BREAKING NEWS
Search

என்னது, கத்தி படம் முதல் நாள் வசூலில் எந்திரனை முந்தியதா?

என்னது கத்தி படம் முதல் நாள் வசூலில் எந்திரனை முந்தியதா?

rajini-baba002-copy

ந்த ஒப்பீடுகள் பற்றி எழுதவே கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் எழுத வைக்கிறார்கள். இதற்கு முன்பாவது புளுகிக் கொண்டிருந்தார்கள்… இப்போதோ அண்டப் புளுகு ஆகாசப் புளுகு ரேஞ்சுக்கு அடித்துவிடுகிறார்கள்.

ரஜினியின் சாதனைகள் உடைக்க முடியாதவையோ, உடைக்கக் கூடாதவையோ அல்ல.. தாராளமாக யாரும் அவரது சாதனைகளைத் தாண்டி சாதிக்கலாம்.

ஆனால் படம் வெளியான முதல் நாளே நான் ரஜினியின் சாதனையைத் தாண்டி விட்டேன் என்று கூப்பாடு போடுவதைப் போன்ற அரைவேக்காட்டுத்தனம் எதுவுமில்லை.

எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்துவிட்டது விஜய் படம் என்று இன்றல்ல.. வேலாயுதம் படம் வெளியானதிலிருந்து பிரஸ் மீட் வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேலாயுதம் போய், நண்பன் வந்தது. அப்போதும் அவர்கள் எந்திரன் சாதனையைத்தான் தாண்டினார்கள். வேலாயுதம் சாதித்தது என்னவென்று சொல்லவே இல்லை.

நண்பன் படத்தின் 100 கோடியை எண்ணி முடித்துவிட்டார்களா? என இதே பகுதியில் எழுதிய கட்டுரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கடைசியில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மகா கடனாளியாக ஏனாம் பக்கத்தில் அனாதையாக செத்துக் கிடந்தார் என்ற செய்திதான் வந்தது!

அடுத்து வந்த துப்பாக்கிக்கும் இப்படித்தான் எந்திரன் சாதனையை ‘முறியடித்தார்கள்’. துப்பாக்கி போய், ஜில்லா வந்தது. அந்தப் படமும் எந்திரனைத்தான் ‘முந்தியது’.

அதான் வேலாயுதத்திலேயே முந்திவிட்டீர்களே.. அப்புறம் எதற்கு மீண்டும் எந்திரன்? வேலாயுதம் சாதனையை நண்பனும், நண்பன் சாதனையை துப்பாக்கியும், துப்பாக்கி சாதனையை ஜில்லாவும், ஜில்லா சாதனையை இந்த கத்தியுமல்லவா முறியடித்திருக்க வேண்டும்?

Kathi-poster

ஆக, இதுவரை எந்திரனின் அடியைக் கூட எந்தப் படமும் தொடவில்லை என்றுதானே அர்த்தம். அடியையே தொட முடியாத இவர்கள் என்றைக்கு எந்திரனின் முடியைக் காணப் போகிறார்கள்?

கத்தி படத்தின் வசூல் முதல் நாளில் ரூ 11.5 கோடி என்றார்கள் நேற்று. அடுத்த சில மணிநேரங்களில் அது 12.5 கோடியானது. அடுத்த நாள் காலை அது ரூ 15.60 கோடியானது. இதோ இப்போது ரூ 23.50 கோடி என முருகதாஸ் திருவாய் மலர்ந்திருக்கிறார், எந்த விவரத்தையும் ஆதாரங்களோடு சொல்லாமல்!!

சரி, ஒரு கணக்கைப் பார்ப்போம். சாத்தியமா என்பது தெரிந்துவிடும்.

எந்திரன் வெளியானது 2880 அரங்குகளில், உலகம் முழுக்க. முதல் மூன்று நாட்கள் வசூல் ரூ 69 கோடி. இந்த கத்தி வெளியானது உலகம் முழுக்க 1400 அரங்குகள். நான்கு காட்சிகளும் அரங்கம் நிறைந்து ஓடியிருந்தாலும் எவ்வளவு வசூலித்திருக்க முடியும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு நண்பர் பேஸ்புக்கில் போட்டிருந்த கணக்கீட்டை படமாகத் தந்திருக்கிறோம். அதையும் கவனிக்கவும். 5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானதாகச் சொல்லும் பேங்பேங் படத்தின் முதல் நாள் வசூல், அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியிருந்தால் கூட ரூ 27.5 கோடிதான் தேறும் என்கிறது அந்தக் கணக்கு.

10349063_812673188779078_1229245042196834805_n

அப்புறம் கத்திக்கு 23.80 கோடி என்பது என்ன கணக்கு? இந்தக் கணக்கை வருமான வரித் துறைக்குக் காட்ட முடியுமா? (எந்திரன் வருவாய் 100 சதவீதம் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டது!)

ஏதோ விஜய்யை குறிவைத்து நாம் இதை எழுதவில்லை. எந்திரன் சாதனையைத் தொட்டுவிட்டதாக ஆரம்பம் படத்தில் அஜீத்தின் ஆட்கள் அலப்பறை செய்த போதும் இதையேதான் சொன்னோம். இந்த நிமிடம் வரை எந்திரன் வசூலோடு தங்கள் படங்களை ஒப்பிட்டுக் கொண்ட எவர் படமும் ரூ 100 கோடியைத் தொட்டதே இல்லை என்பது மட்டும்தான் உண்மை! தன்னை ரஜினியின் போட்டியாளர் என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாஸனே இந்த விஷயத்தில் அமைதி காக்கும்போது, சுள்ளான்கள் ஆட்டம் தாங்கவில்லை!

எந்திரன் சாதனையைத் தகர்க்க கொஞ்ச நாள் பொறுங்கள்.. அதிகபட்சம் இரண்டு மாதங்கள். லிங்கா ஒரு புதிய சாதனையைப் படைக்கும்போது, அதை அப்துல் கலாம் சொல்வது போல உங்கள் உச்சபட்ச கனவாக வைத்துக் கொள்ளுங்கள்!

அதுவரை முருகதாஸ்கள், விஜய்கள், அவரது கொபசெக்கள், அற்பமாக எதையாவது அடித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள்.. கண்டுக்காதீங்க!

-வினோ
என்வழி
31 thoughts on “என்னது, கத்தி படம் முதல் நாள் வசூலில் எந்திரனை முந்தியதா?

 1. manithan

  நல்லா சொன்னிங்க ,எல்லார் படமும்தான் வருது ,ஓடுது போகுது ,அனா விஜய் ரசிகருங்க மட்டும் ஏன் இப்படி பொய் பொய்யா பேசிட்டு திரிரங்க ,இன்னொன்னு ஐ படம் வந்திருந்த இன்னும் அசிங்கப்பட்டு போயிருப்பாங்க ,

 2. குமரன்

  வருமான வரித்துறை இவர்களது கணக்கைச் சரிபார்க்க, இந்த புருடா பப்ளிசிடியைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்று ஒரு பொது நல வழக்குப் போட்டால் அதற்குப் பிறகு இந்த புளுகு வேளையை முருகதாசும், சந்திரசேகரும், விசையும் நிறுத்தி விடுவார்கள்.

 3. குமரன்

  Anjankumar ‏@anjankumaran now

  @ARMurugadoss I’hv screenshot of this tall claim, I request IT dept to levy tax on this, else will file PIL to direct IT dept to do so.

 4. குமரன்

  கொசுத் தொல்லையை நிறுத்த கொசுவர்த்தி கொளுத்தினாத்தான் ஆகும்.

 5. R O S H A N

  வழக்கம் போல சூப்பர் போஸ்ட் வினோ ஜி…….இந்த போஸ்ட அப்படியே வெச்சுக்குங்க….அடுத்து மறுபடியும் எதாவது படம் வந்தாலும் இதே மாதிரி தான் வடை சுடுவாங்க, படத்து பேர மட்டும் மாத்தி அப்படியே போஸ்ட் பண்ணிருங்க 🙂 🙂

 6. jegan n

  even I film can surpass kathi…..kathi is good ….but they just use these techniques in the very next day to pull the crowd for the first week….after one week everyone ll keep silent……..then the same continues in their very next movie…

 7. Naveen

  Records are intended to be broken. If not Kaththi Sankar ‘I’ would have broken those records.. But it doesn’t mean Vijay or Vikram is better than Thalaivar.
  ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்

 8. Anniyan

  எந்திரன், துப்பாக்கி, லிங்கா, கத்தி என எந்த படம் எதனை கோடி வசூல் செய்தாலும் உங்களுக்கோ எனக்கோ எதுவும் கிடைக்க போவது இல்லை. போங்கயா போயி வேலைய பாருங்கயா.

 9. Babu

  இவனுங்க திருந்த மாட்டனுங்க !! விடுங்க வினோ ஜி !!

 10. R.Gopi

  //5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாவதாகச் சொல்லும் ஐ படத்தின் முதல் நாள் வசூல், அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடினால் கூட ரூ 27.5 கோடிதான் தேறும் என்கிறது அந்தக் கணக்கு.//

  அது “ஐ” படமல்ல….. ஹ்ரிதிக் ரோஷன் நடித்த “பேங் பேங்” படம் ……

 11. Ravi Prakash

  சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் எந்திரனின் சாதனையை தொடவேண்டாம். முதலில் அந்த தொடைநடுங்கி பயல் தலைவரின் சிவாஜி பட சாதனையை தொட சொல்லுங்கள் பார்போம்.

  வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

 12. Vignesh Maran

  I donno 2 read mch tamil….bt a slow reader!!!!1st of alll i m Rajini fan..So i dint had much patience 2 read diz!!Power star padathukku kooda thaan 1st day koota kootama poranga…..Kaththi will expirience d same!!

 13. KUMARAN

  விஜய் அஜித் ரெண்டு பேரோட ரசிகனுகளுக்கு தலைவர் மேல தான் பொறாமை

 14. S Venkatesan, Nigeria

  🙂 🙂

  இதை facebook மற்றும் twitter போன்ற தளங்களில் பகிர வேண்டும்.

  எப்படியும் இரண்டு நாளில் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கும். யாராவது ஒருவர் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.

 15. s venkatesan, nigeria

  //Anniyan says:
  October 25, 2014 at 5:11 am
  எந்திரன், துப்பாக்கி, லிங்கா, கத்தி என எந்த படம் எதனை கோடி வசூல் செய்தாலும் உங்களுக்கோ எனக்கோ எதுவும் கிடைக்க போவது இல்லை. போங்கயா போயி வேலைய பாருங்கயா.//

  1. வேலை வெட்டி இல்லாதவங்கதான் இங்க வருவாங்க என்று உங்களுக்கு யார் சொன்னது.
  2. நீங்க இங்க வந்து கமெண்ட் போடற அளவுக்கு வேலை இல்லாதவரா?

 16. srikanth1974

  மயிலாட்டம் பார்த்த வான்கோழி தலையாட்டுன கதைதான் இந்த
  மொன்ன கத்தியின் கதையும்.

 17. Elango

  வினோ… உட்பட பல பேர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது இந்த பதிவின் முலம் உறுதி செய்ய பட்டுள்ளது!

  உங்களை எல்லாம் நம்பி அப்துல் கலாம் கனவு கண்டு கொண்டிருக்கிறார்!

  ரஜினியும் விஜய் யும் மோதி கொள்ள போகிறார்களா?
  வருமான வரி துறை தன வேலையை செய்யும் ..வேற நல்ல வேலை இருந்த பாருங்கையா ..!

 18. Elango

  எல்லாம் இயக்குனர்களின் கையில் தான் உள்ளது என்று நீங்கள் மோதி கொள்ளும் படங்கள் உறுதி செய்துள்ளன …அந்த இயக்குனர்களின் படங்களே இதை முறியடிக்கும் …எந்த நடிகர்களாலும் அல்ல!

  ரஜினியின் பல படங்கள் அவரின் முந்தைய படங்களை விட குறை வாக வசுளிதன …விஜய் ??? சொல்லவே வேண்டாம் ….!

  ஷங்கரின் “ஐ” படம் இதை நிருபிக்கும்!

 19. saranya

  mr elango. anthantha nadigaroda market value poruthu thaan padathoda budget. muthala adha nyaabagam vachikonga. paaka thaana porom “I” padam enna panna poguthunu. rajini ah vachi thaana 150 cr ku shankar aala padam panna mudinjithu. verum iyakkunarodathu thaana avar yaar venaalum vachi padam eduthirukalaame. oru vishayatha ezhuthum pothu moolaiya nalla thoosu thatti ezhuthunga.

 20. s. venkatesan, nigeria

  //Elango says:
  October 26, 2014 at 6:03 pm
  வினோ… உட்பட பல பேர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது இந்த பதிவின் முலம் உறுதி செய்ய பட்டுள்ளது!//

  நீங்கள் ரொம்பவும் வெட்டி முரிகிறீர்களோ? இரண்டு கமெண்ட் போடற அளவுக்கு உனக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது.
  நீ வேறொரு நடிகனின் ரசிகன் என்பது தெரிகிறது. உன்னோட ஆளு போட்டியில் இல்லை என்பதால் வைத்தெரிச்சல் உனக்கு இருக்கிறது.

  வினோ ஒரு பத்திரிக்கையாளர்
  அதிக கமெண்ட் இடும் திரு குமரன் ஒரு வழக்கறிஞர்
  நான் வருடம் 72+ Lakhs (இந்தியாவுக்கு அனுப்பும் சம்பளம் மட்டும்) சம்பாரிக்கிறேன். இந்தளவு தகவல் போதுமா?
  இங்கே உள்ள வாசகர்கள் அனைவரும் ஒரு relaxation கிடைக்க வருகிறோம். உன்னை மாதிரி விளங்கா வெட்டி இல்லை.

 21. varadhu

  முதலில் எந்திரன் ரிலீஸ் ஆன திரை அரங்குகளின் எண்ணிகையை முரியடிக்கட்டும்.பிறகு வசூல் சாதனையை முறியடிக்கலாம் .இந்த முருகதாஸ் SAC இடத்தை பிடிக்க நினைக்கிறார் போல ? தலைவரின் மார்க்கெட் எங்கே?இந்த அணில்குஞ்சு மார்க்கெட் எங்கே?தமிழ்நாடு ,கேரளா இந்த இரண்டு மாநிலங்கள் தவிர இவனுடைய முகம் யாருக்கும் தெரியாது.

 22. Rajni Ram

  இதுவரை தமிழில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த பட்டியலில் ‘எந்திரன் முதல் இடத்திலும் ‘ஆரம்பம்’ இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஆனால் அந்த சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘கத்தி’ முதல் இடத்துக்கு வந்துவிட்டது. தீபாவளி அன்று வெளியான படம் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் 23 கோடியே 80 லட்சத்தை வசூலித்தது. செம ஷார்ப் வசூல்!

  – விகடன் – டைம்பாஸ் (08 Nov, 2014) – சினிமால்

 23. Suresh

  ஆனந்த விகடன்’ மாணவப் பத்திரிகையாளர் / புகைப்படக்காரராக தன் கலைப் பயணத்தைத் துவக்கிய விஜய் ஆம்ஸ்ட்ராங், ராஜேஷ் லிங்கம் இயக்கிய ‘புகைப்படம்’, நந்தா பெரியசாமி இயக்கிய ‘மாத்தி யோசி’ போன்ற திரைப்படங்கள், பல்வேறு விளம்பரப் படங்கள், ஆவணப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பவர்.

  அது மட்டுமல்ல; ‘கத்தி’, ‘மெட்ராஸ்’ படக்கதைகளையும், ‘அட்டக்கத்தி’யில் சில காட்சிகளையும் களவு கொடுத்த கோபி இயக்கி, இடையில் நின்றுபோன ‘கருப்பர் நகரம்’ படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர்தான்.

  “கத்தி’ திரைப்படத்தின் கதையும், நானறிந்த கலைஞனும்” என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதோ… அந்த கட்டுரை:-

  ‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா? என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதை என உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை பற்றி பலரும் விவாதிக்கின்றனர்.

  சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப் போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்து விடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

  பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப் பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்துவந்து விடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும்பலனை (பணம் / படம் இயக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதேமாதிரியான வழிமுறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்தில் அப்படியான இழப்பீடோ, அங்கீகாரமோ புகார் தெரிவித்தவருக்கு தரப்பட்டதில்லை என்பதுதான் உண்மை.

  ஆக, தொடர்ந்து இப்படியான புகார்கள் தெரிவிப்பவர்கள் பலனுக்காகத் தான் இதை செய்கிறார்கள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. எனில், தொடர்ந்து இப்படியான புகார்கள் ஏன் வந்துகொண்டே இருக்கிறது? என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் புகார்களில் உண்மையும்கூட இருக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுவும் ஒருபுறம் இருக்கட்டும்.

  தற்போது, ‘கத்தி’ சிக்கலில், புகார்தாரரான இயக்குனர் கோபியை, நான் நன்கு அறிவேன். காரணம், நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தின் இயக்குனர் அவர். அப்படத்தையும், ‘மெட்ராஸ்’ படத்தையும் இணைத்து கடந்த மாதம் இதே இணையத்தில் பல விவாதங்கள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் உண்மை நிலை என்ன என்பதை பற்றி பல நண்பர்கள் கேட்டார்கள். பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட உரையாடலில் என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

  பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு காரணம், அப்படத்தை பற்றி கோபி அவர்களே பொதுவெளியில் கருத்து சொல்லவில்லை என்பதும், மேலும் அதில் அத்தகைய அவசியம் ஏற்படவில்லை என்பதும்தான். நமக்குத் தெரிந்ததை எல்லாம் பொதுவெளியில் சொல்லியே ஆக வேண்டுமா, என்ன? ஆனால் இப்போது ‘கத்தி’ கதையில், எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  அந்த வீடியோவில் இயக்குனர் கோபி சொல்லும் செய்திகள் பெரும்பாலானவை நான் முன்பே அறிந்ததுதான். இவற்றை பற்றிய தகவல்களை ‘கருப்பர் நகரம்’ திரைப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

  அப்போது அதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை. வெறும் தகவல்களாக மட்டுமே அவை பகிர்ந்து கொள்ளப்பட்டது. காரணம், அப்போது அவர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர். அதைத் தவிர்த்து வேறு எதுவும் முக்கியமானதில்லை.

  அப்போது ‘ஏழாம்அறிவு’ பட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததாக நினைவு. (அதன் தலைப்பு பற்றியும் அப்போது என்னிடம் குறிப்பிட்டார் கோபி. “ஏழாம் அறிவு’ என்பது போரை குறிக்கிறது” என்றார்.) தான் இயக்குனர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், பின்பு அது தள்ளி போய் விட்டதாகவும் சொன்னார். திரைத்துறையில் இது மிகவும் சகஜம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

  தான் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரை சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக முருகதாஸை சந்தித்தது பற்றி ஓய்வுநேர உரையாடல்களில் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் அது விவசாயிகளின் பிரச்சனை பற்றியது என்பதும் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி கொடுப்பதை பற்றியது என்பதையும்கூட சொன்னார். மேலும் சில தகவல்களை அவர் அப்போது பகிர்ந்துக கொண்டபோதும், அவை எனக்கு இப்போது நினைவில் இல்லை.

  பின்பு அவற்றை பற்றி நான் மறந்துகூட போனேன். காரணம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கும் கோபிக்கும் தொடர்பு இல்லை என்பதுதான். சில காரணங்களால் ‘கருப்பர் நகரம்’ படம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. நான் மற்ற படங்கள் செய்ய வந்து விட்டேன். இப்போது, கோபியின் பேட்டியை பார்த்தபோதுதான், இவற்றை பற்றி அவர் அன்றே பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வருகிறது.

  அப்பேட்டியில் கோபி பொய் பேசவில்லை என்பது என் எண்ணம். காரணம், அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு முன்பே சொல்லப்பட்டவை. ‘கத்தி’ படம் ஒன்று உருவாகும், அதில் விஜய் நடிப்பார் போன்ற தகவல்கள் தெரிவதற்கு முன்பே சொல்லப்பட்டவை. அப்போது அந்த தகவலுக்கு எந்த மதிப்பும் இல்லை. வெறும் தகவல்களாக, பொழுதைக் கடத்தும் வேளைகளில் சொல்லப்பட்டவை, அவ்வளவு தான். அக்கதை படமாகும் என்ற நம்பிக்கைகூட கோபியிடம் இல்லை அப்போது.

  இப்படியான பல நிகழ்வுகள் திரைத்துறையில் உண்டு. ஒரு கதையை சொல்லி, அது தேர்வு செய்யப்பட்டு, படமாக்கும் முயற்சிகள் நடந்து, பின்பு அது அப்படியே கிடப்பில் போடப்படுவது திரைத்துறையின் மிகச் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றுதான்.

  மேலும், ‘கத்தி’ திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகம் ஒன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப் பற்றிய என்மதிப்பீடுகள்.

  எனக்கு அவர் முன்பே பழக்கம் இல்லை. ‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்றுவரையும் அவ்வளவுதான். ‘கருப்பர் நகரம்’ படம் நிறுத்தப்பட்ட பின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று.

  சிலகாலம் கழித்து, ‘அட்டக்கத்தி’யும், ‘மெட்ராஸ்’ படத்தின் முன்னோட்டமும் வந்த போதெல்லாம் அவரை நினைத்துக் கொண்டேன். காரணம் அதில், ‘கருப்பர் நகர’த்தின் சாயல்கள் இருந்தன. அதை பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை.

  பின்பு ஒருநாள் உணவுக்கூடம் ஒன்றில்அவரைப் பார்த்தேன். முதல் கணத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவு மாறிப் போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல்நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம்.

  ‘கருப்பர் நகர’த்தைப் பற்றி குறிப்பிடும்படியாக செய்தி இல்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த ‘ஆவணப் படங்களை’ மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிதுநேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம்.

  எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப் போவதை நினைத்து மனம் வேதனை கொண்டது.

  இவ்வளவு அறிவுகொண்ட கோபி ஏன் தன் கதையை ‘காப்புரிமை’ பெற்று வைத்திருக்கவில்லை என்ற வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. ஏராளமான துறைகளில் உலகளாவிய அளவில் காப்புரிமை வழக்குகளின் நிலை (Apple vs Samsung) எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். இங்கே கலைத்துறையில் அது உதவாது என்பது மட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமுமற்றது என்பதை நாம் உணரவேண்டும்.

  காரணம், ஒரு திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவை, அத்திரைப்படம் திரைக்கு வரும்வரை திருத்தம் செய்ய சாத்தியம் கொண்டவை. மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அதன் காரணமாகவே பெரும்பாலானோர் தன் கதை இதுதான் என்று அறுதியிட்டு காப்பீடு செய்ய முயலுவதில்லை.

  மேலும், தமிழ்த் திரையுலகம், அப்படி ஒன்றும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் துறை அல்ல. தனக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற தவிப்புக்கு, அத்தனை கலைஞர்களையும் உள்ளாக்கும் துறை இது. ஆகையால், தன் கதையை ஏன் கோபி முன்பே காப்புரிமை செய்து வைத்திருக்கவில்லை என்ற வாதம், வீண் என்பதை உணர்க.

  முடிவாக, ‘கத்தி’ சிக்கலை ஒட்டிய அவரின் பேட்டியைப் பார்க்கும்போது, அதை வழக்கமான பணம் பிடுங்க நடத்தப்படும் தகிடுத்தத்தமாக கருதி ஒதுக்கிச் சென்றுவிட என்னால் முடியவில்லை. அப்பேட்டியின் முடிவில், “நான் பொய் சொல்லுகிறேன் என்பதை கண்டுபிடிக்கவாவது விசாரணை நடத்துங்கள்” என்ற அவரின் வாதம் நியாயமானதாக எனக்குப் படுகிறது. மேலும், தான் போராடுவது பணத்திற்காக மட்டுமில்லை, அது தன் கதை என்ற அங்கீகாரத்திற்காகவும் தான் என்று அவர் சொல்வதை நாம் ஏற்கத் தான் வேண்டும். அங்கீகாரத்திற்காக போராடும் சமூகத்திலிருந்தும், அதன் போராட்ட அரசியலிலிருந்தும் வந்த மனிதர் அவர்.

  நீதிமன்றம் எப்போதும் நீதியை நிலைநாட்டி விடும் என்ற நம்பிக்கையை கொடுக்க இயலா தன்மை கொண்டது என்ற முன்னனுபவம் கொண்ட சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதனால், சமூகத்தின் மீதும், திரைத்துறையின் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, உண்மையை சமூகத்திற்கு உணர்த்த வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது.

  மற்றவர்கள் எப்படியோ, கோபியைப் பொருத்தவரை, அவர் தகுதியானவர் என்பதை அறிந்தவன் என்பதனாலேயே இக்கட்டுரையை நான் எழுத வேண்டியதாயிற்று.

  சமூக அக்கறை, மக்கள்நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த் திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்.

 24. Thalaivar Fan

  The same goes to u. Dont compare with small kids.
  Vijayku taguthi illai, ana ajithku taguthi irukko? Appadi yenna taguthiyo…
  Illathathai irukkunu solratha?
  Aiyoo…all fans r the same.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *