BREAKING NEWS
Search

ஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்!

ஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்!


நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை பற்றிய செய்தி வெளியாகும் போதெல்லாம், சிலர் ‘ஓவர் பில்ட் அப்’ என்று கமெண்ட் அடித்ததுண்டு.

அவர்களுக்கும் சேர்த்து ஒரு அதிரடி பதிலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். அதுவும் இளையராஜாவின் இசை வடிவில்…

ஒரு நிமிடத்துக்கும் குறைவாகத்தான் ஒலிக்கிறது அந்த இசைக் கோர்வை. ஆஹா.. ஜிவ்வென்று ஒரு புதிய சக்தி உள்ளுக்குள் பாய்ந்தது போன்ற உணர்ச்சியைத் தந்துவிடுகிறது அந்த இசை.

இதுவரை இளையராஜா தராத இசை… அல்லது இசைப் பொற்காலமான எண்பதுகளில் அவர் தந்த இசையை விட ஒரு படி மேலான நுட்பத்துடன் கூடிய இசைப் பிரவாகம் அது!

யு ட்யூபிலும், பேஸ்புக்கிலும் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை இன்றைக்கு இதுதான்!

லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு படத்தின் இசைக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் தரப்படும் படம், சமீப காலத்தில் நீதானே என் பொன்வசந்தமாகத்தான் இருக்கும்.

இந்தப் படத்தின் பாடல்கள் சிலவற்றைக் கேட்டுவிட்ட படக்குழுவினர், இந்த ஆண்டின் இணையற்ற இசையாக எங்கும் ஒலிக்கவிருப்பவை இந்தப் பாடல்களாகத்தான் இருக்கும் என்கிறார்கள். தெலுங்கில் ராஜாவின் இசைக்கு பெரிய ரசிகர் வட்டமே உண்டு. ‘ஏதோ வெளிப்போயிந்தி மனசு’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த இசை முன்னோட்டம் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இளையராஜாவின் இசை அபிமானிகளோ, இந்தப் பாராட்டுக்களை ஆனந்தக் கண்ணீருடன் தங்களுக்கே விழும் புகழ்மாலைகளாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெரும் இசைத் திருவிழாவுக்குக் காத்திருக்கும் பக்தர்களாய், பாடல் வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இசைப் புயலும் களத்தில்…

நீதானே என் பொன்வசந்தம் தவிர, இந்த ஆண்டும் இன்னும் இரண்டு பெரிய இசை ஆல்பங்கள் வரவிருக்கின்றன. அவை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் கோச்சடையான் மற்றும் கடல். இவையும் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய இசை ஆல்பங்களாக உள்ளன. அந்த வகையில், தமிழ் திரையிசைக்கு மிக நல்ல ஆண்டு இந்த 2012 எனலாம்.

இசையால் இனிமை நிரம்பட்டும்!

நீதானே என் பொன்வசந்தம் – இசை முன்னோட்டம்

 
-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “ஒரு இசைத் திருவிழாவுக்காக காத்திருக்கும் இளையராஜா ரசிகர்கள்!

 1. மிஸ்டர் பாவலன்

  இளையராஜாவின் இசையில் வந்த பாடல்:

  “என்னைத் தாலாட்ட வருவாளோ
  நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ ..
  தங்கத் தேராட்டம் வருவாளோ
  இல்லை ஏமாற்றம் தருவாளோ ”

  இந்தப் பாடல் தான் விஜய்க்கு – SAC படங்கள் தந்த இமேஜை மாற்றி-
  அவருக்கு திரை உலகில் பெரும் வெற்றி கொடுத்தது.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 2. Chadaiyaan

  என்றும் என்றென்றும் …ராஜாவிற்கு நிகர் ராஜாதான் …

 3. Manoharan

  தளபதிக்கு பிறகு நான் மிகவும் எதிர்பார்க்கும் இசை ஆல்பம் இதுதான். தியேட்டரில் சில நொடி ட்ரைலரில் கேட்கும் இசைக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. அதை திருப்பி திருப்பி யு ட்யூபில் பலமுறை கேட்டுவிட்டேன். பாடல் வெளியீடு எப்போது…? ஏதாவது தகவல் உண்டா…?

 4. enkaruthu

  இப்பொழுதும் கூட “abc நீ வாசி” என்ற பாடலை கேட்டுக்கொண்டுதான் கமெண்ட் போடுகிறேன்.என்ன ஒரு மனதிற்கு இனிய பாடல்.அதுவும் தளபதியில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கும்” வீரா படத்தில் வரும் “கொஞ்சி கொஞ்சி அலைகளோட” என்ற பாடல்களுக்கு நான் அடிமை.பாட்டால் மனதில் உள்ள கவலைகளை போக்கும் ஒரே இசை கலைஞன் மேஸ்ட்ரோ இளையராஜ் சார்தான்.நானும் கோச்சடையான் cd வாங்க எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேனோ அது போல்தான் நீதானே எந்தன் பொன் வசந்தம் cd க்கும் ஆர்வமாக இருக்கிறேன் .இளையராஜா சாருக்கு ஒரு பெருமை என்னவென்றால் இன்றும் cd கடையில், அவரின் ஹிட் பாடல்களின் cd தான் அதிகம் விற்பனை ஆகின்றன.

 5. r.v.saravanan

  இசைப் பொற்காலமான எண்பதுகளில் அவர் தந்த இசையை விட ஒரு படி மேலான நுட்பத்துடன் கூடிய இசைப் பிரவாகம் அது!

  இசையை சுவாசிக்க காத்திருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *