BREAKING NEWS
Search

வேகமா போற ரயிலைக் கூட பிடிச்சிடலாம்… ஆனா, ரயில் டிக்கெட்டை?!

‘இ-டிக்கெட்’ இனி ஈஸி – ஐ.ஆர்.சி.டி.சி யின் புதிய ஃபார்முலா!

வேகமாப் போற ட்ரெயினைக் கூட பிடிச்சிடலாம் கூட. ஆனால் அதில் ட்ராவல் செய்ய ஆன்லைனில் டிக்கெட் எடுப்பதுதான் இப்போது குதிரைக் கொம்பான விஷயமாகி விட்டது.

காரணம் இந்திய ரயில்வேயிக்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி இணைய தளத்தில் இ-டிக்கெட் எடுக்க சென்றாலே அதிவேக இன்டெர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே அட்லிஸ்ட் ஒரு டிக்கெட்டாவது எடுக்க முடியும்.

இல்லையென்றால் அப்ளிகேஷனில் நாம் டிக்கெட் எடுக்க வேண்டியவர் களின் விபரங்களை கொடுத்து நமது வங்கி கணக்கிலிருந்து ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்துக்கு பணத்தை மாற்றும் போது சில காலதாமதங்கள் ஏற்பட்டு டிக்கெட் புக் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அல்லது இணையதளத்தை நாம் உபயோகிக்காமல் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டால் அவ்ளோதான்… மீண்டும் லாகின் செய்து ஆரம்பத்திலிருந்து இ-டிக்கெட்டை பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் இனி அந்த பிரச்சனை இல்லை. இனி ரயிலைப் போலவே ஜெட் வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்டிஎஸ் Rolling deposit scheme (RDS) என்ற புதிய டெப்பாசிட் வசதியினை வழங்க திட்டமிட்டுள்ளது ஐஆர்சிடிசி ( irctc.co.in ) இணையதளம்.

இந்த வசதி மூலம் நாம் நமது ஐ.ஆர்.சி.டி.சியின் ஆர்டிஎஸ் அக்கவுண்டில் ரூ. 1,500 ரூபாயில் இருந்து ரூ. 2,000 வரை முன் கூட்டியே பணத்தை கட்டி இருப்பு வைத்து விட வேண்டும்.

நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை, ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு மாற்றுவதில் சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதனால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளப்படுகிறது. இப்படி நேரம் அதிகம் வீணாவதால், குறித்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும் போகிறது.

ஐஆர்சிடிசி இணையதளத்தின் ரயில் டிக்கெட் முன்பதிவுத் திறனை கணிசமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருந்தது.
அதன் ஒரு பகுதி தான் இந்த முன்பண டெபாசிட் திட்டமான (RDS) திட்டம்.

இதை தொடர்ந்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆர்டிஎஸ் என்ற திட்டத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல புதிய மாற்றங்களை நாம் பெற முடியும்.

ஆர்டிஎஸ் அக்கவுண்டில் இருந்து பணமாற்றம் செய்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக எளிதானதாகும். இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதுமட்டுமில்லாமல் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால், அந்த பணம் மீண்டும் தங்களது வங்கி கணக்கிற்கு வந்து சேர குறைந்தது 7 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது.

ஆனால் இந்த புதிய முறையால் நாம் கேன்சல் செய்த ரயில் டிக்கெட்டின் பணம் வெகு சீக்கிரத்தில் நமது ஆர்டிஎஸ் அக்கவுண்டிற்கு திரும்பி வந்து விடும். மேலும் விபரங்களுக்கு இந்த ரெயில்வேயின் www.irctc.co.in இணைய தளத்துக்கு செல்லவும்.

– சி சக்திவேல்

என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *