BREAKING NEWS
Search

அரசியல்வாதிகள், ஜனங்க கெட்டாலும் பிரச்சினையில்ல… நீதிமன்றங்கள் கெட்டுப் போனா நாடு உருப்படாது! – சூப்பர் ஸ்டார்

அரசியல்வாதிகள், ஜனங்க கெட்டாலும் பிரச்சினையில்ல… நீதிமன்றங்கள் கெட்டுப் போனா நாடு உருப்படாது! – சூப்பர் ஸ்டார்

ச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் அவரது நினைவு தபால் தலையைப் பெற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது:

நீதிமன்றங்களை நம்பித்தான் இந்த நாடு இப்போ இருக்கு.When wealth is lost, nothing is lost; when health is lost, something is lost; when character is lost, all is lost… (பணம் போனா ஒண்ணும் நஷ்டமில்ல… உடல் நலம் போனா கொஞ்சம் இழப்பு… ஆனா நடத்தை  தவறினா எல்லாமே போச்சு..) அப்படின்னு சொல்லுவாங்க.

அரசியல்வாதிங்க கெட்டுப் போனா  கூட நாடு உருப்படும். ஜனங்க கெட்டுப் போனா கூட நாடு உருப்படும். ஆனா நீதிமன்றங்கள் கெட்டுப் போனா மட்டும் நாடு உருப்படாது.

அந்த நீதிமன்றத்துல பணியாற்றிய Living Gods, கடவுள்கள் நிறைஞ்சிருக்கிற, அறிவாளிகள் நிறைஞ்சிருக்கிற இந்த சபையில நான் அதிகம் பேச விரும்பல.

ஏன்னா அறிவாளிகள் இருக்கிற சபையில அதிகமா பேசி முட்டாள்னு பேர் வாங்கக் கூடாது. கம்மியா பேசி புத்திசாலின்னு பேர் வாங்கறது நல்லதுன்னு யாரோ சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வருது.

இந்த புத்தாண்டு விழாவுக்கு என்னைக் கூப்பிட்டு, நீதிபதி பிஎஸ் கைலாசம் அவர்களுடைய ஸ்டாம்பை ரிலீஸ் பண்ணி நான் பெற்றுக் கொள்றதுக்கு எனக்கு என்ன அருகதை இருக்குன்னு சொன்னா, சத்யமா எந்த அருகதையும் இல்ல, ஒண்ணே ஒண்ணைத் தவிர.

அதாவது கைலாசம் அவர்களின் குடும்பத்துக்கும், ப சிதம்பரம் குடும்பத்துக்கும் நான் நெருங்கியவன் என்பதனால்தான். அது ஒண்ணு போதும்ல!

எனக்கு சவுந்தரா கைலாசம் அவர்களை எழுபதுகளின் இறுதியில், கார்த்திக் சின்னப் பையனா இருக்கும்போது, தெரியும். ஒரு நாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு ‘கார்த்திக் உங்க பேன். அவன் உங்களைப் பார்க்கணும்.. நீங்க வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா’ன்னு கேட்டாங்க. எனக்கு அவங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாது.

‘என்ன இது, நம்மள வந்து அவங்க வீட்டுக்குக் கூப்பிடறாங்க.. அவங்களே வந்து பார்க்கலாமே’-ன்னு சொன்னபோது, ‘அய்யய்ய, அவங்க யார் தெரியுமா…?’ன்னு கேட்டாங்க. ‘யாரு’ன்னேன். ‘ஜஸ்டிஸ் கைலாசம் அவர்களின் மனைவி’ -ன்னு சொன்னாங்க.

ஜஸ்டிஸ் கைலாசம் பத்தி அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியாது. ஆனா ஜஸ்டிஸ் கைலாசம்னு அவங்க அழுத்தி சொன்ன விதத்துல, அவங்க எவ்ளோ பெரிய ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்பலருந்து எனக்கு சவுந்தரா கைலாசம் அவர்கள் நெருங்கிய நண்பர். அதுக்கப்புறம் 95-96- லருந்து, நாம அப்ப கொஞ்சம் அரசியல் சூழ்நிலைகளால ப சிதம்பரம் கூட பழக்கம் ஏற்பட்டு, அவர் எனது நெருங்கிய நண்பரானதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி.

சவுந்தரா கைலாசம் அவர்கள் ஆன்மீகத்தில் மிகமிக வலிமை பெற்றவர். எங்க வீடு ரொம்ப கிட்ட. நான் அங்க போயிடுவேன். அங்க ஆன்மீகத்தைப் பத்திதான் நிறைய பேசுவோம். அவருடைய புலமை, ஆன்மீக அறிவைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருக்கும். நான் அவங்ககிட்ட கேட்டேன், ‘இது எங்கிருந்து, எப்டிம்மா உங்களுக்கு கிடைச்சது’ன்னு. அவர் சொன்னார், ‘எல்லாமே என்னுடைய கணவர்கிட்டருந்துதான் கத்துக்கிட்டேன்,’னு. அவர் என்னுடைய கணவர் மட்டுமல்ல, குரு, என்னுடைய தலைவர்னு சொன்னாங்க.

சவுந்தரா கைலாசம் அவர்களே அவ்வளவு பெரிய ஆன்மீகவாதின்னா, அவருக்கு குருவா இருந்த கைலாசம் அவர்கள் எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியா இருந்திருப்பார்னு சொல்லி வியந்து போனேன்.

தன்னுடைய கணவர் பத்தி அவர் சொல்வார்: ‘மனுஷ ஜென்மம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். நல்ல உடம்பு, புத்தி கிடைக்கிறது அதைவிட கஷ்டம். நல்ல ஹெல்தி பாடி, மைன்ட் கெடச்ச பிறகு, வாழறதுக்காக பொழப்புக்காக பணம் சம்பாதிக்கிறதுக்காக வேலை அமைஞ்சி பணம் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம், இதெல்லாம் கிடைச்ச பிறகு, உண்மை என்ன.. நாம எங்கிருந்து வந்தோம், எங்கே போகப் போறோம், எது நிரந்தரம், எது சாஸ்வதம், எது அசாஸ்வதம், இந்த மனித வாழ்க்கை வந்து சிலது, சில இன்பங்களுக்காக வாழ்றதா.. இதன் மூல அர்த்தம் என்ன.. என்றெல்லாம் கேள்வி வர்றது மிக மிக அரியது. இதெல்லாம் வந்த பிறகு அதற்கு வழிகாட்டியாக ஒரு குரு அமைவது இன்னும் இன்னும் அரியது. அதெல்லாம் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் எப்படி இந்த வாழ்க்கையை வீணாக்க முடியும் அப்டின்னு ஒருவாட்டி சவுந்தரா கைலாசம் என்கிட்ட சொன்னாங்க. நான் வியந்து போனேன்.

கடைசி காலங்கள்ல அவங்க ரொம்ப நாளா தனிமையா இருந்தாங்க. அதாவது லோன்லினஸ் கிடையாது. அலோன்லினஸ். லோன்லினஸுக்கு அலோன்லினஸுக்கும் வித்தியாசம் இருக்கு. லோன்லினஸ்-ன்னா, ஒண்ணுமே இல்ல.. யாருமே இல்லாத நிலை. அலோன்லினஸ்னா ஆல் இன் ஒன். நண்பரும் அவங்கதான், பிலாசபரும் அவங்கதான், குருவும் அவங்கதான், அவங்க மனசாட்சிதான் உலகமே… அந்த அலோன்லிஸ்ல சாந்தி, நிம்மதியோட அவங்க வாழ்ந்தாங்க.

அவங்க கணவரோட பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு தபால் தலையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி,” என்றார்.

என்வழி ஸ்பெஷல்

குறிப்பு: என்வழி கட்டுரைகளை தாராளமாக காப்பி & பேஸ்ட் பண்ணிக்குங்க, ஆனா என்வழி பெயரை கட்டாயம் குறிப்பிடும் எண்ணமிருந்தால்!




12 thoughts on “அரசியல்வாதிகள், ஜனங்க கெட்டாலும் பிரச்சினையில்ல… நீதிமன்றங்கள் கெட்டுப் போனா நாடு உருப்படாது! – சூப்பர் ஸ்டார்

 1. arulnithyaj

  அண்ணா,

  தலைவர் வானம் அளவுக்கு .. சொல்ல தெரியலன்னா …அவர் பேச்சு ஒவ்வன்றும் மனதை உயிரை தொடுதுனா …அவர் மகாபுருஷர் அண்ணா ..நன்றி அண்ணா

 2. The Editor Post author

  தேங்க்ஸ் வினோ.

  ___________

  எங்க போனீங்க இத்தனை நாளா? 🙂

  -வினோ

 3. S.Vijay

  சினிமா, அரசியல்.. இதில் தொடர்வதோ, காலடி எடுத்து வைப்பதோ உங்கள் விருப்பம்.
  ஆனால், ரசிகனுக்கு முக தரிசனத்தையும், மேடைப் பேச்சுக்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  அது போதும் தலைவா

 4. கா காளிதாஸ்

  தலைவர் சொன்னது முற்றிலும் உண்மை.

 5. saktheeswaran

  கற்றவர் சபைகளில்
  உண்மையான கருத்துக்களை
  சொல்ல வேண்டிய செய்தியை
  சொல்லக் கூடிய நேரத்தில்
  அச்சமின்றி துணிச்சலுடன் பேசும் தைரியம்
  சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உரியது

 6. saktheeswaran

  மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நேரங்களில் குரல் கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை சூப்பர் ஸ்டார்

 7. saktheeswaran

  தலைவர் பேசிய வீடியோ லிங்க் இருந்தால் பதிவு செய்யுங்கள் நண்பரே

 8. Revathi Ravi

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். உண்மையான நேர்மையான நியாமான மனிதர்களுக்கு தான் தலைவர் ரஜினி அவர்கள் பிடிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எப்பவுமே மக்களை பற்றியே சிந்திப்பவர். ஆகையால் தான் நாடு நலம் பெற வளம் பெற நீதி மன்றங்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இதை உண்மையுள்ள ஒவ்வொரு மனிதனின் எதிர்ப்பார்ப்பும் எது தானே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *