BREAKING NEWS
Search

இளையராஜா தரும் தன்னம்பிக்கை!

இளையராஜா தரும் தன்னம்பிக்கை!

Maestro-Ilaiyaraaja
னமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால்
வாழ்வே வாடிப் போகுமோ..

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

வாராத செல்வங்கள்
வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே…

இல்லாமல் போனாலே
ஏழையும் ஆனாலே
தன் தேக நிழல்கூட பகையாகுமே..

தன் கையே வாழ்விலே தக்க துணையாகுமே..

இருள் போனால் ஒளியாகும்..
மரமே.. பழுத்தால்.. பறவைகள் கிளையில் பாடுமே…

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

நாட்டுக்கு எந்நாளும்
உழைத்திடும் நல்லோரை
எல்லாரும் மலர்த் தூவி கொண்டாடுவார்…

எந்நாளும் தேயாத காவிய கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில் உயிர் வாழுவார்…

தெய்வீகமென்பது அன்பு செய்து வாழ்வது..
விதையாகி விழும்போது
பயிராய்.. கதிராய்
உலகினில் அறங்கள் தழைக்குமே..

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால்
வாழ்வே வாடிப் போகுமோ..

மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே..

-இசைஞானி இளையராஜா

வீடியோ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *