BREAKING NEWS
Search

இரண்டாம் உலகம் – விமர்சனம்

இரண்டாம் உலகம் – விமர்சனம்

430436-irandam-ulagam-poster-twitter-selvaraghavan (1)

டிகர்கள்: ஆர்யா, அனுஷ்கா

இசை: ஹாரிஸ் ஜெயராஜ் (பாடல்கள்), அனிருத் (பின்னணி)

ஒளிப்பதிவு: ராம்ஜி

தயாரிப்பு: பிவிபி சினிமாஸ்

இயக்கம்: செல்வராகவன்

ப்போதெல்லாம் ஒரு படம் வெளியாகி முதல் நாளே எழுதாவிட்டால், அlg விமர்சனமாகவே இருப்பதில்லை. நானோ, இரண்டாம் உலகம் வெளியாகி ஒரு வாரம் கழித்துதான் அந்தப் படத்துக்கு இரண்டாவது விமர்சனம் எழுதுகிறேன். நேரமின்மை!

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு செல்வராகவனுக்கு மிகைக் கற்பனைகள், வேற்று உலகங்கள் குறித்த ஆர்வம் அதிகமாகிவிட்டது. நல்லதுதான். ஆனால் அதை சுவாரஸ்யமாக சொல்வதில்தான் படைப்பாளனுக்கு வெற்றி இருக்கிறது.

இந்த இரண்டாம் உலகம் பட முயற்சியை பாராட்டலாம். ஆனால் ஒரு குழந்தையை விட மோசமான கதை உருவாக்கம், அமெச்சூரான காட்சிப்படுத்தல், ஈர்ப்பில்லாத நடிப்பு, மட்டமான கிராபிக்ஸ் காட்சிகளால் இந்தப் படம் பார்வையாளனை எந்த விதத்திலும் திருப்திப்படுத்தத் தவறுகிறது!

காதலுள்ள ஒரு உலகம், காதலில்லா இரண்டாம் உலகம்… இந்த இரு உலகிலும் ஆர்யாக்கள் – அனுஷ்காக்கள் இருக்கிறார்கள். காதலில்லாத இரண்டாம் உலகில் காதல் பூக்க கடவுளால் அழைக்கப்படுகிறார் பூலோகத்தில் காதலியை கண்ணெதிரே பறிகொடுத்த ஆர்யா. அவர் போய் இரண்டாம் உலகில் காதல் பூக்க வைத்தாரா? என்பது கதை.

SS Music-1682

கதையும் சுவாரஸ்யமாக இல்லை… அதற்கான திரைக்கதையும் காட்சிகளும் எங்கும் பிடித்தமானதாக இல்லை. பல காட்சிகள் செயற்கையாக உள்ளன. டாக்டர்கள் கேம்ப் செல்லுமிடத்துக்கு நாடகமாடி ஆர்யாவும் அவர் நண்பரும் போய், அனுஷ்காவைக் கரெக்ட் பண்ண அந்த புரொபசர் கிழவியிடம் ரொமான்ஸ் பண்ணுவதாக நடிப்பதெல்லாம் மவுன ராகம் கார்த்திக் ஸ்டைல்… நிறைய பார்த்தாச்சு!

அந்த திறந்த புல்வெளியில் பூலோக ஆர்யாவும் அனுஷ்காவும் காதலைப் பறிமாறிக் கொள்ளும் காட்சியில் மட்டும் ரொமான்ஸ் வழிகிறது. அதேபோல க்ளைமாக்ஸில் போருக்கு நடுவே இரண்டாம் உலக ஆர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் பூக்கும் காதலும் அதை இருவரும் வெளிப்படுத்தும் விதமும்!

ராம்ஜியின் ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆனால் இரண்டு உலகங்களுக்குமான வித்தியாசத்தை அவரால் பெரிய அளவுக்கு காட்ட முடியவில்லை. அந்த வேலையை கிராபிக்ஸ் ஓரளவு செய்துள்ளது.

Irandam Ulagam Movie New Stills... glintcinemas.com

இரண்டாம் உலகக் கடவுளுக்கு ‘அம்மா’ என்ற பெயரும், அனுஷ்கா இறந்த இடத்தில் துளிர்க்கும் இரட்டை இலையும்.. இதெல்லாம் ஒரு படைப்பாளியைக் காப்பாற்றுமா செல்வா?

பாடல், பின்னணி இசை எதுவும் மனதில் ஒட்டவில்லை.

செல்வராகவனில் முயற்சியில் தப்பில்லை. அதை அவர் படைப்பாக்கிய விதம்தான் அபத்தம். அதற்காக முயற்சிகளை கைவிட்டுவிட வேண்டுமென்பதில்லை. சைக்கோத்தனம் இல்லாமல், வறட்டுக் கற்பனை இல்லாமல் அடுத்த ஒரு சிறந்த படைப்போடு செல்வா திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது!

வினோ

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “இரண்டாம் உலகம் – விமர்சனம்

  1. kabilan.k

    மிக சரியான விமர்சனம்.ஆனால் செல்வா அவரது வாயை குறைத்து கொண்டு வேலை செய்தால் தான் சரியான படைப்பை கொண்டு வர முடியும்

  2. srikanth1974

    இந்த படத்துக்கு போலாம்னு இருந்தேன்.நல்ல வேளையாக
    மழை வந்து என்னைக் காப்பாற்றி விட்டது கபிலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *