BREAKING NEWS
Search

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசன் உடல் அடக்கம்

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசன் உடல் அடக்கம்

ilavarasan-last

தர்மபுரி: பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசனின் உடல் ஞாயிற்றுக் கிழமை மாலை நத்தம் காலனியில் அடக்கம் செய்யப்பட்டது.

இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை இளங்கோ மற்றும் பல்வேறு அமைப்புகளும் கூறியதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று தர்மபுரிக்கு வந்து இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவு தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே தற்கொலைக்கு முன் இளவரசன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் இருப்பது இளவரசன் கையெழுத்துதான் என தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ilavarasan-last-journey
இந்த நிலையில் மறுபிரேத பரிசோதனைக்குப் பின் இளவரசனின் உடல் நேற்று மாலை அவரது தந்தை இளங்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் நத்தம் காலனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாயக்கன்கொட்டாயில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இளவரசன் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த இடம். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு இளவரசனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *