BREAKING NEWS
Search

நானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி!

நானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிக படங்களுக்கு இசையமைத்த பெருமை இசைஞானிக்கே உண்டு. ரஜினியின் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை இசையமைத்திருக்கிறார்.

வீராவுக்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. சந்திரமுகி, குசேலனில் இணைய வாய்ப்பிருந்தும் சில காரணங்களால் இருவரும் சேரவில்லை. ஆனால் இருவருக்குமான நட்பு தொடர்கிறது.

இருவரும் தொழிலுக்கப்பாற்பட்டு சந்தித்துக் கொள்கிறார்கள். பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ராஜாவின் முக்கிய நிகழ்வுகளில் ரஜினி நிச்சயம் இருந்திருக்கிறார்.

குறிப்பாக தமிழ் இசை ரசிகர்கள் மனங்களில் நிரந்தரமாக கோலோச்சும் திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில், அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளாத குறையை, திரையுலக முதல்வர் ரஜினி நிவர்த்தி செய்தார். இளையராஜாவின் இசைக்கு தான் எந்த அளவுக்கு ரசிகன் என்பதை அவர் மேடையிலேயே நிரூபித்தார் (வைகோ பேச்சுக்கு ஒரு படி இறங்கிப் போய் விசிலடித்து ரசித்தார்!)

நிறைய நண்பர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, ராஜாவுக்கும் ரஜினிக்கும் என்ன பகை என்பதுதான்.

உண்மையில் இருவருமே ரொம்ப நெருக்கமான நண்பர்களே. ரஜினி அதைப் பலமுறை கூறியுள்ளார், இப்போது ராஜாவின் பதிலே அதை உணர்த்தும்:

ரஜினியைச் சந்திக்கும்போது என்ன பேசுவீர்கள்?

இசைஞானி இளையராஜாவை வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி இது.

அதற்கு இளையராஜா அளித்துள்ள பதில்:

“நானும் ரஜினியும் சந்தித்துக் கொண்டால் பேசாத விஷயமே இருக்காது. பண்ணாத வேலை கிடையாது. எல்லாவற்றையும் பேசுவோம்.

நான் ஜோக் அடிப்பேன். ரஜினியும் ஜோக்கடிப்பார். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்!”

இன்னொரு முக்கிய கேள்வி.. இசை விரும்பிகள் தெரிந்து கொள்ள விரும்பும் பதிலும் கூட…

இப்போதைய பாடல்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லையே, ஏன்?

“அது உன் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். நீதான் பதில் சொல்ல வேண்டும்!”

-குமுதத்தில் இசைஞானி இளையராஜா.

குறிப்பு: இப்போதும் குமுதத்தை காசுகொடுத்து வாங்கிப் படித்து இதை எழுதவில்லை. நண்பர் அனுப்பிய ஸ்கேன் பக்கங்களைப் பார்த்து, அதில் இந்த இரு பதில்களை மட்டும் பயன்படுத்துகிறேன்!

1986-ம் ஆண்டு இதயக்கோயில் படத்தின் இசைக்கு குமுதம் அளித்த கேவலமான விமர்சனத்துக்குப் பிறகு அந்தப் பத்திரிகையை காசு கொடுத்து வாங்கியதில்லை! ராஜா கூட மாறலாம், அது சினிமா நிர்ப்பந்தம்… ஆனால் அது அவரது ரசிகர்களுக்குப் பொருந்தாதல்லவா!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “நானும் ரஜினியும் சந்தித்தால்… – மனம் திறக்கும் இசைஞானி!

 1. தேவராஜன்

  //ராஜா கூட மாறலாம், அது சினிமா நிர்ப்பந்தம்… ஆனால் அது அவரது ரசிகர்களுக்குப் பொருந்தாதல்லவா!//

  -நீங்க அநியாயத்துக்கு பிடிவாதம் பிடிச்ச ஆளா இருக்கீங்க வினோ. ஆனா அதான் உங்க ஸ்பெஷல்!

 2. Manoharan

  நீங்க அநியாயத்துக்கு பிடிவாதம் பிடிச்ச ஆளா இருக்கீங்க வினோ. ஆனா அதான் உங்க ஸ்பெஷல்!

  100 % True.

 3. R O S H A N

  //1986-ம் ஆண்டு இதயக்கோயில் படத்தின் இசைக்கு குமுதம் அளித்த கேவலமான விமர்சனத்துக்குப் பிறகு அந்தப் பத்திரிகையை காசு கொடுத்து வாங்கியதில்லை!//

  எந்த மடையன்ங்க அப்படி எழுதுனது……..எல்லா பாட்டும் அவ்ளோ அருமைய இருக்கும்……..’நான் பாடும் மௌன ராகம்’, ‘வானுயர்ந்த சோலையிலே’ ………என்ன பாட்டுங்க இதெல்லாம்……..இதெல்லாம் ரசிக்க தெரியலேன என்ன சொல்றது………இப்போ கூட தினமும் நைட் என்னோட playlist இந்த ரெண்டு பாட்டு தான்……..இந்த பாட்ட கேட்டுட்டு தான் நான் தூங்கவே போவேன்…….’ராஜா….ராஜா தான்’………

 4. K. Jayadev Das

  \\நிறைய நண்பர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, ராஜாவுக்கும் ரஜினிக்கும் என்ன பகை என்பதுதான்.\\ ட்ரெண்டுக்கு தகுத்த மாதிரி தன்னுடைய படத்தின் டெக்னீஷியன்களை மாற்றி வந்திருப்பதால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இளையராஜா மவுசு போனதும், தூக்கி விட்டார், அவரைப் பொறுத்தவரை, பணம் போடுபவரும், படத்தைப் பார்க்கும் ரசிகனும் ரொம்ப முக்கியம், செண்டிமெண்ட் எல்லாம் இதில் அவர் நுழைப்பதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *