BREAKING NEWS
Search

எல்லாம் ‘நேரம்!’

எல்லாம் ‘நேரம்!’

நாட்டுக்கு ஆபத்தானது மதவாதமா… மவுனமா… ? இதை முடிவு செய்ய இன்னும் நேரமிருக்கிறது…

அதற்கு முன்-

மன்மோகனை செயல்பாடு குறைந்தவர் (Underachiever) என்று விமர்சித்துள்ள இதே டைம்தான், “தூங்கிக் கொண்டே அரசை ஆள்பவர் பிரதமர் வாஜ்பாய்” என்றுகருத்து சொன்னது.

வாஜ்பாயை சிறந்த பிரதமராகக் கொண்டாடுவோருக்கு இது ஏற்புடையதா?

இதையெல்லாம் விட காமெடி, டைம் பத்திரிகையின் இந்த கட்டுரைக்காக மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பாஜக கூக்குரலிட ஆரம்பித்திருப்பதுதான்.

அடடா… என்ன ஒரு தார்மீக உணர்வு!

கர்நாடக கண்றாவிகள் பற்றி வரும் பல ஆயிரம் கட்டுரைகள் இவர்களுக்கு மறந்துவிட்டதா…

ஒரு புல்டோசரைப் போல மக்களை மிதித்துக் கொன்று பயணித்துவிட்டு, இதுதான் முன்னேற்றம் எனும் மோடியின் மதவெறியை விமர்சித்து பல ஆயிரம் கட்டுரைகள் வந்திருக்கின்றன.

முஸ்லிம் ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவில் மதவெறியை வெளிப்படையாக உசுப்பிவிட்ட பெருமை பாஜகவுக்குதான் உண்டு என்றும் இதே டைம் கட்டுரை வெளியிட்டது.

இதற்காகவெல்லாம் மோடியும் கர்நாடக பாஜகவும் எத்தனை முறை பதவி விலகியிருக்க வேண்டும்… நியாயமாக கட்சியை அல்லவா கலைத்திருக்க வேண்டும்!

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள பாஜக கூடாரம். இல்லாவிட்டால் ஒரு பத்திரிகையின் விமர்சனக் கட்டுரைக்காக அரசை பதவி விலகச் சொல்வார்களா!

‘டைம்’ பத்திரிகை என்பது முதலாளிகளின் சவுக்கு மாதிரி. வேலைக்காரன் விசுவாசமாக, தான் காலால் இட்டதை தலையால் செய்யத் தயாராக இருக்கும் வரை தடவிக் கொடுப்பார்கள். கொஞ்சம் திமிற ஆரம்பித்தால் சவுக்கைச் சுழற்றுவார்கள்.

அமெரிக்காவின் பேச்சை கொஞ்சமாக மீற ஆரம்பித்திருக்கிறார் போலிருக்கிறது சிங். இது நல்லதுதான், நாட்டுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும்!

-என்வழி செய்திகள்
49 thoughts on “எல்லாம் ‘நேரம்!’

 1. sadiq

  Not fare your article…. India should come to right direction. Dont write about the ஹிந்து / முஸ்லிம்

 2. subash

  ivan cm ah irukurthuku pathil modi evalavooo thevalam…inaiku gujarat thaan no 1 …atha maranthutu eluthitinga poola…yen srilanka la thamilar saagum pothu weapon supply pannavar thanae intha mohan…

 3. Puru

  If you are unbiased person then you should only talk about Time magazine and Manmohan singh. Y u r talking about Modi it shows your intention.

 4. Srinivasan

  தயவு செய்து கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க. இன்றைக்கு குஜராத்தின் வளர்ச்சி மிக பெரிய சாதனை. ஒருவரின் தவறான செயலை கண்டிக்கும் நாம் அவரின் சாதனையை பாராட்ட வேண்டும். இந்த விமர்சனம் மோடிக்குத்தான் தவிர பிஜேபிக்கு அல்ல. காங்கிரேசை போல அதுவும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது.

 5. தினகர்

  ”எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள பாஜக கூடாரம்.”

  சரியான உவமானம். எதிர்க்கட்சியாக ஒழுங்காக அரசியல் செய்யத் தெரியவில்லை. மக்களை தங்களுக்கு ஆதரவாக திருப்ப முடியவில்லை. பாராளுமன்றத்தில் வெறும் கூச்சல் அரசியல் செய்கிறார்கள். நடந்து முடிந்த மினி பாராளுமன்ற தேர்தலில் சம்மட்டி அடி வாங்கினார்கள்.

  ஆனாலும் ஆட்சியை பிடித்து விட துடிக்கிறார்கள். அதை எப்படி செய்வது என்ற ஒரு வழியும் தெரியாமல், ஜெயலலிதா அறிவித்த வேட்பாளரை குடியரசு தலைவர் ஆக்குவோம் என்கிறார்கள்.. மோடி வல்லவர் என்று ஒரு பக்கம் குரல், இன்னொரு பக்கம் அத்வானி தான் சிறந்தவர் என்று அங்கேயே ஒருகுரல், காங்கிரஸின் பிரணாப்பிற்கே எங்கள் ஓட்டு என்று கர்நாடக பாஜக முழுங்குகிறது..

  வீட்டையே சரியாக வைக்கத்தெரியாத இவர்கள், நாட்டை ஆளும் கட்சியை குறை சொல்ல என்ன தகுதி உடையவர்கள். அதான் இன்னும் இரண்டு வருடங்களில் தேர்தல் வருகிறதே. மக்கள் முடிவு செய்யட்டுமே..

 6. தினகர்

  ”தயவு செய்து கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க. இன்றைக்கு குஜராத்தின் வளர்ச்சி மிக பெரிய சாதனை.”

  இதுவும் மோடிக்கு கொடுக்கப்படும் மிதமிஞ்சிய பாராட்டுக்கள். குஜராத்தின் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் வருவதற்கு மோடியின் பங்கு என்ன? குஜராத்தில் சிறிய பெரிய தொழில் நிறுவனங்கள் நிறைய வந்துள்ளதால், பொருளாதார மேன்மை, மக்களின் வருமான உயர்வு என்ற நிலை வந்திருக்கிறது. மோடி செய்தார் என்பதை விட உல்கெங்கும் உள்ள குஜராத்திகள் தங்கள் மாநிலத்தில் செய்த தனியார் முதலீட்டு பயன்களை மோடி பெயரில் பாஜக அனுபவித்து வருகிறது.

  குஜராத்திலும் ஊழல், நிர்வாக சீரழிவுகள் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் மோடியின் தனிப்பட்ட சாதனையாக சொல்ல முடியும்.. குஜராத் மாநிலத்தின வளர்ச்சி உலகெங்கும் உள்ளா குஜராத்திகளின் மாநிலப் பற்றால் வந்த வள்ர்ச்சி.

