BREAKING NEWS
Search

இந்தியா தனது வீரப் புதல்வியை இழந்துவிட்டது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இந்தியாவின் வீரப் புதல்வி ஜெயலலிதா!

rajini-jaya

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..”  என்று தெரிவித்துள்ளார்.

cy8egbaveaum1lmrajini-jaya2

-என்வழி
2 thoughts on “இந்தியா தனது வீரப் புதல்வியை இழந்துவிட்டது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 1. srikanth1974

  மண்ணுலகை விட்டு விண்ணுலகை நோக்கி
  பயணித்த மக்கள் தாயே!
  உம்மை இழந்துவாடும் கழக கண்மணிகளுக்கு – என்றும்
  வெளிச்சம் காட்டும் ஒளிவிளக்கு நீயே!
  பொன்மனச்செம்மல் ஏற்றிய புரட்சி தீபம் அணையாமல்
  அரண் அமைத்து காத்திட்ட கழக காவல் தெய்வமே!
  எளியோருக்கும்,நலிந்தோருக்கும், வாழ்வளித்த வள்ளல் நாயகியே!
  உனக்கென்று ஓர் குடும்பம் இல்லை
  உனக்காக அழாத குடும்பமே இம்மண்ணில் இல்லை
  இருந்தபோது காத்துநின்ற நீ’
  இறந்தபோதும் காத்துநிற்க வேண்டும்
  ஆம் இயக்கத்தையும்,மக்களையும்.காத்துநிற்க வேண்டும் தங்கத் தாரகையே!
  உன் ஆன்மா’ சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.
  அன்புடன்
  ஸ்ரீகாந்த் பரமேஸ்வரன்.

 2. elanseliyan

  நானும் ரஜினி ரசிகன்தான்..96 ல் நினைத்திருந்தால் ரஜினி சி எம் ஆகியிருக்கலாம். மக்கள் அப்போது ஜெ & கருணா இருவரையுமே வெறுத்தார்கள்.அண்ணல் ரஜினி பதவிக்கு ஆசை படவில்லை. அதனாலேயே அப்போது அவர் மேல் இன்னும் மதிப்பு வர ஆரம்பித்து விட்டது. எந்த வாயால் ஜெ வை மீண்டும் வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது என்றாரோ அதே வாயால் பின்பு அந்த ஊழல் பேர்வழியை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தார். அப்போது போனது இந்த ஆள்மீது நான் வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும்.இப்போது தமிழ்நாட்ட்டில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு சின்ன சின்ன நடிகர்களில் இருந்து கமல் வரை உரக்க தைரியமாக குரல் கொடுக்கும்போது இவர் பதுங்கி கொண்டிருப்பது அருவெறுப்பாக இருக்கிறது என் போன்ற ரசிகர்களுக்கு. நாளை இவர் படம் ரிலீஸ் ஆகும்போது வந்து பம்முவார். மகா சந்தர்ப்ப வாதி என்று புரிந்து கொண்டேன்..முன்பெல்லாம் இவரை யாரவது கன்னடர் என்றால் எனக்கு வலிக்கும்.இப்போது நாம் எல்லாம் அன்பாக சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் அளவுக்கு மக்கள் பிரச்னைகளில் இவர் கவனம் செலுத்துகிறாரா? நாளை படம் வந்தால் மட்டும் அதே மக்கள் தேவை.இன்று இவர் அடைந்திருக்கும் வெற்றி மற்றும் உயரம் மக்கள் அன்போடு கொடுத்தது. ஆனால் இவரோ யாரையும் பகைத்து கொள்ளாமல் தனது வண்டி தடை இல்லாமல் ஓடவேண்டும் என்று அமைதி காத்து கொண்டிருக்கிறார். வள்ளி அண்ணாமலை படத்திலிருந்து இவர் அரசியலுக்கு வருவது போலவே பில்ட் அப் கொடுத்து ஏமாற்றி வருவது இப்போது எல்லோருக்கும் புரிந்து விட்டது. மொத்தத்தில் சரியான கோழை மற்றும் சந்தர்ப்ப வாதி. நீங்கள் இந்த பதிவை வெளியிட்டாலும் சரி . இல்லை என்றாலும் சரி. என் மனா ஆதங்கம் இது. முக்கியமான நேரத்தில் அவர் ஒரு குரல் ஓ பி எஸ் கு கொடுத்து இருந்தால் இன்று எம் எல் ஏக்கள் மத்தியில் பெரிய தாக்கம் ஏற்படுத்தி அல்லது மக்கள் மனதில் மீண்டும் ஜல்லிக்கட்டு போன்ற உத்வேகத்தை ஏற்படுத்தி ஒரு மாற்றத்துக்கு அச்சாரம் போடா பட்டிருக்கும். யார் வந்தால் அவருக்கு என்ன கவலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *