Breaking News

முதல்நாள் வசூல்.. இந்தியில் ரோபோவை முந்தியதா விஸ்வரூபம்..?

Monday, February 4, 2013 at 12:27 am | 4,610 views

முதல்நாள் வசூல்.. இந்தியில் ரோபோவை முந்தியதா விஸ்வரூபம்..?

Endhiran-Robo_-Roborajini
ன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 20 பேராவது தொலைபேசியில் என்னைக் கேட்ட கேள்வி இது. நிச்சயம் இந்தக் கேள்வி ‘தலைவருக்கு’ப் பிடிக்காதுதான். தாராளமாய் முந்திக் கொள்ளட்டும் என்றுதான் சொல்வார் என்பது தெரியும். ஆனால் உண்மை என ஒன்றிருக்கிறல்லவா…

அதை எப்போதும் பொய்கள் மறைத்துவிடக் கூடாது. விஸ்வரூபம் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து எதிர்ப்பார்க்கப்பட்ட கேள்வி என்பதால், தமிழில் அந்தப் படம் வெளியாகும் முன்னரே பதிலைச் சொல்லிவிடுகிறேன்.

இந்தியில் 1000 அரங்குகளில் வெளியானதாகக் கூறப்படும் விஸ்வரூபம் படம் முதல் நாள் வசூலில் ரோபோவை முந்தியதாக சிலர் அரைவேக்காட்டுத் தனமாக எழுதியிருந்தனர்.

உண்மை என்ன?

பாக்ஸ் ஆபீஸ் இந்தியா என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தி மற்றும் விபரங்களை இங்கே ஆங்கிலத்தில் தருகிறோம்.

“Vishwaroop improved in the evening slightly after a low start to collect 1.75-2 crore nett region with Mumbai circuit giving a major contribution of around 70 lakhs. The collections of the film are just a bit lower than Robot which was is the highest collecting film from the South in the Hindi market. Vishwaroop was released on 1000 screens approx in the Hindi market.” -Boxofficeindia

“தோராயமாக 1000 அரங்குகளில் வெளியானதாக சொல்லப்படும் விஸ்வரூபம் படம் இந்தி மார்க்கெட்டில் அதிக கலெக்ஷன் பெற்ற தென்னிந்தியப் படமான ரோபோவை விட குறைவான வசூலையே முதல் நாளில் பெற்றது. இரண்டாவது நாள் சற்று பரவாயில்லை!”  – இதுதான் அந்த செய்தியின் தமிழாக்கம்.

வட இந்தியாவில் ரோபோவின் முதல் நாள் வசூல் 2.11 கோடி. முதல் வார முடிவில் ரூ 12 கோடி.

கவனிக்க… இந்த பாக்ஸ் ஆபீஸ் இந்தியா தளமே எந்திரனை இந்தியாவின் உச்சபட்ச வசூல் சாதனை புரிந்த படம் என்பதை ஒப்புக்கொள்ள மனசின்றி மவுனம் சாதித்து வந்ததுதான். இத்தனைக்கும் அனைத்து வசூல் ஆதாரங்களும் செபி எனும் பங்கு வர்த்தக மையத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் விஸ்வரூபம் வசூல் பற்றி சிலர் எதையோ எழுதியிருக்கிறார்கள். கவனிக்க… இந்த நிமிடம் வரை, வெளிநாட்டு வசூல் சாதனை வரிசை… எந்திரன், சிவாஜி, குசேலன் என்பதுதான். அதற்குப் பிறகுதான் மற்ற படங்கள்!

பிரிட்டனில் எந்திரன் முதல்வாரம்… (£295,148)

http://industry.bfi.org.uk/article/17095/UK-Box-Office-1—3-October-2010

சிவாஜி – தி பாஸ் (£168,603)

http://industry.bfi.org.uk/article/12428/UK-Film-Box-Office-Jun-15—Jun-17-2007

விஸ்வரூபம் (£95,723)

http://industry.bfi.org.uk/article/18326/UK-Box-Office-25–27-January-2013-

விஸ்வரூபம் வசூல் எப்படி இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. அடுத்து விஸ்வரூபம் 2 வெளியானாலும் கூட எந்திரன் அல்லது ரோபோ அல்லது கோச்சடையான் வசூலோடுதான் ஒப்பிடுவார்கள் என்பது நமக்குத் தெரியாததா!!

-வினோ

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

74 Responses to “முதல்நாள் வசூல்.. இந்தியில் ரோபோவை முந்தியதா விஸ்வரூபம்..?”
 1. Jey_UK says:

  UK Weekend box-office collection – No one can touch the BOSS

  http://industry.bfi.org.uk/article/17095/UK-Box-Office-1—3-October-2010 – enthiran first weekend collection (£295,148)

  http://industry.bfi.org.uk/article/12428/UK-Film-Box-Office-Jun-15—Jun-17-2007 – sivaji first weekend collection (£168,603)

  http://industry.bfi.org.uk/article/18326/UK-Box-Office-25–27-January-2013 – Vishwaproblem collection (£95,723)

 2. நாஞ்சில்மகன் says:

  கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம், ரஜினியின் ரோபோ படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 25ம் தேதியே தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பால் இப்படம் தடைபட்டது. அதேசமயம் தமிழகம் மற்றும் புதுவை தவிர்த்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. முதல்நாளில் இம்மாநிலங்களில் சில பிரச்னைகள் வந்தபோதும், அடுத்தடுத்த நாட்களில் படம் தொடர்ந்து சுமூகமாக ஓடத் தொடங்கியது.

  வடமாநிலங்களில் கடந்த வெள்ளியன்று (பிப்-1-ம் தேதி) இப்படம் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தியில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகள், இப்படத்தில் ‌என்னதான் இருக்கிறது என்று ரசிகர்களை படம் பார்க்க தூண்டியது. அதன்விளைவாக இப்படம் அங்கு நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

  முதல்நாளில் விஸ்வரூபம் படம் ரூ.1.89 கோடி வசூலித்துள்ளது. தமிழ் படம் ஒன்று, மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தளவு வசூல் ஈட்டுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் ரஜினியின் எந்திரன் படம் ரோபா என்ற பெயரில் இந்தியில் வெளியானது. இப்படம் முதல்நாளில் ரூ.1.75 கோடி வசூல் செய்து இருந்ததே முந்தைய வசூல் சாதனையாக இருந்தது. தற்போது அதனை கமலின் விஸ்வரூபம் படம் முறியடித்துள்ளது. இந்த வசூல் சாதனை முதல்நாள் வசூலை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 3. Sharajini says:

  எல்லா நடிகர்களுக்கும் இதுவே ஒரு வேலையாகி விட்டது இது போல் செய்தி வெளியாக்கி படத்திற்கு Publicity தேடிக்கொள்வது ஏன் இந்தக் கமலே எந்திரன் வெற்றியை publicity தான் காரணம் என்றார் அதுவும் உண்மை தான் ரஜினி என்ற தனி மனிதனின் தானாக சேர்க்காமல் தானாகவே சேர்ந்த Publicity

 4. S. Ravi says:

  முதலில் தசாவதாரம் நம் தலைவரின் சிவாஜியை முந்தியது என்று பொய் சொன்னார்கள். பின்னர் அது பொய் என்று நீருபனமானது. இன்னும்சொல்ல போனால் குசேலனை கூட தசாவதாரம் முந்தவில்லை. அது சரி, என்னை போல் ஒருவன், மன்மதன் கம்பு போன்ற படங்கள் இரண்டு வார வசூல் நம் சந்திரமுகியின் ஒரு நாள் வசூலையாவது முறியடித்ததா ? இங்கு வந்து செல்லும் அதி மேதாவி ரசிகர்கள் விளக்கம் அளிக்கட்டும். வாழ்க சூப்பர் ஸ்டார் இதய தெய்வம் ரஜினி அவர்கள். ரஜினி படத்தின் சாதனையை தலைவரின் அடுத்த படம் தான் முறியடிக்கும் என்பது வரலாறு. எந்திரனின் வசூல் சாதனை கண்டிப்பாக முறியடிக்கப்படும். அது கோச்சடையான் தான்.

 5. குமரன் says:

  இந்த செய்தியை முதலில் பார்த்தபோதே பொய் தொடருகிறதே என்று நினைத்தேன். இதெல்லாம் வியாபாரம்!

 6. malar says:

  உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 7. Vel says:

  Dear Vino,

  Why Your stomach burning…??

 8. s venkatesan, nigeria says:

  ஆறுதல் சொல்ல போனால் இலவச படம் என்று அறிவித்தார்கள் அல்லவா. இனி அந்த தொல்லை இருக்காது என்று நம்புவோம். (கமலுக்கு முதல் எதிரி அவரது ரசிகர்களே)

 9. kabilan says:

  நன் கீக நினச்சத நீங்க போஸ்ட் அஹ போட்டிங்க.ஒன்னும் முடியாது .சும்மா இந்த மாதிரி சீன் போடுவானுங்க .காசே குடுக்கமா கமல் கு publicity .தலைவர் பெருந்தன்மை ஆனவர்,ஆனா இந்த மாதிரி பொய் சொன்ன,எதுக முடியாது

 10. saranya says:

  ஹலோ நாஞ்சில்மகன் சார், அதான் மேல அவரு தெளிவா எழுதிட்டாரு இல்ல. அப்பறம் என்ன.

 11. kumaran says:

  கமல் இன்னும் தலைவருக்கு போட்டியா இருக்கறதே பெரிய விஷயம் ?

 12. Suresh says:

  No one can beat our Thalaivar’s earlier film records. First, Kamal fans are lies. Kochadaiyan Only beat the Robo’s record collections. It is unfair news. It is a fake news.

 13. R. Hari hara krishnan says:

  அய்யா தாங்கள், எப்பொழுதும் ரஜினி பற்றிய நியூஸ் களை எடுத்து எழுதும் thastamil .com போன்ற நியூஸ் களில் தான் இப்படி எழுதி உள்ளார்கள், தாங்கள் கூறியது போல் இந்திரனின் ஒரு நாள் வசூல் 2.11 கோடி என்றால் அவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள்?

  “ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் இந்தியில் ரோபோ என்ற பெயரில் வெளியானது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 1.75 கோடி வசூல் செய்தது. ஆனால் விஸ்வரூப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.89 கோடி. இதன் மூலம் விஸ்வரூப் ரோபோவை முந்திவிட்டது.”

  Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/kamal-s-vishwaroop-beats-rajini-robot-169093.html#ச்லிடெ66189

  தவறான செய்திகளை சொல்பவர்களுக்கும், நம்முடைய எதிர்ப்பை சொன்னால் என்ன? தடை போன்ற எதாவது தண்டனை கொடுத்தால் நல்லது. அல்லது அவர்கள் மன்னிப்பாவது கேட்கவேண்டாமா?

  உண்மையை சொன்னால் நம் தலைவருக்கு இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும்! பாபா திரைபடத்திற்கு ப. ம. க. வினால் பிரச்சினை வந்தபோது கமல், நடிகர்சங்கம், கலைஞர், (ஆட்சி) எவரும் தலைவருக்கு உதவ ஒரு வார்த்தை கூட பேசவில்லை! அதே போல் தலைவர் நினைத்திருந்தால் இந்த பிரச்னையை கண்டுகொள்ளாமல்/சப்போர்ட் பண்ணாமல் இருந்திருக்க முடியும்! ஆனால் பெருந்தன்மையையே தன் பிறவி குணமாக கொண்ட தலைவர் நல்ல எண்ணத்தில் உதவி பண்ணினால் கூட அவர்களுக்கு புரிவதில்லை, நாய் வாலை நிமிர்த்த முடியாது! கமல் ரசிகர்களை திருத்தமுடியாது!

  உலகமே பாராட்டிய “எந்திரனை பற்றி கமல் இது வரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

  “எண்ணமும் செயலும் நல்லதாக இருப்பின் நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும்”.

  “மனம் போல் வாழ்வு” இதெல்லாம் எல்லோர் வாழ்விலும் பொருந்தும்.
  ___________

  அது பொய்யான செய்தி என்பதால்தான் இங்கே ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளோம்.
  -என்வழி

 14. Ravi says:

  வேல் மற்றும் நாஞ்சில் மகன் அவர்களே, உண்மையில் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். ரோபோவை உங்கள் படம் வென்று விட்டதா ? நல்லவனுக்கு நல்லவன் vs எனக்குள் ஒருவன் காலத்திலேயே தலைவர் முந்திவிட்டார். சும்மா கூப்பாடு போடா வேண்டாம். கமல் – ரஜினி என்று இருந்த காலம் போய் 1984-ம் ஆண்டு முதல் ரஜினி – கமல் என்று ஆகி பல வருடம் சென்று விட்டது. வரலர்ற்றை மறந்து மறைத்து உங்கள் இஷ்டம் போல கதை அளக்காதீர்கள். நாங்கள் ஏன் வயிறு எரிய வேண்டும். சொல்ல போனால் உங்கள் படம் தடை செய்யப்பட போது நீங்கள் எப்படி எதிர்த்தபோது உங்களை போலவே நாங்களும் படம் தடை செய்ய பட்டதை எதிர்த்தோம். நன்றி மறக்க வேண்டாம் நண்பர்களே. வாழ்க ரஜினி.

 15. rajesh says:

  இது எப்பவோ எதிர்பார்த்தது தான் அப்புறன் ஏம்பா அந்த மனுஷன் வீடு போக போது இடம் போக போது நு புலம்புனாரு விடுங்க பாஸ் சின்ன பசங்க எப்போதுமே சின்ன பசங்க தான் ,இதே ஆளுங்க தான் மன்மதன் அம்பு எந்திரத்தை பிளந்தது நு சொன்னாங்க அப்போ விஸ்வரூபம் மன்மதன் அம்ப தான உடைக்கணும் ஏன் மறுபடியும் இந்திரன் கிட்டே வருது இதுல்ல இருந்தே தெரியலியா அப்படி இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மூணு மாசம் இருக்குமா அவ்ளோ தான பின்னாடி வராருல கோச்சடயான்

 16. Raj says:

  இன்னொன்றை அனைவரும் மறந்துவிட்டீர்கள். ரோபோ மொழி மாற்று படம் தான். மேலும், படம் 800 தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், கமல் இப்படம் ஹிந்தியில் நேரடியாக தயாரிக்கப்பட்டதாக கூறி இருக்கிறார், 1000+ தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார். அப்படிஎன்றால், முதல் நாளில் டேவிட் VR-ஐ விட 3 கோடி அதிகமாக வசூளித்திருக்கிறது.

 17. varadhu says:

  நண்பர்களே !

  ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள் . தலைவரின் கடைசி படத்துக்குதான் இவர்கள் அனைவரும் எப்போதும் வசூலை ஒப்பிட்டு பார்கிறார்கள் .இதற்கு முன் வசூல் சாதனை செய்த சந்திரமுகி ,சிவாஜி ,படையப்பா போன்ற படங்களை மறந்து விடுகிறார்கள் .ஏனென்றால் அவர்களுக்கே தெரியும் தலைவரின் கடைசி பட வசூல்தான் உச்சம் என்றும் அதை மற்றொரு தலைவர் படம்தான் முறியடிக்கும் என்றும் தெரியும் .இதுபோல்தான் துப்பாக்கி எந்திரன் சாதனையை முறியடித்து விட்டது என்று சொன்னார்கள் .ஆனால் தற்போது தெரியும் அதன் வசூல் எவ்வளவு என்று நூறு கோடியை கூட தொடவில்லை என்பதே உண்மை .மேலும் தலைவர் எப்போதும் சொன்னதில்லை என் படம் இவ்வளவு வசூல் சாதனை செய்தது என்றும் மற்ற படங்களின் வசூலை தன படத்தோடு ஒப்பிட்டதிலை என்று அணைவருக்கும் தெரியும் . ஒருமுறை ndtv நியூஸ் சானலில் அதன் இயக்குனர் பிரணாப் ராய் சொன்னார் பாலிவுட் அமிர்கான் ,சல்மான்கான் மற்றும் ஷாருகான் இந்த மூன்று கான்கள் சேர்ந்தாலும் உங்களது பட வசூலை தொட முடியவில்லை என்று இதிலிருந்தே புரியும் தலைவரின் பட வசூல் என்ன என்பது எனவே தலைவர் போல் நாமும் அதிகம் பேசாமல் நம்மைப்பற்றி அவர்களை பேச வைக்கவேண்டும் .பேசவைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை கோச்சடயான் வரும்வரை. 35 வருடம் இந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரே நடிகர் தலைவர் ஒருவர்தான் .நேற்று என் தந்தை அவரது ரசிகர் இன்று நான் அவருடைய ரசிகன் நாளை என் மகன் அவருடைய ரசிகன் . மூன்று தலைமுறையாய் சினிமாவின் உச்சத்தில் வீற்றிருப்பவர் நம் தலைவர் ஒருவரே .

  ஜெய் ஹிந்த் .

 18. devaraj says:

  Vino, absolutely spot on analysis.
  cheers
  Dev.

 19. jey_uk says:

  please include this as well this show real power of super star with real proof..

  http://industry.bfi.org.uk/article/14570/UK-Box-Office-1-3-August-2008 – Kuslean (£97,015)

  http://industry.bfi.org.uk/article/14445/UK-Box-Office-13—15-June-2008 – dasaavartharam (£126,718)

 20. Anandh says:

  எப்பவுமே தலைவரு தான் நம்பர் 1… !!
  ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்…!!! ஒரே ஒரு தலைவர்…!!!

 21. saranya says:

  please vino sir, please put some links for hindi robo collection for first three days. and where it is mentioned as 12 crores. those people are telling that it collected only 7.25 crores

 22. saranya says:

  sorry to say this sir every body told that viswaroop has beaten robot’s record in hindi. robot has collected just 7.25 crores in first weekend but this has collected 7.65 crores it seems. well planned marketing sir by kamalhassan.

 23. Baskaran says:

  நண்பர்களே ,

  நீங்க ஒன்று மட்டும் புரிஞ்சிக்கணும் , எண்ணுடுய நண்பர்கள் பெரும்பாலோனோர் கமலின் புலம்பலை பார்த்து (வீடு போயுரூம் ) தியேடூர் ல பார்கணும்னு முடிவெடுத்து படம் பார்த்தார்கள் இங்க UK ல. ஊருலயும் இப்படி தான் பல பேர் முடிவேடுதிருக்கிரர்கள் . இவ்வளுவு அடிவாங்கியும் மீசையுள மண் ஓட்டலுனு இன்னமும் புலம்பிருன்காங்க பாருங்க கமல் ரசிகர்கள் . வடிவேலு அந்த மூ******** சந்து காமெடி தான் நினைவுக்கு வருது . சரியாய் நினைவில் வைத்து கொள்ளுங்கள் அடுத்த கமல் படம் வெளிவரும் பொழுதும் ஏந்திரன தான் கம்பர் பண்ணுவாங்க சாதாரண(விசுவ)ரூபம் கூட compare பண்ண மாட்டங்க. முஸ்லிம் அமைப்புகளில் விளம்பரம் முடிச்சுபோச்சு . இனிமா இவர்களில் விளம்பரம் தாங்க முடியாது . இந்த collection கே இவ்வளுவு விளம்பரம் தேவ படுதுன்ன பாத்துகோங்க ( Gounderoda காமெடி – இந்த குண்டூசி , பருத்தி கொட்ட விக்கிறன்வாக தொல்ல தங்க முடியலிங்கோ ) . இந்த மாதிரி விளம்பரம் பண்ணி பார்க்க நெனைக்கும் மக்களின் எர்ரிச்சல்லுக்கு ஆளாக வேணாம் . அப்புறம் கமல் estimate பண்ண 150 கோடி கூட வசூல் ஆகாது , வடை போச்சேன்னு புலம்பெ வேண்டியது தான் !

  நன்றி ,
  பாஸ்கரன்

 24. r.v.saravanan says:

  அடுத்து கோச்சடையான் வெற்றியடையும் போது அந்த வசூலை வைத்து ஒப்பீடு நடக்கும் தலைவரின் ஒவ்வொரு படமும் ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல

 25. srikanth says:

  நண்பர் வரது அவர்களே உங்களுடையக் கருத்தே எனது கருத்தும்.வரவேற்கிறேன்
  நன்றி நண்பா.

 26. Nagenthirakumar says:

  All friends, pandian and devarmahan realised for a deepawali when my schooldays. Devarmahan is super hit better than pandian. But, collection……… Pandian is top with out any promotion and publicity. Pls note. Only one boss is in India that rajini is only one. It is true.

 27. bahrainbaba says:

  If Dasavadharam has already beaten Sivaji record and if Manmadhan Ambu, Mankatha and Thuppakki has already beaten Endhiran record why the hell still they are comparing the collections with Endhiran.. This shows clearly that the ultimate reference point for the highest collection movie is Thalaivar Rajinikanth’s. This comparision shall be done whenever a new movie hits the screen and it’s announced by media as super hit.

  கருணாஸ் சொன்ன மாதிரி.. சினிமா வந்து மராத்தான் போட்டி மாதிரி கடைசி வரை எந்த படம் சீரா ஒடுதோ அந்த படம்தான் வின்னர்..
  போக போகத்தான் தெரியும் கண்ணா.. விஸ்வரூபத்தோட நிலை என்னனு..

  கமல் ரசிகர்களுக்கு மூளை சூடாயிருக்கு.. இப்போ அப்டிதான் பேசுவாங்க.. கொஞ்ச நாளுல எல்லாம் சரி ஆயிடும்..

 28. narayanan says:

  தமிழனுக்கு ரொம்ப முக்கியமான பதிவு. இதுவெல்லாம் சரித்திரத்திலே இடம் பெற போகுது. திருந்தமாட்டீங்களா!

 29. srikanth says:

  தலைவரோட எந்திரன் படத்தோட முதல் மூன்று நாள் வசூல முறியடிக்க இந்த பிஸ்கோத்துப் பயலுக்கு மூன்று வருடம் ஆகியிருக்கு.இப்போதல்லவா புரிகிறது.
  மலைக்கும்,மடுவுக்கும்,உள்ள வித்தியாசம்.எனவே என்றைக்குமே எந்திரன் என்பவன் அசைக்க முடியாதவன் உறுதியானவன்,மலைக்கு நிகரானவன்.
  நன்றி அன்புடன்
  ப.ஸ்ரீகாந்த்.

 30. Jegan says:

  Mangatha beats enthiran, maatran beats enthiran, thupaki beats enthiran, now visvarubam beats enthiran, who is true?if thupaki beats enthiran y visvarupam is not compared with thupaki !?
  What a fun

 31. enkaruthu says:

  என்னடா இன்னும் ஆரம்பிக்கவே இல்ல என்று பார்த்தேன்.இவ்வளவு திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகியும், நான் இந்த நாட்டை விட்டு (என்னமோ நாம் எல்லாம் தினந்தோறும் முஸ்லிமை வெட்டுவது போலவும் அவர்கள் நம்மை வெட்டுவது போலவும் ) மதசார்பில்லாத தேசத்துக்கு குடியேறுகிறேன் என்று சீன் போட்டும் இவ்வளவுதான் வசூலா வெட்கம்.இதில் கமல் ரசிகர்களுக்கு திமிர் வேறு.நான் கமல் ரசிகர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் ரஜினி படத்துக்கு அடித்து கொண்டு வரும் மக்கள்(குறிப்பு: எந்திரனுக்கு ஒரு இரண்டு டிக்கட்டுக்காக mla லெட்டெர் கொடுத்தது நினைவிருக்கலாம்) ரஜினி என்ற தனி மனிதரை ரசிக்க வருகிறார்கள்.ஆனால் கமல் படத்துக்கு கமலை ரசிக்க சில ரசிகர்கள் ரசிகைகள் வரலாம் ஆனால் மீதி உள்ளவர்கள் அது ஒரு படம் என்ற அளவிலே வருகிறார்கள்.

  முஸ்லிம் அமைப்பினர் சொல்வது போல கமல் நிஜ வாழ்கையிலும் நடிகர்தான்.எப்படியும் இந்த காட்சிகளை நீக்காமல் படம் வெளியிட முடியாது என்று இவருக்கு தெரிந்தும் சட்டப்படி சந்திப்பேன் என்று முறுக்கி கொண்டு நீதிமன்றம் சென்று ஒரு வாரம் கழித்து அம்மாவுக்கு நன்றி என்று கூனி குறுகி இப்பொழுது அந்த காட்சிகளை வெட்டுவது என்பது வடிவேல் விறைப்பாக நின்று பின் அடி வாங்குவது போல் உள்ளது

 32. enkaruthu says:

  நான் தலைவருக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் தலைவா எவ்வளவுதான் பாம்பிற்கு பாலை ஊதினாலும் அது விஷதைதான் கக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம்.

 33. Rajini jagan says:

  நன்றி வினோ அவர்களே , இன்று நான் பேபர் ல் படித்தபோது , எனக்கு தோன்றியது சம்பவம் எல்லாம் நீங்க எல்லா விவரத்தோட இங்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. என்றும் எப்போதும் ரஜினி இன் படங்கள் தான் முதல் இடத்தில வரும். இதை ரஜினி ரசிகர்கள் அனிவருக்கும் தெரியும் .

 34. Rathina says:

  என்கருத்து அண்ணா
  முக்கியமான இரண்டு விசயத்த விட்டுடிங்க. சின்ன புள்ளைங்க candys க்கு கீழ விழுந்து பொரண்டு அழுவுற மாதிரி படத்த ரிலீஸ் பண்ண விடலைன்ன நான் ஊறவிட்டு போயிடுவன் ஊ ஊநு அழுதரே.

  அப்பறம் காரியம் ஆனவுடனே எல்லா நடிகரளும் காலம் கடந்து ஆதரவு குடுத்தாங்கன்னு அறிக்கை விட்டு முதுகுல குத்தியிருக்கிறார் .
  Really i didnt expect all such silly activities from kamal.I’ve had some respect on kamal before. How he handled this problem shows his headweight. Even i could say he has used his fans to make his side strong infront of jayalalitha. I believe Rajini didnt even try to use his fans during Baba problem. Poor fans and poor cinema people who have support him.All are like use and through cups for him.

 35. NAREN says:

  எந்திரன் வசூல் அதிகமா தான் இருக்கும்.. சும்மா இந்த reporters எதையாவது பேசி கிளப்பி விட்டு வேடிக்கை பாக்குறது ஒரு வேலை …

  அந்த வசூலுக்கு ரஜினி – ஷங்கர் என்ற இரண்டு பிரம்மாண்டம் … அது தான் காரணம் … அத முரியடிகனும்ன மீண்டும் அவுங்க ரெண்டு பெரும் சேர்ந்த கூட கொஞ்சம் possible .இருக்கு .. அதுவும் சொல்ல முடியாது …

 36. மிஸ்டர் பாவலன் says:

  // கமல் படத்துக்கு கமலை ரசிக்க சில ரசிகர்கள் ரசிகைகள் வரலாம் ஆனால் மீதி உள்ளவர்கள் அது ஒரு படம் என்ற அளவிலே வருகிறார்கள். //

  என் கருத்து என்ன சொல்கிறார்னு புரியலையே!

  நான் “சலங்கை ஒலி” படத்தை பல தடவை பார்த்திருக்கேன்.
  நல்ல நடிப்பு, நடனம், இசை, பாடல்கள், கதை என அது ஒரு
  கூட்டு முயற்சி தான் (கமல்-ஜெயப்ரதா-சரத்பாபு, இசை ஞானி
  இளையராஜா இசை, கே. விஸ்வநாத் அருமையான இயக்கம்).
  ஒரு படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் “படத்தை மட்டும் பார்க்க
  வேண்டும் என வருகிறார்கள்” என்றால் இதில் ஒன்னும் தவறு
  இல்லை! Hero worship செய்யனும்னு எதுவும் அவசியம் இல்லை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 37. arulnithya says:

  பாவலன் சார்,

  என்கருத்துவின் கருத்து சொல்றது இது தான் : “ரஜினி தலைவர பார்க்க தான் எல்லோரும் படத்துக்கு வாராங்க மத்தது எல்லாம் ரெண்டாம் இடம் தான்” அந்த முதல் தடவை படம் பார்க்க எல்லோரும் (தீவிர தலைவர் ரசிகர்கள் தவிர்த்து) விரும்புகிறார்கள் ஏனெனில் அது தலைவர் ரஜினி படம் என்பதால்” நான் புரிந்து கொண்டது இது தான்…

 38. Raj says:

  கொஞ்சம் behindwoods.com போய் பாருங்கள், ஒவ்வொரு கமல் ரசிகனும் இப்போவே 500 கோடி வசூல்-இன்னு தாம் தூம் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் காலம் இவர்களுக்கு பதில் சொல்லும். ஒரு படத்தை ஓட்ட இந்த அளவிற்கு கேவலமாக கமலும் அவர் ரசிகர்களும் நடந்துக்கொன்டிருக்கிறார்கள். வெட்கப்படவேண்டிய விஷயம்.

 39. மிஸ்டர் பாவலன் says:

  அருள் நித்யா அவர்களே:

  உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது
  உண்மை என்பதால் நான் அதை ஏற்கிறேன்.

  மன்மதன் அம்பு படத்தை எடுத்துக் கொண்டால்
  கமல்-த்ரிஷா என ஹாலிவுட் ரேஞ்சில் படம்,
  பாடல்கள் இருந்ததால் (ஒரு கவிதை தவிர்த்து)
  த்ரிஷா ரசிகர்கள் அலை, கூட்டம் குறைந்த பின்
  ஒரு ஐம்பது நாள் தாண்டி ரிலாக்ஸ்டா பார்க்கலாம்
  என நினைத்தேன். ஆனால் அதற்குள் படத்தைத்
  தூக்கி விட்டார்கள். ஆனால் ரஜினி ரசிகர்கள் என் போல்
  ஐம்பது நாள் ஒத்திப் போடுவார்களா என சொல்ல முடியாது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 40. enkaruthu says:

  //என்கருத்துவின் கருத்து சொல்றது இது தான் : “ரஜினி தலைவர பார்க்க தான் எல்லோரும் படத்துக்கு வாராங்க மத்தது எல்லாம் ரெண்டாம் இடம் தான்” அந்த முதல் தடவை படம் பார்க்க எல்லோரும் (தீவிர தலைவர் ரசிகர்கள் தவிர்த்து) விரும்புகிறார்கள் ஏனெனில் அது தலைவர் ரஜினி படம் என்பதால்” நான் புரிந்து கொண்டது இது தான்…//

  நான் சொல்ல வந்ததும் இதுதான்.நல்ல புரிதல் அருள் நித்யா.பாவலனை விடுங்கள் அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும்.இவருக்கு புரிந்தாலும் இப்படி பல முறை என்கருத்து என்ன சொல்ல வராருன்னு தெரியலையே என்று கேட்டு புலம்புவார் .அதற்கெல்லாம் நாம் ரியாக்ட் பண்ண கூடாது.

  பாவலன் அவர்களே என் பதிலும் அருள் நித்யா சொன்னதுதான்.இதையாவது ஒரு பத்து முறை திரும்ப திரும்ப படித்து புரிந்துகொள்ளவும்.மீண்டும் கொக்கியை(மன்னிக்கவும் உங்களுக்கு விளங்காது இல்ல கேள்வி குறியை அதாவது(?) இதைதான் கொக்கி என்று சொன்னேன்) போடாதீர்கள்.

 41. Manoharan says:

  பாவலன் எப்போ இப்படி காமெடி பீசாநீங்க ….?

 42. Devaraj says:

  Vino the article in times of India – vishvaroop fails to cause ripples in box office, clearly explains the poor opening. Imagine if there was no Muslim and JJ problems the in TN, the movie might have got an ordinary response.
  Cheers
  Dev.
  ____________

  Absolutely!
  -Vino

 43. Deen_uk says:

  @Raj ….
  ///கொஞ்சம் behindwoods.com போய் பாருங்கள், ஒவ்வொரு கமல் ரசிகனும் இப்போவே 500 கோடி வசூல்-இன்னு தாம் தூம் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.///
  _ராஜ் நண்பரே, நீங்க சொன்ன சைட்டுக்கு இன்னொரு பெயர் இருக்கு..!
  kabsawood .com நு பேரு..! அந்த சைட் போய் டைம் வேஸ்ட் பண்ணாதிங்க நண்பா.!
  இதெல்லாம் போக, இந்த பதிவில் நாம கருத்து சொல்றதே வேஸ்ட்..உலகம் முழுதும் தெரியும் ,ரோபோ அதிக வசூலா,இல்ல விஸ்வரூபமா நு ,,முஸ்லிம் அமைப்பு மூலமா வந்த பப்ளிசிட்டி ல ஓரளவு அதிக வசூல் வந்து இருக்கு..நான் ஒப்புகொள்கிறேன்..வழக்கமான கமல் படங்களை விட இந்த படம் வசூல் அதிகம் தான்..காரணம்,அரசியல்,முஸ்லிம் அமைப்பு,கண்ணீர் பேட்டி! அனுதாப அலை.!! மற்றபடி தலைவர் ரோபோவை விட முந்தியது நு சொல்றது கடைசி விளம்பர உக்தி!! இதுக்கெலாம் நாம பதில் சொல்றது வேஸ்ட் !!! பெஸ்ட் காமெடி நு நினைச்சுட்டு சிரிச்சுட்டு போங்க பிரதர்!!

 44. மிஸ்டர் பாவலன் says:

  ஒரு படம் சிறந்த படமா, குப்பைப் படமா என்பதை
  அதன் வசூலை வைத்து சொல்ல முடியாது.
  விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக
  மிகப் பெரிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர்
  பாராட்டி இருப்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
  “அற்புதமான கலைஞர்” என ரஜினி பெருந்தன்மையாக
  பாராட்டி இருந்தாலும் இந்த வலையில் தரக்குறைவாக
  சிலர் பதிவு செய்து வருகின்றனர்.

  “சத்யமேவ ஜெயதே!”

  -== மிஸ்டர் பாவலன் ==

 45. மிஸ்டர் பாவலன் says:

  வைரமுத்துவின் வைர வரிகளில் வீறு கொண்டு வருகிறான் உலகநாயகன்!

  எவன் என்று நினைத்தாய்
  எதைக் கண்டு சிரித்தாய்
  விதை ஒன்று முளைக்கையில்
  வெளிப்படும் புதுரூபம்

  நெருப்புக்குப் பிறந்தான்
  நித்தம் நித்தம் வளர்ந்தான்
  வேளை வந்து சேரும் போது
  வெளிப்படும் சுயரூபம்

  யாரென்று புரிகிறதா?-இவன்
  தீயென்று தெரிகிறதா?
  தடைகளை வென்று
  சரித்திரம் படைத்தவன்
  ஞாபகம் வருகிறதா?

  யாருக்கும் அடிமையில்லை!-இவன்
  யாருக்கும் அரசனில்லை!
  காடுகள் தாண்டிக் கடக்கின்ற பொழுதும்
  காற்றுக்கு காயமில்லை! (எவன் என்று நினைத்தாய்)

 46. Deen_uk says:

  அப்பப்போ தான் கமல் ரசிகன் தான் என அவரை அறியாமலேயே சொல்லி விடுவார் நம்ம மிஸ்டர் பாவலர்..!! ஆனா வெளில சொல்ல மாட்டார்.!

 47. தினகர் says:

  அதாவது கமல் மாதிரி, தானும் குழம்பி மற்றவர்களையும் குழ்ப்புறதா? தீன் :) சொந்த பெயரை விட்டு விட்டு அந்த பெயரில் வருவதே உண்மையை சொல்லி விடுகிறதல்லவா!

 48. enkaruthu says:

  //விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக
  மிகப் பெரிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர்
  பாராட்டி இருப்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.//

  பாவலன் அவர்களே எனக்கு தெரிந்தவரை முஸ்லிம் எதிர்ப்பு படத்திற்கு எந்த ஒரு அமெரிக்க காரனும் அது குப்பையாக இருந்தாலும் அது பொக்கிஷம் என்று சொல்வார்கள்.மேலும் முஸ்லிம் மதத்துக்கு எதிராக யார் படம் எடுத்தாலும் அந்த படத்துக்கு அமெரிக்க மறைமுகமாக நிதி உதவி செய்வதாகவும் இப்பொழுது செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.
  எனகென்னமோ கமல் நான் நாட்டை விட்டு பெயர்வேன் என்று சொன்னது கூட அவர்கள் கொடுத்த தைரியமாக கூட இருக்கலாம் .ஏனென்றால் தன சொத்தையெல்லாம் அடமானம் வைத்து படம் எடுத்தேன் என்று புலம்பும் இவர் எப்படி இந்த படம் ரிலீஸ் ஆகாமல் லாபம் சம்பாதிக்காமல் காசு இல்லாமல் வெளி நாட்டில் குடியேற முடியும்.

 49. குமரன் says:

  கமல் செய்த தப்புக்கு அனுபவிக்கிறார், இதற்கு எதற்கு அனுதாபம் என்று புரியவில்லை!

  பரபரப்பு, கண்ணீர்பேட்டி, நிஜத்திலும் நல்ல நடிப்பு இவை காரணமாக (முன்னால் காட்டிய வீரம், இறுமாப்பு இவற்றையும் தாண்டி) கொஞ்சம் கூடுதல் பேர் தியேட்டர் வருவார்கள், (என்னைப்போல் பலர்! இவர்கள் வந்திருக்கும் வாய்ப்பு பரபரப்பால்தான்) அவ்வளவுதான்.

 50. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே
  (இந்தப் பாடல் முன்னரே எழுதியது, ஆனால் பிரசினை முடிந்து படம் வெளிவரும் வரை பதியக் கூடாது எனக் காத்திருந்தேன்)

  கலக்கம் பாதி, கலகம் பாதி
  கலந்து செய்த கலவை நான்.

  உள்ளே கலக்கம், வெளியே கலகம்
  திருத்த முடியாக் கலைஞன் நான்

  கலக்கம் மூடி
  கலக்கம் மூடி
  கலகம் வளர்க்கப்
  பார்க்கின்றேன்

  ஆனால்
  கலகம் வளர்ந்தும்
  (பிறர்) உணர்வைத் தின்று
  கலக்கம் மட்டும்
  வளர்கிறதே

  நொந்தகுமாரா, நொந்தகுமாரா
  மீண்டும் கலகம் செய்வாயா?
  கலகம் கொன்று
  மிச்சம் இன்றி
  கலக்கம் கூட வெல்வாயா?

  கற்பனை கொண்டே
  கதைகள் என்றால்
  கலைஞன் நஞ்சை விதைப்பானா?
  களத்தூர் நிலத்தில்
  விளைந்த கலைஞா,
  நலந்தான் விளைய விழைவாயா?

  நொந்தகுமாரா, நொந்தகுமாரா
  மீண்டும் கலகம் செய்வாயா?
  கலகம் கொன்று
  மிச்சம் இன்றி
  கலக்கம் கூட வெல்வாயா?

  (இரண்டாவது ஆண்குரல்)

  நொந்தகுமாரா ….

  கலக்கம் பாதி, கலகம் பாதி
  கலந்து செய்த கலவை நான்.

  கதையில் ஏற்றி,
  கவியில் ஏற்றி
  வசைகள் புனையும்
  வரிப்புலி நான்

  ஒவ்வொரு துளியும்
  ஒவ்வொரு துளியும்
  (பிறர்) உள்ளத்தில் தைத்துக்
  கொல்கிறதே

  இந்துவை வைதால்
  (உளம்) குளிரும்போது
  இந்த இஸ்லாம் மட்டும்
  சுடுகிறதே

  நொந்தகுமாரா, நொந்தகுமாரா
  நல்மனம் சுடாது (உன்னிடம் இருந்தால்)
  தெரியாதா?

  (பின்வரும் வரிகள் மூலப் பாடல் வரிகள் பொருந்துவதால் அப்படியே…)
  கன்னம் வழிகிற
  கண்ணீர்த் துளிதான்
  வெந்நீர்த் துளி என
  அறிவாயா?

  சுட்ட மழையும்
  சுடாத மழையும்
  ஒன்றாய்க் கண்டவன்
  நீதானே

  கண்ணீர் மழையில்
  தண்ணீர் மழையில்
  குளிக்க வைத்தவன்
  நீதானே

 51. மிஸ்டர் பாவலன் says:

  நண்பர் குமரன் அவர்களே:

  கமலின் கதக் நடனத்திற்கு உலகில் உள்ள மிகப் பெரும் நடன
  மேதைகளின் பாராட்டு வந்த படி உள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு
  கமல் பல ஆஸ்கார்களை, பல உயர்ந்த உலக விருதுகளைப் பெறுவார்
  என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வரூபம்-2 படம்
  எப்போ வரும் என்றும் ரசிகர்களால் பரபரப்பாக எங்கும் பேசப்பட்டு வருகிறது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 52. மிஸ்டர் பாவலன் says:

  என் கருத்து அவர்களே:

  தாலிபான் இயக்கத்தைப் பற்றி உங்கள் நிலை என்ன?

  -== மிஸ்டர் பாவலன் ==-

 53. மிஸ்டர் பாவலன் says:

  (நண்பர்களே! இந்தப் பாடலுடன் இந்தத் தொடரில் என் கருத்துக்களை
  நிறைவு செய்து கொள்கிறேன். வேறொரு செய்தியில் இனி நாம்
  சந்திக்கலாம், நன்றி. – மிஸ்டர் பாவலன்)

  Hai Everybody ! Wish you a Happy New Year !

  புதுமை இதோ இதோ
  திறமை இதோ இதோ

  மேல்நாட்டில், நம் நாட்டில் மக்கள்
  எல்லோர்க்கும் என் மீது கண்கள்

  புதுமை இதோ இதோ
  திறமை இதோ இதோ

  நடனத்தில் வல்லவன்
  நடிப்பதில் நம்மவன்
  இயக்கத்தில் இந்திரன்
  பழக்கத்தில் மன்மதன்

  நான் எடுத்த படங்களை பாருங்கள்
  நிகர் ஏது் கூறுங்கள்
  நான் ஆடும் நடனத்தை பாருங்கள்
  உடன் நீங்கள் ஆடுங்கள்

  உலகெங்கிலும் பேர் வாங்குவேன்
  நான் தான் சகலகலா வல்லவன்

  (புதுமை இதோ இதோ)

  ஹாலிவுட்டில் படம் எடுப்பேன்
  பாலிவுட்டில் நான் ஆடுவேன்
  விஸ்வத்தில் ரூபம் நான்
  உலகத்தில் நாயகன் நான்

  மன்மதன் அம்பு யாரம்மா?
  பலராமைப் பாரம்மா!
  உனக்காக வாழும் நடிகன் நான்!
  வசூல் ராஜா, விக்ரம் நான்!

  உலகெங்கிலும் பேர் வாங்குவேன்
  நான் தான் சகலகலா வல்லவன்!

  (Come dance with me before you go
  Come dance with me before you go )

 54. GOPI says:

  //கொஞ்சம் behindwoods.com போய் பாருங்கள், ஒவ்வொரு கமல் ரசிகனும் இப்போவே 500 கோடி வசூல்-இன்னு தாம் தூம் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் காலம் இவர்களுக்கு பதில் சொல்லும். ஒரு படத்தை ஓட்ட இந்த அளவிற்கு கேவலமாக கமலும் அவர் ரசிகர்களும் நடந்துக்கொன்டிருக்கிறார்கள். வெட்கப்படவேண்டிய விஷயம்.// – எப்படி இருந்தாலும் கமல் கடைசியில் நஷ்டம் என்றுதான் சொல்ல போகிறார். திறமையும் நேர்மையும் ஒரே இடத்தில இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா.

 55. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  கமல் ஒரு மகத்தான கலைஞன் என்பதில் எனக்கும் உடன்பாடே. பாரம்பரிய நடனம், மேலை நடனம் என ஒவ்வொரு பிரிவிலும் தேர்ச்சி பெற்ற கலைஞன் என்பது நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ள விஷயம்தான். ஒப்பனைக் கலையில் மேலைநாட்டின் உத்திகளை நம் தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்தியதாகட்டும், பல்வேறு விஞ்ஞான/ தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தமிழ்த் திரையுலகில் கொண்டுவந்ததாகட்டும், கமல் தனியிடம் பிடித்தவர்தான். அவரது முகபாவங்கள் நடனத் தேர்ச்சி காரணமாக முதிர்ந்த திறன் கொண்டன. சகலகலா வல்லவன் என்று சொல்லத் தக்க அளவு பன்முனைப்பட்ட தின்றனாளிதான். நம் பாரம்பரியக் கூத்து முறையின் புதிய பரிணாமமான ‘கூத்துப் பட்டறை’யின் (இது பொதுவுடமைக் கட்சியினர் தம் கொள்கை பரப்புரை செய்வதற்காக ஏற்படுத்தப் பட்ட கலைக் குழு) தனது திரைப் படத்தில் சிறந்த முறையில் புகுத்திப் பயன் கண்டவர்.

  அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவர் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் மக்களால் கவனிக்கப் படும், சாதாரணக் குடிமகனால் பின்பற்றப் படும் என்பதை உணர்ந்து அவர் நடந்து கொள்ளாமல், தனது தனிப்பட்ட/ முரண்பட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதோடு அல்லாமல், அதை நியாயப் படுத்திப் பரப்புரையும் செய்ததால் பலரது மனக்கசப்பை அடைந்தவர். இதை வெளிப்படையாகப் பலர் சொல்வதில்லை என்பது வேறு விஷயம் என்றாலும், தற்போதைய சர்ச்சையின்போது இது பலரும் அவர் குறித்துப் பேச வழிவகுத்தது என்பதை நோக்க வேண்டும். “கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்” என்ற பாரதியின் வரிகளை மனதிலும் செயலிலும் இருத்தல் வேண்டும்.

  இவை போக, பெரியார் ஈ.வே.ரா தனது வாழ்வையே கொண்ட கொள்கைக்காக அர்ப்பணித்தவர். அவரது கொள்கைகள் பலருக்கு ஏற்புடையனவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தன வாழ்நாள் முழுவதும் அக்கொள்கைகளைப் பரப்ப மட்டுமே அவர் செலவிட்டார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவர் போலத் தானும் ஒரு சீர்திருத்தவாதி என்ற நினைப்பில் அவ்வப்போது கமல் செய்துவரும் கலக்கம் மக்களில் பலரை கசப்படைய வைக்கிறது என்பது உண்மை. ஒரு வில்லனை நெற்றி நிறைய திருநீற்றுடன் காட்டி அவர் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்லிக் கொண்டே தில்லுமுல்லு செய்வதாகக் காட்டவேண்டிய அவசியம் என்ன? எந்த சைவர் இன்றைய கால கட்டத்தில் மூன்று பட்டை போட்ட திருநீறு அணிகிறார்? எந்த சைவர் இந்த வரிகளை அடிக்கடி சொல்கிறார்? இப்படி இருக்க இதைப் புகுத்தியது வேண்டும் என்றே விஷமம் செய்யும் வேலைதானே? இதுபோலப் பல வேறு வகைகளில் கமல் இந்துக்களின் மத உணர்வுகளைக் கொச்சைப் படுத்தி வருகிறார். பெரும்பான்மையான இந்துக்கள் சகிப்புத் தன்மையும் சாத்வீகமும் கொண்டவர்களாக இருப்பதால் பிரசினைகள் வரவில்லை. அவர் என்னமோ யார் மனதையும் புண்படுத்தாத பண்பாளர் என்று சிலர் அண்மையில் மனச் சாட்சி இல்லாமல் சான்றிதழ் வேறு கொடுத்தார்கள்! பெரியார் பரப்புரை செய்ததின் நோக்கம் சீர்திருத்தம், கமல் செய்ததின் நோக்கம் வியாபாரம், சில்மிஷம். பெரியார் வாழ்வை கொள்கைக்காக அர்ப்பணித்தவர். கமல் வாழ்வை விதவிதமாக அனுபவிப்பதற்காகக் கொள்கைகளை வகுத்துக் கொண்டவர். பெரியாரின் கருப்புச்சட்டைக்குக் கிடைக்கும் மரியாதை கமலின் கறுப்புச் சட்டைக்குக் கிடைக்காது. கமல் ஒரு போலி.

  தாம் மத நல்லிணக்கத்துக்கான harmony india என்ற அமைப்பின் உறுப்பினர் என்று பறைசாற்றும் கமல் அந்த இயக்கம் சில ஆண்டுகளுக்கும் முன்னால் கிரீம்ஸ் சாலையில் நடைபெற்ற ஒரு ஓவியக் கண்காட்சியில் புகுந்து வன்முறை செய்ததை அறிந்தும் அறியாதவர்! அந்த இயக்கந்த்தின் மத நல்லிணக்க முயற்சிகளும், அமைதி நடவடிக்கைகளும் நாடறிந்தது.

 56. மிஸ்டர் பாவலன் says:

  திரு. குமரன் அவர்களே:

  ஏற்கெனவே எனது “கடைசிப் பதிவை” பாடலோடு நான் நிறைவு
  செய்து கொண்டதாலும், வேலைப் பளு காரணமாகவும் என்னால்
  ஒரு நீண்ட பதில் எழுத வாய்ப்பில்லை. இருந்தாலும் உங்கள் மேல்
  உள்ள மரியாதையால் சுருக்கமான பதில் தருகிறேன்.

  “குணம் நாடி, குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்”
  என்பார் திருவள்ளுவர். அது போல் ஒருவரிடம் குணம், குற்றம்
  இரண்டும் இருந்தாலும் (இதற்கு யாரும் விதிவிலக்கல்ல), அவற்றுள்
  நாம் மிகையை மட்டும் மதிப்பிட்டு ஏற்கவோ, விளக்கவோ செய்கிறோம்.
  நான் கமல் ரசிகன் என்றாலும் இதே வகையில் தான்.

  இனி உங்கள் பதிவிற்கு பதில்.

  || “கமல் ஒரு மகத்தான கலைஞன் என்பதில் எனக்கும் உடன்பாடே”

  Super! Good start!

  ||”சகலகலா வல்லவன் என்று சொல்லத் தக்க அளவு பன்முனைப்பட்ட தின்றனாளிதான்” ||

  Bravo! Mil Gracias!

  ||”அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது…..”

  கமல்ஹாசன் இதில் ரொம்ப sensitive ஆக இருக்கிறார். அவரது
  தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நாம் கருத்து தெரிவிப்பதை அவர்
  விரும்புவதில்லை. (அவர் பேட்டிகளில் இதை நாம் காணலாம்.)

  கமல் அன்பே சிவம் படத்தில் நாசர் கேரக்டரை அவ்வாறு சைவ நெறி
  பஜனையை punch dialogue ஆக வைத்திருக்கக் கூடாது என நீங்கள்
  சொல்வதை நான் மறுக்கிறேன். படத்தின் கதை வசனம் – விகடன் மதன்.
  இயக்கம் – சுந்தர் சி. கமல் நடித்தார் – அவ்வளவு தான். கமல் சொல்லி தான்
  அவ்வாறு காட்சி அமைக்கப் பட்டது என மதன் சொன்னால் நான்
  உங்களுடன் சேர்ந்து கமலை விமர்சனம் செய்கிறேன். தசாவதாரம்
  படத்தில் இந்து மக்கள் மனம் புண்படும் அளவில் சில காட்சிகள் இருந்தது.
  அதற்கு கமல் கண்டனத்திற்கு உரியவரே. ஆனால் நீங்கள் சொன்னது போல்
  ஹிந்துக்கள் சகிப்புத் தன்மை ( tolerance ) உள்ளவர்கள் என்பதால் கமலின்
  அந்தப் படம் சென்சார் முடிந்து நேரே தியேட்டர்களில் வெளியானது.

  கமல் உண்மையில் பெரியாரின் கருத்துக்களைப் பின்பற்றுகிறாரா என்ற
  அரசியல் கேள்விக்கு கமல் தான் பதில் அளிக்க வேண்டும். நான்
  just அவர் படங்களைப் பார்க்கிறேன். அவ்வளவு தான்! நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 57. deen_uk says:

  @தினகர்
  //அதாவது கமல் மாதிரி, தானும் குழம்பி மற்றவர்களையும் குழ்ப்புறதா? தீன் சொந்த பெயரை விட்டு விட்டு அந்த பெயரில் வருவதே உண்மையை சொல்லி விடுகிறதல்லவா!//
  அவரது தலைவரைப்போல இவரும் ஒரு பெரிய குழப்பவாதி தான் தினகர்..!
  மிஸ்டர் பாவலன்…நீங்க உங்க தலைவர் சைட்டிலபோய் அவர் புகழ் பாடலாமே? ஏன் எங்களது தளத்தில் வந்து உங்கள் புகழ் பாடுறீங்க? உங்க சைட்டில யாரும் படிக்க வருவதில்லையா? அப்போ தனியா ஒரு ப்ளோக் ரெடி பண்ணி,அதில உங்க பெருமை புகழ் எல்லாம் எழுதி நீங்களே படிச்சு சந்தோசப் பட்டுகோங்க..எங்க சைட்டுக்கு வந்து கண்ட கண்டதெல்லாம் படிக்க வச்சு ஏன் எங்க டைம் ப்ளஸ் வினோ டைம் வேஸ்ட் பண்ணுறீங்க? போங்க சார்..போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க.

 58. Thalaivar fan says:

  Sivaji n Endhiran were considered mile stones in Indian cinema, one as an entertainer n the other as a science fiction. Endhiran was filmed with advanced tech which surpassed Hollywood standard. The audio made history in i-tunes. Previously, Sivaji made history in its audio, even without a proper lunch. Did the so called musical genius had even made musical history? An app was created by Apple Inc. on Rajini’s famous punch lines.The associates in the famous Stan Winston studio had praised Thalaivar as a ‘truly wonderful actor’ and so does a certain, 3 times Oscar award winner, Hollywood producer, Oliver Stone and not to mention Will Smith who had applauded the team. (as said by Randy). Someone (u know who) was talking abt ‘world famous actor’, when SS already been one ages ago. He conquered Japanese nearly 2 decades ago n the Americans in early 2000′s. ( a certain American singer, Billie Piper, was seen wearing a t-shirt bearing Thalaivar’s image from Arunachalam, in a music video. A short snippet of Muthu was shown in a French movie. The Indian PM n Japanese PM had mentioned his name during a political meeting. With all these, did any Rajini fans jumped up n down like a maniac? Did any of them blabber like an idiot? If collections is not the measure of the quality of a movie, then y on earth u lots r harping abt it? In case u haven’t noticed, none of our fans had ever compared our guy’s collections with others. We know Thalaivar is on his own league. A lone warrior. He make, break, and make his own records. It was u lots who do this silly crap, just to make urselfs look big. Y don’t u preach on ur fans who’s abusing our guy, after all he had done to help ur hero..??   We r abusing him, eh? So, it’s  absolutely fine when dunderheads cooked up a lot of tosh abt Endhiran’s record been broken n we fans just hv to sit back, relax n enjoy these dramas b’coz SS had praised him as ‘a magnificent’ actor? As if he had ever  praised Thalaivar before… Did he not egoisticly conducted a launch in S’pore just bcoz SS did it in M’sia? Did he not made snide remarks tht Endhiran just ran for all the publicity by sun tv? We just hv to take all in our stride, didn’t we?
  SS was voted as the biggest star in the Bollywood, for crying out loud, while the other nvr even made so much of a foot note there. Chandramukhi, Sivaji n Endhiren earned him the ’Entertainer of the Year’ award. But had dey noticed ur hero’s other movies? Did he made himself big there? It’s just b’coz of these hullabaloo n fiasco had created publicity for him. Did that mean he’s going to cross our collections? He didn’t even hv a chance of that in Tamil Naadu, wat’s more in Mumbai? Some one said, Vishwaroopam was shown in more theathers than Endhiran, but can anyone guarantee it’ll be 100% full? Don’t make silly jokes people. 
  Btw, b4 u get all worked up on those ‘multi talents’ thingy… kindly search for a certain Malaysian artist, ‘late P. Ramlee’. He was our country’s most prominent and talented Malay artist, who had fans in Indians n Chineses as well. He was known to act, compose, write dialogs, screenplay n lyrics, sing, play various musical instruments, like piano, guitar n sax, ( his songs r hits. He wont do it for the sake of just bcoz he can, mind u) produce, and direct, all in ONE movie.

 59. enkaruthu says:

  விஸ்வரூபம் படத்திற்கு
  கமல் பல ஆஸ்கார்களை, பல உயர்ந்த உலக விருதுகளைப் பெறுவார்
  என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. //

  என்ன ஆஸ்கார் நாயர் கடை டீ கடையிலா விற்கபடுகிறது .என்ன பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை மிந்தி விடுவார் போலிருகிறது ரஜினி ரசிகராக பொய்யாக நடித்த பாவலன் அவர்களும்.போங்க ஒரு கொசு கூட போகாத படத்துக்கு ஜாதி ரீதியாக சப்போர்ட் பண்ணாதீர்கள்.கொஞ்சம் நினைத்து கொள்ளுங்கள் ஒரு நாசர் என்ற பாயிடம் மாமி இடத்தில இருக்கும் கமல்ஹாசன்(பொம்பளை வேஷம் இவருக்கு நன்றாக பொருந்தும் ) தன் மார்பை திறந்து காட்டுவார்.அன்று கோபமான சில ஹிந்து அதரவலார்கள் அதையெல்லாம் மறந்து இன்று முஸ்லிம் என்று வந்தவுடன் கூப்பாடு போடுகிறார்கள் . பாவலன் அவர்களே நீங்களும் இந்த வியாதிலையே அவதிபடுகிரீர்கள் .

 60. மிஸ்டர் பாவலன் says:

  ///ரஜினி ரசிகராக பொய்யாக நடித்த பாவலன் /// (என் கருத்து)

  கமல் ரசிகர் என்றால் ரஜினி படம் பார்க்கக் கூடாது என்கிறீர்களா?
  ‘என் கருத்து’ என்ன சொல்ல வரார்னு தெரியலையே!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 61. ram says:

  பாஸ்,உண்மையை சொல்லவேண்டுமென்றால் குரோம்பேட்டை வெற்றியில்
  முதல் நாளே மதிய காட்சி மெதுவாக தான் நிறைந்ததாம்,அது மட்டுமல்ல
  பெங்களூரில் பல திரை அரங்குகளில் படம் காலி,பாவம் எதற்கு என்று
  நாம் அமைதி காக்க வேண்டியிருக்கிறது,வடக்கில் படம் உண்மையிலேயே அவுட்.முதலில் விஜய் பட ரெகார்டை உடைத்துவிட்டு வரட்டும்.தலைவரின்
  ரசிகர்களான நாம் கண்ணியம் காப்பவர்கள்.ஒரே சூரியன் ஒரே சந்திரன்,ஒரே வசூல் சக்கரவர்த்தி நாம் தலைவர் ரஜினி மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 62. deen_uk says:

  ///கமல் ரசிகர் என்றால் ரஜினி படம் பார்க்கக் கூடாது என்கிறீர்களா?
  ‘என் கருத்து’ என்ன சொல்ல வரார்னு தெரியலையே!

  -== மிஸ்டர் பாவலன் ==-////

  கமல் ரசிகர் என்றால் ரஜினி படம் பார்க்க கூடாது என்பதில்லை…! நாங்களும் கமல் படமும் பார்ப்பவர்கள் தான்..ஆனால் கமல் தளங்களுக்கு சென்று யாரையும் குழப்புவது இல்லை..ஆனால் நீங்கள் ரஜினி ரசிகர்களின் தளங்களுக்கு சென்று (என்வழி,ஒன்லி சூப்பர்ஸ்டார் ) நீங்கள் ஒரு ரஜினி ரசிகன் போல எழுதுவது எதனால் மிஸ்டர் பாவலன்? இப்போது விஸ்வரூபம் ஹிட் ஆனவுடன் தான் நீங்கள் கமல் ரசிகர் என்பதையே ஒப்பு கொள்கிறீர்கள்..இதுநாள் வரை இதையும் நீங்கள் வெளியில் சொன்னதில்லை!! எங்கள் தலைவரை உங்கள் தலைவர் என்று எழுதியதும் உங்கள் கைகள் தான்!! ம்ஹூம்.!! என்னமோ போங்க!! நல்ல்ல்ல்ல்லா வருவீங்க!!

 63. மிஸ்டர் பாவலன் says:

  //நீங்கள் ஒரு ரஜினி ரசிகன் போல எழுதுவது எதனால் மிஸ்டர் பாவலன்? இப்போது விஸ்வரூபம் ஹிட் ஆனவுடன் தான் நீங்கள் கமல் ரசிகர் என்பதையே ஒப்பு கொள்கிறீர்கள்..// (Deen_UK)

  நீங்கள் எவ்வளவு நாள்களாக இங்கு நான் எழுதுவதைப் படித்து
  வருகிறீர்கள் என தெரியவில்லை. வெகு நாட்களாகவே நான்
  ‘கமல்-ரஜினி இருவரின் ரசிகர்’ எனவும், KB படங்களை விரும்பி
  பார்ப்பவன் எனவும் எழுதி வந்திருக்கிறேன். இது மட்டும் அல்ல.
  நடிப்பில் ரஜினி அவர் முதல் படத்திலேயே கமலை மிஞ்சி விடுகிறார்
  எனவும் நான் முன்பே எழுதி உள்ளேன். அது குமரன் போன்றவர்களுக்கு
  தெரியும். இருந்தாலும் ‘என் கருத்து’ போன்ற சிலருக்கு எனது பழைய
  பதிப்புகளைப் படிக்க இந்த இணைப்பை தருகிறேன்.

  http://bit.ly/14ஜ்ஹ்ம்5ய்

  இந்த பழைய பதிவுகள் நண்பர் வினோ அவர்கள் எழுதிய
  ‘எனக்குப் பிடிச்ச கேள்வியின் நாயகனே…!’ – ரஜினி வீடியோ என்ற
  கட்டுரையின் பதில்களாக வந்தது. 2011-ல் நான் எழுதியதையே தான்
  நான் இன்றும் சொல்கிறேன். எனது கருத்துக்களில் எந்த மாற்றமும்
  இல்லை. ரஜினியைப் பற்றி இந்த வலையில் குருவி ரசிகர்கள் தாக்கி
  எழுதிய போது கடுமையாக சாடி ஒரு பாடலை எழுதினேன்.

  August 3, 2012 at 11:54 am அன்று
  “பரமசிவன் ..” பாட்டு மெட்டில்…
  (சூர்யகாந்தி படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
  அதை நண்பர்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்!!)

  SAC -ன் காரில் இருந்து குருவி கேட்டது,
  “தலைவா, சௌக்யமா?”
  “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  கண்ணா.. சௌக்கியமே!”
  தலைவர் சொன்னது – அதில் அர்த்தம் உள்ளது!

  முழுப்பாடலையும் படிக்க : http://bit.ly/QwUsbA

  இதைப் போல நான் ரஜினி அவர்களைப் பற்றி எத்தனையோ பாடல்களை
  எழுதி உள்ளேன்.

  நான் ரஜினி ரசிகனும் கூட என உங்களுக்கோ, என் கருத்து அவர்களுக்கோ,
  நிரூபிக்க வேண்டியது எதுவும் இல்லை. நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

  குமரன் அவர்களே –> நான் எழுதிய பாடல்களிலே அந்த குருவி பாடல்
  தான் மெட்டுக்கு பொருந்துவதோடு, நல்ல
  கருத்தாகவும் உள்ளது. அதற்கு கவிஞர் தான் காரணம். நன்றி.

 64. மிஸ்டர் பாவலன் says:

  Link 1: http://bit.ly/QwUsbA
  (ரஜினி படங்களின் வசூலோடு யார் படத்தையும் ஒப்பிடும் முன்…
  ஆகஸ்ட் 2, 2012)

  Link 2: http://bit.ly/14Jhm5y
  (‘எனக்குப் பிடிச்ச கேள்வியின் நாயகனே…!’ – ரஜினி வீடியோ,
  May 16, 2011)

  சென்ற பதிவில் இந்த இணைப்புகள் சரியாக பேஸ்ட் ஆகவில்லை, சாரி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 65. குமரன் says:

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  உங்கள் மீது எனக்கும் மிக்க மரியாதை உள்ளது. அதனால் கமல் மீதான என் விமரிசனங்களை அவர் படத்தின் ஒரு வசனத்துடன் மட்டுப் படுத்திக் கொள்கிறேன். ஒரு மனிதர் முதலில் நல்ல மனிதராக இருந்தால்தான் அவரது செயல்களையும் திறமைகளையும் ரசிக்க முடியும் !

  நாயகன்:

  கேள்வி: நீங்க நல்லவரா? கெட்டவரா?
  பதில்: தெரியலியேப்பா …

 66. Baskaran says:

  ///விஸ்வரூபம் படத்திற்கு
  கமல் பல ஆஸ்கார்களை, பல உயர்ந்த உலக விருதுகளைப் பெறுவார்
  என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. //

  கமல் ஆஸ்கார் வாங்கறது இருக்கட்டும் , முதலில் அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் யாராவது வருவங்கலன்னு பாருங்க ! தன் தயாரிப்பு என்று வந்த உடனே நீலி கண்ணீர் வடிக்ரருன்ன அப்ப தாணு மாதிரி எத்தன தயாரிபாளர்கள உன்ன்மயாகவே அழ விட்டுருபரு. சும்மா இங்கவந்து குலைகாரத நிறுத்துங்க !

 67. Baskaran says:

  //Jegan says:
  February 4, 2013 at 8:57 pm

  Mangatha beats enthiran, maatran beats enthiran, thupaki beats enthiran, now visvarubam beats enthiran, who is true?if thupaki beats enthiran y visvarupam is not compared with thupaki !? //

  தமிழ்நாட்டுல இருக்குற எல்லா அரசியல் கட்சிகளும் 2016 ல நாங்க தான் ஆட்சி புடிக்கபோரேம் காமெடி பண்றாக இல்ல , அந்த மாதிரிதான் இந்த விஸ்வரூபம் கோல்லேச்டின் நியூ சூம் . அடுத்த விஜய் படம் ரிலீஸ் ஆகும் போதும் எந்திரன முந்திட்டோம்னு சொல்லுவாங்க பாருங்க . அதுவும் படம் ரிலீசான அன்னியாகே விஸ்வரூப வெற்றின்னு பிரஸ் மீட் வேற கொடுத்தாரு கமல். நாமெல்லாம் நெனைச்சிட்டு இருக்கோம் ரஜினிக்கு போட்டியுன்னு , ஆனா first டே பிரஸ் மீட்ட பார்த்தல் இவரு விஜய்க்கு தான் போட்டி போல . கழுத தேய்ந்து கடேறும்பு ஆனா கதைதான்.

 68. Raj says:

  Dear Vino & Friends,
  All is well. But, what is happening in TN? The film has completed 3 days & still no comparisons drawn with ENDIRAN or SHIVAJI atleast BILLA(1980)? What happened to Kamal fans? I am expecting that they should tell atleast the film as grossed 300 Cr. in 3 days in TN!!!!!. Kindly update us with real data on VR world wide collections, cause we have update ourself before BIG “K” release.

 69. Rathina says:

  எனக்கு ஒரு சந்தேகம். நான் தப்ப இருந்த சரி பண்ணவும். மிஸ்டர் பாவலன் மற்றும் குமரன் இருவரும் ஒருவர் தானே. இதை அவரே அவருடைய பழைய கருத்துகளில் சொன்னதாக நியாபகம். ஏன் மாற்றி மாற்றி உரையாடி கொள்ளுகிறார்கள். தவறாக இருந்தால் இருவரும் என்னை மன்னிக்கவும்.

 70. Antony says:

  New Delhi: Kamal Hassan’s Indian Tamil spy thriller ‘Vishwaroopam’, which garnered controversy after certain Muslim groups slammed it for its alleged offensive content, has managed to enter the Rs 100 crore club in a span of just four days.

  Rahul Bose, who plays an Afghani Al-Qaeda Jihadi in the flick, took to Twitter, to express his joy over the stupendous success of his film.

  The 45-year-old actor tweeted “Vishwaroopam`s the first film I`ve been a part of that`s made over 100 crores. Congratulatuions to the team and mr haasan especially!”

  Bose went on to say, “Just received figures of the all India box office collections of vishwaroopam. 120 crores and counting. Superb!”

  Congratulations Rahul on the success of the movie, which after facing so many roadblocks has finally achieved so much in such a short span of time!

 71. Prasanna says:

  Rathina avargale Dr Suppandi mattrum Mr Pavalan Oruvardhan .
  Aanal Mr Pavalan avargal Dr Suppandi endra peril comments ippo podrudhilla
  Idhu ennaku therindha varai naan solgiren.

 72. s venkatesan, nigeria says:

  //சட்டப்படி சந்திப்பேன் என்று முறுக்கி கொண்டு நீதிமன்றம் சென்று ஒரு வாரம் கழித்து அம்மாவுக்கு நன்றி என்று கூனி குறுகி இப்பொழுது அந்த காட்சிகளை வெட்டுவது என்பது வடிவேல் விறைப்பாக நின்று பின் அடி வாங்குவது போல் உள்ளது// மிகவும் ரசித்து சிரித்தேன். – நன்றி நண்பர் என்கருத்து அவர்களுக்கு.

  மிஸ்டர் பாவலன் அவர்கள் என்கருத்து என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை என்று சொல்கிறாரே (மற்றவர்களுக்கு புரிந்தாலும்). அவருடைய தலைவர் கமல் பேசுவது எப்போதாவது புரிகிற மாதிரி இருக்கிறதா என்று முதலில் சொல்லவும்.

 73. மிஸ்டர் பாவலன் says:

  நண்பர்கள் ரத்னா, பிரசன்னா அவர்களே:

  முதலில் நண்பர் பிரசன்னா சொன்னதை ஆமோதிக்கிறேன்.
  ஆனால் டாக்டர் சுப்பாண்டி என்ற பெயரில் மட்டும் அல்ல,
  நான் ‘வல்லவன்’, ‘வீரன்’, ‘சென்னை வீரன்’ என்ற பெயர்களிலும்
  எழுதி உள்ளேன். சுப்பாண்டி பெயரில் நான் எழுதி ரொம்ப ஆண்டு
  ஆகி விட்டது. பொன்னியின் செல்வன் பதிலாக நான் அந்தப் பெயரில்
  எழுதியது நினைவு. ஒரு counter character ஆக நான் ஆரம்பித்த
  Mr. Pavalan இப்போது என் ரெகுலர் பதிவுகளில் பயன்படுத்தி வருகிறேன்.

  குமரன் நான் அல்ல. இவர் சைதாப்பேட்டையை சார்ந்த பிரபல
  வக்கீல், மற்றும் சைவ நெறி அறிஞர். சென்னை பொதிகை
  தொலைக்காட்சிகளில் அறிஞர் குமரன் சிறப்பு நிகழ்ச்சிகள்
  வழங்கி உள்ளார். வினோ (டாக்டர் ஷங்கர்) குமரனை நேரில் சில தடவை
  சந்தித்து உள்ளதாக நான் அறிகிறேன்.

  நானும் வலை நண்பர்களை சந்திக்க எண்ணியதுண்டு. ஆனால்
  எசகேடாக ‘என் கருத்து’ போன்ற நண்பர்கள் அங்கு இருந்தால் ‘தரும அடி’
  வாங்க நேரிடலாம் (கருத்து வேறுபாடுகளால்) என்பதால் கூடுமானவரை
  மீட்டிங்குகளை தவிர்த்து வருகிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)