BREAKING NEWS
Search

ரஜினி தனக்கு தமிழ் எழுதத் தெரியாது என்றாரே… உண்மையா? – கேள்வி – பதில் 23

ரஜினி தனக்கு தமிழ் எழுதத் தெரியாது என்றாரே… உண்மையா? – கேள்வி – பதில் 23

கேள்வி: கடந்த வருடம், உங்கள் தளத்தில் ரஜினி அவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று ஒரு பின்னூட்டத்தில் பதிலளித்து இருந்தீர்கள். ஆனால், சமீபத்தில் உயிர்மை விழாவில் (எழுத்தாளர் எஸ். ராவுக்கு எடுக்கப்பட்ட விழா) பேசிய ரஜினி அவர்களே, தனக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது  எனக் கூறியதாக அனைத்து ஊடகங்களில் (விகடன் பத்திரிக்கை உட்பட) செய்தி  வந்துள்ளதே. இது குறித்து நமது தளத்தில் ரசிகர்களுக்கு விளக்கம் தாருங்களேன். நன்றி.

கேசவன்

பதில்: ஒரு தன்னடக்கத்தில் தலைவர் சொன்னது அது. தமிழ் படிக்கத் தெரியாமலா அவர் பொன்னியின் செல்வனையும், ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் படித்தார்?

தமிழ் எழுதத் தெரியாமலா வள்ளி படத்துக்கு முழு கதை வசனத்தையும் எழுதி வைத்திருந்தார். அவர் எழுதிய திரைக்கதை வசனத்தை படித்துப் பார்த்து வியந்துபோனதாக இசைஞானி இளையராஜா ஒரு முறை சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இலக்கண சுத்தமாக தமிழ் எழுதத் தெரியும் அவருக்கு. இல்லாவிட்டால், “இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடுவதான் மனிதனுடைய வேலை.
பூவாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம் மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க…. இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்,” என்று அவரால் ரசிகனுக்கு கடிதம் எழுதமுடியுமா?

‘ஆங்கிலம் எனக்கு சரளமாக வராது’ என்று அவர் கூறியதும் அப்படித்தான். நடிகர்களிலேயே ஆங்கிலத்தை மிக அழகாக, ஸ்டைலிஷாக பேசுபவர் நம்ம தலைவர்தான். படங்களில் அவரது ஆங்கில உச்சரிப்பை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அதுமட்டுமல்ல, அவர் நடித்த ஒரேயொரு ஆங்கிலப் படமான பிளட்ஸ்டோனில் ஆங்கில வசனங்களை, ஹாலிவுட் கலைஞர்களே பாராட்டும் அளவுக்கு வேகமாகவும் திருத்தமாகவும் பேசியவர் நம்ம சூப்பர் ஸ்டார்.

மன்னன் படத்தில் ஒரு நிமிடம் அவர் பேசும் ஆங்கிலத்தை கேட்டுப் பாருங்கள். பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், அறிஞர்கள் நிறைந்த மேடையிலும் சரளமான ஆங்கிலத்தில் பேசும் திறன்மிக்கவர் ரஜினி. அவர் எவ்வளவு நகைச்சுவை ததும்ப ஆங்கிலம் பேசுவார் என்பதற்கு ரோபோ இந்தி இசை வெளியீட்டு விழாவைப் பார்க்கவும். இப்படி ஓராயிரம் உதாரணங்களை அடுக்க முடியும்.

இலக்கியவாதிகள் நிறைந்த எஸ் ரா பாராட்டு விழா அரங்கில், அன்றைக்கு தலைவர் பேசியது ஒரு தன்னடக்கம்தான். அவரே சொன்ன மாதிரி அவருக்கு பல மொழிகள் தெரியும்.. சரியாகத் தெரியும்! எஸ் ராவே சொன்னது போல, “ரஜினி ஒரு அருமையான எழுத்தாளர். அவருக்குள் ஏராளமான கதைகள் உள்ளன. அவரே பல கதைகள் எழுதி வைத்திருக்கிறார். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்!”

இங்கே கீழே தரப்பட்டுள்ள கடிதம் தலைவரே கைப்பட எழுதியதுதான். இதை விட அழகானதா நம் கையெழுத்து?

கடிதத்தை முழுமையாக படிக்க: ரஜினி கைப்பட எழுதிய கடிதம்
வினோ
-என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “ரஜினி தனக்கு தமிழ் எழுதத் தெரியாது என்றாரே… உண்மையா? – கேள்வி – பதில் 23

 1. kumaran

  தலைவர் மீது நம் ரசிகர்களுக்கே ஏன் இப்படி ஒரு சந்தேகம் ?

 2. Rai

  அந்த நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்பிங்கை பாருங்கள் சகோதரர்களே..
  திரு ரஜினியே ஒப்புக் கொள்கிறார் என்பதே உண்மை.

 3. Ram

  அப்புறம் என்ன..தமிழ் சரியாக தெரியாது என்று அச்சு ஊடகங்களில் வந்த பிறகும், அந்த விழாவில் (வீடியோவில்) சூப்பர் ஸ்டார் சொன்ன பிறகும், உங்கள் வாதம் ஏற்புடையதா..நண்பரே.

 4. Raasu

  விழித்துக்கொண்டே தூங்குவது போல நடிப்பவர்களுக்கு என்ன விளக்கம் சொன்னாலும் புரியாது. ரஜினி கைப்பட எழுதிய கடிதத்தை இங்கே வெளியிட்டுள்ளார்கள். அப்படியும் ரஜினிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது என்று லூசுத்தனமாக உளறிக் கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் என்ன செய்வது?

  தலைவா, அநியாயத்துக்கு நீங்க நல்லவரா இருக்கிறதால, கண்டவனும் கண்டபடி உளர்றான்.

 5. R.ohmprakaash

  Thalaivara patthi எவண்டா சந்த்தேகபடுறது… Aadhara maela irkku daaa…kanna konjam mele(santhosh) kanna..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *