BREAKING NEWS
Search

மே 9-ம் தேதி கோச்சடையான் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்கக் காத்திருக்கிறேன்! – லதா ரஜினிகாந்த்

மே 9-ம் தேதி கோச்சடையான் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்கக் காத்திருக்கிறேன்! – லதா ரஜினிகாந்த்

vikramasimha-movie-curtain-raiser-trailer-launch-photo-stills2

கோச்சடையான் சொன்ன தேதியில் வெளியாகிறது. வழக்கமாக அவர் படங்களை எப்படி ரசிகர்களுடன் பார்ப்பேனோ, அதே போல கோச்சடையான் முதல் காட்சியையும் ரசிகர்களுடன் பார்க்கப் போகிறேன், என்றார் லதா ரஜினிகாந்த்.

மே 9-ம் தேதி ரிலீஸ்

கோச்சடையான் குறித்து கடந்த சில தினங்களாக வந்த செய்திகள் குறித்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நேற்று அளித்த பேட்டியில், “என் கணவர் நடித்து, மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் வெளியீட்டு ஏற்பாடுகள் சரியானபடி நடந்து வருகின்றன.

vikramasimha-movie-curtain-raiser-trailer-launch-photo-stills-44_bee8c7

சொன்னபடி மே 9-ம் தேதி படம் வெளியாகும். அவர் படங்களை இத்தனை ஆண்டுகள் எப்படி ரசிகர்களுடன் பார்த்தேனோ, அதே போல கோச்சடையான் முதல் காட்சியையும் ரசிகர்களுடன் பார்க்கப் போகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

முதல் ஆளாக வாக்களித்தது ஏன்?

இந்தத் தேர்தலில் ரஜினி முதல் ஆளாக வாக்களித்தது குறித்து லதா கூறுகையில், “முதல் ஆளாகப் போய் வாக்களிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுப் போகவில்லை. காலையில் கொஞ்சம் காத்திருந்துவிட்டு வாக்களிப்பது அவர் வழக்கம். இந்த முறை கொஞ்சம் சீக்கிரமா போய் வாக்களிக்கலாமே என்று சென்றுவிட்டார். அவர் இதை திட்டமிடவில்லை, தானாக நடந்தது,” என்றார்.

Rajini-voting

மோடியுடன் சந்திப்பு

நரேந்திர மோடி வீடு தேடி வந்து ரஜினியைச் சந்தித்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த லதா, “என் கணவர் மருத்துவமனையில் இருந்த போதே வந்து பார்த்து விசாரித்தவர் மோடி. அவர் நண்பர் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்.

10253999_767167299974604_3812742916695492134_n

அவர் எங்கள் வீட்டுக்கே வந்து சந்தித்து பெருமைப்படுத்தியிருக்கிறார். எங்களுக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பை இந்த சந்திப்பு காட்டியது,” என்றார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *