BREAKING NEWS
Search

நேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே!


ஜினிகாந்த் இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை. அதற்கு முன் கட்சிக்கான கட்டமைப்பை பக்காவாகச் செய்து வருகிறார். ஒரு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் கட்சியைப் போல, தொண்டர்களைப் போல இல்லாமல், தன் தலைமையில் இயங்கும் அமைப்பு நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

தன் அறிவிக்கப்போகும் கட்சிக்குள் வரக்கூடிய நிர்வாகிரகளுக்கு, தன் ரசிகர்களுக்கு நேர்மை, கண்ணியம், கட்டுப்பாட்டை பாடமெடுக்கிறார்.

* நேர்மையாக இருங்கள்

* குடும்பத்தை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள்

* பதவி ஆசையோடு என்னிடம் வராதீர்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் என் பக்கத்திலேயே வராதீர்கள்.

* அரசியலில் வெற்றிப் பெற ரசிகர்கள் மட்டும் போதாது.. மக்கள் ஆதரவு வேண்டும். மக்களையும் அந்த அரசியலுக்குள் கொண்டு வரவேண்டும்.

* மற்றவர்களைப் போல அரசியல் செய்ய நாம் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்?

– அவ்வளவுதான். கொந்தளித்துவிட்டது திமுகவின் முரசொலி. இயல்பானதுதானே… இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாதவர்களுக்கு ரஜினி மீது கோபம் வருவது எதிர்ப்பார்த்த ஒன்றுதானே.

மேலே ரஜினிகாந்த் சொன்ன எந்த கருத்திலாவது பொதுமக்களுக்கு மாறுபாடு இருக்குமா? எப்போது இந்த அரசியல்வியாதிகளிடமிருந்து விடுதலைப் பெறலாம் என ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவராவது ரஜினிகாந்த் ரசிகர்களுக்குச் சொன்ன அறிவுரை சரியில்லை என்று சொல்வார்களா?

ஆனால் மக்களைச் சுரண்டுவது, ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக் கொண்டு கொழுத்துத் திளைப்பதை மட்டுமே தெரிந்து வைத்துள்ள வழக்கமான அரசியல்வாதிகளுக்கு எல்லா பக்கமும் எரிச்சல். கிட்டத்தட்ட அதே மனநிலையில் உள்ள தமிழக ஊடகங்களுக்கும் எரிச்சல். அதன் எதிரொலிதான் கடந்த இரு தினங்களாக தமிழக அரசியல் – ஊடகங்களில் நாம் பார்க்கும் விதண்டாவாதங்கள்!

– வினோ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *