BREAKING NEWS
Search

‘ரஜினிக்கும் எலெக்ட்ரீஷியனுக்கு ஒரு வித்தியாசமும் இல்லையா?’

‘ரஜினிக்கும் எலெக்ட்ரீஷியனுக்கு ஒரு வித்தியாசமும் இல்லையா?’ – கேள்வி பதில் – 32

DSC_6733

கேள்வி: “ஜினிகாந்துக்கும், ஒரு எலக்ட்ரீஷியனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று சொல்லுங்கள்.. அதை வேண்டுமானால் ஒத்துக்கொள்கிறேன்,” -இப்படி ஒருவர் எழுதியிருக்கிறார். அதை தலைவரை வைத்து விழா நடத்தி புத்தக வெளியீடு செய்து பாராட்டிப் பேசிய மனுஷ்ய புத்திரம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறாரே… இது சரியா? எந்த பதிலும் தராமல் இருப்பது சரியா?

– இப்படி தொலைபேசியில் நான்கைந்து நண்பர்கள் கேட்டார்கள். இந்தக் கேள்விக்கான பதிலை, கருத்தைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் பக்கத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு, இங்கே தருகிறேன்.

எனது பதில்:

“மிகத் தவறான மனப்போக்கு இது. ஒரு எலெக்ட்ரீஷியனை வைத்து உங்களால் பிரமாண்டமாக ஒரு புத்தக வெளியீட்டை நடத்தி களிப்படைந்திருக்க முடியுமா? ‘இந்த மாமனிதர் வந்ததால் இந்த அரங்கம் எத்தனை மகிழ்ச்சியடைகிறது..’ என்று ஒரு எலெக்ட்ரீஷியனை உங்கள் வாய் புகழுமா?

நல்ல எழுத்துக்களைத் தருபவர்களின் தலைக்குப் பின்னால் எப்போதும் எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் தேவையே இல்லை, அது இல்லாத பல எழுத்தாளர்களை இந்த உலகம் கொண்டாடி இருக்கிறது.

உங்களைப் போன்ற பலருக்கும் ஆதர்ஸ எழுத்தாளராகத் திகழ்ந்த சுஜாதா, ஆணா பெண்ணா என்ன வித்தியாசம் கூட தெரியாத எண்பதுகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதற்காக அவருக்கு புகழும் மரியாதையும் கிடைக்காமலா போய்விட்டது..? அவரை இழுத்து வைத்து கண்டவனெல்லாம் கழுத்தறுப்பு செய்தானா என்ன?

ஒரு காலிப் பானை என்று தெரிந்த பிறகு அவ்வளவு நேரம் அந்த நபருடன் காலத்தை ஓட்டியது ஜெயமோகனின் தவறு. அவரது பக்குவமற்ற மனதை பறைசாற்றும் எழுத்து அது. மிக எளிமையாகக் கடந்து செல்ல வேண்டிய ஒருவனைப் பற்றி, தன் மேதைமையை துருத்திக் காட்டும் வகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரைக்கு இந்த அளவுக்கு மாய வேண்டியதில்லை (ஜெயமோகன் கட்டுரையை அவர் தளத்தில் படித்துக் கொள்ளவும்).

ஒருவர் தன் ஈகோவைத் தின்ன முயலும்போதே, அந்த ஈகோ அவரை காலி பண்ணிவிடுகிறது. அது எழுத்தாளனாக இருந்தால் என்ன, பிளம்பராக இருந்தாலென்ன.. அந்த ஈகோ, உலகெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடினாலும் ரஜினிக்கு ஒருபோதும் இருந்ததில்லை!”

வினோ
13 thoughts on “‘ரஜினிக்கும் எலெக்ட்ரீஷியனுக்கு ஒரு வித்தியாசமும் இல்லையா?’

 1. Jegan

  Sori pudicha naayi, ivan elam oru aalu….ivanuku elam yen sir nenga answer panikitu irukinga

 2. Gokuldass

  ஒருவர் தன் ஈகோவைத் தின்ன முயலும்போதே, அந்த ஈகோ அவரை காலி பண்ணிவிடுகிறது. அது எழுத்தாளனாக இருந்தால் என்ன, பிளம்பராக இருந்தாலென்ன.. அந்த ஈகோ, உலகெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடினாலும் ரஜினிக்கு ஒருபோதும் இருந்ததில்லை!”
  ———————————————–
  well said thala

 3. kabilan.k

  வினோ அண்ணா,ஜெயமோகன் எழுதிய பதிவின் link குடுங்கள் அண்ணா .எனக்கு இந்த கேள்வியும் சரியாக புரியவில்லை அண்ணா
  ___________
  http://www.jeyamohan.in/?p=36719

 4. குமரன்

  I have been trying to get at the article, but am not able to.
  The link given here takes to another article! Can you please give the correct link?

  __________
  http://www.jeyamohan.in/?p=36719 – சரியான இணைப்புதானே.. இதற்குத்தான் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ப்ளாக்கிலும் ஏகப்பட்ட எதிர்வினைகள்.

 5. Sankar

  தலைவரை பத்தி பேசினா விளம்பரம் கிடைக்கும்.அதான் எல்லோரும் தலைவரை திட்டியாவது கிண்டல் பண்ணியாவது தங்களை பத்தி நியூஸ் வரும் படி பண்றாங்க. தன்னை பத்தி ஜோக்ஸ் வரும் போது படிச்சி சிரிக்கறவர் நம்ம தலைவர். இந்த மாதிரி சின்ன பசங்கலாம் பொறாமைல அவரை பத்தி பேசி விளம்பரம் தேடறாங்க. அமைதியா விட்டுடடணும்.

 6. varadhu

  ஒரு பழமொழி நினைவிற்கு வருது . அந்த மாதிரி ஆளுக்கு அது ———— அதிகம் என்பார்கள்.
  இவனைப்போல் ஒரு கூட்டமே எழுத்தாளன் என்று (என்னத்தான் (?)ழுத்தானோ)சொல்லிக்கொண்டு அரைவேக்காடு மாதிரி உளறுவார்கள்….

 7. r.v.saravanan

  இப்படி எழுதியவரின் வீட்டில் மின்சாரம் பழுதடைந்து பல மணி நேரங்கள் அவஸ்தைப்பட்டு பின் அதை சரி செய்ய எலக்ட்ரீஷியன் வரும் போது அவர் கடவுளாக தெரிவார் எந்த ஒரு மனிதனையும் விசயத்தையும் சாதாரணமாக நினைக்கும் எழுதும் இவர் என்ன எழுத்தாளர் அது போகட்டும்

  இதே ரஜினியின் அடுத்த படத்துக்கு அவர் தான் வசனம் என்று வாய்ப்பு அவர் வீட்டு கதவை தட்டட்டும் அப்போது இவரே ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி தலைவரை புகழ்வார்

 8. Sathish

  சாரி வினோ,
  அந்த லிங்க் மனுஷயபுத்திர னோட ட்வீட்டர் பேஜ்க்கு போகல …

 9. Sathish

  I meant, from jeyamohan page to tweeter link and couldn’t find Manushyaputhiran’s tweet.
  Was it removed?

 10. chenthil UK

  ரஜினிக்கு எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்தோ.. பாராட்டியோ அவர் புகழ் அடைய வேண்டியதில்லை… அவர் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருகாரு … இந்த கொசுக்கள் மன்றி ஏகப்பட்ட பேரு இருகாங்க நாட்டில… அடுத்தவர்களை மட்டமாக பேசுவதும்.. அவர் புகழ்ச்சி பிடிக்காமல் அவரை தவறாக சித்தரிப்பதும் ஒன்றும் புதிதல்ல… ஆனால் ஒன்று இந்த DOGS இப்படி பேசுவதால் தலைவரை பற்றிய எண்ணம் உயருகிறது எங்கலுக்கு.. How to deal the Barking Dogs என்று தலைவரை பார்த்து கட்டரு கொண்டு வருகிறோம்.. மனுசிய புத்திரனோ… மிருகபுதிரனோ சொல்லி ரஜினியின் புகழ் மறையும் என்றால் மனுசபுதிரனுக்கு தான் ரசிகர்கள் ஜாடிய இருக்கனும்… அதுக்கு செவ்வாய் கிரகம் தான் போகணும் அவரு..

 11. rajaboopathi

  யாரு எந்த ஸ்டுபிட் மனுஷ்யபுத்திரனன் …….தலைவர் ர வச்சு விளம்பரம் தேடிகொள்கிறான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *