BREAKING NEWS
Search

கோச்சடையான் கைவிடப்படவில்லை! – தயாரிப்பாளர் விளக்கம்

கோச்சடையான் கைவிடப்படவில்லை! – தயாரிப்பாளர் விளக்கம்

kochadaiyaan

டந்த சில தினங்களாக ரசிகர்கள் மத்தியில் உலாவரும் பரபரப்பு கேள்வி கோச்சடையான் படத்தை கைவிட்டுவிட்டார்களாமே என்பதுதான்.

ஆரம்பத்தில் இந்தக் கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாளாக ஆக, இந்த கேள்விகள் ஒரு செய்தியாகவே மாறும் அளவுக்கு பெரிதாகிவிட்டன.

சில இணையதளங்களும் அதேபோல செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் ரஜினி தரப்பிலோ, படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பிலோ எந்த விளக்கமும் இல்லை.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், “இதெல்லாம் மிகத் தவறான செய்திகள். இந்தப் படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள முடியவில்லை.

ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினி சார் டப்பிங்கைக் கூட முடித்துவிட்டார்.

இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்த பிறகு இசை மற்றும் பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால், பொறுமை காக்கிறோம். ரஜினி சார் ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

-என்வழி
9 thoughts on “கோச்சடையான் கைவிடப்படவில்லை! – தயாரிப்பாளர் விளக்கம்

 1. Raja Boopathi

  தலைவரே நீங்கள் உங்க வேலைய பாருங்க ……நாங்க எங்க வேலைய பார்க்கிறோம் ……நீங்க எப்போ படம் வருதுன்னு மட்டும் சொல்லுங்க ((->next month வந்தாலும் சரி ..இன்னும் பத்து வருஷம் அப்புறம் வந்தாலும் சரி உண்மையான தொண்டன் அவசர படமாட்டான் ->)) ….அப்ப பாருங்க …இந்தியா பூராவும் தீபவளி தான்….அதனால டோன்ட் வொர்ரி be ஹாப்பி ………கூல் தலைவரே ………

  அன்புடன்
  பூபதி.

 2. shan

  இன்னும் எத்துனை யுகங்கள் காத்திருக்கவேண்டும்???? தலைவா என் எங்களை இப்படி சோதிக்கிறாய்

 3. மிஸ்டர் பாவலன்

  ரஜினியை வைத்து எத்தனையோ இயக்குனர்கள் எத்தனையோ
  படம் தந்தாலும் ‘கோச்சடையான்’ அளவிற்கு எந்த ஒரு படமும்
  அதிகம் மக்களாலும், ரசிகர்களாலும், பத்திரிகைகளாலும்
  பேசப் பட்டதில்லை. ‘சுல்தான்’ நிலை இதற்கு வரக்கூடாது என
  ரசிகர்கள் கவலைப்பட்டாலும் “வித்தியாசமாக இந்தப் படத்தை
  கொடுப்போம்” என்ற முயற்சி பாராட்டத் தக்கது. சௌந்தர்யா
  அவர்கள் இந்தப் படத்தை ‘release ‘ செய்தால் போதும் என்ற நிலைக்கு
  ரசிகர்கள் வந்துள்ளதே பெரிய சாதனை எனலாம்! ‘Release Date ‘
  விரைவில் அறிவித்தால் நலம்! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. Mahendran

  ஏன் தலைவரோ, சௌந்தர்யாவோ இதை தெளிவுபடுத்தவில்லை?

  தலைவா… எல்லாவற்றுக்கும் மௌனம் சாதிப்பது சரியா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுங்கள்!

  ஏனெனில் இந்தப்படம் கார்ட்டூன் படம் மாதிரி ஆகிவிடுமோ என்கிற பயம் ரசிகர்களிடம் இருக்கிறது! முன்பு வெளியிடப்பட்ட ஸ்டில் கூட அந்த அளவு தத்ரூபமாக இல்லை!

  சீக்கிரம் ட்ரைலரை வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

 5. குமரன்

  கோச்சடையான் பற்றிய செய்திகள் மட்டுமே வருகின்றன என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது.

  ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள். படத்தை சூட்டோடு சூடாக வெளியிட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

  விரைவில் வரட்டும் !!!

 6. குமரன்

  ரஜினி படத்துக்குப் புரமோஷன் எதுவும் தேவையே இல்லை !!

  அவர் நடிக்கிறார் என்றவுடன் படம் விற்பனை ஆகிறது அல்லவா? அதுபோலவே தியேட்டரும் நிரம்பும். எதற்கு புரமோஷன் எல்லாம்?

 7. Karthik V

  KOCHADAYAN STORY – MY OWN IMAGINATION – WRITTEN BY KARTHIK V

  கதை நிகழும் ஆண்டு 1700ஆவது வருடம்.

  கோச்சடயபுரம் மற்றும் ராணா நகரம் என்று இரு நாடுகள் .கோச்சடயபுரத்தின் ராஜா வின் பெயர் கோச்சடயான். ராணா நகரத்தின் அரசனின் பெயர் ராணா. ராணா நகர மக்கள் ராணாவின் கொடுமையால் அவதி படுகின்றனர். கோச்சடயான் ராணாவை கொன்று அந்த ராணா நகரத்தை எப்படி தன்வச படுத்தி அந்த நாடு மக்களுக்கு ஒரு நல்ல அரசை தந்தார் என்பது தான் கோச்சடயானின் கதை.

  கோச்சடயபுரம் நாட்டின் ராஜாவாக ரஜினி.அவர் பெயர் தான் கோச்சடயான் . அவரது மகன் இன்னொரு ரஜினி.கடலுக்கு அடியில் 300km அளவில் ஒரு புதையல் இருப்பது கோச்சடயானுக்கும் ரானாவிற்கும் தெரியவருகிறது.இருநாட்டின் காவலாளிகளும் கடல் பக்கத்தில் காவல் காக்கின்றனர்.அதனால் அந்த புதையல் யாருக்கு கிடைக்கும் என்பதில் ஒரு பெரிய குழப்பம் வருகிறது. இரு நாட்டின் காவல்காறர்களும் நின்று கொண்டிருந்தால் அது யாருக்கும் கிடைகாது. அதனால் போர் புரிந்து வெற்றி அடையும் நாடு அந்த புதையலை எடுத்து கொள்ளலாம் என்று ராணா கூறுகிறார். போர் என்றால் பல உயிர்கள் பலி ஆகும்.அதற்கு கோச்சடயான் என்றுமே துணை போக மாட்டன் என்று ரஜினி கூறுகிறார்.ராணா கோவம் அடைவதை பார்த்த கோச்சடயான் “நீயே கடல் புகுந்து புதையலை எடுத்துகொள் என்று ராணாவிடம் கூறி கோச்சடயான் விட்டு கொடுக்கிறார் .”கோச்சடயான் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்ததை கோச்சடயபுற மக்கள் தோல்வியாகவே பார்த்தனர்”. வருத்தம் அடைந்தனர். ஆனால் கோச்சடயானிடம் அந்த வருத்தத்தை காட்டி கொள்ள வில்லை. இந்த செய்தி கோச்சடயாணிற்கு சென்றது. கோச்சடயான் புதையலை கைவிட்டதை ராணாவின் கூட்டம் வெற்றி பெற்றது போல் கொண்டாடினார்கள். ராணா அவனுடைய ஆட்களை அனுப்பி கடலில் இருந்து புதையலை எடுக்குமாறு கட்டளை இட்டான். ராணாவின் ஆட்கள் கடலுக்கு 300km வரை சென்று பார்த்த போது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு புதையல் இல்லை. இந்த செய்தி ரானாவிற்கு தெரிந்தஉடன் கோபத்தில் கடலிருக்கு சென்றவர்களை கொன்று விடும் படி ராணாவின் எல்லையில் இருக்கும் கடல் காவலாளிகளுக்கு ஆணை இட்டான். ராணாவிற்கு ஒரே குழப்பம். கடலை விட்டு ஆயிரகணக்கான காவலர்களை ஏமாற்றிவிட்டு புதையல் வெளியே கொண்டுவருவதற்கு வாய்பே இல்லை. புதையல் என்ன ஆயிற்று என்று பெரும் குழப்பத்தில் இருந்தான். கோச்சடயபுற மக்களிற்கும் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.கோச்சடயானின் மகன் ரஜினி குதிரையில் அரண்மணை நோக்கி வருகிறார். அவர் குதிரையில் வருவதை பார்த்த ஊர் மக்களிற்கு புதையல் பற்றிய ரகசியம் போலவே இவ்வளவு நாள் இளவரசர் எங்கு சென்று இருந்தார் என்பதும் புரியாத புதிராகவே இருந்தது . இளவரசர்( ரஜினி) வந்து தனது தந்தை கோச்சடயானை பார்த்து வெற்றிகுறி காட்டுகிறார். “இவ்வளவு நாள் இளவரசர் எங்கு சென்று இருந்தார். இன்று வந்த உடன் வெற்றி குறி காட்டுகிறார்.என்ன அர்த்தம்” என்று அரசவையில் இருந்த மந்திரி ஒருவர் கோச்சடயானை பார்த்து கேட்கிறார்.அதற்கு இளவரசர் flashback சென்று நடந்ததை கூறுகிறார் “கடலுக்கு அடியில் 300km சென்று புதையலை பார்த்தேன். புதையலை தூக்கி கொண்டு வருவது முடியாத காரியம். அதனுடைய இடை மிகவும் அதிகம். அதனால் புதையல் இருக்கும் இடத்தை மாற்றி வைத்து விட்டு வெளியே வந்துவிட்டேன். ராணாவிடம் இருக்கும் ஓலை சுவடியில் உள்ள திசை நோக்கி சென்று பார்த்தல் அங்கு புதையல் இருக்காது. திமிங்கலம் தான் இருக்கும்” என்று இளவரசர் கூறி முடிக்கும் போது ஊர் மக்கள் அனைவரும் இளவரசர் மற்றும் கோச்சடயானின் சாணக்ய தனத்தை பார்த்து வியகின்றனர். சந்தோச படுகின்றனர். கோச்சடயானின் அரசவையில் இருக்கும் ராணாவின் கூலி ஆள் (black sheep ) ஒருவன் மூலமாக இந்த செய்தி ராணாவிற்கு செல்கிறது.ராணா கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறான். என்னை ஏமாற்றி புதையலை ஒலித்து வைத்து விட்டன. இனி எனக்கு அந்த புதையல் கிடைக்காவிட்டாலும் பரவாஇல்லை அவனுக்கு கிடைக்க கூடாது என்பதற்காக கோச்சடயானின் மகன் இளவரசர் ஐ கொள்ள திட்டம் தீட்டுகிறான் ராணா. அறிவிக்காமல் ஒரு பெரிய போரை அந்த நாட்டிற்குள் நடத்திவிட்டால் கண்டிப்பாக அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து இளவரசனையும் கொன்று விடலாம் என்று ராணா தரப்பில் யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஒரு திட்டத்தை தீட்டுகிறார்கள். அந்த போர் நடத்தப்படும் நாள் வருகிறது. வழக்கம் போல் கோச்சடயபுரத்தில் மக்கள் இயங்குகிறார்கள். அவர்களுக்கு இப்படி ஒரு பெரிய ஆபத்து தங்களை நோக்கி வந்து கொண்டு இருப்பது தெரியாது. ராணா நகரத்தில் அனைவரும் ஆயுதங்களுடன் தயார் ஆகிறார்கள். இரவில் சென்று வீழ்த்தினால் கோச்சடயபுரத்து மக்களால் திடீர் எதிர் கொள்ள முடியாது என்று அவர்கள் அனிவரும் நினைத்து தீபந்தத்தை எடுத்துகொண்டு போருக்கு புறபடுகின்றனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தீபந்தங்கள் அணைய தொடங்கி இருள் சூழ்ந்து விடுகிறது. ஒருவருடைய முகத்தை கூட இன்னொருவரால் பார்க்க முடிய வில்லை. அந்த அளவிருக்கு இருள் சூழ்ந்து விடுகின்றது.தீபந்தம் எரிய எந்த வழியும் இல்லாமல் ராணா நகர காவலாளிகள் மற்றும் ராணா அனைவரும் செய்வதறியாது நிற்கின்றனர். மழை நின்றுவிடுகின்றது. அப்போது தூரத்தில் ஒரு ஒளி தெரிகின்றது. ஒரு பெரிய கூட்டம் ராணாவின் கூட்டத்தை நோக்கி தீபந்தத்துடன் வருகின்றது. கிட்ட வந்துடன் தான் அது கோச்சடயபுரத்து மக்களுடன் இளவரசர் ரஜினி வருகிறார் எனபது ராணா கூடத்திற்கு தெரிகிறது. கூட்டம் அருகில் வந்த உடன் “என்னை கொல்வதற்கு இன்று உனக்கு வழி இல்லை. அதனால் இன்று போய் நாளை வா” என்று இளவரசர் ரஜினி ராணா நகர கூலி ஆட்களுக்கு அறிவுறை கூறியதோடு மட்டும் இல்லாமல். ராணா நகர கூலி ஆட்கள் ராணாநகரத்திற்கு செல்வதற்கு தீபந்தத்தை உதவிக்கு கொடுத்து அனுப்பி வைக்கிறார். நீ(இளவரசர் ரஜினி) கொடுத்த உயிர் பிச்சையில் வாழ என் கூலி ஆட்கள் ஒன்னும் பிச்சை காரர்கள் இல்லை என்று இளவரசர் செய்த உதவியை புரிந்துகொள்ளாமல் ராணா தன்னுடைய கூலி ஆட்களை கொன்று விட்டு ஊர் திரும்புகிறான். ராணா நகரத்து மக்கள் எல்லாரும் “ரஜினியை கொல்வது இயற்கைக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் மழை பெய்து இருக்கிறது நேற்று என்று கூற ஆரம்பித்தனர். முதல் முயற்சி தோல்வி அடைந்த வருத்தத்தில் இருக்கிறான் ராணா.. இளவரசர் ஓலை சுவடி ஒன்றில் புதையலின் புதிய இடத்தை விவரிகறார். அந்த ஓலை சுவடியில் சில அமிலங்கள் தடவி வைத்திருக்கிறார். அதை யார் எடுத்து கொண்டு சென்றாலும் , அந்த அமிலம் காற்றுடன் கலந்து ஒரு விதமான வாசனையை கொடுக்கும். அந்த வாசனை யார் அந்த சுவடியை தொட்டர்களோ அவர்களிடத்திலும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் அரண்மணை புறாவிற்கு அந்த சுவடி எங்கு இருந்தாலும் இருக்கும் இடத்தை மோப்ப சக்தி வைத்து கண்டுபிடித்து விடும். அந்த அமிலத்தையும் சுவடி வாசனையும் காற்றுடன் கலந்த உடன் கிடைக்கும் வாசனையும் கண்டுபிடிக்கும் அளவிற்கு அந்த புறாவிற்கு பயிற்சி அளிகபட்டு இருக்கிறது. இது தெரியாமல் அரசவியில் உள்ள அந்த துரோகி(blacksheep ) அதை திருடி கொண்டு ராணாவிடம் கொடுத்துவிடுகிறான் . கொடுத்துவிட்டு ஊர் திரும்புகிறான். ஊர் மக்கள் வழக்கமான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . திடீர் என்று அந்த புறா அந்த துரோகியிடம் செல்கிறது. அவனும் புறா நம்மிடத்தில் பாசமாக வருவதாக நினைத்துகொண்டு கொஞ்சுகிறான். கோச்சடயான் மற்றும் இளவரசர் மற்றும் ஒரு சிலர்க்கு மட்டுமே தெரியும் புறா பற்றிய உண்மைகள்.
  அவர்கள் அனைவரும் கோபத்துடன் துரோகியின் பக்கம் பார்கின்றனர். அவன் விளையாட்டாக “நான் இந்த புறாவை என் தலையில் வைத்து கொள்கிறேன்..அங்கிருந்து நீங்கள் அம்பு எறியுங்கள் என்று கோச்சடாயனிடம் கூறுகிறான்”. கோச்சடயான் அம்பு எறிகிறார். அவனது இடது கண்ணை அந்த அம்பு துளைத்து கொண்டு போய் வெளியே விழுகிறது. வலியால் துடித்து இறந்தான் துரோகி. அவன் இறந்த பிறகு தான் அணைத்து கோச்சடயபுரத்து மக்களிற்கும் அவன் துரோகி என்பது தெரியவந்தது . வெளியே விழுந்த இடது கண்ணை எடுத்துகொண்டு ராணா நகரம் செல்கிறார் இளவரசர் ரஜினி தனியாக. “உன் கூட்டாளியின் கண் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது. இந்த கண்ணில் தோல்வியை தவிர எதுவும் தெரியவில்லை. உன் கூட்டத்தில் என்னுடைய ஆள் ஒருவன் இருக்கிறான். முடிந்தால் கண்டுபிடித்துகொள்” என்று கூறிவிட்டு கம்பிரதுடன் கோச்சடயபுரம் திரும்புகிறார் .

  INTERVAL

  ராணா அவனுடைய கூட்டாளியில் யார் அந்த கோச்சடயபுரத்து ஆள் என்று தெரியாமல் திணறுகிறான். பயபடுகிறான். ஊர் மக்கள் யாரை கண்டாலும் சந்தேக படுகிறான். சந்தேகத்தால் பல பேரை கொன்றுவிடுகிறான்.
  கோச்சடயபுரத்தில் இருந்து இளவரசர் ஓலை சுவடி அனுபுரிகிறார். அதில், “எந்த கோச்சடயபுரத்து ஆளும் உன்னுடைய கூட்டத்தில் இல்லை. உன்னுடைய பயத்தின் உச்சம் வானம் என்று தெரிந்துகொண்டேன் ராணா” என்று அதில் எழுதி இருந்தது.

  ராணா வெறுப்பு அடைந்ததால் இரவோடு இரவாக கோச்சடயபுரத்து கடல் காவலாளிகளை கொன்றுவிடுகிறான்.

  கோச்சடயபுரத்து மக்களும் கோச்சடயான் முன்பு வந்து நின்று “இது தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்முடைய ஆட்கள் அழிந்து போகிறார்கள்.
  இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். ”

  “போருக்கு தயார். கோச்சடயபுரம் உங்களை உங்களுடைய அழிவுக்காக வரவேற்கிறது” என்று ராணா நகரத்திற்கு ஓலை அனுப்பு என்று இளவரசனிற்கு ஆணை இடுகிறார் கோச்சடயான்.

  முதல் முறை கடலிருக்கு சென்று புதையலை இடம் மாற்றி வைக்கும் போது புதையலின் வாசனையை அறிந்து கொண்டு வந்தார் இளவரசர் ரஜினி
  இப்போது புதையல் கடலில் எங்கு வேண்டும் ஆனாலும் இருக்கலாம்.
  அதை கண்டுபுடிக்க அந்த வாசனையை மையபடுத்தி ஒரு திரவியம் கண்டுபுடிக்கரர் இளவரசர்.

  கோச்சடயபுரத்தில் அரண்மனையில் பூந்தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வாசனை திரவியங்கள் எடுக்கப்படும் பூக்கள் இருக்கின்றன.அதே வாசனை உள்ள ஒரு திரவியம்(perfume) புதிதாக கண்டுபிடித்து, கடலில் உள்ள உப்புடன் சேர்த்து ஒரு பாம்பிற்கு இந்த perfume வாசனையை பழக்கி வைகிறார்கள். இந்த வாசனையை பாம்பு கண்டுபிடித்தால், அதை நோக்கி செல்லும்.அப்போது புதையல் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம் .

  போருக்கு நாள் நெருங்கி கொண்டே போகிறது. அந்த நேரத்தில் மற்றும் ஒரு ஓலை கோச்சடயபுரத்தில் இருந்து ராணா நகரத்திற்கு “பூமியில் போர் வேண்டாம். கடலுக்கு அடியில் வைதுகொல்ள்ளலாம். என் பூமியில் என் உடன்பிறவா சகோதரர்களுடைய ரத்தம் சிறிதும் சிந்த கூடாது”

  அதற்கு பதில் ஓலை அனுப்புகிறான் ராணா “உன் ஆட்களுடைய ரத்தம் பூமியில் சிந்தும் என்று உனக்கு உள்ள பயம் தான் என்னுடைய வெற்றி”

  அதற்கு பதில் ஓலை அனுப்புகிறார் கோச்சடயான் “நான் உடன் பிறவா சகோதரர்கள் என்று சொன்னது ராணா நகரத்து ஆட்களை தான்.கோச்சடயபுரத்து மக்களை அல்ல. கோச்சடயபுரத்து மக்கள் எனது ரத்தம்.என் உடன்பிறப்புக்கள் .”

  போர் வந்தது கடலுக்கு அடியில். பாம்பு புதையல் இருக்கும் திசையில் போகிறது. அதை பின் தொடர்ந்து சென்று புதையலை வெல்கிறார் இளவரசர்.

  கோச்சடயான் under water சண்டை காட்சியில் பட்டையைகிளப்பி . பல வில்லன், சுறா உடன் சண்டை போட்டு ராணாநகரத்தை வெல்கிறார்.
  (FIGHT SEQUENCES CANT BE EXPLAINED HERE . IT SHOULD BE VISUALLY SHOWN )

  கோச்சடயபுரத்தை ராணா நகரத்துடன் இணைத்து என்னன்ன நல்லது செய்கிறார் என்பதை நாம் “RAANA ” படத்தில் காண்போம்.

  THE FILM ENDS !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *