BREAKING NEWS
Search

ஆம்… நான் ரஜினியின் ரசிகன்! – ஏ ஆர் ரஹ்மான்

ஆம்… நான் ரஜினியின் ரசிகன்! – ஏ ஆர் ரஹ்மான்

kochadaiyaan press conference london

சென்னை: நான் ஒரு ரஜினி ரசிகன் என்று கூறியுள்ளார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.

சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு பேட்டியளித்திருந்தார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். அதில் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதில், நீங்கள் எந்த நட்சத்திரத்தின் ரசிகர் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த ரஹ்மான், “நிச்சயமாக நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன். அவர் நம்பும் பல விஷயங்களை நானும் நம்புகிறேன். வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்னை ரஜினி ரசிகன் என ரஹ்மான் கூறுவது இது முதல் முறை அல்ல. எந்திரன் பட வெளியீட்டின்போதே இப்படித்தான் அவர் கூறியிருந்தார்.

கோச்சடையான் இசைக் கோர்ப்புப் பணியின் போதும், ரஜினியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவரை அருகிலிருந்து ரசித்ததும், அவரிடமிருந்து கற்றக் கொண்ட விஷயங்களும் மறக்க முடியாதவை என குறிப்பிட்டிருந்தார் ரஹ்மான்.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *