BREAKING NEWS
Search

ஐஏஎஸ் தேர்வில் மறைமுக இந்தித் திணிப்பு – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

ஐஏஎஸ் தேர்வில் மறைமுக இந்தித் திணிப்பு – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

karuna

சென்னை: ஐ.ஏ,எஸ். தேர்வு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள திடீர் மாற்றம், இந்தியை மறைமுகமாகத் திணிப்பதுபோல் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.

பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அந்த மொழியில் தேர்வு எழுதலாம் என்ற இந்த அதிரடியான மாற்றம் கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன்மூலம் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் மட்டுமே அந்தந்த பிராந்திய மொழிகளில் விடை எழுத முடியும். இதன்மூலம் தேர்வு எழுதுபவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மொழியில் தேர்வுகள் எழுதவும், இந்த நடைமுறையால் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக குறையும்.

தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக தேர்ந்து எடுத்து இருந்தாலும் தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே தமிழ் வழியில் தேர்வு எழுத முடியும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் சிவில் சர்வீசல் (மெயின்) தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு தடையாக உள்ளது. அவர்கள் இந்தி அல்லது ஆங்கில வழியில் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய புதிய முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தித் திணிப்பை மறைமுகமாக திணிப்பதுபோல் உள்ளது. இது நமது நாட்டுக்கு பண்டித நேரு அளித்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது. மேலும் இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற மற்றும் சமநிலையற்ற போட்டியை உருவாக்குவதாக உள்ளது.

எனவே, சமீபத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையை புதிய தேர்வு முறையை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு மொழியில் மத்திய அரசு பணியாளர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

-என்வழி செய்திகள்
7 thoughts on “ஐஏஎஸ் தேர்வில் மறைமுக இந்தித் திணிப்பு – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

 1. Kumar

  ஏன்யா உன்னோட ஆளுகளுக்கு அமைச்சர் பதவி வேனும்ன டெல்லி போவீங்க,மதவனுக்குன லெட்டெர் போடுவீங்கள.என்ன தமிழ் பற்று .என்ன சமுதாய நலன்.இனிமே எம்றவன் கிடையாது தமிழ் நடுல எவனும்.நீக தான் மத்தியில ஆட்சி செய்யறீங்க.டெல்லிகு போய் மாதரத்துக்கு பேச வேண்டியது தான.

 2. srikanth1974

  அன்று நடந்த ஹிந்திப் போராட்டத்தால் ஒரு தலைமுறையை வீணடித்து நாசமாக்கியது போதாதா உங்களுக்கு?.தாங்கள் பேரன் தயாநிதிமாறனிடம்.நீ படித்த ஹிந்தியை மறந்து விடுப்பா என்றுக் கூறிவிட்டீர்களா?

 3. PRABU

  “கருணாநிதி” – என்பது சரியான தமிழ் சொல்லா?
  “SUN TV” – “CLOUD NINE MOVIES” – “RED JAINT MOVIES” – தமிழ் பெயர் கிடைக்கவில்லையோ?
  ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள்………………

 4. NAREN

  கருணாநிதி அவர்கள் எழுதிய அணைத்து கடிதங்களும் அவர் வீட்டு அஞ்சரை பெட்டியில் அடையாளம் காணாமல் கண்டுபிடிக்க பட்டது … .

  இனி இவர் ஒரு “கடிதம் மற்றும் கட்டுரை பீரங்கி” என்று அனைவராலும் அழைக்கபடுவர் ….

 5. குமரன்

  கருணாநிதி குரல் கொடுத்த பின்னால்தான் ஜெயாவும் இது குறித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

  இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் கருணாநிதி என்றும் முதலில் இருந்திருக்கிறார். அதன் முழுமையான பலன்தான், தமிழ்ப் பத்திரிகைத் துறையின் வளர்ச்சி, தொலைக்காட்சிகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சி, திரை/சின்னத்திரைதுறைகளில் கலைஞர்கள்/ தொழிலாளர்கள் வளர்ச்சி, தமிழுக்கான நிரந்தரப் பாதுகாப்பு என பல்முனை நன்மைகள்.

  என்னதான் இந்தி படித்தால் அங்கே வேலை இங்கே வேலை என்று புலம்பினாலும், அவை அனைத்தும் நகர்ப்புற மக்கள் நலனாகத்தான் அமையும். கிராமப்புற, அடித்தட்டு மக்கள் நலன் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

  மாறிவிட்ட சந்தைப் பொருளாதாரத்தில் ஆங்கிலமும் தாய் மொழியும் போதும் என்ற நிலைக்கு உலகமே வந்து கொண்டிருக்கிறது. இப்போதும் தில்லியிலும், மும்பையிலும் வேலை கிடைக்க இந்திதான் தேவை என்ற பழைய வாதத்தையே வைப்பதில் அர்த்தம் இல்லை. அப்படி அங்கே வேலை கிடைத்துப் போகிறவர்கள் தினப்படி உபயோகத்துக்கு இந்தி கற்றுக் கொள்கிறார்கள், அது போதும்.

 6. குமரன்

  கருணாநிதி என்பது வடமொழி கலந்த சொல்தான். அதையே அவர் வைத்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. கருணாநிதி என்பது பரமசிவனின் திருநாமமாக சிவ சஹஸ்ரநாமத்தில் வருகிறது. எனவேதான் அவர் தம்மைப் பற்றிக் குறிப்பிடும்போது கருணாநிதி என்று குறிப்பிடாமல் கலைஞர் என்று குறிப்பிட்டால் மன நிறைவடைகிறார். அதாவது தப்பித் தவறிக் கூட மக்கள் இறை நாமத்தைச் சொல்லி விடக் கூடாது என்பதில் அப்படி ஒரு பற்று! ஆனால், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் மட்டும் திரயம்பகேஸ்வர சிவலிங்கம்/ பீமலிங்கம் போல அமைத்து உளம் நிறைந்தார். இதெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது.

 7. குமரன்

  நேற்று மானிலங்கள் அவையில் திருச்சி சிவாவும், டாக்டர் மைத்ரேயனும் ஈழமக்கள் தொடர்பான மாணவர் போராட்டத்தை மத்திய அரசு முறையோடு அணுக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள். அதில் மைத்ரேயன் சொல்லி இருப்பதைப் பாருங்கள்:

  /// கடந்த, 1960ம் ஆண்டுகளில், இந்தி மொழியை திணித்தபோது, தமிழகம் பற்றி எரிந்தது. மாணவர்களே, அப்போதும் களத்தில் நின்றனர். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், தமிழகத்தில் காங்கிரசை இல்லாமல் செய்து விட்டது. இப்போதும், மாணவர்களே களத்திற்கு வந்துள்ளனர் என்பதை இங்குள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.///

  காங்கிரஸ் மட்டும் அல்ல, நம்மவர்கள் பலரும் கூட இன்னமும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரவே இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *