BREAKING NEWS
Search

இசைஞானியை இப்படி கண்ணீருடன் பார்த்ததில்லை!

கண்கலங்கி நின்ற இளையராஜா!

unnamed (3)

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன், இன்னும் சில தினங்களில் மரணத்தைத் தழுவப் போகிறார். அவருக்கு ஒரு கடைசி ஆசை. தான் கடவுளாக மதிக்கும், தன் அனைத்து வலிகளுக்கும் மருந்தாய் திகழும் இசைஞானியை தன் மரணத்துக்கு முன் பார்த்துவிட வேண்டும் என்பதே.

அந்த ஆசையை இசைஞானி, நேற்று அதை நிறைவேற்றிவைத்தார்.

அம்பத்தூரைச் சேர்ந்த இந்த ரவிச்சந்திரன், தாய், தந்தை இறந்துவிட்டதால் 44 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தினக்கூலியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். செயின் ஸ்மோக்கர் எனும் அளவுக்கு புகைப் பழக்கம் உள்ள இவருக்கு கேன்சர் நோய் தாக்கியுள்ளது.

அவரை பலகட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். ரவிச்சந்திரன், மரணத்தின் வாசலில் இருப்பதை அவரது உறவினர்களிடம் சொன்ன டாக்டர்கள் அவர் ஆசைப் பட்டதை நிறைவேற்றி வையுங்கள் என்று கூறினர்.

ரவிச்சந்திரனிடம் உறவினர்கள் அவரது ஆசையை கேட்க, தீவிர இளையராஜா ரசிகரான அவர் ஒரே ஒரு முறை இளையராஜாவைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இளையராஜாவிடம் அவரது உதவியாளர் மூலம் சொல்லப்பட, அவரும் உடனே வரச்சொல்லுங்கள் என்று கூறினார்.

அதன்படி ரவிச்சந்திரனை அவரது உறவினர்கள் இளையராஜா இசையமைக்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றனர்.

ரவிச்சந்திரனைப் பார்த்த இளையராஜா அவருக்கு ஆறுதல் கூறி, கனிவுடன் விசாரித்தார். பாசத்தோடு விசாரித்தார். அப்போது ரவிச்சந்திரன், ‘‘எனக்கு சாமியே நீங்கதான் அய்யா.. உங்க பாடலைக்கேட்காமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை. எனக்கு இது போதும்,” என்று என்று சொல்லி கலங்கி அழ, அவரை அணைத்துக்கொண்ட ராஜாவும் கலங்கிவிட்டார். கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாதவராகிவிட்டார் ராஜா. இப்படி ஒரு நிலையில் அவரை இதுவரை அங்கிருந்தவர்கள் பார்த்ததில்லை.

இது அங்கிருந்த அத்தனைப் பேரின் கண்களையும் கலங்க வைத்துவிட்டது.

-என்வழி
6 thoughts on “இசைஞானியை இப்படி கண்ணீருடன் பார்த்ததில்லை!

 1. DEEN_UK

  சில நடிகர்கள் தலைவர் ரசிகர்களை கவர ஆரம்பத்தில் பொய் சொல்லி ,பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அலைந்த கதை நாம் அனைவரும் அறிவோம்..ஆனால் சிவகர்த்திகேயன் அப்படி அல்ல என்பதையும் நாம் அறிவோம்.சிவா உண்மையில் தலைவர் ரசிகர் ..தான் தலைவரின் ரசிகன்..தலைவர் தான் தனக்கு ரோல் மாடல்.. என்று சொன்ன ஒரே காரணத்துக்கு அவர் தாக்கப்பட்டுள்ளார் என்றால்,நாம் சிவாவுக்கு ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்..அவர் கமல் ரசிகன் என்று சொல்லி இருந்தாலும் நாம் யாரும் கோப படபோவதில்லை! அது அவரவர் விருப்பம்..நீ ஏன் கமல் ரசிகன்னு சொல்லல னு சொல்றதெல்லாம் டூ மச்..! சிவா என்ற ரஜினி ரசிகனுக்கு நாம் ஆதரவாக இருப்போம்..இதற்காக நாம் இணையதளத்தில் கமல் ரசிகர்களுடன் சண்டை இட தேவை இல்லை..ரஜினி முருகனை வெற்றி பெற வைத்து…அவரது மன காயத்திற்கு மருந்தளிப்போம்..இது பற்றி வினோ அண்ணாவிடம் ஒரு பதிவு வந்தால் நன்றாக இருக்கும்…

 2. RAjiniRasigan

  DEEN_UK

  Don’t do the same mistake again, who knows when SIVA will change.

  This forum is only for rajini and rajini fans,…no room for others…so please don’t ask support for other actors…already we supported Vijay /Ajith and none of them helped our thalaivar so far.

 3. DEEN_UK

  I agreed your point.But first of all ..Thalaivar doesn’t need any one’s help! why do you expecting the helps from those mushrooms? Thalaivar is not living in that position! He never expects anything from any one.He only helps others.god keeps him in great position..if you are the real rajini fan then you also never ever expect anything from any one..This is how we are following our great thalaivar.we are not like other actor’s fans..we are trying to live like thalaivar’s real life character. Even SIVA can change in future! who cares? what we are going to loose if he change? I just talked about him here because he also a rajini fan and he has been beaten by those cowards only because siva said that thalaivar is his Role model,and he is thalaivar’s fan..
  நான் யாருக்கும் இங்க சப்போர்ட் பண்ணல.விட்டா நான் சிவகார்த்திகேயன் ரசிகன் ..அவருக்கு ரஜினி ரசிகன் போர்வைல வந்த சிவா ரசிகன் னு சொல்வீங்க போல? நான் இங்க பாவலன் என்ற பெயர்ல ரெகுலரா வந்து பிளேடு போடுற கமல் ரசிகன் இல்ல ( அவர்கிட்டயெல்லாம் எங்க சைட்ல உனக்கு என்ன வேலை னு கேக்க மாட்டீங்க?) எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில இருந்து பக்கா ரஜினி வெறியன்.உங்களுக்கு முன்னாலேயே ஆறு வருசமா இங்க நான் ஒரு மெம்பர்.சந்தேகம் இருந்தால் வினோ அண்ணாவிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க பிரதர்.இங்க எங்களுக்கு எல்லா கருத்துகளும் பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கு.அப்படிதான் இதுவரை இங்க எல்லா நண்பர்களும் கருத்து பகிர்ந்து வந்து இருக்கோம்.தலைவர் விஷயம் மட்டுமில்லாமல் அன்றாட அரசியல் பிரச்னை,தமிழர் பிரச்னை கூட இங்க அலசி இருக்கோம்.This forum is only for rajini and rajini fans,…no room for others…இந்த கருத்தை முதல்ல அந்த பாவலன் கிட்ட சொல்லுங்க பிரதர்,தலைவர் வெறியன் கிட்ட இல்ல! இங்க என்ன பேசணும்,எப்போ பேசணும் னு எங்களுக்கு தெரியும்.டெய்லி காலைல எழுந்தவுடன் ஊர்ல டீயும் தினத்தந்தியும் பார்க்கிற மாதிரி ,காலைல எழுந்தவுடன் லேப்டாப் ஓபன் பண்ணி என்வழியும் தட்ஸ்தமிழ் வித் டீ தான் எங்க regular life இங்க.அடுத்து தான் official work பார்க்கிறோம்.எல்லாத்துக்கும் கருத்து எழுதுறது இல்ல.அதேசமயம் முக்கியமான விஷயத்துக்கு கருத்து வெளியிடாம இருக்கிறதும் இல்ல! இதுவும் எங்க தலைவர் ஸ்டைல் தான்!

  தலைவர் வழி தனி வழி! என்வழி தலைவர் வழி!!

 4. anu

  DEEN_UK , ரொம்ப கோவ padaatheenga…
  சிவகர்த்திகேயன் அவர் அவர pathukuvaaru… கமலோட சேர்ந்து ஒரு போட்டோ எடுதுகுட்டு இவரும்தான் என் ரோல் மொடல் நு solluvaru.. ஏற்கனவே அஜித் தான் எனக்கு வாழ்க்கைக்கு வழி காட்டினு sonnaru… மதவந்த கத நமக்கு ethuku….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *