BREAKING NEWS
Search

அரசாங்கங்களையே மாற்றும் சக்தி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி – பிரபல இயக்குநர் பேச்சு

அரசாங்கங்களையே மாற்றும் சக்தி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி – பிரபல இயக்குநர் பேச்சு

Rajini-pc-book-envazhi95 copy

சென்னை: அரசாங்கத்தையே மாற்றும் சக்தி மிக்கவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த மாமனிதரை வைத்து லீடர் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன், என்று கூறியுள்ளார் பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சேகர் கம்முலா.

சூப்பர் ஸ்டார் ரஜினி… இந்த மந்திரச் சொற்களை தினமும் ஏதாவது ஒரு தருணத்தில் உச்சரிக்காதவர்களே இந்தியத் திரைத்துறையில் இல்லை எனும் அளவுக்கு ரஜினியின் தாக்கம் உள்ளது.

அவரைச் சந்திக்க வேண்டும்… படம் எடுத்துக் கொள்ள வேண்டும்… பேச வேண்டும்… கதை சொல்ல வேண்டும்.. அவரை வைத்து இயக்க வேண்டும்… இப்படி பல சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி ரஜினி குறித்து திரையுலகினர் பேசுவது வழக்கம்.

அதிலும் ரஜினியை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்பது அத்தனை இந்திய இயக்குநர்களுக்கும் ஒரு கனவு என்றால் மிகையல்ல. அட்லீஸ்ட் கதையாவது சொல்லிவிடவேண்டும் என்பது இளம் இயக்குநர்கள் பலரின் விருப்பம். அதை அவர்கள் பல்வேறு தருணங்களில் வெளியில் சொல்லி, அது ரஜினியின் கவனத்துக்குப் போய், சிலரை அவரே அழைத்துப் பேசி, கதை கேட்டு அவர்களின் கனவை நிறைவேற்றுவதும் உண்டு.

அப்படி ஒரு கனவு பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சேகர் கம்முலாவுக்கும் உள்ளது. சினிமா தெரிந்தவர்களுக்கு சேகர் கம்முலாவைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

தனது முதல் படமான டாலர் ட்ரீம்ஸுக்காக தேசிய விருது பெற்றவர். தொடர்ந்து அவர் இயக்கிய கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைப் ஈஸ் பியூட்டிபுல் படங்கள் விருதுகளையும் வசூலையும் குவித்தவை. குறிப்பாக லீடர் படம் தெலுங்கு தெரியாதவர்களையும் ஈர்த்தது. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து நமன் ராமச்சந்திரன் என்பவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் சேகர் கம்முலா பேசுகையில், “இத்தனை ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்ற உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர்கள் யாரும் இல்லை. சினிமா உலகின் அடையாளம் அவர்தான்.
I-would-love-to-direct-Rajinikanth-Sekhar-Kammula
லீடர் படத்தை இயக்கிய பிறகு, எப்படியாவது ரஜினியைச் சந்தித்துவிட முயன்றேன். ஆனால் சந்தர்ப்பம்  வாய்க்கவில்லை. லீடர் படத்தை ரஜினியை வைத்து தமிழில் இயக்க விரும்புகிறேன். அந்த ரோலுக்கு அவரை விட பொருத்தமானவர் யாரும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, அரசாங்கங்களையே மாற்றும் சக்தி அவருக்குத்தான் உள்ளதென நம்புகிறேன். அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்., ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பொருத்தமானவர் அவர். யெஸ்.. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் லீடர் ரீமேக்கில் அவரை இயக்க மனசார ஆசைப்படுகிறேன் ” என்றார்.

சேகர் கம்முலாவின் குரல் இந்நேரம் தலைவரை எட்டியிருக்கும். படம் செய்கிறாரோ இல்லையோ… நிச்சயம் அவரிடமிருந்து அழைப்பு வரும்!

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “அரசாங்கங்களையே மாற்றும் சக்தி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி – பிரபல இயக்குநர் பேச்சு

 1. sing

  “இத்தனை ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்ற உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர்கள் யாரும் இல்லை. சினிமா உலகின் அடையாளம் அவர்தான்.”-நன்றி

 2. veera

  கட்சியின்றி கொடியின்றி ஒரே வார்த்தையில் அரசாங்கத்தை மாற்றி அமைத்த அனுபவம் அவருக்கு ஏற்கனவே உண்டு.

 3. vasanthan

  அரசாங்கங்களையே மாற்றும் சக்தி அவருக்குத்தான் உள்ளதென நம்புகிறேன். அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்., ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பொருத்தமானவர் .உண்மை

 4. mugilan

  இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தானே லீடர் படம் யன்ன கதை அரசியல் படமா படமா கமெர்சியல் படமா தலைவா

 5. kumaran

  கரும வீரர் காமராஜரையும் , அறிஞர் அண்ணாவையும் மிக்ஸ் பண்ணவர் தான் நம் தலைவர் ! ஆனால் அனேக மக்களுக்கு இது தெரியவில்லை! ரஜினி ரசிகர்களாகிய நாம் தான் இதை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும் .

 6. mohanraj

  தலைவா உன்னுடைய பொற்கால ஆட்சிக்காக காத்திருகோம்………

  தலைவா நீங்கள் எந்த வழியோ நாங்கள் அவ்வழியே …..

  மோகன்ராஜ்
  மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *