BREAKING NEWS
Search

ஒருநாள் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ரஜினி?

ஒருநாள் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்  ரஜினி?


முதல்வன் படம் பார்த்திருப்பீர்கள்… ஒரு சாதாரண குடிமகனுக்கு ஒரு நாள் முதல்வராக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால்… என்ற சுவாரஸ்யமான கேள்விக்கான விறு விறு விடை அந்தப் படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாக்கப்பட்டு, பின்னர் அரசியல் சூழலால் அர்ஜூன் கைக்குப் போன படம்.

இந்தப் படம் வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் (1991), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஒரு பத்திரிகை பேட்டி கண்டது.

அப்போது, “ஐந்தே ஐந்து நிமிடம் மட்டும் தமிழகத்தின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்கச் சொன்னால், முதலில் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டிருந்தனர்.

அதற்கு ரஜினி சொன்ன பதில்:

“ஐந்து நிமிஷத்துல ஒண்ணுமே பண்ண முடியாது. அதை ஒரு நாளாக வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு நான் முதல் மந்திரியாக இருந்தால், உடனே நாட்டில் ஏழைகளே இல்லாமல், வறுமையை ஒழித்துவிடுவேன். என்னாலே அது முடியும்!”

-படிக்கும்போதே சிலிர்க்கிறதல்லவா…

நிறைய திட்டங்களை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறீர்களே தலைவா!

 

ரஜினியிடம் இருப்பது… வேறு யாரிடமும் இல்லாதது..! – சொல்கிறார் அமிதாப்

 


“ரஜினியின் பெருமை… பிரச்சினை இரண்டுமே அவரிடம் உள்ள உண்மையும் நேர்மையும்தான். அவரால் யாரிடமும் பொய்யாக பேசத் தெரியாது. ஒரு விஷயத்தை ஒப்புக் கொண்டால் அதைச் செய்யும் வரை அவரால் நிம்மதியாக இருக்க முடியாது.

எனக்கும் அவருக்கும் 30 ஆண்டுகள் பழக்கம். மாதக்கணக்கில் அவரைப் பார்க்காமல் இருந்தாலும், நானும் அவரும் சேர்ந்தே இருப்பதைப் போல உணர்கிறேன். அதனால்தான் சென்னையில் எனக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல நினைக்கிறேன்.

பாலிவுட்டில் ரஜினிக்கு கிடைக்கும் வரவேற்பு, அவருக்கு பெரும் ரசிகர்களைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் சகோதரர் ரஜினிக்கு நிகராக ஹாலிவுட்டில் கூட நடிகர்கள் இல்லை. இப்படி நான் சொல்வதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை… வேறு யாரையாவது இப்படிச் சொன்னால்… ‘இல்லையில்லை.. இது தவறு. அந்தப் பெருமைக்குரியவர் ரஜினிதான்’ என தயங்காமல் சொல்வேன்!!

-பாலிவுட்டில் இணையில்லா சகாப்தமாகத் திகழும் ‘ஒன் அன்ட் ஒன்லி’ அமிதாப் பச்சன்.

-என்வழி ஸ்பெஷல்
9 thoughts on “ஒருநாள் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ரஜினி?

 1. பாவலன்

  அமிதாப் அசத்தி விட்டார் ! கமல் ஹாசன் ஒரு நாள் கூட
  இப்படி ரஜினியைப் பாராட்டியதில்லை.

  அமிதாபிற்கு நன்றி.

  -பாவலன்

 2. சேனா

  அமிதாப் பெருந்தன்மையின் சிகரம். அதனால்தான் தலைவரின் உடன்பிறவா சகோதரராக இருக்கிறார்

 3. குமரன்

  Hats of to Amitabh! He is not only a tall man but also a tall personality, indeed.

  அமிதாப் உயர்ந்த மனிதர்!

 4. மு. செந்தில் குமார்

  அமிதாப் அசத்தி விட்டார் !

  அமிதாப் ஒரு நேர்மையான மனிதர்.

  அமிதாப் பெருந்தன்மையின் சிகரம். அதனால்தான் தலைவரின் உடன்பிறவா சகோதரராக இருக்கிறார்

  அமிதாபிற்கு நன்றி.

  -> அமிதாப் அவர்களின் வரிகளை படிக்கிரபொழுது மனதுக்கு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

 5. குமரன்

  ஒருநாள் போதுமா? ஒருநாள் போதுமா?
  நீ ஆளா ஒருநாள் போதுமா?

  வறுமையை ஒழிக்க ஒருநாள்
  ஊழலை ஒழிக்க ஒருநாள்
  நேர்மை செழிக்க ஒருநாள்
  கல்வியை வளர்க்க ஒருநாள்
  ஒற்றுமை ஓங்க ஒருநாள்
  அன்புள்ளம் தழைக்க ஒருநாள்
  மனிதம் பிழைக்க ஒருநாள்
  மக்கள் சிரிக்க ஒருநாள்
  உழைப்போர் சிறக்க ஒருநாள்
  நன்மைகள் ஓங்க ஒருநாள்
  தீமைகள் சாய ஒருநாள்
  நல்ல திருப்பங்கள் நேர ஒருநாள்

  ……

  பாவலன் கூட ஒரு பாட்டு எழுதலாம் “ஒருநாள் போதுமா” மெட்டில்!

 6. r.v.saravanan

  நிறைய திட்டங்களை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறீர்களே தலைவா!

  அதே தான் எனக்கும்

 7. winston

  தமிழகத்தின் தலைமகனே..
  தரணி போற்றும் கலைமகனே..!

  உன் எளிமை, உலகுக்கு பெருமை..
  உன் சிரிப்பு, எங்களுக்கு வியப்பு..!

  இமயமலைக்கு நீ சென்றாலும் தனிமை உனக்கு கிடைக்காது..
  காரணம்,
  பனி பாறைகளும் உன் ஆட்டோகிராப் கேக்கும்.,
  உன் கடைகோடி ரசிகனாய்..!

  குமரியின் வள்ளுவர் சிலையானாலும் சரி,
  துபாயின் வானம் தொடும் கட்டிடங்கள் ஆனாலும் சரி,
  உன் புகழ் உச்சியை தொட முடியாது..!

  அமெரிக்காவின் முப்படைகளும் தோற்கும்..
  உன் ரசிகர்களின் பாச படைக்கு முன்..!

  வானில் நட்சத்திரங்கள் போராமை படுகின்றன..
  உன் நட்சத்திர அந்தஸ்தை பார்த்து..
  பிறகு ஏன் நாங்கள் கவலை படவேண்டும்,
  பூமியில் உள்ள உன் நிழல்களை கண்டு..!

  காத்து இருக்கிறோம் உன் கோச்சடையன் காக..
  தரிசனம் தருவாய் என்ற நம்பிக்கையில் மட்டும் அல்ல.
  தமிழகம் ஆள்வாய் என்ற நம்பிக்கையில் கூட…!

  என்றும் அன்புடன்..
  உன் ரசிகன் வின்ஸ்டன் ராஜ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *