விலை, பால் விலை எல்லாம் இப்படி கூடிப் போச்சே?

  A: ஆமா..கூடிப் போச்சு..அதுக்கு உங்க தலைவர் ஆட்சி சரியில்லை.
  அது தான் காரணம். பாராட்டு விழா, டிவி ப்ரோக்ராம்னு அவர்
  அசந்துட்டாரு, அது தான் காரணம்.

  D: சும்மா சொல்லாத.. சரியா? அதுக்கு முன்னாடி உங்க தலைவர் ஆட்சியில
  என்ன திட்டம் போட்டாங்க சொல்லு பார்ப்போம்? எல்லா சீர்கேட்டுக்கும்
  உங்க தலைவர் தான் காரணம்.

  A: என் தலைவரைப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை சொன்ன..
  இங்க நடக்கறதே வேற..

  D : என்னடா மிரட்டுற? என் மேலே கைய வச்சுடுவயா நீ?

  இப்படியே வளரும் பேச்சு! அரசியல் விவாதங்கள் ஆபத்தாக
  முடிந்திருக்கின்றன. கட்சி சார்பு, தொண்டர்கள் நிலை விபரீதமானது.

  இது போன்ற அரசியல் வாக்குவாதங்களில் இருந்து முற்றிலும் ஒதுங்கி
  இருக்கவே விரும்புகிறேன். அதிமுக மீது யார் எந்த விமர்சனம்
  வைத்தாலும் அவற்றை details பார்த்து விட்டு, அடுத்த கட்டுரை படிக்க
  நான் சென்று விடுகிறேன். எந்த கட்சியையும் defend செய்ய எனக்கு தேவை
  இல்லை. விமர்சனங்களைப் பாராட்டவும் வேண்டியதில்லை. நல்ல
  ஆட்சியைக் கொடுக்க வேண்டியது அரசியல் தர்மம். விமர்சனங்கள்,
  ஆக்க பூர்வ பரிந்துரைகள் எதிர்க்கட்சி, பத்திரிக்கை தர்மம். குடிமகனின்
  கடமை அரசின் நல்ல திட்டங்களுக்கும், சட்டத்திற்கும் கட்டுப் பட்டு
  ஒத்துழைப்பு கொடுத்து நடப்பது. யார் ஆட்சி செய்தாலும் என் போன்ற
  middle class மக்களின் நிலை இது தான்! 🙂

  அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள் தான் நான் “X கட்சி”, “Y கட்சி”.. என
  ஆதரவு சொல்லலாம். “நடுநிலை” என்பதிலும் சிக்கல், விமர்சனம்
  வருகிறது. தமிழகத்தில் சில பத்திரிகைகள் நடுநிலை நாளேடு
  எனப் போட்டு கட்சி சார்பு காட்டுகிறது. அதனால் தான் நடுநிலையாளர்
  என ஒரு டைட்டில் போட்டுக் கொள்வதையும் நான் விரும்பவில்லை.
  ஒரு observer ஆக நடப்பவற்றை பார்த்து விட்டுப் போகிறேன்!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 59. தினகர்

  ”அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள் தான் நான் “X கட்சி”, “Y கட்சி”.. என
  ஆதரவு சொல்லலாம். ஒரு observer ஆக நடப்பவற்றை பார்த்து விட்டுப் போகிறேன்! “

  அப்படி தெரியவில்லையே?.. கலைஞரை பற்றிய நெகட்டிவ் செய்தி என்றால் உங்கள் ப்ளட் ப்ரஷர் சந்தோஷத்தில் ஏறுவதும், அதே ப்ரஷர் அம்மாவை பற்றிய நெகட்டிவ் செய்தி என்றால் ஒரு வித ‘ஐய்யய்யோ ஏன் இப்படி’ என்றபரபரப்புடன் ஏறுவது உங்கள் கருத்து பதிவுகளில் தெளிவாக தெரிகிறதே..

  மொத்தத்தில், ’சோ’ விடமிருந்து ’படிப்பவர்களை குழப்புவது எப்படி’ என்று நன்றாக கற்றுக்கொண்டீர்கள் போலும். 🙂

 60. Ganesh Shankar

  //ஆனால் துக்ளக் வார இதழையும், தினமலர் நாளேடையும், அதில்
  வரும் கட்டுரைகளையும், கடிதங்களையும் படிப்பதால் என்னால்
  கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை.//(பாவலன்)

  நீங்கள் துக்ளக்கையும் படிப்பீர்களா.இதை நான் எதிர்பார்கவில்லை.
  உங்களுக்காக ஒரு நிகழ்படம்.முழுதாக பாருங்கள்.
  எனக்கு பிடித்திருந்தது.
  குமரம் மற்றும் கிருஷ்ணா அவர்களையும் பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
  மற்ற நண்பர்களையும் பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

 61. தேவராஜன்

  //தேவராஜன்

  என்னை என்ன சொல்லப் போகிறீர்கள்? திமுக என்றா, அதிமுக என்றா?

  நான் சொல்வது ஒரு பொது மனிதனாக என்றா?//

  -அறிஞர் குமரன் அவர்களே, தங்கள் கருத்துக்களை நான் மிகவும் கவனத்துடன் படிப்பேன். உங்கள் கருத்தில் நடுநிலைமை இருந்தாலும், அதில் அவ்வப்போது மிக நுணுக்கமாக வெளிப்படும் அதிமுக அனுதாபத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.

  ஈழ விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டை புரிந்து கொள்கிறேன். ஆனால், இந்திய தேசத்தின் நலன் என்று வரும்போது, நாம் அதை ஈழ விஷயத்தோடு முடிச்சுப் போடுவது சரிதானா?

  மற்றபடி இந்த வலையில் உங்களைப்போன்றவர்களுடன் விவாதிப்பதில் மகிழ்வும் நிறைவும் உள்ளது.

 62. குமரன்

  அன்பர் கணேஷ் ஷங்கர் …
  அந்த யூ டியூப் படத்தைப் பார்த்தேன்.
  சோ ஒரு பன்முக அறிஞர் (versatile genius) என்பதில் உடன்படுகிறேன். நல்ல நடிகர், நகைச்சுவை உணர்வுடையவர், சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர், அரசியல் நையாண்டி விமர்சகர், எழுத்தாளர், நாடக எழுத்தாளர், சட்ட வல்லுநர், எல்லாம் சரி.

  அவரிடம் உள்ள மிகப் பெரிய ஒரே குறை, கண்மூடித்தனமாக ஜெயலலிதா செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வது. ஒருமுறை இதை அப்படியே ஜெயா டி.வி.யில் கூட ஒளிபரப்பினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அப்பட்டமாகக் கண்மூடித்தனமாக ஒருவரை ஆதரிப்பவர் தனது “அறிஞர்” என்ற தகுதிக்குத் தாமே களங்கம் விளைவிக்கிறாரா இல்லையா?

  சமீப காலத்தில் ஜெயா இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆழ்ந்து சிந்தித்தால் இதில் நாட்டுக்கு உள்ள ஆபத்து புரியும். நான் பலமுறை சொல்லிவந்தது போல ஜெயாவின் குறை அவரது மனித உரிமை மீறல்கள். ஒரு அரசன் தனது குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தாயைப் போல, தந்தையைப் போல. நாமெலாம், நமது சுதந்திரம் போனால் நமது அரசு/ பிரதமர்/ முதல்வர் காப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். அப்படி இருக்க முதல்வராலேயே எனது சுதந்திரத்துக்கு ஆபத்து என்றால், அப்படிப்பட்ட முதல்வர் முதல்வராக இருக்க தகுதி எங்கே? உதாரணமாக எம்.ஜி.ஆரின் டிரைவர் என்ன அரசியல் வாதியா? தீவிரவாதியா? அவரைப் பிடித்து கஞ்சா கேஸ் போட்டால் அது சரியா? செரீனா பானுவுக்கு நடராஜனுடன் உறவு என்றால், அதற்காக அவர் மீது கஞ்சா கேஸ் போட்டு அவர்களைப் பிரிக்கவா ஜெயாவுக்கு மக்கள் வாக்களித்து முதல்வராக்கினார்கள்? இப்படி எத்தனையோ உள்ளன.

  “தமிழ்நாடு பெற்ற இன்பம் இந்த இந்தியாவே பெறட்டும்” என்ற பரந்த மனம் உள்ளவர் சோ என்றால் அது மிகை அல்ல.

  அல்லது இதே தளத்தில் “சொக்கத் தங்கம்” சோனியா, பிரணாப்பை “உதைத்து மேலே அனுப்புகிறார்கள்” அதாவது நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் அவரை குடியரசுத்தலைவர் ஆக்குகிறார்கள்: (Kick him up)
  என்று எழுதப்பட்டது. ஒருவேளை அதே தத்துவத்தில் சோ ஜெயாவை முதல்வர் பதவியில் இருந்து பிரதமர் பதவிக்கு “Kick her up” செய்ய நினைக்கிறாரோ?

 63. குமரன்

  கணேஷ் ஷங்கர் அவர்களே

  சோவின் “உண்மையே உன் விலை என்ன” நாடகம் Masterpiece.

  “முகமது பின் துக்ளக்” போன்ற ஒரு அரசியல் நையாண்டி இன்னமும், சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னரும், நம் நாட்டுக்குப் பொருந்துகிறது என்பது மிகப் பெரிய வேதனை.

 64. குமரன்

  தினகர் அவர்களே

  கலைஞரிடம் இருந்து அவரது உடன்பிறப்புகளுக்குக் கடந்த இரு நாட்களாக சிறை நிரப்பும் போராட்ட வெற்றிக்கான பாராட்டுக்களை கலைஞர் கடிதமாக அதாவது ….

  “அன்பு உடன்பிறப்பே” என்பதற்குப் பதிலாக
  அன்பு தியாகத்தின் திருவிளக்கே” என்று வரும் என்று எதிர்பார்த்தேன் !!!

  ஒருவேளை வந்தாலும் வரலாம்.

  விரைவில் உடன்பிறப்புகள் எல்லாம் “சொக்கத் தங்கம்” ஆகும்படிக்கு ஒரு போராட்ட அறிவிப்பு வந்தாலும் வரலாம் !!!!

  அன்னை ????
  இருக்கவே இருக்கிறார் …. குஷ்பு !!!!!!

 65. குமரன்

  அன்பர்களுக்கு
  எனது எழுத்துக்கள் காரம் கூடி வருவதாக நானே எனது சுயபரிசோதனைகளில் காண்பதால் சில தினங்களுக்கு எனக்கு நானே அறிவிக்கும் விடுமுறை! (தயவு செய்து கலைஞரின் “சுயபேட்டி” “Self Interview ” அறிக்கைகளுடன் ஒப்பிட வேண்டாம்!!!)
  நன்றி

 66. மிஸ்டர் பாவலன்

  ///நீங்கள் துக்ளக்கையும் படிப்பீர்களா.இதை நான் எதிர்பார்கவில்லை.///
  (கணேஷ் ஷங்கர்)

  நீங்கள் “எதிர்பார்க்கவில்லை” என எழுதுவீர்கள் என்பதை நானும்
  சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கிருஷ்ணன், குமரன் போன்ற
  நண்பர்களுக்கு நான் ஒரு துக்ளக் வாசகன் என்பது தெரியும். அதில் உள்ள
  கேள்வி-பதில் பகுதி, வேளக்குடி கிருஷ்ணன் கட்டுரைகளை நான்
  பாராட்டி இந்த வலையில் எழுதி உள்ளேன்.

  நான் இந்த வலையில் எழுதி வந்த பல பேர்களில் (டாக்டர் சுப்பாண்டி,
  சென்னை வீரன், அன்பழகன், வல்லவன்) ஒவ்வொருவரும் ஒவ்வொரு
  கட்சிக்கு ஆதரவாளர்கள். சென்னை வீரன் பக்கா அதிமுக. அன்பழகன்
  பக்கா திமுக. வல்லவன் கேப்டன் கட்சி. டாக்டர் சுப்பாண்டி தமிழறிஞர்.
  (இப்பொழுது எழுதும் பெயர்களை நானே சொல்லக்கூடாது!) இதில்
  சென்னை வீரன் பாத்திரம் துக்ளக் சோவின் ‘ஜக்கு’ பாணியில் அமைக்கப்
  பட்டது. அன்பழகன் பாவலனை மிகவும் தாக்கி எழுதி உள்ளார். சிலர்
  அதை ரசித்தனர். யார், யார் நமக்கு எதிராக உள்ளனர் எனத் தெரிந்து
  கொள்ள அது உதவியாக இருந்தது. ‘வல்லவன்’ ஆக கேப்டனைப் பாராட்டி
  எழுதியதை நண்பர் இளங்கோ மிகவும் ரசித்தார். கேப்டனை மீடியா
  ‘sideline’ செய்து வருவதாக (துக்ளக் உட்பட) தான் இன்றும் நினைக்கிறேன்.
  இப்படி பல பேர்களில் எழுதுவது கூட ஒரு வகையில் சோவின் பாதிப்பே.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 67. மிஸ்டர் பாவலன்

  //எனது எழுத்துக்கள் காரம் கூடி வருவதாக நானே எனது சுயபரிசோதனைகளில் காண்பதால்// (குமரன்)

  அரசியல் கருத்துக்களை நீங்கள் எழுதும் போது காரசாரமாக
  இருப்பதாக நீங்கள் எழுதுகிறீர்கள். நான் எழுதுவது போன்ற
  ‘உப்பு சப்பு’ இல்லாத பதிவுகளை விட உங்கள் பதிவுகளில்
  விஷயம் இருப்பதாக என் போல் பலரும் நினைக்கிறார்கள்.
  இது தான் உண்மை.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 68. மிஸ்டர் பாவலன்

  //அப்படி தெரியவில்லையே?.. கலைஞரை பற்றிய நெகட்டிவ் செய்தி
  என்றால் உங்கள் ப்ளட் ப்ரஷர் சந்தோஷத்தில் ஏறுவதும், அதே ப்ரஷர்
  அம்மாவை பற்றிய நெகட்டிவ் செய்தி என்றால் ஒரு வித ‘ஐய்யய்யோ
  ஏன் இப்படி’ என்றபரபரப்புடன் ஏறுவது உங்கள் கருத்து பதிவுகளில்
  தெளிவாக தெரிகிறதே..// (தினகர்)

  நீங்கள் ஏதோ நேரில் வீடியோ எடுத்து, BP அளவை monitor செய்தது
  போல் அல்லவா எழுதுகிறீர்கள்? உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன்.
  அதற்கு ஒரு முக்கிய உதாரணம் நண்பர் குமரனது பதிவுகள்.

  கலைஞரைப் பற்றி குமரன் விமர்சித்தது போல் ஜெயலலிதாவையும் பற்றி
  கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதற்காக நான் குமரனுடன் எந்த
  வாக்குவாதமும் வைக்கவில்லை. ‘அறிஞர் குமரன்’ என்று தான் அவரை
  பாராட்டி எழுதி வந்திருக்கிறேன். BP fluctuations அனைவருக்கும் உண்டு,
  இது நம் உடல்நிலை, மனநிலையைப் பொறுத்தது.

  தமிழகத்தில் என் போன்ற middle class மக்கள் அன்றாட வாழ்க்கைக்குக்
  கொடுக்கும் முக்கியம் அரசியல்வாதிகளுக்குக் கொடுப்பதில்லை. இது
  தான் உண்மை. மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்ற middle-class
  மனநிலையை இந்த வலையில் நான் பலதடவை எழுதி இருக்கிறேன்.
  நன்றி!

  -===மிஸ்டர் பாவலன் ===-

 69. Ganesh Shankar

  //சமீப காலத்தில் ஜெயா இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆழ்ந்து சிந்தித்தால் இதில் நாட்டுக்கு உள்ள ஆபத்து புரியும். //(குமரன்)

  என்னுடைய கோரிக்கை ஏற்று,அதனி பார்த்து கருத்து கூறியதற்கு நன்றி.

  அவரே சொல்லி இருக்கிறார்,நான் சொல்வதை வைத்து முதல்வர் மீது பழியை போடாதீர்கள் என்று.என்னுடைய கணிப்பை தான் நான் கூறுகிறேன் என்று.இந்த விடயத்தில் மற்றபடி எப்போதும் தான் சொல்லுவது சரி என்று எல்லாரும் எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் சொல்ல வில்லை.
  ஏன் வக்கீல் விஜயனை போட்டு அ.தி.மு.க அடித்தார்களே, அதையும் அவர் துக்ளக் ஆண்டு விழாவில் அவரை வைத்து கொண்டே குறிப்பிட்டு விமர்சித்தார்.நீதித்துறையை பற்றி வக்கீல் விஜயனை தான் பேச சொன்னார் துக்ளக் ஆண்டு விழாவில்.
  அந்த பகுதி எனக்கு முழுவதுமாக கிடைக்க வில்லை.இதை நான் கணினி வட்டு வாங்கி தெரிந்து கொண்டேன்.
  வக்கீல் விஜயன் பேசியது.காணொளி சரியாக இல்லை.
  http://www.youtube.com/watch?v=HAf5iBPpvio.
  அதை எல்லாம் ஜெயா தொலைகாட்சியில் போட வில்லை.அவர்கள் என்றும் தனக்கு சாதகமானதை மட்டுமே போடுபவர்கள்.இவர்கள் மட்டும் அல்ல எந்த அரசியல் கட்சியும் அவ்வாறு தான்.

  நீங்கள் சொல்வது உண்மை தான்.ஜெயலலிதா ஒன்றும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி கிடையாது.அதை சோவும் ஒத்துக் கொள்பவர் தான்.
  ஆனால்,இப்போது கையில் இருக்கும் விருப்பங்களில்,இருப்பதில் எது நாட்டுக்கு நன்று அதற்கான விடயத்தை தான் கூறுகிறார்.வாய்புகள் கிட்டும் போது அதில் எது நன்றாக இருக்கும் என்பதை கூறுகிறார்.அது எப்போதுமே அவருடைய நிலைப்பாடு.
  http://www.youtube.com/watch?v=Fck5BznhU1I
  இதில் 5:10 – 6:00 பார்த்தால் உங்களுக்கு புரியும்.அவ்வளவு தான்.

  சுய விளம்பரம் தேடி கொள்ளாமல்,தன பத்திரிகையின் விழாவை தலையங்கத்தில்,போட்டு பெரிதும் விளம்பரபடுத்தி கொண்டு இருக்கும் தமிழ் பத்திரிக்கை உலகில்,அதை செய்யாமல் இருக்கும் பத்திரிகையாக துக்ளக் இருக்கிறது.
  ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை கேவலபடுத்தி எதிர்க்காமல் இருக்கும்(இதில் தி ஹிந்து எவ்வளவு மோசமகா இருக்கிறது என்பது ஊருக்கு வெளிச்சம்) பத்திரிகை துக்ளக்.
  இலவசம் கொடுத்து,சினிமா மற்றும் பெரிய விளம்பரம்,பெண்கள் புகைப்படம் இல்லாமல் இருக்கும் தமிழ் பத்திரிக்கை துக்ளக்.

 70. மிஸ்டர் பாவலன்

  கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர் இருவரும் சோவைப்
  பின்பற்றுபவர்கள் போல் தெரிகிறதே! ஹி..ஹி..

  -== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *