BREAKING NEWS
Search

அந்தப் படத்திலிருப்பது ‘சூப்பர் ஸ்டாரே’ இல்லை! – இயக்குநர் ரஞ்சித் விளக்கம்

அந்தப் படத்திலிருப்பது ‘சூப்பர் ஸ்டாரே’ இல்லை! – இயக்குநர் ரஞ்சித் விளக்கம்

 

பாலி ரஜினி கெட்டப் என்ற பெயரில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த அந்தப் படத்திலிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியே அல்ல என்று இயக்குநர் பா ரஞ்சித் மறுத்துள்ளார்.

ஜடாமுடி, முகம் முழுக்க நாடகக் கலைஞர் மாதிரி மேக்கப் போட்டு செல்ஃபி எடுக்கும் போஸில் ஒரு ஸ்டில் நேற்று இரவு இணையத்தில் வெளியாகி, ‘யார் இந்த நடிகர், கண்டுபிடியுங்கள்!’ என்று கேட்டிருந்தனர்.

இதனை சிலர் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட இதர சமூகத் தளங்களில் பகிர, இது கபாலி ரஜினிதான் என்று ரசிகர்கள் பேச, கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். விடிவதற்குள் அந்த புகைப்படம் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது. அது கபாலி ரஜினிதான் என்று 99 சதவீதம் எல்லோரும் நம்ப ஆரம்பித்த நிலையில், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித்.

இந்தப் படத்தில் இருப்பது ரஜினியே அல்ல.. என்று அவர் தெரிவித்துவிட்டார்.

நடிகர் மோகன் ராம் அதற்கு முன்பே, ‘நான் நன்கு விசாரித்துவிட்டேன், இது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியல்ல,” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்தப் படத்தில் இருப்பது டிவியிலிருந்து சினிமாவுக்கு நடிக்க வந்துள்ள மா கா பா ஆனந்த் என்பவர்தான் என்று கூற ஆரம்பித்துள்ளனர் (ஹப்பா.. நமக்கும் கொஞ்சம் திக்குன்னுதான் இருந்துச்சு, தலைவர அப்படி ஒரு கோலத்தில் பார்த்தபோது!).

ஆனால் மா கா பா ஆனந்தோ.. ‘இந்த ஸ்டில்லில் இருப்பவர் நம்ம தலைவர் மாதிரிதான் தெரிகிறார். ஆனால் நான் இப்படி ஒரு படம் எடுக்கவே இல்லை…’ என்று ஆடியோ பேட்டி தந்துள்ளார். அப்போ யாருடைய ஸ்டில் இது? குழப்பம் தொடர்கிறது.

இந்த 12 மணி நேரத்தில் நடந்த பரபரப்பைப் பார்த்த பிறகு,

“தலைவரின் தலைமுடியில் ஓன்று
மட்டும் புகைபடம் பிடித்து
அதுதான் கபாலி பஸ்ட் லுக்
என்று சொன்னால் போதும்
டிவிட்டரில் ட்ரெண்டாகும்
பேஸ்புக் பக்கங்கள்
நிமிடங்களில்
நிரம்பிவிடும்
கூகுள் சர்ச் இஞ்சின்
குய்யோ முறை யோ என தன் வேலைபளுவால் கத்தும்
யூடுப் க்கு இடுப்பு உடைந்து போகும்
மொத்ததில் அவர் முடிபெரும்
மரியாதை கூட உங்களாள பெறமுடியாது போலி கூட்டங்களே”

என கமெண்ட் வெளியிட்டுள்ளது ரஜினியின் முரட்டு பக்தர்கள் குழு!

அபிஷியல் ஸ்டில் வர இன்னும் ஒரு வாரம்… தாங்கறது கஷ்டம்தான்!

-என்வழி




One thought on “அந்தப் படத்திலிருப்பது ‘சூப்பர் ஸ்டாரே’ இல்லை! – இயக்குநர் ரஞ்சித் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *