BREAKING NEWS
Search

எத்தனைப் பேரின் வேண்டுதல் பலித்த நாள் இது!

எத்தனை பேரின் வேண்டுதல் பலித்த நாள் இது!

Rajinikanth in Chennai Airport July 13 Photos

த்தனை லட்சம்… இல்லையில்லை கோடிப் பேரின் வேண்டுதல் பலித்த நாள் இது!

ஒரு புனித ஆத்மா மறு ஜென்மம் எடுத்த நாள் அல்லவா…. 13.7.2011 அன்று இரவு சிங்கப்பூரிலிருந்து அந்த விமானம் தரை தொட்ட பின், தனக்கே உரிய அதே சுறுசுறுப்போடு கைகளை உயர்த்தி கும்பிட்டபடி ரசிகர்களை நோக்கி ரஜினி வந்த காட்சி இன்னும் கண் முன்னே நிழலாடுகிறது. ரசிகர்களுடன் பேசவே அவர் விரும்பி வந்து கொண்டிருந்தார். இதை முன்பே போலீசாரும் கூறியிருந்தனர்.

அவரைத் தொட்டுவிடும் தூரத்தில் நின்று பார்த்தேன். ரசிகர்கள் அத்தனை பேரும் தலைவா என உணர்ச்சிப் பிழம்பாகி, கண்களில் நீருடன் அவரை நோக்கிப் பாய்ந்தனர்.  ரஜினியின் கண்களிலும் கண்ணீர். ஒரு நிமிடம்தான். அதற்கு மேல் நிற்க முடியாத சூழல். கட்டற்ற வெள்ளமாய் ஜனத்திரள் அவரை நோக்கிப் பாய, அவர் காருக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டார்.

rajini-spl-pics-2-copy

யாரையும் குற்றம் சொல்ல முடியாத சூழல்.

இந்த  புனித ஆத்மா பூரணமாய் திரும்பி வர வேண்டும் என்பதற்காக, அவரை உயிராய் நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமல்ல.. மக்கள்.. மேற்கொண்ட சர்வ மதப் பிரார்த்தனைகள், பாதயாத்திரைகள், அன்னதானங்கள், மண்சோறு வேண்டுதல்கள், முடி காணிக்கைகள், முழங்கால் பிரதட்சணைகள்… எதையும் இப்போது கூட மறக்க முடியவில்லை.

Rajinikanth in Chennai Airport July 13 Photos

குறிப்பாக ஒரு புகைப்படம்… திருப்பூர் அருகே எடுக்கப்பட்டது. ஒரு இளைஞர் கூட்டம் மஞ்சள் வேட்டி, ரஜினி படம் போட்ட மஞ்சள் பனியன் அணிந்து, தலையில் காணிக்கைக்காக புனித நீர்க்குடம்.. முதில் ஒரு குடத்துடன் நடந்து செல்கிறார்கள். கொளுத்தும் மே மாத வெயில். காலில் செருப்பு கூட இல்லை. திருமூர்த்தி மலையிலிருந்து பண்ணாரிக்கு பாதயாத்திரை. ஒரே வேண்டுதல் ரஜினி நலமுடன் வரவேண்டும் என்பதுதான். ஒரு கணம் அந்த வலியையும் அவர்களது பிரார்த்தனையின் வலிமையையும் நினைத்து அதிர்ந்து போனேன். அந்த புகைப்படத்துக்காக நான் எழுதிய தலைப்பு ‘தலைவா.. இந்த அன்பு உன்னைக் காக்கும்!’…

சாதாரண அன்பா இது.. இந்த அன்பு வேண்டுதலை எந்தக் கடவுளால்தான் மறுதலிக்க முடியும்!!

அதனால்தான் இத்தனைப் பேருக்கும் சொந்தமான அந்த உயிரை திருப்பித் தந்துவிட்டார்!

-வினோ




7 thoughts on “எத்தனைப் பேரின் வேண்டுதல் பலித்த நாள் இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *