BREAKING NEWS
Search

‘தலைவா.. உங்கள் ரசிகன் என்பதே எனக்குப் பெருமை!’ – ஷாரூக்கான்

‘உங்கள் ரசிகன் என்பதே பெருமை தலைவா!’

chennaiexpress21_0_0

லைவர் ரஜினியின் புகழ் பாடும் பாலிவுட் நடிகர்களில் ஷாரூக்கானுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு.

மற்ற நடிகர்கள் ரஜினியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இவர் ‘இந்திய சினிமாவின் லெஜன்ட் ரஜினிக்கு சல்யூட்’ என லுங்கி டான்ஸ் பாடலை தன் படத்தில் வைத்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். விளைவு… அந்தப் பாடல் இடம்பெற்ற அவரது சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்துக்கு தமிழகத்தில் ஏக வசூல்!

தனது ரா ஒன் படத்தில் ரஜினியை ஒரு காட்சியில் தோன்ற வைத்து ‘கிரேட் தலைவர்’ என்று புகழ்ந்தார்.

கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ஷாரூக், “தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை தலைவா. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி,” என்றார்.

rajini-srk

இப்போது மீண்டும் ரஜினியின் புகழ் பாடியுள்ளார் ஷாரூக். அவரது நடிப்பில் உருவாகியுள்ள லேட்டஸ்ட் இந்திப் படம் ‘ஃபேன்’. வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் ‘FAN Anthem’ என்ற பெயரில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

இப்பாடல் ரசிகர் ஒருவர் தனது மனம் கவர்ந்த நடிகரை நினைத்து பாடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை இந்தி, மராட்டி, பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி மற்றும் தமிழில் வெளியிட்டுள்ளார் ஷாரூக்கான். இப்பாடலின் தமிழ் பதிப்பை நேற்று ட்விட்டரில் வெளியிட்ட ஷாருக்கான், “ரஜினி சார், நான் ஸ்டார் அல்ல. உங்கள் எண்ணிலடங்கா ரசிகர்களில் ஒருவன். இதில் நான் பெருமிதம் கொள்கிறேன், தலைவா,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி




5 thoughts on “‘தலைவா.. உங்கள் ரசிகன் என்பதே எனக்குப் பெருமை!’ – ஷாரூக்கான்

  1. அறிவு.நாகை

    தலை வா நீங்கள் இவ்வுலகின் இறை வா…

  2. anbudan ravi

    நீங்கள் தலைவரின் ரசிகராய் இருப்பது எங்களுக்கும் பெருமை திரு ஷாருக் கான் அவர்களே.

    அன்புடன் ரவி.

  3. Nathan

    Sharukh Khan enbavar thannoda padam oda vendum endra ore karnathukaga thalaivar pugazhum suyanala vathi… avar chennai express ilum Vijay tv layum tamizhargalai asingapaduthana thellem maranthutu naam avarai angigaripathu perum thavaru…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *