BREAKING NEWS
Search

100 ஆண்டு இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா! – கருத்துக் கணிப்பில் முதலிடம்

100 ஆண்டு இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா – கருத்துக் கணிப்பு முடிவு

ilayaraaja

நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் இணையற்ற இசையமைப்பாளர் இளையராஜாதான் என சிஎன்என் – ஐபிஎன் கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

1913-ம் ஆண்டு இந்திய சினிமாவின் முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா வெளியானது. தாதா சாகேப் பால்கேதான் அதன் இயக்குநர்.

இப்போது நூறாண்டுகளைக் கடந்துள்ளது இந்திய சினிமா. இந்த நூறாண்டுகளில் சினிமாவில் எத்தனையோ சிறந்த கலைஞர்கள் தங்கள் படைப்புகளை, ஆற்றல்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இவர்களில் துறை வாரியாக சிறந்தவர் யார் என்று தீர்மானிக்கும் உரிமையை மக்களுக்கே வழங்கி, ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது சிஎன்என் – ஐபிஎன் நிறுவனம்.

சிறந்த நடிகர்

நடிகர்களில் அதிக வாக்குகள் கிடைத்தது தெலுங்கு சினிமாவின் என்டி ராமாராவுக்குத்தான். 53 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். கமல் ஹாஸனுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன. சூப்பர் ஸ்டார் ரஜினி, சாதனை நடிகர் அமிதாப், ஷாரூக்கான் போன்றவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வாங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. மாதுரி தீக்ஷித் 16 சதவீத வாக்குகளும், சாவித்திரி 12 சதவீத வாக்குகளும் பெற்றார்.

சிறந்த  படம்

100 ஆண்டு சினிமாவில் கமல் நடித்த நாயகன்தான் சிறந்த படம் என 42 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஷோலே-வுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்தன.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநருக்கான வாக்கெடுப்பில் மணிரத்னம் 29 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடம் கே பாலச்சந்தருக்கு. 18 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். சத்யஜித்ரே-க்கு 14 சதவீத வாக்குகளும், ஷங்கருக்கு 9 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா

இந்திய சினிமாவில் கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா என இந்த கருத்துக் கணிப்பில் 44 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மானுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

-என்வழி செய்திகள்




9 thoughts on “100 ஆண்டு இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா! – கருத்துக் கணிப்பில் முதலிடம்

  1. குமரன்

    இதுவும் கடந்து போகும் ……..
    என்ற மனப்பக்குவம் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    ஆமாம், உண்மைதான்

    “கடலும்” கடந்து போகும் …….

    மணிரத்தினம் சொல்கிறார் !!!!!!!!!!!!!!

  2. குமரன்

    ராஜா இந்திய திரை இசையின் இன்றைய ஈடில்லாத ராஜாதான்

    ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தமது தற்கால திரை அறிவை வைத்தே வாக்களித்திருகிறார்கள் என்பதுதான் உண்மை. நூறாண்டுகாலத் திரைப்படங்களை அவர்கள் பார்த்துத்தான் வாக்களித்திருப்பார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். ஸ்ரீ தேவியை விடவும், என்.டிஆரை விடவும், மாதுரி தீட்சித்தை விடவும் சிறந்த நடிகர்களை இந்தியத் திரை kaNdirukkiRathu என்பதே enathu karuththu.

  3. R. Hari hara krishnan

    “இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தமது தற்கால திரை அறிவை வைத்தே வாக்களித்திருகிறார்கள் என்பதுதான் உண்மை. நூறாண்டுகாலத் திரைப்படங்களை அவர்கள் பார்த்துத்தான் வாக்களித்திருப்பார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக அமையும். ஸ்ரீ தேவியை விடவும், என்.டிஆரை விடவும், மாதுரி தீட்சித்தை விடவும் சிறந்த நடிகர்களை இந்தியத் திரை கண்டிருக்கிறது என்பதே எனது கருத்து.”

    Fact! Fact! Fact!

    குமரன் உங்கள் கருத்தே எமது கருதும்.

    ரஜினி, அமிதாப், நடிப்புலகில் இவர்கள் கடந்த 40, 50 வருடங்களாக இந்த துறையில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களை, போட்டியிலே சேர்க்கவில்லை என்பது இவர்களின் கருத்துகணிப்பின் மேல் உள்ள நம்பிக்கை எவ்வளவு தூரம்? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    இந்தியாவில் எதுவுமே நேர்மையாக, பொதுவாக, நம்பிக்கை வைக்கும் அளவுக்கு இல்லை என்பது சகிக்க முடியாத உண்மை!.

  4. chozan

    இளையராஜாவை ஏற்றுகொள்ளும் நாம் மற்றவர்களை ஏற்க முடியவில்லை. சிவாஜிகணேசன் என்ற மாபெரும் கலைஞன்?

  5. மிஸ்டர் பாவலன்

    //ரஜினி, அமிதாப், நடிப்புலகில் இவர்கள் கடந்த 40, 50 வருடங்களாக இந்த துறையில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்களை, போட்டியிலே சேர்க்கவில்லை என்பது….//

    நண்பர்களே.. சிம்மக்குரலோன், கட்டபொம்மன், சிவாஜி கணேசனுக்கு
    மேலாகவா 100 ஆண்டு இந்திய சினிமாவில் ஒருவர் நடித்திருக்கிறார்?
    சிவாஜி அளவிற்கு பிற நடிகர்கள் நடிப்பில் சாதனை செய்ததில்லை
    என்பது தான் என் கருத்து.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  6. srikanth1974

    இசைஞானி இளையராஜா.அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
    மேலும் திரு.குமரன்.மற்றும் திரு.R .ஹரி ஹர கிருஷ்ணன்.அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.அவர்களின் கருத்துக்கள் முழுக்க முழுக்க உண்மையே .

  7. enkaruthu

    ஒரு ரத்தகொதிப்பு மருத்துவர் செய்யும் வேலையை இசைஞானி இளையராஜா தன் விரலால் செய்திருக்கிறார் என்பதே உண்மை.

  8. venkat

    ஆல்

    with due credit to alll who was rated I beg to differ. The eras cannot be compared and it is not right.

    The same logic applies to all sports,music and whateever it is

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *