BREAKING NEWS
Search

தேர்தலுக்குள் டாஸ்மாக்குக்கு மூடுவிழா? – முதல்வர் திட்டம் நிஜம்தானா?

தேர்தலுக்குள் டாஸ்மாக்குக்கு மூடுவிழா? – முதல்வர் திட்டம் நிஜம்தானா?

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அரசின் மதுபானக் கடைகளுக்கு மூடு விழா நடத்தவும், பூரண மதுவிலக்கைக் கொண்டுவரவும் முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் வசமிருந்த மதுக் கடைகளை, அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலமே நடத்துவது என்ற அதிரடி முடிவை எடுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாயை அரசின் கஜானாவுக்குள் திருப்பிய பெருமை ஜெயலலிதாவையே சேரும்.

இந்த நிதியைக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அடுத்த வந்த திமுக அரசும் டாஸ்மாக் கடைகளை இன்னும் முழுவேகத்தில் நடத்தி வருவாயைப் பெருக்கியது.

தமிழகமெங்கும் புதிது புதிதாக மதுக்கடைகளைத் திறந்த வண்ணம் உள்ளது டாஸ்மாக் நிறுவனமும். இப்போதே ரூ 20 ஆயிரம் கோடிக்கு வருவாய் கொட்டுகிறது  அரசு மதுக் கடைகளால். இதனை அந்த நிதியாண்டு முடிவுக்குள் ரூ 23-25 ஆயிரம் கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காகவே மதுக் கடை பார்களை இரண்டு மணி நேரம் கூடுதலாகத் திறக்கவும், நட்சத்திர ஓட்டல் பார்களை விடிய விடிய திறந்து வைத்துக் கொள்ளவும் சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியது. இந்தியாவிலேயே மதுக்கடைகள், பார்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமையும் சேர்ந்தது.

இன்னொரு பக்கம், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் டாஸ்மாக் கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக டாக்டர் ராமதாஸின் பாமக, மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தினார்.

“தமிழகமே மதுவுக்கு அடிமையாகிவிட்டது. பள்ளி சிறுவர்கள் தொடங்கி, அனைத்து மட்டத்தினருமே மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். மாநிலத்தில் குடிக்காதவர்களே இல்லை எனும் நிலையை அதிமுகவும் திமுகவும் உருவாக்கிவிட்டன. தமிழ்ச் சமூகம் என்பது வெறும் குடிகாரர்கள்தான் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர்,” என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

தமிழகத்தின் நகரங்கள், கிராமங்கள் பேதமின்றி பலரும் குடித்துவிட்டு தெருக்களில் புரண்டு கொண்டிருப்பதைப் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

இந்த நிலையில், தடாலடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டு, மதுவிலக்கைக் கொண்டுவரும் திட்டத்தில் அரசு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல்கட்டமாக, மதுக்கடைகளால் வரும் வருவாய்க்கு இணையான மாற்று நிதியாதாரங்களைக் கண்டறியுமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக பூரண மதுவிலக்குள்ள குஜராத் மாநிலத்தில் ரூ 1 லட்சம் கோடிக்கு மேல் உபரி நிதி உள்ளது போல, தமிழகத்திலும் உருவாக்கும் வழி வகைகளை ஆராயவும் உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

பூரண மதுவிலக்கு என்ற ஆயுதம் மூலம், நாடாளுமன்றத்தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற தன் இலக்கை  அடைந்துவிட முடியும் என்பதால் முதல்வர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மாற்று வருவாய் ஆதாரங்கள் சாதகமாக அமைந்தால் வரும் அக்டோபருக்குள் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரக்கூடும் என்கிறார்கள்.

அரசியல் லாபத்துக்காகவே என்றாலும், முதல்வருக்கு வந்துள்ளது ஒரு ஆரோக்கியமான மாற்று சிந்தனைதான். நடந்தால் நல்லதே!

-என்வழி செய்திகள்
20 thoughts on “தேர்தலுக்குள் டாஸ்மாக்குக்கு மூடுவிழா? – முதல்வர் திட்டம் நிஜம்தானா?

 1. குமரன்

  ///பூரண மதுவிலக்கு என்ற ஆயுதம் மூலம், நாடாளுமன்றத்தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற தன் இலக்கை அடைந்துவிட முடியும் என்பதால் முதல்வர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.///

 2. s venkatesan, nigeria

  ///பூரண மதுவிலக்கு என்ற ஆயுதம் மூலம், நாடாளுமன்றத்தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற தன் இலக்கை அடைந்துவிட முடியும் என்பதால் முதல்வர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.///
  தேர்தலுக்கு பின்????????????????

 3. குமரன்

  //பூரண மதுவிலக்கு என்ற ஆயுதம் மூலம், நாடாளுமன்றத்தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற தன் இலக்கை அடைந்துவிட முடியும் என்பதால் முதல்வர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.///

  முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக அதிரடியான முடிவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பிரபலமானவர்தான்.

  ஆனால் அவர் எடுத்த திடமான முடிவுகளை அவரே மாற்றிய பெருமைக்கும் உரியவர். அண்மையில் சசிகலா வெளியே உள்ளே நாடகமே உதாரணம்.

  இதை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவர் செய்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னால் அவரே திருப்பி கடைகளைத் திறந்து விடுவார்.

 4. மிஸ்டர் பாவலன்

  ///இதை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவர் செய்தால்,
  நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னால் அவரே திருப்பி
  கடைகளைத் திறந்து விடுவார்.///

  தமிழக மக்களை அப்படி ஏமாற்ற முடியாது நண்பரே!

  முதல்வரின் புரட்சிகர முடிவை வாழ்த்த வயதில்லை – வணங்குகிறேன்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. chozan

  உண்மையிலேயே இது நடந்தால் பல குடும்பங்களையும் பல உயிர்களையும் காப்பாற்றிய பெருமை அம்மாவை சேரும். லாட்டரியை தடைசெய்து பல குடும்பங்களை காப்பாற்றியதுபோல் இதையும் செய்ய வேண்டும் என்பது பல தாய்மார்களின் குரல்.

  அம்மா என்றால் எப்போதுமே அதிரடிதான்.
  பொறுத்து பார்ப்போம். நல்லது நடந்தால் சரி.

 6. தினகர்

  நல்லது நடந்தால் நன்மையே.. . துணிச்சலான முதல்வர் இப்படி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை துணிந்து எடுக்கட்டும்..

 7. மிஸ்டர் பாவலன்

  //அம்மா என்றால் எப்போதுமே அதிரடிதான்.// (சோழன்)

  அருமை! அருமை!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 8. winston

  கனவாக போகாமல் உண்மையில் இது நடந்தால் மகிழ்ச்சி தான்…!!

 9. Krishna

  திமுக ஆட்சியோ, அதிமுக ஆட்சியோ, யார் இந்த முடிவு எடுத்தாலும் நல்லது. இப்பொழுதெல்லாம் ஆண்களாலேயே தெருக்களில் நிம்மதியாக நடக்க முடியவில்லை. குடித்து விட்டு wrong end-ல் two-wheeler-ல் வருவது, நடை பாதைகளிலேயே படுத்து கிடப்பது, சிறு நீர் கழிப்பது பெண்களை கிண்டல் செய்வது போன்றவைகள் சில வருடங்களாக அதிகமாகி இருக்கிறது. வீடுகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் பாட்டில்களோடு போவதை பல முறை பார்த்திருக்கிறேன். இதற்க்கெல்லாம் ஒரு விடிவு காலம் நிச்சயம் தேவை. பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டும் போதாது. குடி பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியாது. அவர்களுக்கு உதவுகிற வகையில் de-addiction சென்டர்கள் அமைக்க வேண்டும். இதையே சாக்காக வைத்து கொண்டு சிலர் கள்ள சாராயம் தயாரிப்பில் ஈடுபடுவார்கள். அவர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் இந்த முடிவுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

 10. EZ (Easy) Editorial Calendar

  இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிடிருக்கு
  ஹஹஹா

  நன்றி,
  ஜோசப்
  — ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

 11. மிஸ்டர் பாவலன்

  ///திமுக ஆட்சியோ, அதிமுக ஆட்சியோ, யார் இந்த முடிவு எடுத்தாலும் நல்லது. ///

  முதல்வரின் முடிவை திமுக, தேமுதிக, பிற கட்சிகள் வரவேற்றால் நல்லது.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 12. Ganesh Shankar

  //தமிழக மக்களை அப்படி ஏமாற்ற முடியாது நண்பரே!

  முதல்வரின் புரட்சிகர முடிவை வாழ்த்த வயதில்லை – வணங்குகிறேன்!//(பாவலன்)

  அருமை.
  அதையும் தாண்டி ஏமாற்றினால்,மக்களாகிய நாம் எவ்வாறு செயல் பட முடியுமோ அவ்வாறு செயல் பட வேண்டியது தான்.
  ஆனால்,இந்த முடிவில் அதிரடியை விட,நிதானம் நல்லது.
  அதே போல் முதல்வரும் இப்போது நிதனமாகதான் செயல்படுகிறார்.
  எந்த ஒரு விடயமாக இருந்தாலும்,ஒரு நல்ல “Analysis” நல்ல ஒரு “expertise” உள்ள மக்களை வைத்து,”Department” அளவில் செய்து விட்டு தான் எடுக்கிறார்.அதனால் கண்டிப்பாக மிகவும் நன்மையை பயக்கும்,நல்ல ஒரு “Analysis” ஆக இருந்தால்.
  ஏன் என்றால்,பின்னாளில் இதை செயல்படுத்த முடியாத காரணத்துக்காக திருப்பி நடைமுறை படுத்த தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அவர் ஏமாற்றியதாக தான் நாம் கருத வேண்டும்.
  இப்பேற்பட்ட ஒரு நல்ல முயற்சி,இன்றைய தமிழகத்தின் கால கட்டத்தில் ஒரு முதல்வர் எடுப்பார் என்றால் அது ஜெயலலிதாவால் தான் முடியும்.அந்த வகையில் பாராட்ட பட வேண்டியவர்.

 13. கணேசன் நா

  பான்பராக் போன்ற குட்கா வகைகளுக்கு தடை விதித்தது போல ஒரு சில நாட்கள் (மாதங்கள்) என்று இல்லாமல் இருந்தால் சரி.

 14. Raj

  கேப்டன் எ பழி வாங்கும் திட்டம் ஹ ஹா

 15. மிஸ்டர் பாவலன்

  ///கேப்டன் எ பழி வாங்கும் திட்டம் ஹ ஹா///

  இளங்கோ என்ன பதில் எழுதுவார் தெரியலை??

  -== மிஸ்டர் பாவலன் ===-

 16. karthik

  அரசின் இந்த முடிவை தே.மு.தி.க மிக வண்மையாக கண்டிக்கிறது…

 17. சுதந்திரன்

  மிஸ்டர் பாவலனின் உற்சாகத்தை வழி நெடிகிலும் காணும் அவரின் கமெண்ட்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
  இந்த உலகம் இன்னுமா இந்த கோஷ்டிய நம்பிக்கிட்டு இருக்கு…(!!!!!)
  — சுதந்திரன்

 18. kabilan

  நான் பம்பாயில் சந்தித்த ஒரு தமிழர் கூறியது,குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றிகரமாக மது விலக்கை அமல் படுத்தியதற்கு முக்கிய காரணம் அந்த மாநில மக்கள்.அவர்கள் மதுவை விரும்பவது இல்லையாம்.

 19. Ramamurthy

  உண்மையிலேயே இது நடந்தால் பல குடும்பங்களையும் பல உயிர்களையும் காப்பாற்றிய பெருமை அம்மாவை சேரும். லாட்டரியை தடைசெய்து பல குடும்பங்களை காப்பாற்றியதுபோல் இதையும் செய்ய வேண்டும் என்பது பல தாய்மார்களின் குரல்.

  அம்மா என்றால் எப்போதுமே அதிரடிதான்.
  பொறுத்து பார்ப்போம். நல்லது நடந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *