BREAKING NEWS
Search

உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா!

உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக இளையராஜா தேர்வு!

ilayaraja-1

லகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.

டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியல் இது.

25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்)

24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்)

23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வெர்டிகல் லிமிட், தி சிக்ஸ்த் சென்ஸ் போன்றவை இவர் இசையில் வந்தவை)

22. பிலிப் க்ளாஸ் (இவர் இசையமைத்த மிஷிமா : எ லைப் இன் போர் சேப்டர்ஸ் இன்றும் சிறந்த இசையாகப் போற்றப்படுகிறது. க்வாட்ஸி பட வரிசைகளுக்கு இசையமைத்தவர்)

21.டேனி எல்ப்மேன் (பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்ட்டனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் தந்தவர். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்கள்)

20.தாமஸ் நியூமேன் (ரோட் டு பெர்டிஷன், பைன்டிங் நெமோ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் தந்தை ஆல்ப்ரெட் நியூமேன், சகோதரர் டேவிட் நியூமேன், உறவினர் ராண்டி நியூமேன் அனைவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள்)

19.ஹோவர்ட் ஷோர் (லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் மூன்று பாகங்களுக்கும் இசை தந்தவர். மூன்று ஆஸ்கர்கள் பெற்றவர்)

18.எல்மர் பெர்ன்ஸ்டீன் (தி மேக்னிபிஷியன்ட் செவன், டென் கமான்ட்மெண்ட்ஸ், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைதான்)

17.டிமிட்ரி டியோம்கின் (ரெட் ரிவர், ஹை நூன், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டு வாஷிங்டன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்)

16.ஜார்ஜஸ் டெலெரெ (தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீஸர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர். ஜீன் லாக் கோடர்ட்டின் கண்டெம்ப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.)

15.ஜேம்ஸ் ஹார்னர் (இவரது டைட்டானிக் பட இசையை யார்தான் மறக்க முடியும். பிரேவ் ஹார்ட்டும் இவர் படம்தான்)

14.ஜோ ஹிசைசி (பிரபல இயக்குநர் தகாஷி கிடனோவின் பெரும்பாலான படங்களுக்கு இசை இவர்தான். வேல்லி ஆப் தி விண்ட் படத்தின் இசையமைப்பாளர்)

13.ஹான்ஸ் ஜிம்மர் (க்ளாடியேட்டர், பைரேட்ஸ் ஆப் தி கர்ரீபியன் போன்ற மெகா படங்களின் இசையமைப்பாளர் ஜிம்மர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்குப் பிடித்த இசையமைப்பாளர். )

12.ஜான் பேர்ரி (பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் பேர்ரி. அவுட் ஆப் ஆப்ரிக்கா படத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்)

11.மௌரிஸ் ஜார் (லாரன்ஸ் ஆப் அரேபியா, கோஸ்ட், விட்னஸ் போன்ற படங்களுக்கு மறக்க முடியாத இசை தந்தவர்)

10.ஜெர்ரி கோல்ட்ஸ்மித் (ஏலியன்ஸ், ப்ளானட் ஆப் தி ஏப்ஸ், டோட்டல் ரீகால் போன்ற மெகா ஹிட் படங்களின் இசையமைப்பாளர்.)

9.இளையராஜா (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 970 படங்கள், 4500க்கும் மேற்பட்ட பாடல்கள், 28 தனி இசை ஆல்பங்கள், ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர்… ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயித்த இசைக்குச் சொந்தக்காரர்.. பின்னணி இசையால் படத்தைப் பேச வைத்தவர். Music Composer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இசையமைப்பாளர்!)

8.ஆலன் மென்கின் (6 ஆண்டுகளில் 8 ஆஸ்கர்களை வாங்கியவர். டிஸ்னி நிறுவனப் படங்களில் பணியாற்றியவர். தி லயன் கிங் இவர் இசையமைத்த படம்தான்)

7.மைக்கேல் ரெக்ரான்ட் (க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுந்தவர். தி தாமஸ் க்ரோனின் அஃபையர்ஸ் படத்தின் இசையமைப்பாளர்.)

6.டோரு டகேமிட்சு (ஜப்பானின் முக்கிய இசையமைப்பாளர். பிரபல இயக்குநர்கள் ஹிரோஷி தெஷிகாரா, நகிஷா ஒஷிமா போன்றவர்களின் படங்களுக்கு இசை தந்தவர்)

5.நினோ ரோட்டா (தி காட்பாதர் படங்களுக்கு இசை தந்தவர்)

4.பெர்னார்ட் ஹர்மான் (சைக்கோ, வெர்டிகோ உள்ளிட்ட ஹிட்ச்காக் படங்களின் இசையமைப்பாளர்)

3.ஜான் வில்லியம்ஸ் (சூப்பர் மேன், ஸ்டார் வார்ஸ், ஈடி, ஜூராஸிக் பார்க் படங்களின் இசையமைப்பாளர்)

2.மேக்ஸ் ஸ்டெய்னர் (காஸாப்ளாங்கா, கான் வித் த விண்ட் படங்களின் இசையமைப்பாளர்)

1.என்னியோ மொர்ரிக்கோன் (கில் பில், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்)

என்வழி ஸ்பெஷல்
11 thoughts on “உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா!

 1. srikanth1974

  திரு.இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்.

 2. மாசிலா

  மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இசைஞானிக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

 3. மிஸ்டர் பாவலன்

  இளையராஜாவின் ரசிகன் என சொல்ல நான் பெருமை அடைகிறேன்.
  அவரது பழைய படங்கள் CD-பதிவில் நல்ல music system-வைத்து
  கேட்டால் பல பரிமாணங்கள் நமக்கு தெரியும். ஒன்பதாவது ராங்க்
  என்பது உலக சாதனை! இதை இந்திய TV சேனல்கள் பார்வைக்கு
  கொண்டு செல்ல வினோ அவர்களை விண்ணப்பிக்கிறேன், நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. Rajagopalan

  ilayarajavin isai thondu thodaratum…
  still not properly recognised by the indian government 🙁

 5. sidhique

  அபோ A.ஆர் ரகுமான் இல்லையா – அவர் சும்மா வா
  போங்கய நீங்களும்

 6. Avan

  இது முழுமையான லிஸ்ட் அல்ல. இளையராஜா இருப்பது மகிழ்ச்சி ஆனால் இதை யார் மொழிந்தார்கள் என்பது கேள்வி. Basil Poledouris (Conan Barbarian) விடுபட்டது ஒப்புக்கொள்ளமுடியாது.

 7. Avan

  அதுபோல் Ennio Marricone புகழ் பெற்றது Good Bad Ugly மற்றும் wild west படங்களுக்கஹா

 8. raja

  அவர் வாழ்ந்த வருடங்களில் நாம் இருப்பது மிக்க சந்தோஷம் 100 வயது வாழ்த்தும் ரசிகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *