BREAKING NEWS
Search

‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா!

‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா!

சென்னை: முதல்வராகப் பதவி ஏற்ற கையோடு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, ‘என்னை கண்ட இடத்தில் நிறுத்தி பேட்டி கேட்டு நச்சரிக்கக் கூடாது. நானே வாரம் ஒரு முறை உங்களைச் சந்திப்பேன்,” என்றார்.

அதன்படி ஒரே ஒரு வாரம் மட்டும் சந்தித்தார் ஜெயலலிதா. அப்புறம்… வழக்கம் போல, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்.

இந்த ஒரு வருடத்தில் இப்போதுதான் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதுகூட அவராக வரவழைத்து சந்திக்கவில்லை. வீட்டு வாசலில் நிருபர்கள் காத்திருந்து சந்தித்தனர்.

நான்கே கேள்விகள்தான். அதில் ராசா ஜாமீன், ப சிதம்பரம் விவகாரங்களுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தவர், ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு சுரத்தின்றி பதிலளித்துவிட்டு, காரில் ஏறுவதிலேயே குறியாக இருந்தார்.

அந்தப் பேட்டி:

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆ.ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே?

பதில்: நீங்கள் சொல்லித்தான் இதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒன்றும் இல்லாமல் வலுவிழந்து போய்க் கொண்டிருப்பது போல தெரிகிறது.

கேள்வி: ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவன விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்: இந்த விவகாரத்தில் தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது சுப்பிரமணிய சாமிதான். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டியது ப.சிதம்பரத்தின் பொறுப்பு. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திடம்தான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கேள்வி: தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பற்றி செய்திகள் வருகிறதே?

பதில்: அதுபற்றி நான் கேள்விபடவே இல்லை. இதுபற்றி பிறகு பதில் சொல்கிறேன்

கேள்வி: உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?

பதில்: அப்புறம் கூறுகிறேன் என்றார்.

-என்வவி செய்திகள்




33 thoughts on “‘உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா!

  1. kumaran

    ஒரு ஆண்டு சாதனை போல் வேதனையும் அதிகம் உண்டு

  2. தினகர்

    //கேள்வி: உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?
    பதில்: அப்புறம் கூறுகிறேன் என்றார்.//

    நெசமாலுங்களா?

  3. R.Ramarajan-Madurai

    2hr powercut 10hrs anathu thaan ore sathanai.

    25 Crores people’s money spend to 1st year annivarsary ad in leading newspapers all over india.

    நூறாண்டு வேதனையை ஒராண்டு அனுபவித்த மக்கள்.

    ஒரு வருட ஆட்சியில் பெயிலான ஜெ. மின்வெட்டு பிரச்சனை,பால், பஸ்,மின் கட்டணவிலை உயர்வால் அவதியில் மக்கள்.

  4. குமரன்

    ///இந்த விவகாரத்தில் தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது சுப்பிரமணிய சாமிதான்.///

    அதுதானே பார்த்தேன். சுப்பிரமணியம் சாமி கஷ்டப்பட்டு ஊழல் வழக்குகளைப் போட்டால், அதன் பலனை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி அறுவடை செய்துகொள்வார்கள். பொறுப்பு என்று வந்தால் தட்டிக் கழித்து விடுவார்கள்.

    ///அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டியது ப.சிதம்பரத்தின் பொறுப்பு.///
    ஜெயலலிதா தன மீது சொல்லப்பட்ட ஊழல் புகார்களுக்குத் தக்க பதிலை என்று சொல்லியிருக்கிறார்?

    /// இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திடம்தான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.///

    டான்சி வழக்கில் அளிக்கப் பட்ட தீர்ப்புக்குப் பின் ஊழல் வழக்குகள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திடமும் நம்பிக்கை குறைந்து விட்டது. அந்த தைரியத்தில்தான் 2 -g ஊழலே இந்த அளவுக்கு நடந்துள்ளது என்று சொன்னால் அது மிகை அல்ல. டான்சி வழக்கில் ஒரு முன்மாதிரி அளவில் கடும் தண்டனையை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தால் ஊழல் செய்ய அரசியல்வாதிகள் பயப்பட்டிருப்பார்கள்.

  5. குமரன்

    ///உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?
    பதில்: அப்புறம் கூறுகிறேன் என்றார்.///

    ஒருவேளை ஐந்து வருடத்துக்குப் பின் கூறுவாரோ?

    ஒரு ஆண்டில் நூறு வருடத்துகான சாதனைகளைச் செய்து விட்டதாக, போயஸ் கார்டனில் இருந்து கோட்டை போகும் வலி நெடுக போஸ்டர், பேனர் கண்டேன்.

    பொய்க்கும் ஒரு அளவு வேண்டாமா? நூறுவருடப் பொய்யை ஒரே நொடியில் இப்போதுதான் கேட்கிறோம் !

    அந்த அளவில் மகத்தான சாதனை.

    மகத்தில் பிறந்து மகத்தான சாதனை புரிந்தவரே வாழ்க!

    (தினகர், மனோகரன், note பண்ணிக்கங்கப்பா, note பண்ணிக்கங்க)

  6. Krishna

    எப்பொழுதும் பெயில் ஆகக்கூடிய மாணவன் நூற்றுக்கு 40 எடுத்தாலே அது பெரிய சாதனையாக தெரியும். ஆனால் நூற்றுக்கு 90 எடுக்கக்கூடிய மாணவன் 70 எடுத்தாலே அது மிக மிக குறைவாக தெரியும். காரணம் 90 எடுக்கக்கூடிய மாணவனைப் பற்றி எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். அது போல் கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் வேதனைகள் நிறைய இருந்தபோது மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் இவர்களிடம் எதுவும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்ற நினைப்பும் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சி திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

  7. தினகர்

    ”நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்”

    நிர்வாக சீர்கேடுன்னா என்னாங்க.? (கருப்புபணம்னா கருப்பா இருக்குமா ங்கிற மாதிரி ஒரு கேள்வி)

    அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி ஆபீசருங்க தான் அரசை நடத்துறாங்க.. ஒரு வேளை திமுக ஆட்சியில் காலைலே பதினோரு மணிக்கு வந்துட்டு இப்போ எட்டு மணிக்கெல்லாம் வந்துடுறாங்களோ?

  8. தினகர்

    “எப்பொழுதும் பெயில் ஆகக்கூடிய மாணவன் நூற்றுக்கு 40 எடுத்தாலே அது பெரிய சாதனையாக தெரியும். ஆனால் நூற்றுக்கு 90 எடுக்கக்கூடிய மாணவன் 70 எடுத்தாலே அது மிக மிக குறைவாக தெரியும்”

    அட 70 எடுக்கவேண்டாம் 50 எடுக்கலாம் தானே?. வெறும் பத்து மதிப்பெண், அதுவும் 40 மார்க் மாணவனை காப்பி அடித்து எழுதி (திமுக ஆட்சியின் இலவச திட்டம்) பெற்றால் எப்படி சாதனையாகும்?

  9. Krishna

    //அதுவும் 40 மார்க் மாணவனை காப்பி அடித்து எழுதி (திமுக ஆட்சியின் இலவச திட்டம்) பெற்றால் எப்படி சாதனையாகும்?//

    திமுக ஆட்சியின் திட்டத்தை தப்பாக காப்பியடித்ததால் தான் மீதி மதிப்பெண்கள் போய்விட்டது, வேதியியல் பயிலும் மாணவன் தாவரவியல் பேப்பர் எழுதும் மாணவனைப் பார்த்து காப்பி அடிப்பது போல் ஆகிவிட்டது. நில அபகரிப்பில் நிலங்களை இழந்த மக்களிடம் அவர்கள் நிலத்தையே ஒப்படைத்தது மாபெரும் சாதனை என்று ஹிந்து நாளிதழ் பாராட்டியிருக்கிறது. பொதுவாக ஹிந்து நாளிதழுக்கு ஜெ. வை பிடிக்காது. ஏனெனில் அதன் பொறுப்பாசிரியர் மாலினி பார்த்தசாரதியை கைது செய்ய முந்தைய அதிமுக ஆட்சியில் (2003)-ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு அதிமுக வெற்றி பெற்றபோதே அதிருப்தி தெரிவித்து தலையங்கம் எழுதிய ஹிந்து நாளேடு ஒரே ஆண்டில் இந்த ஆட்சியை பாராட்டியது நிச்சயம் ஒரு அதிசயம் தான்.

    இது தவிர Times of India, Deccan Chronicle, New Indian Express போன்ற நாளேடுகளும் இந்த ஆட்சியைப் பாராட்டி தலையங்கம் எழுதியிருக்கின்றன.
    நேற்று வெளியான CAG அறிக்கை 2010-2011 திமுக ஆட்சியில் மின்துறைக்கு 10,294 கோடி நஷ்டம் என்றும் போக்குவரத்து துறைக்கு 1575 கோடி நஷ்டம் என்றும் தெரிவித்திருக்கிறது. ஒரு ஆண்டிலேயே இவ்வளவு நஷ்டம் வரும்பொழுது திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளும் எவ்வளவு நஷ்டம் வந்திருக்கும் என்று பாருங்கள். இந்த பணத்தை எப்படியும் திமுக கொடுக்காது. ஆக மக்கள் தலையில் தான் விடியும்.

  10. தினகர்

    “CAG அறிக்கை 2010-2011 திமுக ஆட்சியில் மின்துறைக்கு 10,294 கோடி நஷ்டம் என்றும் போக்குவரத்து துறைக்கு 1575 கோடி நஷ்டம்”

    ஆடிட்டர் அறிக்கை என்பது நிதி நிலையை சரியாக கையாண்டு இருக்கிறார்களா என்பது மட்டும் தான். நிறுவனம் லாபம் பார்த்ததா? நஷ்டம் பார்த்ததா என்பது அவர்கள் வேலை இல்லை. அதுவேதான் CAG க்கும் பொருந்தும்.. தவறான வழியில் செலவு செய்யப்பட்டுள்ளதா என்று சொல்லட்டும் நியாயம். அரசுத்துறைகள் என்பதுவே மக்கள் நலனுக்காகத்தான். போக்குவரத்து என்பது எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்கவேண்டும் என்று தான் நாட்டுடமையாக்கப்பட்டது. மின் துறையும் அதனால தான் அரசு வசம் இருக்கிற்து.

    இரண்டு துறைகளும் நஷ்டம் அடைந்தது என்று கிருஷ்ணா கவலைப்பட தேவையில்லை மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம், குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்தால் அந்த நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்வது ஒன்று தவறு இல்லை. மக்களுக்கு நன்மை செய்யத்தான் வாக்களித்துள்ளார்களேயன்றி கொள்ளை லாபம் சம்பாதிக்க அல்ல.

    ”திமுக ஆட்சியின் திட்டத்தை தப்பாக காப்பியடித்ததால் தான் மீதி மதிப்பெண்கள் போய்விட்டது”

    ஆக தேர்தலில் வெற்றிபெறுவதற்கு காப்பி அடித்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள், எப்படி நல்லாட்சியை தருவார்கள் ? மீதி மதிப்பெண்கள் போய்விட்டது என்பதன் மூலம் இந்த ஆட்சியில் சாதனை ஏதும் இல்லை என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி…

    ஒரே நாளில் 25 கோடியை பட்டாசு கொளுத்திய போல் கொளுத்தியிருக்கிறார்களே இது யார் தலையில் விடியப்போகிறது நண்பரே..இப்போதுதான் அசல் ஜெ ஆட்சி ஆரம்பமாகி உள்ளது. இனி தான் தமிழகம் ’ஆட்டத்தை’ பார்க்க போகிறது..

  11. Krishna

    //இரண்டு துறைகளும் நஷ்டம் அடைந்தது என்று கிருஷ்ணா கவலைப்பட தேவையில்லை மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம், குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்தால் அந்த நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்வது ஒன்று தவறு இல்லை.//

    ஆனால் மக்களுக்கா குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தது? கொக்கி போட்டு திருடும் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவர்களிடம் பணம் கொடுத்து தங்களுக்கு மட்டும் மின்சார வசதி செய்துகொண்ட (ஆளும் கட்சிக்கு நெருக்கமான) தொழிலதிபர்களுக்கும் தான் குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தது என்று தான் CAG ரிப்போர்ட் கூறுகிறது. அது மட்டுமின்றி ஒரு யூனிட்டுக்கு 7 ருபாய் வீதம் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி அதில் 3.50 ருபாய் ஆட்டையை போட்டதாக CAG ரிப்போர்ட் தெரிவித்ததை நடுநிலை நாளேடுகளான Times of India, Deccan Chronicle, New Indian Express வெளியிட்டிருக்கின்றன. ஆனால் இப்பொழுதைய ஆட்சியில் அதே தனியார் நிறுவனங்கள் எப்படி ஒரு யூனிட்டுக்கு 3.50 தர சம்மதித்தார்கள் என்று இந்த நடுநிலை நாளேடுகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. திமுக ஆட்சிக்கு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் தரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எல்லாவற்றிலும் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் தான் இருந்திருக்கிறது என்று கடந்த ஆண்டே Deccan Chronicle நாளேடு தெரிவித்திருந்தது.

    //மீதி மதிப்பெண்கள் போய்விட்டது என்பதன் மூலம் இந்த ஆட்சியில் சாதனை ஏதும் இல்லை என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி…//

    நீங்களும் திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லை என்று சொன்னதற்கு நன்றி.

    இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனையே திமுக ஆட்சியில் நிலத்தை இழந்தவர்களுக்கு நிலத்தை மீட்டு கொடுத்தது தான் என்று ஜெ வை பிடிக்காத hindu நாளிதழ் பாராட்டியிருக்கிறதே – அதற்கு என்ன சொல்கிறீர்கள்? இவ்வளவுக்கும் கடந்த ஆண்டு திமுக தோற்றபோது “இவ்வளவு நிறைய சாதனைகள் புரிந்தும் திமுக ஏன் தோற்றது என்று புரியவில்லை” என்று தலையங்கம் எழுதிய அதே hindu நாளேடு தான் இன்று தலைமைச்செயலக மாற்றம், அண்ணா நூலக மாற்றம் மட்டும் தான் கண்டனத்துக்குரியது, மற்ற எல்லாமே பாராட்டுக்குரியது என்று தலையங்கம் எழுதியத்தைப் பற்றி கூறுங்களேன்.

  12. குமரன்

    ஒரு மாணவன் இன்னொரு மாணவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தானாம்.

    “ஏண்டா அவனை அடிக்கிறே” என்று போவோர் வருவோர் கேட்டததற்கு அவன் சொன்னானாம்.

    “நானே படிக்காமல் வந்துவிட்டு தேர்வில் எதுவும் எழுதாமல் அப்படியே வெள்ளைப் பேப்பரை கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன், இவன் எனக்கு முன்னாள் உட்கார்ந்திருந்தான், இவனும் அப்படியே வேல்லைபெப்பரைக் கொடுத்திருக்கிறான், திருத்தும்போது வாத்தியார் நான்தான் இவனைப் பார்த்துக் காப்பி அடித்தேன் என்று நினைப்பார் இல்லையா?”

    அதுபோலத்தான் திமுகவைப் பார்த்து அதிமுக காப்பி அடிப்பதும் அதிமுகவைப் பார்த்து திமுக காப்பி அடிப்பதும். இரண்டுமே பூச்சியம்தான்.

  13. தினகர்

    “கொக்கி போட்டு திருடும் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவர்களிடம் பணம் கொடுத்து தங்களுக்கு மட்டும் மின்சார வசதி செய்துகொண்ட (ஆளும் கட்சிக்கு நெருக்கமான) தொழிலதிபர்களுக்கும் தான் குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்தது என்று தான் CAG ரிப்போர்ட் கூறுகிறது. ”

    ஓஹோ, இப்போல்லாம் யாரும் கொக்கி போடுவதில்லையோ.. ஏன் கொக்கி குமாரை நில அபகரிப்பு வழக்குலே உள்ளே தள்ளிட்டாங்களா? கொக்கி போடுற கூட்டம் யார் ஆட்சிக்கு வந்தாலும் போட்டுகிட்டு தான் இருக்கு.

    CAG என்பதன் முழு விரிவாக்கம் நண்பருக்கு தெரியுமா? எத்ற்கெடுத்தாலும் CAG என்று துணைக்கு அழைப்பதை வழக்கமாக கொண்ட நண்பர் அதன் எல்லையை தெரிந்து கொண்டால் நல்லது..

    ஜப்பான்லே ஜாக்கி சான் கூப்டாக, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்டாக கதையாகத்தான் இருக்கு..

  14. enkaruthu

    கிருஷ்ணா அவர்களே எப்படியாவது ஜெயலலிதாவிற்கு சப்போர்ட் செய்யவேண்டும் என்பதுதான் உங்களின் குறிகோளாக இருக்கிறது.எந்த பிரச்சினை என்றாலும் அந்த நாளேட்டில் வந்தது இதில் வந்தது முந்தைய முதல்வரை குறை கூறும் உங்களின் கருத்திலேயே இந்த அட்சி ஒண்ணுமே செய்யவில்லை என்று தெரிகிறது.உங்கள் கருத்து “ஆட தெரியாதவள் ரோடு கோனை” என்று சொன்னது போன்றுதான்.

    இந்த cag abc போன்றவற்றை கட்டி கொண்டு அழுவதை விட்டு விட்டு ஒரு மக்களாக சிந்தித்து பாருங்கள்.அய்யா கிருஷ்ணன் அவர்களே நான் ஒரு சாதாரண குடிமகனாக கேட்கிறேன் அதுதான் கலைஞர் ஆட்சியை மாற்றி உங்கள் ஜெயலலிதாவை கொண்டு வந்தாச்சு இல்ல அப்புறம் ஏன் எதற்கெடுத்தாலும் கலைஞர் கலைஞர் என்று புலம்புகிறீர்கள் .தேர்தல் அறிக்கையில் மூன்றே மாதத்தில் மின்வெட்டை சரி செய்வோம் என்ற இவரின் வாக்கை நம்பித்தான் மக்களும் ஒட்டு போட்டார்கள்.இப்பொழுது ஒரு வருஷம் ஆகியும் மின்வெட்டு தீரவில்லை.இவருக்கு ஒட்டு போட்ட நாங்கள் ஏன் மின்வெட்டை தீர்க்கவில்லை என்று கேட்டால் அதற்க்கு முன்னால் முதல்வர் கலைஞர்தான் காரணம் என்று இந்நாள் முதல்வர் சொன்னால் ஒ அப்படியாம்மா என்று முட்டாள்தனமாக ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது எப்படி நியாயம் ஆகும்.

    போன ஆட்சியில் மிகபெரிய பிரச்சினையாக இருந்த மின்வெட்டை சரிசெய்தால் போதும் என்றுதான் மக்கள் இவருக்கு ஒட்டு போட்டார்கள்.ஆனால் அதை சரி செய்யாமல் சமசீர் கல்விக்கு முட்டு கட்டை கொடுத்து நீதிமன்றத்தில் வாங்கி கட்டிகொண்டது,கலைஞர் கட்டினார் என்ற ஒரே காரணத்திற்காக நான் அந்த கோட்டையில் உட்காரமாட்டேன் பழைய இடத்தில்தான் உட்காருவேன் என்று அடாவடித்தனம் செய்வது,சாலை பணியார்களை வேலை நீக்கம் செய்து அதற்கும் நீதிமன்றத்தில் கண்டனத்தை வாங்கிகட்டிகொள்வது.இப்படி இவரின் செயல்களை பார்த்த மக்கள் சொன்னது ஒன்னே ஒண்ணுதான் இந்த அம்மையாரின் குணம் மாறது என்பதுதான்.என்னை பொறுத்தவரை இப்பொழுது மட்டும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால் இந்த அம்மா ஒரு பத்து சீட் கூட ஜெயிக்காது.

    இந்த ஒரு வருட ஜெயலலிதாவின் ஆட்சியின் பின் மக்கள் சந்தோசபட்ட விஷயம் என்னவென்றால் அப்பா ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு இன்னும் ஒரு நான்கு வருடம் டக்குன்னு முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்பதுதான்.

  15. தினகர்

    “ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு இன்னும் ஒரு நான்கு வருடம் டக்குன்னு முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்பதுதான்.”

    ஒரு வருஷம் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் நாலு வருஷம் இருக்கே.. ..இப்படி இருட்டிலேதான் இருக்கனுமா….

  16. Krishna

    தினகர் அவர்களே, ஜெயலலிதா தும்மினால் கூட அதை கடுமையாக எதிர்க்கும் ஹிந்து நாளேடு கூட அவரை பாராட்டியிருக்கிறதே. அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்.

    என்கருத்து அவர்களே, CAG, CAG என்று நான் புலம்பவில்லை. முன்பு புலம்பியது கருணாநிதி தான். இதே CAG report தான் 2002-03 தணிக்கை அறிக்கையில் முந்தைய ஜெ அரசு பால் வளத்துறையிலும் மீன் வளத்துறையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று அப்பொழுது CAG ரிபோர்டை தயார் செய்த தீத்தன் என்பவர் தெரிவித்திருந்ததை கலைஞர் கருணாநிதி சுட்டிக்காட்டி முந்தைய ஜெ அரசை கண்டித்தார். ஆனால் இப்பொழுது CAG ரிப்போர்ட் மின்துறையில் 10294 கோடி, போக்குவரத்து துறையில் 1575 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதைப் பற்றி ஏன் பேசுவதில்லை? கருணாநிதிக்கே தெரியும் ஓர் ஆண்டிலேயே பத்தாயிரம் கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டால் அதை சரி செய்ய நிச்சயம் ஓர் ஆண்டுக்கு மேல் பிடிக்கும் என்று. இந்த அரசின் ஓர் ஆண்டு ஆட்சியை மிக கடுமையாக விமரிசிக்க திட்டமிட்டார். ஆனால் CAG ரிப்போர்ட் அதை கெடுத்து விட்டது. அதைப் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறார்.

    தவிர கருணாநிதி வழக்கமாக தனது அறிக்கையில் ஏதாவது பத்திரிகையின் தலையங்கத்தையோ அல்லது ஏதாவது செய்தியையோ மேற்கோள் காட்டி அதிமுக அரசை கண்டிப்பார். ஆனால் இம்முறை அப்படி செய்ய முடியவில்லை – ஏனெனில் முரசொலி, தினகரன், நக்கீரன் தவிர்த்து அனைத்து ஏடுகளும் பல விஷயங்களில் இந்த அரசைப் பாராட்டி இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை கடுமையாக விமர்சித்திருந்தாலும் மொத்தமாக பார்க்கும் போது பழுதில்லை என்றே கருத்து தெரிவித்திருக்கின்றன.

    //சாலை பணியார்களை வேலை நீக்கம் செய்து அதற்கும் நீதிமன்றத்தில் கண்டனத்தை வாங்கிகட்டிகொள்வது.//

    செஷன்ஸ் கோர்ட் கண்டித்தது. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அந்த வழக்கில் மாநில அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறதே. சாலைப் பணியாளர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்திருக்கிறார்கள். ஆக கடைசியாக வந்த தீர்ப்பு இந்த அரசை கண்டிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் கண்டிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    //இந்த ஒரு வருட ஜெயலலிதாவின் ஆட்சியின் பின் மக்கள் சந்தோசபட்ட விஷயம் என்னவென்றால் அப்பா ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு இன்னும் ஒரு நான்கு வருடம் டக்குன்னு முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்பதுதான்.//

    அது நீங்கள் தெரிவிக்கும் கருத்து. மக்கள் தாங்கள் இழந்த நிலங்களை மீட்டதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிலும் திருச்சியில் ராமஜெயம் கொலைக்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கும் அளவுக்கு அங்கே நில அபகரிப்பு நடந்திருக்கிறது. அதிலும் கலைஞர் கருணாநிதியே நேருவிடம் மலைக்கோட்டையை தவிர எல்லா இடங்களையும் வளைத்து போட்டு விட்டீர்களா என்று கேட்டது தான் எல்லா ஏடுகளிலும் வந்ததே.

    எல்லாவற்றிலும் மேலாக கடந்த அதிமுக ஆட்சியில் ரேஷன் கடையில் H முத்திரை கொண்டு வந்து முக்கால் வாசி தமிழக மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க விடாமல் செய்தது, ஆடு, கோழி பலியிட தடை, அரசு ஊழியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் என்று பயங்கரமாக நடந்தபோதே 2006 தேர்தலில் 65 சீட்டுகள் கிடைத்தது. வெற்றி பெற்ற திமுகவுக்கோ 100 சீட்டுகள் கூட கிடைக்கவில்லையே. இம்முறை அந்த மாதிரி பயங்கரம் வரும் ஆண்டுகளில் நடந்தால் தான் திமுகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

  17. தினகர்

    “ஜெயலலிதா தும்மினால் கூட அதை கடுமையாக எதிர்க்கும் ஹிந்து நாளேடு கூட அவரை பாராட்டியிருக்கிறதே. அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்.”

    இந்து பத்திரிக்கை ஜெயலலிதாவை எதிர்த்தது என்பது நம்ப தகுந்ததல்ல. அந்த பத்திரிக்கை யாரையுமே தீவிரமாக எதிர்த்து எழுதுவது கிடையாது. குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது தனது கருத்துக்களை சொல்வதை மட்டுமே வழக்கமாக கொண்டது.

    இப்போதும் அவர்கள் இந்த அரசு இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்று தான் சொல்லியிருக்கிறார்களே தவிர நூறாண்டில் செய்ய வேண்டியதை ஒராண்டில் ஜெயலலிதா செய்து விட்டார் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கவில்லை.

    நீங்கள் தாராளமாக ஜெயலலிதா அரசை மெச்சி பாராட்டிக் கொண்டு சந்தோஷமாக இருங்கள். ஐந்தாண்டுகள் முடிவில் மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை பார்த்து, நீங்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்க ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  18. தினகர்

    ”செஷன்ஸ் கோர்ட் கண்டித்தது. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அந்த வழக்கில் மாநில அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கிறதே. சாலைப் பணியாளர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்திருக்கிறார்கள். ஆக கடைசியாக வந்த தீர்ப்பு இந்த அரசை கண்டிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் கண்டிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.”

    ஆக சாலைப்பணியாளர்களை இந்தம்மா ஒவ்வொரு ஐந்தாண்டும் பந்தாடிக்கொண்டிருப்பது உங்களுக்கு தவறாக தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் கண்டிக்கிறதா, ஹைகோர்ட் கண்டிக்கிறதா என்பது தான் கவலையாக இருக்கிறது.. யப்பா என்ன ஒரு கொடுங்கோலத்தனம்.. இனிமேல் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.. நன்றி..

  19. venkatesan, nigeria

    //..இவருக்கு ஒட்டு போட்ட நாங்கள் ஏன் மின்வெட்டை தீர்க்கவில்லை என்று கேட்டால் அதற்க்கு முன்னால் முதல்வர் கலைஞர்தான் காரணம் என்று இந்நாள் முதல்வர் சொன்னால் ஒ அப்படியாம்மா என்று முட்டாள்தனமாக ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது எப்படி நியாயம் ஆகும்..// இப்படியே இன்னும் 4 வருடம் ஒட்டி விடுவார்கள். இனி மேல் எந்த திட்டமும் போட போட மாட்டார்கள். ஏன் என்றால் அதன் உற்பத்தி தொடங்கும் போது ஜெயா ஆட்சியில் இருக்க மாட்டார்.

  20. venkatesan, nigeria

    //கேள்வி: உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?
    பதில்: அப்புறம் கூறுகிறேன் என்றார்// அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இது தப்பிக்கும் வழி. மற்ற எல்லா கேள்விக்கும் பதில் சொன்னவர் இதற்கு மட்டும் அப்புறம் கூறுகிறேன் என்றால் என்ன அர்த்தம். இதை கூட புரிந்து கொள்ளாத அதிமுக பக்தர்கள் பாய்ந்து பாய்ந்து சொல்வது ஜெயா காதுக்கு போனால் “குடுத்த காசுக்கு மேலே கூவராண்டா கொய்யாலே” என்று எண்ணி சிரித்து விடுவார்.

  21. venkatesan, nigeria

    //இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனையே திமுக ஆட்சியில் நிலத்தை இழந்தவர்களுக்கு நிலத்தை மீட்டு கொடுத்தது தான் என்று ஜெ வை பிடிக்காத hindu நாளிதழ் பாராட்டியிருக்கிறதே //
    சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்
    அமிர்தாஞ்சன் —-> தலைவலி ; நில அபகரிப்பு
    டான்சி —————-> தமிழக நிறுவனம் ; நில அபகரிப்பு
    சிறுதாவூர் ———–> பசுமையான நிலம் ; நில அபகரிப்பு

  22. venkatesan, nigeria

    //ஒரு வருஷம் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் நாலு வருஷம் இருக்கே.. ..இப்படி இருட்டிலேதான் இருக்கனுமா….// NIGERIA -வில் சொகுசாக வாழ்ந்து விட்டேன். இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். நினைத்தாலே பயமாக இருக்கிறது.

  23. Krishna

    //நீங்கள் தாராளமாக ஜெயலலிதா அரசை மெச்சி பாராட்டிக் கொண்டு சந்தோஷமாக இருங்கள். ஐந்தாண்டுகள் முடிவில் மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை பார்த்து, நீங்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்க ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.//

    மீண்டும் சொல்கிறேன், ஜெ மக்களுக்கு கடந்த ஆட்சியின் பொது கொடுத்த அதிர்ச்சி வைத்தியங்களை (அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ், H-முத்திரை போன்றவை) கொடுக்காத வரையில், அதிமுகவுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் தர மாட்டார்கள். அதுவும் திமுக இப்பொழுதுள்ள முன்னாள் மந்திரிகளான கேபிபி சாமி, வீரபாண்டியார், பொன்முடி, அன்பரசன் போன்ற நில அபகரிப்பு புகழ் மாஜிக்களுக்கு சீட் கொடுத்தால் திமுக நிச்சயம் தேறாது. அடுத்த தேர்தல் முடிவு 50% அதிமுக கையிலும் 50% திமுக கையிலும் தான் இருக்கிறது.

  24. Krishna

    //இந்து பத்திரிக்கை ஜெயலலிதாவை எதிர்த்தது என்பது நம்ப தகுந்ததல்ல. அந்த பத்திரிக்கை யாரையுமே தீவிரமாக எதிர்த்து எழுதுவது கிடையாது. குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது தனது கருத்துக்களை சொல்வதை மட்டுமே வழக்கமாக கொண்டது.//

    1992 ஆண்டிலிருந்தே ஹிந்து நாளேட்டை படித்து வருகிறேன். அவர்கள் எந்த ஒரு நிகழ்வானாலும் மென்மையான வார்த்தைகள் ஆனால் கடுமையான கருத்துக்களை கூறுவார்கள். அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் விவகாரத்தில் மூன்று பக்கங்கள் செலவிட்டு கண்டித்தார்கள் (நியாயமான கண்டனம் தான்). குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது அவர்கள் கருத்தை வைப்பார்கள் என்று ஏற்று கொள்கிறேன் – ஆனால் சில மாதங்களுக்கு முன் vision-2023 அறிக்கை வெளியான போது மனம் திறந்து பாராட்டினார்கள்.

  25. Ganesh Shankar

    //மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம், குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்தால் அந்த நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்வது ஒன்று தவறு இல்லை.//

    இது முற்றிலும் தவறு.அரசு என்பது ஒன்றும் மந்திரகோல் இல்லை.அவர்கள்,மககளிடம் இருந்து வரும் பணத்தில் தான் செலவு செய்கிறார்கள்.யாரும் சொந்த பணத்தில் செலவு செய்ய வில்லை.அதை எவ்வளவு செம்மையாக செய்வதில் தான் இருக்கிறது அரசின் சிறப்பு.
    காரண,காரியம் இல்லாமல் நட்டம் ஏற்பட்டால்,அதை சரி செய்ய வழி இருந்தும் செய்ய வில்லை என்றால்,அது கண்டிப்பாக பொது துறை நிறுவனகளை மூடுவதற்கு தான் வழி வகுக்கும்.அது சரி இல்லை.
    எல்லா நிறுவனங்களுமே நன்றாக செயல் பட வேண்டும்.நட்டத்தில் இயங்க கூடாது.
    அதுவும் பொது துறை நிறுவனங்கள் கண்டிப்பாக நன்றாக செயல் பட வேண்டும்.தொடர்ந்து அது நட்டத்தில் இயங்க கூடாது.
    ஏன் என்றால்,அது சாமானியர்கள் உபயோகபடுத்துவது.அதனை மிக நன்றாக கவனிக்க வேண்டும்.
    ஆனால்,அதற்கு கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படிருகிற நட்டம்,அதன் தொகை எவ்வளவு?? அதை திருப்பி தூக்கி நிறுத்த விலை வாசி ஏற்றுவதை தவிர வழி இல்லை என்கிற அளவிற்கு சென்று விட்டது.அது மிக பெரிய தவறு.மேலும்,அப்போது ஏன் சம்பதமே இல்லாமல்,நட்டத்தில் போனது??
    எல்லாம் நிர்வாகம் சரி இல்லை என்பதனால் தான்.

    மக்களுக்கு கண்டிப்பாக நியாமான விலையில் தான் சேவையை அளிக்க வேண்டும்.படி படிப்படியாக,அதனை ஏற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.அனால்,இரண்டிலுமே தவறியதன் காரணமாக இப்போது,திடிரென்று விலை சுமை பெரிதாக இருக்கிறது.

  26. தினகர்

    சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்
    அமிர்தாஞ்சன் —-> தலைவலி ; நில அபகரிப்பு
    டான்சி —————-> தமிழக நிறுவனம் ; நில அபகரிப்பு
    சிறுதாவூர் ———–> பசுமையான நிலம் ; நில அபகரிப்பு

    வெங்கடேசன், உங்களை மாதிரி எல்லோருக்கும் நினைவாற்றல் இருக்கிறதா என்று சோதிக்கிறீர்களா? . எனக்கு நினைவில் உள்ள விடைகள்.

    அமிர்தாஞ்சன் —-> நில அபகரிப்பு ( உரிமையாளருக்கு தலைவலி )
    டான்சி —————-> நில அபகரிப்பு ( நீதிமன்றத்தால் மீண்டும் தமிழக அரசுக்கு சொந்தமாக்கப்பட்டது)
    சிறுதாவூர் ———–> நில அபகரிப்பு( தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்க்காக கொடுகப்பட்ட பசுமையான நிலம்- இப்போது அந்த அப்பாவி மக்கள் விரட்டி அடிக்கப்ப்ட்டு விட்டார்கள்)

    விடையும் விள்க்கமும் சரியா என்று சொல்லுங்கள் 🙂

  27. தினகர்

    ”இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். நினைத்தாலே பயமாக இருக்கிறது.”

    சென்னை இருட்டாக இருக்கும். வெயில் கொடுமையில் வேர்வை மழை பொழியும், இரவில் விளக்கு இருக்காது….இப்படிங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தயார் படுத்திக் கொள்ளுங்கள்..

    அவ்வப்போது கிடைக்கும் மின்சாரத்தை கண்டு ஆனந்த்மடைவீர்கள் 🙂

  28. enkaruthu

    அதாவது வெங்கடேசன் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு நம் ஊர் பக்கம் ஒரு விமானம் சென்றால் ஹய்யா விமானம் போகுது என்று அதை பார்க்க மாடி பக்கம் ஓடுவோம்.அதை போல்தான் இன்று மக்கள் எப்போதாவது வரும் மின்சாரத்தை பார்த்து ஹய்யா மின்சாரம் வந்துவிட்டது என்று ஓடுகிறார்கள்.சென்னை பரவாயில்லை நீங்கள் வேறு எந்த மாவட்டத்துக்கு
    (புதுகோட்டை தவிர) போனாலும் அப்படியே ஜிம்மில் எடுக்கும் ஸ்டீம் பாத் மாதிரி வியர்வை கொட்டும். இப்படி உடற்பயிற்சியே செய்யாமல் வியர்வை வரவைத்ததுதான் இந்த ஆட்சியின் சாதனை.

  29. venkatesan, nigeria

    //விடையும் விள்க்கமும் சரியா என்று சொல்லுங்கள் //

    இது அதிமுக நண்பர் ஒருவர் நில அபகரிப்பு செய்தவர்களை புரட்சி தலைவி கைது செய்து ஒரு வருட சாதனை படைத்தது விட்டார் என்று சொன்னதற்காக.
    அவரது தலைவியே நேரிடையாக சம்பந்த பட்டு இருப்பதை சுட்டி காட்டுவதற்காக.
    அவரின் தலைவி மீது நில அபகரிப்பு வழக்கு பாயுமா என்று கேட்பதற்காக.
    (வரிசையாக திமுகவினர் எல்லாரும் கோர்ட் மூலம் விடுதலை ஆகி வருகிறார்களே அப்படி என்றால் பொய் வழக்குத்தானே)

  30. venkatesan, nigeria

    //அவ்வப்போது கிடைக்கும் மின்சாரத்தை கண்டு ஆனந்த்மடைவீர்கள் // அதாவது ஆசையை அறவே மற என்று சொல்கிறீர்கள்.

    //சென்னை பரவாயில்லை நீங்கள் வேறு எந்த மாவட்டத்துக்கு
    (புதுகோட்டை தவிர) போனாலும் அப்படியே ஜிம்மில் எடுக்கும் ஸ்டீம் பாத் மாதிரி வியர்வை கொட்டும். இப்படி உடற்பயிற்சியே செய்யாமல் வியர்வை வரவைத்ததுதான் இந்த ஆட்சியின் சாதனை.// அவங்களுக்கு சாதனை பட்டியல் இல்லை என்பதால் நீங்கள் எடுத்து கொடுகிரீர்கள் என்று நினைக்கிறேன். நான் திருமுல்லைவாயல் (ஆவடி மற்றும் அம்பத்தூர் இடையே) என்ற இடத்தில் வசிக்கிறேன்.

  31. தினகர்

    ”வரிசையாக திமுகவினர் எல்லாரும் கோர்ட் மூலம் விடுதலை ஆகி வருகிறார்களே அப்படி என்றால் பொய் வழக்குத்தானே “

    என்றைக்கு ராவணனும், ’சசிகலா’ நடராஜனும நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய்ப்பட்டார்களோ, அன்றைக்கே ‘ நில அபகரிப்பு’ வழக்கின் ’வீரியம்’ உலகிற்கு தெரிந்து விட்டது..

    “இது அதிமுக நண்பர் ஒருவர் நில அபகரிப்பு செய்தவர்களை புரட்சி தலைவி கைது செய்து ஒரு வருட சாதனை படைத்தது விட்டார் என்று சொன்னதற்காக.அவரது தலைவியே நேரிடையாக சம்பந்த பட்டு இருப்பதை சுட்டி காட்டுவதற்காக.அவரின் தலைவி மீது நில அபகரிப்பு வழக்கு பாயுமா என்று கேட்பதற்காக”

    அது முன்னாடி அம்மா ஆட்சியில் நடந்தது. டான்சி நிலத்தை திருப்பி கொடுக்க் சொல்லிநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது, எல்லோருக்கும் மறந்து போயிருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களை, இப்படியெல்லாம் ஞாபகப்படுத்தினால், பாவம் என்ன செய்வார்கள் 🙂

  32. Krishna

    //அது முன்னாடி அம்மா ஆட்சியில் நடந்தது. டான்சி நிலத்தை திருப்பி கொடுக்க் சொல்லிநீதிமன்றம் விடுதலை செய்து விட்டது, எல்லோருக்கும் மறந்து போயிருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களை, இப்படியெல்லாம் ஞாபகப்படுத்தினால், பாவம் என்ன செய்வார்கள் //

    ஜெ ஒரே ஒரு டான்சி நிலத்தை தான் முழுங்கினார். ஆனால் திமுகவிலோ ஒருவர் திருச்சியில் மலைக்கோட்டையை தவிர எல்லாவற்றையும் முழுங்கினார். இன்னொருவர் மதுரையையே முழுங்கினார். இன்னொருவர் சேலத்தை முழுங்கினார். மொத்தத்தில் கடந்த ஆட்சியில் டான்சியைத் தவிர எல்லாவற்றையும் முழுங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *