தொடங்கியது லிங்கா படப்பிடிப்பு… ரஜினிக்கு வில்லன் தெலுங்கு ஜெகபதிபாபு!
லிங்கா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு.
கோச்சடையான் படத்துக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்துக்கு லிங்கா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடிகளாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு மைசூரில், செவ்வாய்கிழமை தொடங்கியது. இதற்காக, ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை மைசூர் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 40 நாட்கள் தங்கியிருந்து, ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறார்.
ரஜினிகாந்த் ‘லிங்கா’வின் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஜெகபதி பாபுதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை கே எஸ் ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெகபதிபாபு ஏற்கெனவே கதாநாயகுடு தெலுங்குப் படத்தில் ரஜினியுடன் நடித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
எந்திரன் படத்தில் பணிபுரிந்த ரத்னவேலுதான், லிங்காவுக்கு ஒளிப்பதிவாளர். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி – சோனாக்ஷி சின்ஹா பாடும் டூயட் பாடல் ஒன்றை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான். ரஜினிக்கான அறிமுகப் பாடல் உருவாக்கும் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
முத்து, படையப்பா படங்களுக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படம் இது. முழுக்க முழுக்க காமெடி, ஆக்ஷன், காதல், குடும்ப சென்டிமென்ட் ஒரு பக்கா பொழுதுபோக்குப் படமாக லிங்கா உருவாகிறது.
அதே நேரம் வழக்கமாக பார்முலா கதை மாதிரி இருக்கக் கூடாது என்பதிலும் ரஜினி மிகுந்த கவனமாக உள்ளாராம். இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தின் போது, கே எஸ் ரவிக்குமாருடன் ரஜினியும் இருந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் தினசரி கே எஸ் ரவிக்குமார் வீட்டுக்கே போய், திரைக்கதையை உருவாக்கியுள்ளார் ரஜினி.
-என்வழி
மீண்டும் ஒரு படையப்பா
மீண்டும் உனது முந்தைய வசூல் சாதனைய உடையப்பா .
யார் இந்த ஜெகபதி பாபு?? பேரு கேள்விப்பட்டதில்லை..
குருவி படத்தில் சுதீப் நடிக்கும் போது, ரஜினி படத்திற்கும்
சுதீப் அல்லது வேற பெரிய வில்லனை book செய்திருக்கலாம்.
நன்றி!
-== மிஸ்டர் பாவலன் ==-
மீண்டும் உனது முந்தைய வசூல் சாதனைய உடையப்பா.