  மோடி சிறந்த முதல்வர் என்றால் கர்நாடக பாஜகவிற்கு டியூஷன் எடுக்கட்டுமே. முதலில் கர்நாடகாவை குஜராத் ஆக்கட்டும். அட அந்த பெங்களூர் ரிங் ரோட் ட்ராஃபிக்கை முதல்ல சரி செய்யச்சொல்லுங்கப்பா பெயர் தான் எக்ஸ்பிரஸ் ரோடாம், பத்து கிலோமீட்டர் செல்வதற்கு ஒரு மணி நேரம் கூட ஆகுது

  தென்னிந்தியாவின் முதல் பாஜக ஆட்சி மா நிலம் என்ற பெயருடன் வந்தவர்கள், இத்தோடு அங்கே காணாமல் போய்விடுவார்கள் போலிருக்கே

 7. subash

  MR THINAKAR . KERALAVIL CONGRESS AADCHI NADAKUM POTHU AVARGAL TAMILNAADIL CONGRESS VARANUMNU AASAI PADALAI … YEN TAMIL NAADIL CONGRESS ILL ETHANAI KOSTIGAL ENTTU UNGALUKU THERIYATHA… EPPADI BJP YAI VIMARSIKALAM…..YEN GUJARAT MAKAL PANNATHU POLA TAMILNAATU MAKALUM PANNAVENDIYATHU THANNAE ,.. ILLA PANNA VAIKAVEENDIYATHU THAANAE ..GUJARAT ONUM RELAINCE AALA VALARALA ,…. VIVASAAYAM THAAN AVANGALODA PLUS….. THERINCHUKITI PESU
  MUTHALA… THALAIVAR HOSPITAL LA IRUKUM POTHU VANTHU PAARTHAVAR MODI ….UNODA CONGRESS KAARANGA ENGA POONANGA…. ELECTION TI ME LA MATTUM THALAIVAR SUPPORT KU AAGA ALAIRA PASANGA CONGREES KARANUNGA…

 8. subash

  CENTRAL LA காங்கிரஸ் ஆட்சி தானே ஏன் அவங்க ஆளர மாநிலத்தை முதல் மாநிலமா பண்ண தெரியல …..பண்ண தெரியாது அது தான் உண்மை …..

 9. subash

  ஏன் மன்மோகன் வந்து தமிழ் நாடு காங்கிரஸ் கரங்களுக்கு டியூஷன் எடுக்கவேண்டியது தானே ? தலைவர விமர்சனம் பண்ண வாங்க தானே இந்த காங்கிரஸ் காரங்க மறந்து போச்சா..EVKS……… முதல தலைவர் அப்றம் தான் பொலிடிக்ஸ் ……

 10. devaraj

  Yes I agree , Modi is equal to a virus that did spread communal hatred and violence.
  Because of him thousands of innocent muslims died.
  He might be a good administrator that does not mean his blood stained hands are clean.

  Dev.

 11. தினகர்

  “YEN GUJARAT MAKAL PANNATHU POLA TAMILNAATU MAKALUM PANNAVENDIYATHU THANNAE ,.. ILLA PANNA VAIKAVEENDIYATHU தானே”

  நன்றி மிஸ்டர் சுபாஷ்.. குஜராத் மக்கள் மோடி வந்தாலும் அல்லது வேறு யார் வந்தாலும் அவர்கள் மாநிலத்தின் மீது நலன் கொண்டு முதலீடு செய்கிறார்கள். இதில் மோடியின் பங்கு ஏதும் இல்லை. அவர் மீது மிகப்பெரிய சாதனை பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே சாதனையாளர் என்றால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு அவரது திறமையை உபயோகித்துக்கொள்ளலாமே, அவரது திட்டங்களை மற்ற பாஜக மாநில அரசுகளும் பின்பற்றலாமே, மற்ற மாநிலங்களும் வளம் பெறட்டுமே.. அது தானே நாட்டிற்கு நல்லது. ஏன் ஒரே ஒரு குஜராத் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று பாஜக நினைக்கிறதா?பாஜக மோடியை நம்பினால் மற்ற மாநிலங்களிலும் அவர் வழியில் ஆக்கப்பூர்வமாக செயல்படலாமே என்ற கருத்தைத் தான் சொன்னேன். நீங்கள் சராசரி அரசியலுக்கு இழுத்துச் செல்கிறீர்கள். காங்கிரஸில் எந்த மாநில முதல்வரையும் இப்படி வானளாவிய புகழ் பாடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  மோடி அரசின் நிர்வாகக்கோளாறுகள் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையிலும் நம்பதகுந்த சில தகவல்கள் உண்டு.

  மற்றபடி யார் வந்தாலும் நாடு நன்றாக இருக்கட்டும் என்பதே என் நிலை..

 12. enkaruthu

  சில வேலை காரணமாக ரொம்ப நாள் கழித்து நம் தளத்தை பார்கிறேன். இங்கே உள்ள நண்பர்கள் அனைவரும் ஒரு விதமாகவே பேசுகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது .இவர்களின் நினைபெல்லாம் எதோ ஜெயா என்கிற பிராமினரும் ஹிந்து என்கிற பெயரை வைத்து அரசியல் செய்யும் பிஜேபி யும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் அந்த ஆட்சியில் கஷ்டபட்டாலும் தன் ஜாதிக்காக இந்த இடஒதுக்கீட்டை தடை செய்வார்கள் என்று நினைகிறார்கள்.ஆனால் அது ஒருபோதும் பதவிக்காக அலையும் இவர்கள் என்றும் செய்யமாட்டார்கள் என்பது என் கருத்து.கிருஷ்ணன் மற்றும் பல நண்பர்கள் ஆவென்று இந்த விஷயம் பார்துகொள்ளவேண்டியதுதான்(ஆனால் பெரியார் போட்ட விதை ஆழமான விதை அதை நொண்டி எடுப்பது கொஞ்சம் இந்த தமிழ்நாட்டில் கஷ்டம்தான்).

 13. Arun

  தினகர் ,
  மோடி க்கு முன்னால் ஏன் குஜ் வளரவில்லை 50000 கோடி கடன் இன்று 100000 கோடி நிதி உள்ளது ,சும்மா குறை சொல்லனும்னு சொல்லாதிங்க ,எல்லாரும் உழைக்க தயார்
  ஆனால் இலவசம் தந்து சோம்பேறியாக உள்ளனர் ,குஜ் இல் அணைத்து துறை களும் சிறந்து விளங்குகிறது…ithu than unmai சும்மா சப்ப கட்டு வேண்டாம்…

 14. subash

  மற்றபடி யார் வந்தாலும் நாடு நன்றாக இருக்கட்டும் என்பதே என் நிலை
  65 years ah appadi ennathu pannanga?

  thinagar …. arun sonnathu pola modi aadchiku varathuku munnadi …gujarat yen anthalavuku valaralai….around 65 years ah central ah congress aadchi thaan ..avangalala yenna thaan panna mudinchithu?…yen oru 10 years bjp kita aatchi ya kudukattum…gujarat maathiri inum pala state india ya vil valarum …. congress ill yarum antha alavuku ..entha state yum munnumku kondu varala. pugal paadurathuku?….china karan india ulla ethanayo kilometer vanthutanam … ivangalla enna panna mudinchithu…

 15. Manoharan

  ///மோடி சிறந்த முதல்வர் என்றால் கர்நாடக பாஜகவிற்கு டியூஷன் எடுக்கட்டுமே.///

  மோடியின் வேலை கர்நாடக மாநிலத்துக்கு டியூசன் எடுப்பதல்ல. அவர் வேலை குஜராத்தை வளமாக்குவது. அதை அவர் இந்தியாவிலேயே சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மாதிரி ஆண்மையற்றவர்கள் கூடாரம் அல்ல மோடியின் அரசாங்கம். தினகர் கர்நாடகாவை பற்றி பேசும்போதே தெரிகிறது, மோடியை பற்றி எதுவும் பேசமுடியவில்லை என்று. பொத்தம் பொதுவான குற்றச்சாட்டுகளை ஒரு குழந்தை கூட வைக்கும். மோடி பிரதமர் ஆவது நடக்கத்தான் போகிறது. அன்றுதான் இந்தியாவுக்கு விடிவுகாலம். சூனியக்காரி (எ) இத்தாலிக்காரி (எ) சொநியாக்காரியை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். அன்று நாம் பெருமையாக சொல்லலாம் நாம் இந்தியன் என்று.

 16. Manoharan

  ///. காங்கிரஸில் எந்த மாநில முதல்வரையும் இப்படி வானளாவிய புகழ் பாடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்///

  அப்படி ஒருவர் காங்கிரசில் இருந்தால்தானே…? பிரதமரே ஒரு டம்மி பீசு. இதுல முதல்வர் எங்கே .அது லூசாகத்தான் இருக்கும். கேரளா லூசு இப்போது அணைகள் விஷயத்தில் ஆடிக் கொண்டிருக்கிறதே. அப்படித்தான் மற்ற லூசுகளும் இருக்கும்.

 17. தினகர்

  ”65 years ah appadi ennathu pannanga?”

  இன்னைக்கு எங்கேயோ ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டு கம்யூட்டரில் இப்படி கருத்து சொல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளீர்களே. அது தான் சாதனை..

  “gujarat yen anthalavuku valaralai….”

  இது தான் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களின் கோஷம்.. ஆனால் உண்மை அதுவல்ல.. குஜராத் மாநிலம் எப்போது பிரிக்கப்பட்டதோ அப்போதே. மும்பை, மஹாராஷ்ட்ராவில் உள்ள் குஜராத்திகள் தங்கள் தொழில்களை குஜராத்திற்கு எடுத்துச்சென்று விட்டனர். அவர்கள் பிறவியிலேயே பிஸினஸ் கொள்கையுடையவர்கள். அம்பானி, ரிலையன்ஸ் தொழிற்சாலைகளை எல்லாம் குஜராத்தில் தான் நிறுவினார். மும்பையில் அலுவலகம் மட்டுமே. அதுக்கும் மோடிக்கும் ஏதாவது ச்ம்மந்தம் உண்டா?

  மோடி வந்தவுடன், இருக்கும் எல்லாவற்றிற்கும் புதிதாக கலர் அடித்து ( நம் ஊரில் பொங்கலுக்கு வீட்டை வெள்ளை அடித்து புதிதாக மாற்றுவது போல்) அங்கொன்றும் இங்கொன்றுமாக சில் புதிய தொழில்களை , கட்டமைப்புகளை நிறுவி (இது எந்த முதல்வரும் சாதாரணமாக செய்வது தான்) என்னமோ ஒட்டு மொத்த குஜராத்தின் வள்ர்ச்சியும் இவரால் தான் என்ற மாயையை உருவாக்கி விட்டார்கள்.

  முந்தைய பாஜகவின் ‘ இந்தியா ஒளிருது’ கதை தான் நடக்கிறது. உங்களை ப்போன்றவர்கள் தான் மோடி என்று முழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மோடியின் நிர்வாகக்கோளாறினால் தொழில் தொடங்க முடியாமல் முடங்கி கிடக்கும் குஜராத்தியை கேட்டால் பல உண்மைகள் தெரியும்.

  எனக்கும் குஜராத்திற்கும் மோடி காலத்திற்கு முன்பே அறிமுகம் உண்டு. அங்குள்ள தொழில் நிறுவனங்களுடன் தொடர்பும் உண்டு. என்னமோ மோடி வந்த பிறகு தான் குஜராத் என்ற மாநிலத்தில் தொழில்கள் வந்தன என்பது போல் பேசுவதை நிறுத்துங்கள்.

 18. தினகர்

  ”குஜ் இல் அணைத்து துறை களும் சிறந்து விளங்குகிறது”

  ஆம், குஜராத் ஊழலிலும் , நிர்வாகக் கோளாறுகளிலும் சிறந்து விளங்குகிறது.

 19. தினகர்

  ”yen oru 10 years bjp kita aatchi ya kudukattum…gujarat maathiri inum pala state india ya vil valarum ”

  அட பக்கத்திலே கர்நாடகக்காரங்க உங்களை நம்பி கொடுத்தாங்களே.. ஏதாவது உருப்படியா செஞ்சீங்களா?. என்னமோ பெங்களூருக்கே பெருமை சேர்க்கும் என்று சொல்லப்பட்ட ரிங் ரோட், லோக்கல் ரோட் ட்ராஃபிக்கை விட சிரிப்பா சிரிக்குது. டாக்ஸி காரன்கிட்டே கேட்டா, வேணாம் சார், பழைய ரோட்டிலேயே போனா இதை விட சீக்கிரம் போலாம்ங்கிறாங்க. அதை நிருபித்து காட்டினாங்க. ஒரு சாலையைக்கூட சரி பண்ண முடியாத அளவுக்கு கர்நாடக பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

  பாவம் எடியூரப்பாவிற்கு சுரங்கம், நிலம் இன்ன பிற டீலிங்கிற்கே டைம் இல்லே.. அடுத்து வந்தவங்களுக்கு எடியூரப்பாவை சமாளிக்கவே டைம் இல்லே.. இது தான் பாஜகவின் நிஜமான நிலை. இதிலே 10 வருஷம் இந்தியாவை கொடுக்கனுமாம்.. யப்பா யோசிக்க முடியல்லியே..

 20. Sanjev

  This is a very biased article in our site,
  Trend on Envazhi is now becoming more & more Upper cast aversion.
  We do not want cast in any means or form. Please correct this.

 21. anbudan ravi

  மன்மோகனின் முகமூடி அணிந்துள்ள சோனியாதான் தற்போதய பிரதமர்…இது அனைவருக்கும் (காங்கிரசார் உட்பட) தெரிந்தவைதான். மன்மோகனைப்பற்றி சொன்னால் வாஜ்பாயை உள்ளே இழுத்து சப்பைக்கட்டு கட்டுவது வாடிக்கை….இருவரைப்பற்றியும் டைம் பத்திரிக்கை சொன்னது உண்மைதான்….மன்மோகன் நல்லவர்தான் அவரது கை கால் வாய் பூட்டப்பட்டுள்ளது, அவர் என்னதான் செய்வார்.

  ஆனால் ஒன்று, மோடிதான் குஜராத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து அம்மாநிலத்திற்கு விளைச்சலை பெருக்கியுள்ளார். இந்த துணிச்சல் வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை…..பீகாரின் நித்திஷ் அடுத்த இடத்தில் உள்ளார். நாம் இப்படி வாய்பேசியே வீணாய் போகவேண்டியதுதான்.

  அன்புடன் ரவி.

 22. தினகர்

  “மோடியை பற்றி எதுவும் பேசமுடியவில்லை ”

  உண்மை தான். செய்யாத சாதனைக்காக வானாளவிய அளவுக்கு புகழப்படும் மோடி , உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்பதால் எதுவும் பேச முடியவில்லை. குஜராத்திகளின் தனிப்பட்ட முறையில் ஆன முன்னேற்றத்தை தன்னுடையதாக, வெறும் மாயப்பிம்பத்தை சுமந்து கொண்டு இருக்கிறார். எங்கே இன்னொரு முறை குஜராத்தில் முதல்வர் பதவிக்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்றே தேசிய அரசியலுக்கு தாவும் முயற்சியில் இருக்கிறார்.

  நம்ம ஊருக்கே வருவோம்.. மனோகரன் வசிக்கும் பகுதியில் திருப்பூர் தொழில் வளம் பெற்றிருக்கிறது. இதற்கு எந்த திமுக, அதிமுக அரசாவது சொந்தம் கொண்டாட முடியுமா?. தொழில் முனைவோர்களின் தனிப்பட்ட முயற்சியே திருப்பூரின் வள்ர்ச்சிக்கு காரணம். அதேதான் கோவையிலும் அதற்கு முன்னால் நடந்தது.. கோவையைப் பார்த்து, தான் திருப்பூரே வளர்ந்தது. இதே போன்ற நிலை குஜராத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்துள்ளது அதற்கெல்லாம் மோடியை சொந்தம் கொண்டாடி வருகிறது பாஜக. இங்குள்ள் பாஜகவினரும் மோடி பிரதமரானால் என்னமோ இந்தியாவே தலை கீழாக மாறிவிடும் என்று அறியாமையில் நம்புகிறார்கள்.

 23. Manoharan

  ///நம்ம ஊருக்கே வருவோம்.. மனோகரன் வசிக்கும் பகுதியில் திருப்பூர் தொழில் வளம் பெற்றிருக்கிறது. இதற்கு எந்த திமுக, அதிமுக அரசாவது சொந்தம் கொண்டாட முடியுமா?. தொழில் முனைவோர்களின் தனிப்பட்ட முயற்சியே திருப்பூரின் வள்ர்ச்சிக்கு காரணம். ///

  திருப்பூரின் வளர்ச்சிக்கு நிச்சயமாக தொழில் முனைவோர்தான் காரணம். அப்படி முன்னேறிக்கொண்டிருந்த ஊரை பின்னோக்கி இழுத்துகொண்டு போகிறது மத்திய அரசு. திருப்பூரில் சாயத் தொழில் பிரச்சனை பெரிதாகி அனைத்து சாய பட்டறைகளும் நின்றபோது, கருணாநிதி அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. கையாலாகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஊரே காலியாகிவிடும் சூழலில் தேர்தல் வந்தது. திருப்பூர் வடக்கு தொகுதி மக்கள் அனைவரும் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவுக்கு வந்த போது, பிரச்சாரத்துக்கு வந்த ஜெயலலிதா அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாயப் பிரச்சனை நிச்சயம் தீர்க்கப் படும் என்றும் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு அதிமுகவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சாயப் பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்று எனவும் அதுவும் தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஜெதான் அடுத்த முதல்வர் என்றிருந்த நிலையில் அவர் பேச்சை நம்பி தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டோம். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறவைத்தோம். இன்று சாயப் பிரச்சனை கிட்டத்தட்ட முடியப்ப்போகும் சூழ்நிலையில் உள்ளது. நிறைய பட்டறைகள் ஓடத்துவங்கிவிட்டன. அதிமுக அரசு 200 கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கியுள்ளது. இதற்க்கு நடுவில் கடந்த திமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்காத சூழலில் சில சாயப் பட்டறைகள் குஜராத்துக்கு இடம் பெயர்ந்தன. அவை எல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்ப்பு பெற்று அருமையாக ஓடிக் கொண்டிருக்கிறது. என் உறவினர் ஒருவரின் பட்டறை இங்கு ஓடியதை விட குறைவான பராமரிப்பு செலவில் அங்கு ஓடுகிறது. இப்போது திமுக காரன் எவனும் திருப்பூரில் வாய் திறப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு திருப்பூரை பின்னுக்கு இழுக்கும் வேலையை இன்னும் நன்றாக செய்து கொண்டிருக்கிறது. கருங்காலி மன்மோகன் வங்க தேசம் சென்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 48 ஜவுளி பொருட்களுக்கு ஏற்றுமதி வரியை ரத்து செய்தார். இப்போது நம்மிடம் இருந்து மூலப் பொருட்கள் வாங்கி ஆடைகள் தயாரித்து நம்மை விட குறைவான விலைக்கு நமக்கே விற்பனை செய்கின்றனர். இதுதான் கருங்காலிகளின் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இது மட்டுமா..? வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு அங்கு இறக்குமதி வரி கிடையாது. இது அந்த அரசுகளின் முயற்ச்சியில் நடந்தது. ஆனால் இந்திய ஆடைகளுக்கு இறக்குமதி வரி உண்டு. இதை நீக்க இந்த பன்னாடைகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போது வங்க தேசமும் , பாகிஸ்தானும் நம்மைவிட குறைவான விலையில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆடைகள் தயாரித்து கொடுக்கிறது. காரணம் இந்த மூதேவிகள். ஏற்றுமதிதான் இப்படி என்றால் உள்நாட்டு நிலைமை இதைவிட மோசம். அனைத்து பனியன்களுக்கும் 10 சதவிதம் களால் வரி விதித்து தொழிலை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கிகள் வட்டி விகிதம் பத்து சதவிதத்திலிருந்து 14 .5 சதவிதம் ஆக்கிவிட்டார்கள். கருணாநிதி ஆட்சி எப்போது ஒழியும் என்று காத்திருந்ததை விட 100 மடங்கு இந்த காங்கிரஸ் கருங்காலிகள் ஒழிய காத்திருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டுமானால் குஜராத்தை பார்த்து பொறாமை படுகிறோம்.

 24. மிஸ்டர் பாவலன்

  மனோகரன் அவர்களே:

  ஒரு சில நண்பர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.
  திமுக-வை நீங்கள், கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர், குமரன் போன்றோர்
  வைக்கும் விமர்சனங்களை அவர்கள் ஏற்பார்கள் என நினைப்பது
  மாபெரும் தவறு. X என்ற கட்சிக்கு ஆதரவாளர் என்ற நிலை எடுத்த பின்
  X கட்சியை நீங்கள் அவர்கள் குறை சொன்னால் “Y கட்சி மற்றும் என்ன
  ஒழுங்கா?” என்று தான் கேட்பார்கள். டீக்கடை பேச்சு பற்றி முன்பு எழுதி
  இருந்தேன். அதனால் அரசியல் விவாதங்களை முற்றாக ஒதுக்கி
  விடுவது நமக்கு நல்லது. ‘இரு கை தட்டினால் தானே ஓசை?” எனத்
  தான் நினைத்து நான் ஒதுங்கி விடுகிறேன். நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 25. தினகர்

  “திருப்பூரின் வளர்ச்சிக்கு நிச்சயமாக தொழில் முனைவோர்தான் காரணம். ”

  நன்றி மனோகரன், மேற்கொண்டு விளக்கம் விழலுக்கு இறைத்த நீர். 🙂

  தொழில் முனைவோர் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும்.. உங்க ஊர் தொழிலதிபர்கள் இருவரின் உரையை சமீபத்தில் நேரிடையாக கேட்டேன்.. தொடர்ந்து சில கேள்விகளுக்கு விள்க்கங்களும் சொன்னார்கள். மனசிலே ஃபயர் இருந்தா எந்த நிலையிலும், யார் ஆட்சியிலும், எந்த பொருளாதார சூழலிலும் சாதிக்கலாம். – இது தான் அவர்கள் முத்தாய்ப்பாக சொன்ன கருத்து. தமிழகத்தில் அப்படிப்பட்ட தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.. எல்லோரும் முயற்சி எடுத்தால் இது அதிகரிக்கும்.

  குஜராத்தில் அப்படிபட்ட ஃபயர் உள்ள் தொழில் முனைவோர்கள் அதிகம். அது தான் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம். மோடி ஒரு அரசு நிர்வாகி அவ்வளவுதான்..

  திருப்பூருக்கு முன்னதாக இதே போல் வெற்றி பெற்ற ஊர் சிவகாசி. மழை தண்ணீர் எதுவுமே இல்லாத வெயில் மட்டுமே உள்ளாகட்டாந்தரை ஊரில், அந்த வெயிலையே முதலீடாக கொண்டு பட்டாசுத்தொழிலை அறிமுகப்படுத்தி இன்று சீனாவை மிஞ்சும் அளவுக்கு வளர்ச்சி பெற காரணம் – அய்ய நாடார் என்ற தனிப்பட்ட தொழில் முனைவோரின் முயற்சி மட்டுமே.. தான் மட்டும் நல்லா இருந்தா போதும் என்று நினைக்காமல் , அந்த ஊரையே பட்டாசுத்தொழிலுக்கு மாற்றியவர்.

  இப்படி புதிய முயற்சிகளுக்கு ஊருக்கு ஒருத்தர் கிடைத்தால் போதும்,

 26. subash

  ”65 years ah appadi ennathu pannanga?”

  இன்னைக்கு எங்கேயோ ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டு கம்யூட்டரில் இப்படி கருத்து சொல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளீர்களே. அது தான் சாதனை..

  AYO KADUVULAE THALAPATHI PADATHULA ULA DIALOGUE THAAN NIYABAGAM VARUTHU… PADUKA IDAM UDUKA THUNI IRUNTHA POTHUM NU SONNA VEKKA KEDU… NEENGA SOLRATHUM APPADI THAAN IRUKU…ENAKU LAP IRUKUNU SANTHOSA PADURATHA VIDA INAIKUM UDUKA THUNI ILLAMA CHENNAI LA ETHANA PERU IRRUKANGA NU UNGALUKU THERIYATHA… CHENNAI YAE APPADI NA VILLAGE AH PATHI SOLLANUMA ENNA..ENAKU VASATHI IRUKU NALLA SAMBAATHIKUREN …ELLA MAKALUM APPADIYAE THAAN IRUKURANGA NU NINAIKIRINGA POOLA….

 27. தினகர்

  “UDUKA THUNI ILLAMA CHENNAI LA ETHANA PERU IRRUKANGA NU UNGALUKU THERIYATHA ”

  இதெல்லாம் ரொம்ப ஒவர் மிஸ்டர் சுபாஷ். தமிழ் நாட்டில் எத்தனையோ வேலை இருக்கு, நீங்க உடுக்க துணியில்லாம இருக்கிற ஆளுங்களை எங்க கிராமத்துக்கு அனுப்புங்க. வருஷம் பூரா வேலை கொடுக்க நாங்க ரெடி? வருவாங்களா இந்த ஆசாமிகள்.. பீகாரில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை விட சென்னையில் தமிழ் பேசுபவர்கள் எங்களுக்கு நல்லது தான்.

  சோம்பேறிகளையும், உதவாக்கரைகளையும் உதாரணமாக பேசாதீர்கள். சொல்லவேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் போல் எதையோ கற்பனையாகவும், மிகைப்படுத்தியும் சொல்லாதீர்கள்.

  ஒரு அமெரிக்க நண்பர் சொன்ன தகவல் இது “ நானும் ஊர்ப்பக்கம் நம்ம மக்களுக்கு வேலை கொடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணுறேன். ஒருத்தருக்கும் வேலை செய்யனுங்கிற எண்ணம் இல்லைப்பா. காலேஜிலே இருந்து வந்த உடனேயே, என்னமோ பெரிய மேதாவி மாதிரி தான் நடந்துக்கிறானுங்களே ஒழிய, வேலை கத்துக்கணும், வேலை செய்யனும்ன்னுங்கிற நினைப்பே சுத்தமா இல்லே”

  அவருக்கு நல்ல ஆளுங்களை நான் அடையாளம் காட்டுறேன்னு சவால் விட்டிருக்கிறேன். ஜெயிக்கபோறது, அவரா நானா என்று பார்த்து விட்டு சொல்கிறேன்.

 28. தினகர்

  ”X கட்சியை நீங்கள் குறை சொன்னால் “Y கட்சி மற்றும் என்ன
  ஒழுங்கா?” என்று தான் அவர்கள் கேட்பார்கள் “

  கருத்து கந்தசாமியாக இல்லாமல், நேர்மையாக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில், ஒரே எடையில் சொன்னால் யார் என்ன சொல்லப்போகிறார்கள். ஒரே விஷயத்தை X கட்சி செய்யும் போது வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதும். அதே தவறை “Y கட்சி” செய்யும் போது நியாயப்படுத்தியோ அல்லது ஒன்றுமே ந்டக்காதது போல் அமைதியாகவோ இருந்தால் அதற்கு என்ன பெயர்? அப்படிப் பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் பாவலன். அதையும் கேளுங்களேன். 🙂

 29. Ganesh Shankar

  //மோடியின் வேலை கர்நாடக மாநிலத்துக்கு டியூசன் எடுப்பதல்ல. அவர் வேலை குஜராத்தை வளமாக்குவது. அதை அவர் இந்தியாவிலேயே சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மாதிரி ஆண்மையற்றவர்கள் கூடாரம் அல்ல மோடியின் அரசாங்கம். //(மனோகரன்)

  சரியான கருத்து.
  யாராக இருந்தாலும் குஜராத் வளர்ந்து இருக்கும் என்பதெல்லாம்,எல்லா மாநிலமும் மற்றும் ஒட்டு மொத்தமான இந்தியா பெரும் அதே வளர்ச்சி விகிததிலோ இல்லை சற்று அதிகமாகவோ இருந்தால் சரி.
  ஆனால்,மூன்ச்று மடங்கு,நான்கு மடங்கு வளர்ச்சி,எதிர்பார்காத வளர்ச்சி என்றால் உடனே தமிழ் நாடு மாதிரி தகவல் தொழில் நுட்பம் மட்டும் இல்லாமல் எல்லா துறையிலும் இருக்கிறது.24 மணி நேரம் தொடர்ந்து மின் இணைப்பு ,அதற்கு மோடி தான் காரணம்.இவ்வளவு ஏன்,இன்று வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் தனது அரசாங்கத்தை நடத்துவது மோடி இருபதனால் தான்.விவசாய துறையில் 8 மில்லியன் hectares புதிதாக நிலங்கள் கூட பட்டு இருக்கின்றன,இதற்கு காரணம் மோடி தான்.
  எவ்வளவு முதலீடுகள்,இதற்கு காரணம் மோடி தான்.ஏன் 50,000௦௦௦ கோடி கடனில் இருந்து 1,50,000 கோடி மக்கள் சொத்தாக உலக வங்கியில் சேமிப்பில் போட்டு இருக்கிறது.
  ஏன் ஒட்டு மொத்த குஜராத்தின் தண்ணீர் அளவு 4mts ground level அதிகப்பட்டு இருக்கிறது. இன்னும் ஏராளம்,இது எல்லாமே ஒவ்வொரு விடயத்திலும்,பெரிய பெரிய இடங்களில் இருந்து பரிசுகளை பெற்று இருக்கிறது.ஒவ்ஒவொரு முதலாளியும் சொல்கிறார்கள்,அங்கே இருக்கும் மக்களும் சொல்கிறார்கள் மோடி மாதிரி ஒருவர் தான் இதற்கு காரணம் என்று.அவர்களே சொல்லுகிறார்கள் மோடி தான் என்று,பிறகு என்ன??
  மக்களும் அவரை நம்புகிறார்கள்,தான் இலவச மின்சாரத்தை எடுப்பேன் என்று சொன்ன போதும்,இலவசம் இல்லை எனும் போதும்.
  அதே போல் நம் தமிழகமும்,இந்தியாவும் முன்னேற வேண்டுமானால்,மோடி இல்லை மோடி மாதிரி ஒருவர்(இன்றைய நிலையில் நாட்டில் யாரும் இல்லை).
  நாம் கடை கோடியில் இருந்து மோடி இல்லாமல் இது நடந்திருக்கும் என்று நினைத்தால் அறியாமை,இல்லை தனி மனித தூற்றுதல் தான் காரணம்.

 30. மிஸ்டர் பாவலன்

  ///அப்படிப் பட்டவர்களை என்ன செய்ய வேண்டும் பாவலன். அதையும் கேளுங்களேன். :)/// (தினகர்)

  நீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்களோ, அதை அவரிடமே கேட்கலாமே!
  நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் இல்லை – இதில் தெளிவாக இருக்கிறேன்.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 31. mariappan S

  மோடியை குறை சொல்லும் எல்லா மீடியாவும் அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் மோடியின் திறமையால் வளர்ந்ததல்ல. அம்ம்மநில மக்களின் தனிப்பட்ட முதலீடு மற்றும் திறமையால் வந்தது என்று கூறுவது சப்பைக்கட்டு. கொஞ்சமாவது அரசின் முயற்சி இல்லாமல் மாநில வளர்ச்சி என்பது வெறும் கனவு. மோடியை மதவாதி என்று சொல்லும் மீடியா அப்சல் குரு உள்ளிட்ட தூக்கு தண்டனை பெற்ற அல்லது தீவிரவாதி என்று அறியப்பட்ட சிறுபான்மையினர் மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதை கண்டிப்பதில்லை. எவ்வளவு குறை சொன்னாலும் டாஸ்மாக் வருமானம் இல்லாமல் மாநில நிர்வாகத்தை கடனில்லாமல் நடத்துவதே பெரிய சாதனைதான். அதுவும் மத்திய அரசின் ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு இடையில்.

 32. குமரன்

  தினகர்

  ///நேர்மையாக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில், ஒரே எடையில் சொன்னால் யார் என்ன சொல்லப்போகிறார்கள். ////

  ஒரே தட்டில் ஒரே எடையில் சொல்லும் எனது கருத்துக்களையே ஒருதலைப்பட்சம் என்று சொல்பவர்கள் இங்கேயே இருக்கிறார்களே!

  அதிலும் அப்படிச் சொல்பவர்கள் கருணாநிதியைப் போற்றிப் பாடும் அதே வீச்சில் ஜெயாவை குறை சொல்பவர்களாக இருப்பதுதான் விந்தை! வேடிக்கை! ஆச்சரியம்!

 33. தினகர்

  ”அதை அவரிடமே கேட்கலாமே!”

  அவர்களுக்கு அரசியல் குறித்து அறிவுரை சொன்னது நீங்கள் தானே 🙂 X & Y கட்சிகளை ஒரே தட்டில் வைத்து எடைபோட்டால் உங்கள் கருத்திற்கு அவசியமே இல்லை என்ற கூடுதல் விஷயத்தையும் சேர்த்து சொல்லுங்களேன்.

 34. குமரன்

  மனோகரன்

  ///சூனியக்காரி (எ) இத்தாலிக்காரி (எ) சொநியாக்காரியை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். அன்று நாம் பெருமையாக சொல்லலாம் நாம் இந்தியன் என்று.///

  செம form -இல இருக்கீங்க!

  மோடி திறமையானவர்தான். ஆனால் ஆட்சிப் பொறுப்பில் உச்சியில் இருக்கும் எவரும் குடிமக்கள் ஒவ்வொருவரின் உயிருக்கும் உடமைக்கும் நான் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பேன் என்ற உத்தரவாதத்தைத் தரவேண்டும். அப்படியே குடிமக்கள் எவரும் அவரைக் கண்டு அஞ்சாத சூழலை உருவாக்கவேண்டும். குடிமக்கள் எவரும் அவரது ஆட்சியில் தனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு உண்டு என்று நம்புகின்றபடி ஆளவேண்டும். மோடி இந்த நம்பிக்கையை உருவாக்கி வளர்க்க முயன்றால் அவருக்கும் நாட்டுக்கும் நல்லது. இல்லையேல் அவரை நானே நம்புவது கடினம்தான்.

  கணேஷ் சங்கர் சொல்வதுபோல நிலத்தடி நீர் உயரக் கூட மோடிதான் காரணம் என்பது எப்படி சாத்தியம்?
  “வரப்புயர” என்று துவங்கும் அவ்வையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. கூப்பிடப்பா அந்தப் பாவலனை.
  அவர் வந்து செய்யுளை எழுதிப் பொழிப்புரை போட்டால் சிறப்பு!

  கணேஷ் சங்கர் சொல்வதுபோல மோடி ஊழலே இல்லாத நிர்வாகத்தைத் தருகிறார் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு குஜராத்தையும் தெரியாது, மோடியையும் தெரியாது, ஆனால் ஊடகங்களை நன்கு தெரியும். சில ஊடகங்கள் அவரைத் தலயில் தூக்கி வைத்து ஆடுவதும் சில ஊடகங்கள் அவரைப் பாதாளத்தில் போட்டு மிதிப்பதும் உண்மை.

  நடுநிலையாகப்(!!!!) பார்த்தால், எல்லாரும் ஒப்புக் கொள்ளும் உண்மை, இன்றைய இந்திய அரசியலில் ஊழலே இல்லாமல் ஆள்வது இயலாது. தேர்தலைச் சந்திக்க பணம் வேண்டும். மோடியும் தேர்தலைச் சந்திக்கிறார். எப்படி?

 35. குமரன்

  மனோகரன்

  திருப்பூரின் பின்னலாடைத் தொழில் பற்றி ஆழமாகக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறீர்கள். நீங்களும் அங்கே உள்ள ஏனைய பலதரப்பட்ட மக்களும் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது. ஆனால் யாராலும் இந்த நிலைமையைச் சீர் செய்ய முடியாது. திருப்பூரின் பொருளாதாரம் … உலகச் சந்தை என்ற கடலில் நீஞ்சும் மீன். அதில் சீனா என்ற திமிங்கலமும் அமேரிக்கா என்ற திமிங்கலமும் நீஞ்சி விளையாடுகின்றன. சீனா தனது மலிவு விலை ஆட்பலத்தால், கடல் நீரைத் தூக்கித் தூக்கி நாலாப் பக்கமும் வீசி சிறு உயிரினங்களை அழித்து விழுகும் திமிங்கலம்.

  காலப் போக்கில் திருப்பூர் இதில் நீந்திக் கரையேறக் கற்றுக் கொள்ளும்.

 36. தினகர்

  “ஒரே தட்டில் ஒரே எடையில் சொல்லும் எனது கருத்துக்களையே ஒருதலைப்பட்சம் என்று சொல்பவர்கள் இங்கேயே இருக்கிறார்களே!”

  உங்கள் மனதில் ஒரே தட்டில் வைத்திருந்தாலும், வெளி வரும் எழுத்துக்கள் அடுத்தவர்களுக்கு அதே நிலையில் சென்று சேரவேண்டுமல்லவா!. ஒரு சில பிழைகள் கூட மொத்தத்தையும் மாத்தி போட்டுவிடுமே..

  நாம் நினைத்து எழுதுவதை, அதே அர்த்தத்தில் படிப்பவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலான விஷயம்.

  ஒரே விஷயத்திற்கு இரண்டு மூன்று இமெயில்கள் பரிமாற்றம் என்றாலே அடுத்து நான் எடுப்பது தொலைபேசியைத்தான். மேற்கொண்டு இமெயில் எழுதுவதை விட நேரிடையாக பேசிவிடுவது தான் உத்தமம். இணையத்தள கருத்து பரிமாற்றத்தில் அது சாத்தியமில்லையே.!. 🙂

 37. Ganesh Shankar

  //கணேஷ் சங்கர் சொல்வதுபோல நிலத்தடி நீர் உயரக் கூட மோடிதான் காரணம் என்பது எப்படி சாத்தியம்?//(குமரன்)

  நல்ல கேள்வி.
  கீழே கொடுத்து இருக்கும் வலைபக்கத்தை காணவும்.இதற்கு காரணம் அவருடைய நிர்வாகம் கட்டிய “checkdams”.
  இதை மற்ற,ஏனைய மாநில நிர்வாகமும் செயல்படுத்தலாம்.இதை மட்டும் அல்ல,எல்லா வற்றையும் தான்.ஆனால்,இன்று வரை இல்லை.
  இவ்வளவு குறுகிய காலத்தில்,இம்மாதிரி நிர்வாக திட்டத்தினால் விளைந்த பயன் தான் இது.
  அது தான் மோடியும் ,அவரது நிர்வாக திறமையும்.
  http://indiatoday.intoday.in/story/a-green-rising/1/100211.html

  //மோடி ஊழலே இல்லாத நிர்வாகத்தைத் தருகிறார் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை//(குமரன்)

  ஊழலே இல்லாத நிர்வாகம் என்றால்,ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் எங்குமே,எவருமே ஊழல் இல்லை என்று எடுத்துக்கொண்டு இருகிறீர்கள் என்று நினைக்கிறன்.அவ்வாறு பொருள் படும்படி இருந்தால்,நான் கருத்தை மாற்றி வேறு விதத்தில் எழுதுகிறேன்.
  இவ்வளவு பெரிய மக்கள் தொகையில்,மூலையில் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரி,எவராவது “commission” வாங்காமல் இருபார்கள என்றால் யதார்த்தமாக பார்த்தல் இல்லை,இருக்க முடியாது.அதனால் ஒரு நிர்வாகம் ஊழலற்ற நிர்வாகம் என்று ஆகிவிடாது என்று எடுத்தால்,என்றுமே எவராலும் அப்பேற்பட்ட நிர்வாகத்தை கொடுக்க இயலாது.கண்டிப்பாக முன்னால் ஆண்ட அரசர்களும் சரி,மன்னர்களும் சரி விதி விளக்கு அல்ல.
  இன்று வரை,மற்ற எல்லா மாநிலங்களிலும் ஆட்சியில்(பா.ஜ.க உட்பட) ஒரு ஊழல் குற்றச்சாட்டை கண்டிப்பாக தெளிவாக கூற இயலும்.இன்று வரை அதனை,குஜராத்தில் மோடி தலைமையிலான அரசை எதிர் கட்சியினால் கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சுமத்த இயலவில்லை.
  இப்படி இந்த பேராசை பிடித்த,ஊழலுக்ககவே பதவியில் ஏற துடிக்கும் நிர்வாகம் எங்கும் நிறைந்து இருக்கும் கால கட்டத்தில்,இவ்வாறு இருப்பது கண்டிப்பாக ஆச்சரியம் தான்.

  //சில ஊடகங்கள் அவரைத் தலயில் தூக்கி வைத்து ஆடுவதும் சில ஊடகங்கள் அவரைப் பாதாளத்தில் போட்டு மிதிப்பதும் உண்மை.//(குமரன்)

  இது அவ்வாறு இல்லை.
  பிரதான,முக்கியமான,அன்றாடம் சாதரணமாக மக்களிடம் சேரும் முக்கால்வாசி ஊடகங்கள் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதாக இல்லை.அவ்வாறு இருந்தால்,அது நன்றாக இருக்கும்.ஆனால்,அவரை பாதளத்தில் போட்டு மிதிப்பது உண்மை.
  நம்மை போன்ற சில தனி நபர்கள் அந்த மாநிலத்தின் வளர்ச்சியில் ஆர்வம் இருந்து,என்ன வளர்ச்சி நடந்து இருக்கிறது,அது உண்மையா என்று சரி பார்த்து,அங்கே,இங்கே தகவல் வாங்கி சொல்லப்பட்டு அது பரவுகிறது,அவ்வளவு தான்.இது மிகவும் துரதிர்ஷ்டம் தான்.
  கீழே குடுகபடிருகும் வலைபக்கத்தை எல்லாம் பார்க்கவும்.
  இன்னும் ஏராளம்.ஒவொவொரு முறையும் குஜராத்தின் எதாவது நிர்வாகம் ,பரிசுகளை வாங்கும் போது,முதல்வர் செல்லாமல்,அந்த துரையின் மூத்த நிர்வாகியை அனுப்பி வாங்க வைக்கிறார்.
  எல்லா வலைபகதையும் நான் சேமித்து வைக்க விலை என்பதனால் இங்கேயே அளிக்க இயலவில்லை.
  இனிமேல் அதனை சேமித்து வைக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.நன்று.

  http://www.youtube.com/watch?v=Fk8tkmKHOuc

  http://www.youtube.com/watch?v=pDPJ5dK1Lp4&feature=results_main&playnext=1&list=PL2FBC779FF280DE49

  http://www.supportgujarat.org/awards_to_gujarat.pdf

 38. Ganesh Shankar

  //mariappan S says://

  தெளிவான,சரியான கருத்து.

 39. மிஸ்டர் பாவலன்

  //தெளிவான,சரியான கருத்து.// (கணேஷ் ஷங்கர்)

  மாரியப்பன் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து என் கருத்தும் கூட. நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 40. subash

  இதெல்லாம் ரொம்ப ஒவர் மிஸ்டர் சுபாஷ். தமிழ் நாட்டில் எத்தனையோ வேலை இருக்கு, நீங்க உடுக்க துணியில்லாம இருக்கிற ஆளுங்களை எங்க கிராமத்துக்கு அனுப்புங்க. வருஷம் பூரா வேலை கொடுக்க நாங்க ரெடி? வருவாங்களா இந்த ஆசாமிகள்.. பீகாரில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை விட சென்னையில் தமிழ் பேசுபவர்கள் எங்களுக்கு நல்லது தான்.

  சோம்பேறிகளையும், உதவாக்கரைகளையும் உதாரணமாக பேசாதீர்கள். சொல்லவேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் போல் எதையோ கற்பனையாகவும், மிகைப்படுத்தியும் சொல்லாதீர்கள

  NAN SOOMPERIKALAI PATHI PESALA…. uduka thuni illathavargal ulaikamal illai … nenga bihar la irunthu varavangaluku saapadu pootala pothum avanga vanthu day nd n8 velai seivanga …ithuku yar karanam avanga oorla oru velaivaaipu illa ..nan sonnathu chennaiku mattum illa total india vukum seethu thann … oru bihariku evalavu salary kodukiringa …. atha vachitu ….avan vayathu pasiya thaan pooka mudiyum … aval pullayam periya padipu ellam padika vaika mudiyathu…. inaku yen vivasayam kami ya iruku tamil naatila …yen na athula varumanam illa … inaiku vivasaayatha panravan atha vititu…vera enna panrathunu theriyama ..irukuran….ata thaan yelmai nu sonen ….athuku enna vali panni irukanga intha govt …
  ________________

  சுபாஷ்,
  நம்ம தளத்தின் கமெண்ட் பாக்ஸில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டினாலே, அது தானாக தமிழுக்கு மாறிவிடும். உங்கள் கருத்தை இன்னும் அழகாக சொல்ல முடியுமே! முயற்சி பண்ணிப் பாருங்க…

  -என்வழி

 41. soban babu

  narender modi is prime minister material.want BJP to rule no scam fame congress.which is communal party?BJP is working for inclusive group unlike congress minorty appeasement just to increase vote banks this is bad sign for democracry.pls correct ur version.jai hind jai bjp jai narender modi

 42. மிஸ்டர் பாவலன்

  கிருஷ்ணன் பதிவுகளைப் படித்து ரொம்ப நாள் ஆச்சே!
  அவருடைய ஞாபக சக்திக்கு ஏதாவது எழுதினா
  கலக்கலா இருக்கும்! நான் எழுதறதை நானே படிக்க
  முடியதில்லை இப்போ எல்லாம்..

  -== மிஸ்டர் பாவலன் ===-

 43. Krishna

  //கிருஷ்ணன் பதிவுகளைப் படித்து ரொம்ப நாள் ஆச்சே!
  அவருடைய ஞாபக சக்திக்கு ஏதாவது எழுதினா
  கலக்கலா இருக்கும்! //

  பாவலன் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி. எனக்கு தற்சமயம் வலை தளங்களை படிக்க ஓரளவு நேரம் இருந்தாலும் கருத்து பதிவு செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. தவிர சமீப காலமாக அரசியல் செய்திகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதாக தோன்றுகிறது. இதில் புதிதாக பதிவு செய்ய எதுவும் இல்லை என்றும் தோன்றுகிறது. நேரம் கிடைத்து, அதே சமயத்தில் புதிதாக ஏதாவது செய்தி வந்தால் பதிவு செய்கிறேன். என் பதிவுகளை கூர்ந்து படிப்பதற்கு மீண்டும் நன்றி.

 44. தினகர்

  ”uduka thuni illathavargal ulaikamal illai ” “oru bihariku evalavu salary kodukiringa …. atha vachitu ….avan vayathu pasiya thaan pooka mudiyum ”

  உங்க கணக்குப்படி , நீங்க சொல்ற நபர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை ரூபாய் சம்பளம் கிடைத்தால் உடுக்கத் துணியோடு இருப்பான் என்று சொல்லுங்களேன்.

 45. D.Karuppasamy

  ஹாய் நண்பர்கள்.இன்று நமது பிரதமராய் இவர் இறுபதணல்,இன்று இந்த அளவிக்கு இந்திய பற்றி உயர்வாக இர்ருக்கிறோம் .வாழ்தலும் பேசும் தால்துளும் பேசும்.இன்று நம்மக்கு இர்ருக்கும் ஜனநாயக உரிமை வேற எந்த நட்டுளும் கிடையாது.நலத்தை நினைப்பௌம் .

 46. மிஸ்டர் பாவலன்

  நண்பர் கிருஷ்ணன் அவர்களே:

  //எனக்கு தற்சமயம் வலை தளங்களை படிக்க ஓரளவு நேரம் இருந்தாலும் கருத்து பதிவு செய்வதற்கு நேரம் இருப்பதில்லை// (கிருஷ்ணன்)

  “எல்லாம் நேரம்!” ..தலைப்பிற்கு பொருத்தமா தான் இருக்கு! ஹி ஹி ஹி

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 47. தினகர்

  கிருஷ்ணா கேரக்டரே, யாரோ ஒருவர் டபுள் ஆக்ட் போடுவது போல் தான் தெரிகிறது 🙂

 48. மிஸ்டர் பாவலன்

  //கிருஷ்ணா கேரக்டரே, யாரோ ஒருவர் டபுள் ஆக்ட் போடுவது போல் தான் தெரிகிறது // (தினகர்)

  கிருஷ்ணன் அவர்கள் நல்ல ஞாபகத் திறன் உள்ளவர்.
  நிறைய details சேர்த்து எழுதுகிறார். அவர் எழுதும்
  style என் பாணி இல்லை. கணேஷ் ஷங்கரும் நான் இல்லை.
  இவர்களுக்கு எதிராக எழுதும் தேவராஜன், என் கருத்து
  ஆகியோரும் நான் இல்லை. குமரனும் நான் இல்லை.
  மதுரை வெங்கடேஷ் அவர்களும் நான் இல்லை.
  அமானுல்லா அவர்களும் நான் இல்லை. அவர் துபாய் நண்பர்.
  (நான் எழுதும் வேறு பெயர்கள் டாக்டர் சுப்பாண்டி, சென்னை
  வீரன், அன்பழகன் etc. இப்போது அவற்றில் எழுதுவதில்லை.)

  -== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *