இசைஞானியின் அமெரிக்க இசைப் பயணம் – ஒரு இசை விருந்துக்கு தயாராகுங்க!
பல இசை ரசிகர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் இது: “ராஜா சார் இனி புதிதாக இசை அமைக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. இன்றைய இசையை கால்நூற்றாண்டுக்கு முன்பே அட்வான்சாகக் கொடுத்துவிட்டவர் அவர். தனது பழைய பாடல்களை, மீண்டும் அவர் டிஜிட்டலில் கொடுத்தால் கூட போதும்… இளைய தலைமுறை வேறெந்த இசையையும் கேட்காது!”
அன்றும் இன்றும் என்றும் ராஜா, என்றென்றும் ராஜா என இரு இசைக் கச்சேரிகளை அவர் வழங்கியபோது, ராஜாவின் பக்தர்கள் கூறியது நிஜம்தான் என்பது நிரூபணமானது. 5 வயது சிறுவனும் கூட மடை திறந்து…, விழியிலே மலர்ந்தது… போன்ற பாடல்களை முணுமுணுத்ததைப் பார்க்க முடிந்தது!
இப்போதும், திரைப்படங்களில் ராஜா பிஸியாகவே இருக்கிறார். இன்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இசை ஆல்பமே அவரது நீதானே என் பொன்வசந்தம்தான்.
இன்னொரு பக்கம், அவரது அத்தனைப் பாடல்களையும் ஒரிஜினல் தன்மை மாறாமல் டிஜிட்டலில் ரீமாஸ்டரிங் செய்யும் வேலை நடந்து வருகிறது. 5.1 ஒலித் துல்லியத்துடன் இப்போது ராஜாவின் பழைய பாடல் சிடிக்களை விற்பனைக்கு விட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், சர்வதேச அளவில் இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் ராஜாவின் வாரிசுகள்.
இந்த கச்சேரியில் ராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். முன்னணி பாடகர்கள், பாடகிகளுடன் இளையராஜாவின் குழு அமெரிக்கா புறப்படுகிறது, நவம்பர் இறுதியில்!
டிசம்பர் முதல் வாரம், கலிபோர்னியா மக்களுக்கு இசை விருந்து காத்திருக்கிறது. கிறிஸ்துமஸையும் புத்தாண்டையும் ராஜாவின் தேவகானங்களுடன் கொண்டாடப் போகிறார்கள்!!
-என்வழி ஸ்பெஷல்
கவிஞர் கண்ணதாசன் கடைசியாக தமிழுக்குத் தந்த பாடல்
இசை ஞானி இசையில் வந்தது. என்றும் ஜீவனானது அந்த
பாடல். குரல் கொடுத்தவர் தாஸ். படத்தில் உலக நாயகன்.
அந்த பாடல் எது என வலைஞர் கண்டுபிடிக்கட்டும்! நன்றி.
-== மிஸ்டர் பாவலன் ===-
http://www.youtube.com/watch?v=Q2ZBE9WzxI4&feature=related
இளையராஜா வின் இசையின் ராஜாங்கத்தை கொஞ்சம் நேரம் ஒதுக்கி அனுபவிங்க….
…..
மூன்றாம் பிறை. கண்ணே கலைமானே.
கவிஞர் அமரரான பிறகும், அவர் பாடலை பயன்படுத்தி ஹிட் கொடுத்தார் இசைஞானி. அது என்ன படம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!!
சக்தி.. நீங்கள் விடை சரி – மூன்றாம் பிறை பாடல் – கண்ணே கலைமானே.
உங்கள் கேள்விக்கு விடை தெரியலை. “காளிதாசன் கண்ணதாசன்” என்று
துவங்கும் பிரபு பாடல் எழுதியவர் வாலி. ஹிட் சாங். நீங்கள் ஒருவேளை
இந்தப் பாடலை சொல்கிறீர்களா தெரியலை.
இளையராஜாவிற்கு நல்ல satire உண்டு. அதற்கு ஒரு உதாரணம்
‘குணா’ படத்தில் வந்த பாடல் (1990 ). அப்போது இசை ஞானியும்
கவிஞர் வைரமுத்துவும் பிரிந்து விட்டார்கள். வாலி எழுதிய பாடல் ஒன்று.
வரிகள் தருகிறேன்.
ஆண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் நான் எழுதும்
லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
பெண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
ஆண்:
பாட்டாவே படிச்சிட்டியா?
அப்போ நானும்
ம் ………..
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி
உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
-=================
இந்தப் பாடலில் “பொன்மணி” என்ற வார்த்தை ஏன் வருகிறது,
யாரைக் குறிக்கிறது என யாரும் எண்ணிப் பார்த்தீர்களா? 🙂 🙂
-== மிஸ்டர் பாவலன் ===-
மிஸ்டர் பாவலன் அவர்களே
இதுவரை நான் இதை கவனிக்கவில்லை.
அடேங்கப்பா, இப்படியும் ஒரு செய்தியை ராஜா மறைபொருளாகக் கொடுத்தார் என்பது வியக்கவைக்கும் விஷயம், நிச்சயம் பிரிந்திருந்த அந்த நேரத்தில் ஒரு நெகிழ்ச்சியை வைரமுத்துவுக்கு இது கொடுத்திருக்கும்.
செய்தியை மறைபொருளாகப் பாடல்களில் நமது பண்டைய ஞானியர் கொடுத்தது வரலாறு.
இசை ஞானியும் அவ்வாறே கொடுத்ததை நானும் அறியப் பண்ணியமைக்கு நன்றி.
///அடேங்கப்பா, இப்படியும் ஒரு செய்தியை ராஜா மறைபொருளாகக் கொடுத்தார் என்பது வியக்கவைக்கும் விஷயம், நிச்சயம் பிரிந்திருந்த அந்த நேரத்தில் ஒரு நெகிழ்ச்சியை வைரமுத்துவுக்கு இது கொடுத்திருக்கும்.///
(குமரன்)
“நெகிழ்ச்சி”?!?!
குமரன் அவர்களே – இளையராஜாவின் நூல் வெளியீட்டு ஒன்றின் போது
வைரமுத்து அவர்கள் அதை விமர்சனம் செய்யப் போய் தான்
அவர்களுக்குள் பிரிவு வந்தது. இன்னும் அவர்கள் இணைய வில்லை.
கவியரசு, வாலி போன்ற கவிஞர்கள் எழுதுவதற்கும், வைரமுத்து
எழுதுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. நான் அறிந்த வரை கவியரசு
பொதுவாக அவரே பாட்டு எழுதி விடுவார். அதற்கு மெல்லிசை மன்னர்,
இசை ஞானி போன்றவர் மெட்டு அமைத்து விடுவார். “கண்ணே
கலைமானே” பாடலும் கூட இப்படி அமைந்த பாடல் ஒன்று தான்.
வாலி மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் உள்ளவர். அதிகம் டைம் எடுத்துக்
கொள்ளாமல் உடனே எழுதி விடுவார். கவியரசு,வாலி பாடல் எழுதியதன்
பின்புலம் (background) சில பாடல்களுக்கு நான் அறிவேன். நண்பர்களுக்கு
ஆர்வம் இருந்தால் அவற்றைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
வைரமுத்து மெட்டைப் பதிவு செய்துகொள்வார். வீட்டில் “யோசித்து”
சில நாட்களில் பாட்டை எழுதிக் கொடுப்பார். அவரது மனைவி திருமதி
பொன்மணி வைரமுத்து அவருக்கு சில பாடல்களில் உதவி செய்ததாக
வைரமுத்து அவர்களே சில பேட்டிகளில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் எத்தனை % பாடல்களை வைரமுத்து எழுதினார், எத்தனை %
பாடல்களை பொன்மணி எழுதினார் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.
குணா படத்தில் கமல் ஒரு தற்குறி. இருந்தாலும் கதாநாயகி (அதிகம்
இசை ஞானம் இல்லாதவர்) ஒரு பாட்டாக படிக்கும் போது கமல்
அதற்கு வார்த்தைகள் தருகிறார். அதுவும் உடனுக்கு உடன்.
பாடல் வரிகளை கவனியுங்கள்.
-=——————————
ஆண்:
பாட்டாவே படிச்சிட்டியா?
அப்போ நானும்
ம் ………..
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி
உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
-==—————————–
படிக்காத ஒரு நாயகனே (குணா) உடனுக்கு உடன் பாட்டு எழுதித்
தரும் போது ‘கவியரசு கண்ணதாசனுக்கு’ அடுத்த ‘கவியரசு’ என
சொல்லிக் கொள்ளும் ஒருவர் ‘துணையுடன்’ தாமதமாக பாடல்
எழுதித் தருகிறார் என மறைமுகமாக satire செய்கிறார் என நாம்
பொருள் கொள்ளலாம்.
“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது….ஓஹோ”
[………..]
“நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க”
ஹி…ஹி…ஹி.. 🙂 🙂 🙂
-=== மிஸ்டர் பாவலன் ===-