BREAKING NEWS
Search

ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்களை தப்ப விடக் கூடாது!

ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்களை தப்ப விடக் கூடாது!

Elavarasan_jpg_1507648g

ளவரசன் – திவ்யா காதலித்து மணந்த போது ஊரைக் கொளுத்தியவர்கள்… அந்தக் காதலை நாடகக் காதல் திருமணங்கள் என்று புதுப் பெயர் சூட்டி அழைத்தவர்கள், இந்தக் காதல் திருமணத்தை உடைத்தே தீருவோம் என சபதமிட்டவர்கள், அவர்கள் பிரிந்ததும், அந்தப் பிரிவு தங்கள் சமூக வெற்றி எனக் கொண்டாடியவர்கள்… உச்சகட்டமாக இளவரசனைக் கொன்று ரயில் தண்டவாளத்துக்கருவில் கிடத்திவிட்டு தற்கொலையாகச் சித்தரித்து, அதையும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள்… ராமதாஸ் – அன்புமணி – காடுவெட்டியின் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் அடிப்படை அமைப்பான வன்னியர் சங்கமும்தான்.

இளவரசன் – திவ்யா விவகாரத்தில் இதுவரை நடந்த அனைத்து நிகழ்வுகளின் பின்னணியிலும் தாங்கள் இருப்பதை மறைத்ததில்லை இவர்கள். ஆனால் இப்போது இளவரசன் கொல்லப்பட்ட நிலையில், தங்களுக்கும் இந்த காதல் திருமணம் – பிரிவு விவகாரத்தில் சம்பந்தமில்லை… அது தனிநபர் பிரச்சினை என்று கூறி நழுவி ஓடுகிறார்கள்.

கடந்த 6 மாத காலங்களாக டாக்டர் ராமதாசும், அவர் மகன் அன்புமணியும், ‘தமிழகத்தையே துண்டு துண்டாக உடைக்கும் வல்லமை’ காடுவெட்டியும் எத்தனை கூட்டங்களில், தலித்களுக்கு விரோதமாக என்னென்ன பேசினார்கள் என்ற விவரம் எல்லோரிடமும் உள்ளது. இளவரசன் – திவ்யா ஏன் பிரிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் பேசியதெல்லாம் சமீப காலப் பதிவுகளாக பத்திரிகைகளில் உள்ளன.Anbumani-with-S-Ramadoss

அரசைப் பொறுத்த வரை இதற்கு மேல் ஆதாரங்கள் தேவையில்லை. இளவரசனைக் கொன்றுவிட்டார்கள். அதை அவர்கள் மறுக்கலாம். ரயில் முன் பாய்ந்துதான் இறந்தார் என போலீசே சொன்னாலும், அந்த தற்கொலைக்கு முழுப் பொறுப்பும் பாமக மற்றும் அதன் தலைமையே.

அவர்கள் அனைவரும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டிலேற்றப்பட வேண்டும். இரு இளம் உள்ளங்களின் காதலைக் கொன்றதற்கான, சமூக அமைதியைக் குலைத்ததற்கான தண்டனையை இந்த மர – மனித வெட்டிக் கும்பல் அனுபவித்தே தீர வேண்டும்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *