BREAKING NEWS
Search

ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானம்: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி

ஐநாவில் இலங்கையை இந்தியா ஆதரித்தால் திமுக நிலை என்ன?

சென்னை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27-2-2012 அன்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து 27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக பின்வருமாறு நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்:

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேஷிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 25ம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ‘போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்படுவது சகஜம்தான்’ என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவு படுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஒருவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா..?

-என்வழி செய்திகள்
13 thoughts on “ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானம்: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி

 1. selvan

  ஐயோ ஐயோ ஐயோ எட்டப்பா

  தமிழ் என் மூச்சு மூச்சு என்று சொல்லிச் சொல்லி ஈழத் தமிழர்களின் மூச்சை ( உயிர்) எல்லாம் நீயே சுவாசித்து விட்டாய்.

 2. selvan

  தமிழனுக்கு எப்ப நல்ல தலைமை வரப்போகுது?????????

 3. Manoharan

  தலைவரே நீங்கள்தான் கடுப்பேத்தறான் மை லார்ட் .காம் தலைவரா ?

 4. ராசாமணி

  “ஐயோ ஐயோ ஐயோ எட்டப்பா தமிழ் என் மூச்சு மூச்சு என்று சொல்லிச் சொல்லி ஈழத் தமிழர்களின் மூச்சை ( உயிர்) எல்லாம் நீயே சுவாசித்து விட்டாய் ”

  தம்பி காட்டிக்கொடுத்து இப்போ மந்திரியா எஞ்ஜாய் பண்ணுறது ‘கருணா’. அவன் பெயரில் ‘நிதி’ கிடையாது. நீ ஆள் மாறாட்டமா வந்து சாமி தெரியாம ஆடாதே..

  அவ்னுங்க ஊருக்குள்ளேயே ஒருத்தன ஒருத்தன் காட்டிக்கொடுக்கிறான், வெட்டிக்கொல்றான். அதை கேக்க துப்பில்ல. அடுத்தவன் வீட்டுக்குள்ள இருக்குறவன குத்தம் சொல்ல வந்துட்டானுங்க ஆசாமிங்க..

  செத்தவன் ஊருல என்னடான்னா, சிங்கம், கரடின்னு சினிமா தியேட்டரில் கூட்டம் கூட்டமா சினிமா பாத்து ரசிக்கிரானுங்க. இவனுங்க புலி வாலப்புடிச்சுகிட்டு இங்க இருக்கிறவ்ங்கமேலே எச்சி துப்பிகிட்டு இருங்கானுங்க்க. அடங்குங்க கொக்க மக்கா…

 5. ராசாமணி

  “தமிழனுக்கு எப்ப நல்ல தலைமை வரப்போகுது?????????”

  நல்ல தலைவனை ***************************** போய் கேளு..

 6. மிஸ்டர் பாவலன்

  ///ஒருவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தால்,
  மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா..?////

  மத்திய அரசுக்கு தரும் ஆதரவை தி.மு.க. ஒரு நாளும் வாபஸ்
  செய்யாது. 2G ஸ்பெக்ட்ரம் கேஸ் நடந்து வருவதால் கலைஞர்
  பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதுவார். அதன் பிரதி
  முரசொலியில் வரும். இணைய தளங்களில் வரும். அவ்வளவு தான்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 7. selvan

  உண்மைதான் நண்பரே நான் தமிழன் என்பதில் வெக்கப் படுகிறேன்

 8. குமரன்

  ////ஒருவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா..?////

  உக்கும் …

  இவர் முதல்வராக இருந்தபோதுதான், வெகு மும்முரமாக அழகிரிக்கும், தயாநிதிக்கும், கனிமொழிக்காக ராசாவுக்கும் மத்திய அமைச்சர் பதவிகளைப் பேரம் பேசும்போதுதான் இந்த போர்க் குற்றங்களை இலங்கை நடத்தியது என்பதை கருணாநிதி நினைவு கூறவே மாட்டார் !!!

  இப்படியிருக்க, இப்போதுதான் கனிமொழி 2 G வழக்கில் ஜாமீனில் வந்து கருணாநிதியின் இரண்டாவது வீட்டில் கொஞ்சம் அமைதி நிலவுகிறது. ஆனால், வழக்கோ தினமும் நடைபெற்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது. தயாநிதியோ இப்பவோ அப்பவோ என்று தினமும் சி.பி.ஐ கைது செய்ய வந்துவிடுமோ என்று பயந்து கிடக்கிறார். எப்.ஐ ஆர். போட்டதுமே கலாநிதி குடும்பத்தோடு இத்தாலிக்கு ஓடிவிட்டார்.

  இப்படியிருக்க, எப்படித்தான் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்குவது? அவர் தனிப்பட்ட நிலைமை அப்படி. என்ன செய்வார் பாவம்?

  சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை சோனியா மனசு வைப்பார் என்று பார்த்தால் அவரோ இந்தப் பக்கமே திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன் என்கிறாரே ?

 9. தினகர்

  குமரனுக்கு கலைஞர், இலங்கை, 2 ஜி, கனிமொழி, ராசா என்றால் உற்சாகம் பீறிட்டுக்கொண்டு வந்து விடும் போலிருக்கிறது. உண்மையில் அவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?. அன்னை சோனியாவையும் ரொம்ப பிடிக்கும் போலிருக்கே 🙂

 10. மிஸ்டர் பாவலன்

  அ.தி.மு.க.-வையும் பற்றி குமரன் விமர்சிக்கிறார்.
  இல்லையென்றால் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்திற்கு
  அவரைத் தக்கபடி கட்சியில் பயன்படுத்திக் கொள்ளலாம்!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 11. தினகர்

  “அ.தி.மு.க.-வையும் பற்றி குமரன் விமர்சிக்கிறார்.” ஆனாலும் அம்மா மீது சாஃப்ட் கார்னர் இருப்பதை, அவரது எழுத்துக்களே அவ்வப்போது காட்டிக்கொடுத்து விடுகிறதே:)

  “அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரைத் தக்கபடி கட்சியில் பயன்படுத்திக் கொள்ளலாம்! ” – அதற்கு முன்னால் உங்களை அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்:)

 12. anaani

  ////அவ்னுங்க ஊருக்குள்ளேயே ஒருத்தன ஒருத்தன் காட்டிக்கொடுக்கிறான், வெட்டிக்கொல்றான். அதை கேக்க துப்பில்ல. அடுத்தவன் வீட்டுக்குள்ள இருக்குறவன குத்தம் சொல்ல வந்துட்டானுங்க ஆசாமிங்க..////

  அவ்வனுங்க ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கொன்னானுவ. காட்டிக்குடுக்கிறானு ன்னா, ஏனுங்க அடுத்தவீட்டு நாயி மூக்கை நொழைச்சி கொரலை ஒசத்தி ஊளையிடணும்?. உன்னாவிரதனிமின்னு பிலிம் காட்டணும்? போர முடிச்சி வைச்சிட்டேன்னு பொய்ய சொல்லி ஒன்னும் தெரியாத அப்பாவிகளை கொத்துகொத்தா கொண்ணு குவிக்கணும். அப்பொறமும் நரி சும்மானாச்சும் கிடக்குதா? ஊளை விட்டு ஒப்பாரி பண்ணிக்கிட்டே கெடக்கே. இந்த நாதாரி…………….. நாய என்னபண்ணச்சொல்றீங்க?.

 13. கடலூர் சித்தன்.ஆர்

  “தமிழகத் தமிழர் நலனுக்காக /உயர்வுக்காக திராவிட அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறை முறைகள் மற்றும் இந்திய அரசாங்கம் இலங்கை வாழ் தமிழர்கள் வாழ்வுரிமை / முன்னேற்றம் குறித்து முயற்சிக்கும் பாச வழிகள், இரண்டிற்கும் அதிகம் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. அந்தோ தமிழர்கள்” ஹி..ஹி..ஹி.. சில உடன் பிறந்தே கொள்ளும் வியாதிகள் /ஏனையோர்களை விட்டு விட்டீர்களே ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *