BREAKING NEWS
Search

கபாலி 225 வது நாள்… உண்மையில் ஓடியதா? லாபமா? என்ன சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்?

கபாலி லாபமா நஷ்டமா?

Kabali-one crore

‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி தொடங்கி, சமீபத்தில் வெளியான சூர்யாவின் சிங்கம் 3 படம் வரை எந்தப் படமும் லாபம் தரவில்லை.. கதற வைக்கும் அளவுக்கு நஷ்டம்’ என்ற திருப்பூர் சுப்பிரமணியத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் மதுரை விநியோகஸ்தரும், மணி இம்பாலா திரையரங்கங்களின் உரிமையாளருமான மணி வர்மா.

தென்னாற்காடு, சென்னை, செங்கல்பட்டு ஏரியாக்களின் விநியோகஸ்தர்களும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு வாட்ஸ் ஆப் ஆடியோவில், “கபாலி’ படத்தால் நஷ்டம்தான் ஏற்பட்டது. ஆனால், 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் என ஓடாத படத்திற்கு விளம்பரம் செய்வது நியாயமா? ‘கபாலி’ படம் பற்றிய உண்மை நிலவரத்தை ரஜினிகாந்திடம் சொன்னீர்களா?ட என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவைக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கபாலி படத்தின் மதுரை விநியோகஸ்தர், இம்பாலா தியேட்டர் உரிமையாளர் மணிவர்மா ஒரு வாட்ஸ் அப் ஆடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “நான் மணிவர்மா, மதுரை மணி இம்பாலா மல்டிபிளக்ஸ் உரிமையாளர். திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிவை சற்று முன் கேட்டேன். சின்ன மன வருத்தம். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன்.

‘கபாலி’ படத்தின் 50 நாள், 100 நாள், 175 நாள், 200 நாள் இதெல்லாம் பொய்யான விளம்பரம் என சொல்லியிருந்தார்.’கபாலி’ படம் இன்று 217வது நாள், இன்று கூட மார்னிங் ஷோ 47 டிக்கெட் போயிருக்கு. படம் ரெகுலரா போயிட்டிருக்கு. நீங்க சொன்ன கருத்து தாணு சாரையும், ரஜினி சாரையும் சற்று களங்கப்படுத்துவது போலிருந்தது. நீங்களும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்தான், நானும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர். லாபம், நஷ்டம்கறது ஒரு தொழில்ல இருக்கிறது சகஜம்தான். குறிப்பிட்ட சிலரோட பேரைச் சொல்லி குரூப்புல பதிவு பண்றது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. ‘கபாலி’ படம் மிகப் பெரும் வெற்றிப் படம். மதுரை ஏரியாவில் எனக்கு பெரும் வெற்றியையும், லாபத்தையும் தந்த படம் ‘கபாலி’தான்,” எனக் கூறியுள்ளார்.

kabali-bo

தென்னாற்காடு, செங்கல்பட்டு, சென்னை நிலவரம்

இதேபோல, தென்னாற்காடு பகுதியின் விநியோகஸ்தர் எஸ் செல்வகுமாரும், கபாலி நஷ்டம் என்று யார் கூறினாலும் அது பொய் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோரை வேண்டுமென்றே தாக்குவதற்கு சமம் என்றும் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு பகுதியின் விநியோகஸ்தர் மன்னன், கபாலியால் நல்ல லாபம் வந்தது என்பதே உண்மை. திருப்பூர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

சென்னை பகுதியின் அதிகாரப்பூர்வ வசூல் என்ன என்பதை சத்யம் சினிமாஸின் இன்றைய விளம்பரமே சொல்லிவிட்டது. அதற்கு மேல் விளக்கம் தேவையில்லை அல்லவா!!

-என்வழி

 




4 thoughts on “கபாலி 225 வது நாள்… உண்மையில் ஓடியதா? லாபமா? என்ன சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்?

  1. ஸ்ரீகாந்த்.1974

    திருப்பூர் காரருக்கு இப்ப உண்மை புரிஞ்சிருக்கும் என
    நாம் நம்புவோம்.

  2. kumaran

    கபாலி வெற்றி இல்லை என்று யாராவது கூறினால் அவர்களுக்கு மனஅழுத்தம் நோய் இருக்கா என்று வீட்டில் உள்ளவர்கள் செக் அப் செய்வது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *