BREAKING NEWS
Search

இது இளையராஜா ஸ்பெஷல்!

இது இளையராஜா ஸ்பெஷல்!


ன்றைய தேதிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து, மீடியாவின்.. ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்ப்பவர் என்றால் அது இசைஞானி இளையராஜாதான்.

ரஜினியைப் போலவே, இவரது சொல், செயல் அனைத்தும் செய்தியாகின்றன.

இங்கே நீங்கள் படிக்கும் அத்தனை செய்திகளும் இசைஞானி இளையராஜா சம்பந்தப்பட்டவை. அத்தனையும் எக்ஸ்க்ளூசிவ்!!

ஒரு பாடலுக்கு நடிக்கும் ராஜா!

விரைவில் தொடங்கும் ஒரு படத்துக்காக ஒரு பாடலுக்கு மட்டும் நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைஞானி. இந்தப் பாடல் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்படவுள்ளது. இயக்கப் போகிறவர் செல்வா.

இந்தப் பாடலுக்கு சம்பளமாக ராஜா எந்தத் தொகையையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் கணிசமாக ஒரு தொகையைத் தர முன்வந்துள்ளனர்!

கனடா இசை நிகழ்ச்சி… ஒன்லி ராஜா ஃபேன்ஸ்!


னடாவில் வரும் நவம்பர் 3-ம் தேதி 100 இசைக் கலைஞர்களுடன் இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி பற்றி அட்டகாச விளம்பரங்கள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சி பற்றி இதுவரை வெளிவராத ஒரு விஷயமிருக்கிறது. இந்த இசை விழாவில் பங்கேற்கப் போகும் திரையுலக விஐபிக்கள் அத்தனை பேரும் ராஜாவின் அதி தீவிர ரசிகர்கள். நிகழ்ச்சியின் இடையிடையே மேடையேறி, ராஜாவின் இசையுடனான தங்கள் பரவச அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, பாடவும் போகிறார்கள். அப்படி தேர்வாகியிருக்கும் நட்சத்திரங்கள் சினேகா, பிரசன்னா, கே எஸ் ரவிக்குமார்… என பட்டியல் நீள்கிறது!

நான் இயக்குநர் பேச்சைக் கேட்பதில்லை…

வுதம் மேனன்: ஒரு கம்போசராக இத்தனை ஆண்டுகளில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?

இளையராஜா: ஒரு மாற்றமும் இல்லை. என் இசையில் எப்போதும் ஒரே மாதிரி இரு பாடல்கள் வந்ததில்லை. பல நேரங்களில் இயக்குநர்கள், அந்தப் பாடல் மாதிரி வேணும் என்று கேட்பார்கல். அவர்களிடம் நான், ‘ஒன்றுபோல் இன்னொன்று இருக்கக் கூடாது’ என்று சொல்லிவிடுவேன். அந்த வகையில் நான் இயக்குநர்கள் பேச்சைக் கேட்பதில்லை.

-நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டின்போது…

ஈழத் தமிழருக்கு உதவ நிதி…

ளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி பற்றி இன்னொரு செய்தி…

வெளிநாட்டில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இத்தனை பிரமாண்டமாக நிகழ்ச்சி செய்வது இதுவே முதல் முறை. பங்கேற்கும் கலைஞர்கள், ஏற்பாடுகள் என அனைத்துமே இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் செய்யப்படாத அளவு பிரமாண்டம்!

இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காகத் தர இசைஞானி விரும்புகிறாராம்.

ராஜாவின் பெஸ்ட் – இது டைரக்டர்ஸ் சாய்ஸ்!!

 


நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டின்போது, இளையராஜாவுடன் பணியாற்றிய பிரபல இயக்குநர்கள் தங்கள் விருப்பமாகக் குறிப்பிட்ட பாடல்களின் பட்டியல்:

மண்வாசனையிலிருந்து… பொத்தி வச்ச மல்லிகை மொட்டு – பாரதிராஜா
ஓளங்கள் படத்திலிருந்து, தும்பி வா… – பாலு மகேந்திரா
முதல்மரியாதையிலிருந்து பூங்காற்று திரும்புமா…. கே பாலச்சந்தர்
இளமை ஊஞ்சலாடுகிறது படத்திலிருந்து, ஒரே நாள்… – பி வாசு
கிழக்குவாசலின் பச்ச மல பூவு – ஆர்வி உதயகுமார்
மன்னனிலிருந்து அம்மா என்றழைக்காத – ஆர் சுந்தர்ராஜன்
சத்யாவில் இடம்பெற்ற வளையோசை… – சுரேஷ் கிருஷ்ணா
அடுத்த வாரிசு படத்தின் அசத்தல் பாட்டு ஆசை நூறு வகை… – எஸ் பி முத்துராமன்
கேப்டன் பிரபாகரனில் அத்தனைபேரையும் ஆட வைத்த ஆட்டமா தேரோட்டமா – ஆர்கே செல்வமணி

-என்வழி ஸ்பெஷல்

நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீட்டில் கலக்கிய இசைஞானி – ஒரு நேரடி ரிப்போர்ட்

நீதானே என் பொன்வசந்தம் இசை வெளியீட்டு விழா – முழு கேலரி
3 thoughts on “இது இளையராஜா ஸ்பெஷல்!

 1. enkaruthu

  //ஒரு மாற்றமும் இல்லை. என் இசையில் எப்போதும் ஒரே மாதிரி இரு பாடல்கள் வந்ததில்லை. பல நேரங்களில் இயக்குநர்கள், அந்தப் பாடல் மாதிரி வேணும் என்று கேட்பார்கல். அவர்களிடம் நான், ‘ஒன்றுபோல் இன்னொன்று இருக்கக் கூடாது’ என்று சொல்லிவிடுவேன். அந்த வகையில் நான் இயக்குநர்கள் பேச்சைக் கேட்பதில்லை.//

  இதற்க்கு பெயர்தான் நியாயமான பேச்சு .நான் புதிதாகத்தான் போடுவேன் என்று எத்தனை இசை அமைப்பாளர்கள் இப்படி மெனக்கிடுவார்கள்.இதைதான் இவர் திமிர் பிடித்தவர் என்று ஒரு கூட்டம் சொல்கிறதோ என்று நினைக்க வைக்கிறது .

  //இளமை ஊஞ்சலாடுகிறது படத்திலிருந்து, ஒரே நாள்… – பி வாசு//

  நான் software project செய்யும்பொழுது அதுவும் இரவில் தளபதி படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” மற்றும் இந்த பாடலை கேட்டு கொண்டே செய்யும்பொழுது வரும் சுகம் இருக்கும் பாருங்கள். இவர் ஒவ்வொரு இசையும் தவமாக இருந்து பண்ணுவதால்தான் இன்று தலைவரை போல மூன்று தலைமுறைகளையும் தாண்டியும் தன் மெல்லிசையால் இன்றைய தலைமுறைகளையும் ஆள்கிறார் வென்பது என்கருத்து .

 2. Manoharan

  ராஜாவின் இசை எனக்கு பல பயணங்களை எப்போதுமே ஞாபகப் படுத்தும் . ஏதாவது ஒரு பாட்டை கேட்கும் போது அதை முதன் முதலில் கேட்டுக்கொண்டே பயணம் செய்ததுதான் ஞாபகத்துக்கு வரும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ,வழக்கம் போல் எங்கள் நண்பர் கூட்டத்துடன் சாலக்குடியிலிருந்து வால்பாறை வழியில் 80 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் பயணம் செய்தோம். வழியில் இரண்டே படப் பாடல்கள்தான் . ஒன்று நாடோடி தென்றல் இன்னொன்று தளபதி. இரண்டுமே அப்போது ரிலீசாகவில்லை. ஆனால் வழியெல்லாம் அந்த பாடல்கள்தான் ஒலித்தன . இன்றும் அப்பாடல்களை கேட்கும்போது அந்த பயணம்தான் நினைவுக்கு வரும். இப்படி முக்கால்வாசி பயணங்கள் ராஜாவின் பாடல் மூலம் ஞாபகத்தில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.

 3. r.v.saravanan

  கண்டிப்பாக இது இளையராஜா ஸ்பெஷல் தான்

  நம் இசை அரசரே நமக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *