BREAKING NEWS
Search

எப்படி இருக்கிறது ஷங்கரின் ஐ?

ஐ விமர்சனம்

I-china

டிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், ராம்குமார், உபேன் படேல், சுரேஷ் கோபி, ஓஜாஸ் ரஜனி

ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ்

இயக்கம்: ஷங்கர்

ஒரு சாதாரண கதைக்கு பிரமாண்ட முலாம் பூசி, தொழில்நுட்பத் தோரணம் கட்டி வெள்ளித்திரையில் விட்டிருக்கிறார்கள். மூன்று மணி நேரம் 10 நிமிடங்கள் பார்த்து முடித்த பிறகு மனசுக்குள் தோன்றுவது.. ‘இதற்காகத்தானா இத்தனை களேபரமும்!’ என்பதுதான்.

படத்தின் கதை? உலகப் புகழ் மாடல் அழகி எமிக்கும் உள்ளூர் ஆணழகன் விக்ரமுக்கும் காதல். இருவரும் திருமணம் செய்யும் நேரத்தில், இந்தக் காதலால் பொறாமையில் பொசுங்கும், எமியின் முன்னாள் மாடல் உபேன், விக்ரமை ஒருதலையாய் காதலிக்கும் திருநங்கை ஓஜாஸ், விக்ரமால் தொழில் நஷ்டமடையும் ராம்குமார், அப்பா வயசிலிருக்கும் எமியின் ஒருதலைக் காதலன் சுரேஷ் கோபி… இந்த நால்வரும் கூட்டு சேர்ந்து விக்ரமை அகோர வடிவ கூனனாக மாற்றிவிடுகிறார்கள். அவர்களை விக்ரம் பழிவாங்குவதும், மீண்டும் எமியுடன் எப்படிச் சேர்கிறார் என்பதும்தான் கதை.

helleluja
படத்தின் முதல் பாதி சரியான விஷுவல் கம் இசை விருந்து. பிசி ஸ்ரீராமும் ஏ ஆர் ரஹ்மானும் கலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக சீனாவின் இயற்கை அழகு மனதை கொள்ளையடிக்கிறது. இதற்காகவே இன்னொரு முறை படம் பார்க்க ஆசையாக உள்ளது. ஆனால் முதல் பாதி முடியும் முன்பே எழுந்து வந்துவிட வேண்டும்.

இரண்டாம் பாதியில் குறை என்று சொல்ல ஆரம்பித்தால், அந்த ஒன்றரை மணிநேரப் படத்தில் தொன்னூறு சதவீதத்தை நறுக்க வேண்டி வரும். அறுபதுகளில் பார்த்த வில்லன்கள் கூட்டு சதி – பழிவாங்கல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

I-Movie-Stills

அதுக்கும் மேல, அதுக்கும் மேல என்று கூறி, கருட புராணத்தையே மிஞ்சும் புதுப்புது தண்டனை உத்திகளை டெமோ காட்டுகிறார் ஷங்கர்.

படம் தேவையில்லாமல் மூன்று மணி நேரத்துக்கு மேல் நீள்கிறது. 40 நிமிட காட்சிகளை தாராளமாக வெட்டலாம். அந்த பாடி பில்டர்ஸ் ஷோ நீளம், சீனாவில் விக்ரமிடம் திருநங்கையும் செய்யும் சகிக்க முடியாத சில்மிஷங்கள், அந்த மிருகப் பாட்டு, விளம்பரங்களால் உருவாக்கப்பட்ட பாடல், கூட்டம் கூட்டமாக அடித்துக் கொள்ளும் சண்டைகள், பவர் ஸ்டார் சீனிவாசன் காட்சி (எந்திரனை கிண்டலடிக்கிறார்களாமாம்!), பள்ளி மாணவியாக வரும் எமியிடம் சுரேஷ் கோபின் வக்கிர சிலுமிஷம்… இப்படி நீக்க வேண்டிய காட்சிகளின் பட்டியல் பெரிது.

படத்தில் இரு ஹீரோக்கள். ஒருவர் விக்ரம். அபார உழைப்பு. பிரமிப்பூட்டும் நடிப்பு. இத்தனை கஷ்டமான பாத்திரத்தை வெகு இயல்பாகச் செய்திருக்கிறார். அந்த சைக்கிள் சண்டைக் காட்சியில் அசத்தியுள்ளார். கூனன் வேடம் பெரிய சவால். அதிலும் வென்றிருக்கிறார்.

இன்னொரு ஹீரோ, ஏ ஆர் ரஹ்மான். அய்ல அய்ல பாட்டு, விளம்பரங்களின் தொகுப்பாக இருந்தாலும், அந்த உறுத்தல் இல்லாமல் பார்க்க, ரசிக்க முடிகிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை அனைத்துமே அருமை.

Vikram-Amy-Jackson-Stills-2

எமி ஜாக்ஸன் இந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வுதான். அவரும் விக்ரமுக்கு ஈடு கொடுத்துள்ளார். குறிப்பாக கூனனாக இருப்பது விக்ரம்தான் என்பதை அறிந்து அவர் காதலில் உருகும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

சந்தானம் காமெடியன் மட்டுமல்ல.. வழக்கமாக ஷங்கர் படங்களில் வரும் ஆபத்பாந்தவனும் கூட.

நான்கு வில்லன்களும் இயக்குநர் சொன்னதைச் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இந்த பூமியில் இத்தனை அழகான இடங்கள் இருக்கிறதா என கேட்க வைக்கிறார். அருமை அருமை!

ஷங்கர் பிரமாண்ட இயக்குநர்தான். காட்சிகளை உருவாக்குவதில் நிபுணர்தான். ஆனால் கதை, அழுத்தமான சம்பவங்களின் தொகுப்பாக ஒரு திரைக்கதையைத் தரத் தவறியிருக்கிறார்.

விக்ரம், எமி, ரஹ்மான், பிசி ஸ்ரீராம் என அருமையான கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு சலிப்பில்லாத பொழுதுபோக்குத் தந்திருக்கிறார். அதற்காக கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம்!

 வினோ

-என்வழி

 
28 thoughts on “எப்படி இருக்கிறது ஷங்கரின் ஐ?

 1. Saravan

  Innum pakkanumnu interest varala… May be after reading this review I might think about watching it on Saturday

 2. Robert Silvester

  படம் சரவெடியா இருக்கும்னு பாத்தா புஸ்வானமாச்சு.முக்கியமா அந்த திருநங்கை வரும் இடமெல்லாம் கண்டிப்பாக குடும்பமா பார்க்க முடியாது. ஒரே ஒரு ப்ளஸ் விக்ரம் ஆக்டிங். ஏமாத்தி டீங்க சங்கர் சார்.

 3. Deen_uk

  நடு நிலையான விமர்சனம்! நீங்கள் எழுதிய அதே விமர்சனம் தான் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் இருக்கும் என நினைக்கிறேன்..சிறந்த பொழுது போக்கு படம்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் குறை சொல்ல முடியாது.ஆனால் முழு திருப்தி இருக்காது!
  பி சி ஸ்ரீ ராமின் காமெரா மற்றும் ஏ ஆர் ரஹ்மானின் இசை விருந்து ,விக்ரமின் உழைப்பு மறக்க முடியாது..ரஹ்மானின் இசைக்காக இன்னொரு முறை பார்க்க வேண்டிய படம்! ரோஜா படத்திற்கு பிறகு நான் இசையில் லயித்த படம் இது.
  குறிப்பாக அந்த transgender விக்ரம் மேல் ஆசைப் பட்டு வரும் காட்சியில்,யப்பா..சான்சே இல்ல.முற்றிலும் வித்யாசமான ஒரு மியூசிக் பிட் வரும்! நிறைய இந்த மாதிரி வித்தியாச இசை படம் முழுக்க தூவி இருப்பார்!
  பார்த்து பார்த்து இழைத்த இசைகள்! எனக்கு இந்த படத்தை நமது சென்னையில் உள்ள தியேட்டர்களில் பார்க்க ஆசை,காரணம் இங்கு லண்டனில் தியேட்டர்களில் நமது நாட்டில் உள்ள சவுண்ட் சிஸ்டம் கிடையாது..இந்த மொக்கை சவுண்ட் அமைப்பிலேயே இவ்ளோ சூப்பரா இருக்குனா சென்னை ல உள்ள theaters எப்படி இருக்கும்! ..மிஸ் u சென்னை!
  anyway என்ஜாய் தி மூவி!

 4. Rajagopalan

  Please stop putting other films reviews in our site…
  This site should be only for thalaivar & his films…

 5. Rishi

  குரோதம், வன்மம், பழி வாங்குதல், காம வெறி, திருநங்கைகளுக்கு எதிரான கேலி இப்படி சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அத்தனையும் உள்ள ஐ படத்தை கொண்டாடும் சமூக வலைதள தமிழர்களை கண்டு பயம் கொள்கிறேன்.

  அன்பு, கருணை, பக்தி, நட்பு, சாதி மத ஒற்றுமை, தேச பற்று, பகைவர்களை மன்னித்தல், சமுதாய தொண்டு, கெட்டதை செய்வோருக்கும் நல்லதை செய்ய வேண்டும், என்று யோசிக்க வைத்த லிங்கா படத்தை பழிக்கும் சமூக வலைதள தமிழர்களை என்னவென்று சொல்வது.

  இந்த நாடும், நாட்டு மக்களும் ….. போகட்டும்.

 6. baba

  திரு.ரிஷி,

  நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி…இரட்டை அர்த்தம் இல்லாமல் நேரடி ஆபாச வசனங்கள்…திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சி…விக்ரமின் மட்டமான மெட்ராஸ் பாஷை…இந்த படத்தில் வெகு சில positive காட்சிகளே உள்ளன…மற்ற அனைத்தும் பாய்ஸ் படத்தை விட வாந்தி வரும் ரகம்…ஆனால் இந்த முன்றாம் தர மீடியாக்கள் இந்த படத்தை ஆஹா ஓகோவென்று கொண்டாடுகிறார்கள்…இதே முன்றாம் தர மீடியாக்கள் தான் நமது தலைவரின் நல்ல கருத்துள்ள படத்தை சதி செய்து இருட்டடிப்பு செய்தனர்…

  நல்லவர்களுக்கு இப்பொழுது காலம் இல்லை போலிருக்கிறது…எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்….

  Jaihind

  பாபா…

 7. Prabahar

  இது ஷங்கரின் படமா ?! A.R.ரஹ்மான் இசையா?! நம்பமுடியவில்லை. மிக மிக சாதாரண கதை, ஊகிக்க கூடிய திரைக்கதை, தேவையற்ற பத்திரப்படைப்புகள் (திருநங்கை), அதிகப்படியான நீளம் (நான் பார்த்த திரையரங்கில் இடைவெளியே இல்லை – AMC, Santa Clara, CA). எப்பொழுதுடா படம் முடியுமேன்றகிவிட்டது.

  ஷங்கர் பணத்தை எப்படி செலவழிப்பது என யோசித்தலில் காட்டியது போல கதை மற்றும் திரைக்கதையமைப்பில் காட்டியிருந்தால் படம் மிக நன்றாக வந்திருக்கும்.

  விக்ரமின் உழைப்பு மற்றும் அர்பணிப்புக்காக (நடிப்பிற்காக அல்ல) ஒருமுறை பார்க்க முயற்சிக்கலாம் (தவிறினாலும் இழப்பில்லை).

 8. sk

  shankar disappointed big time..i just couldnt sit through the movie…1st half was torchure except for the visuals…too lengthy and aritificial…2nd half relatively better
  the scenes in china were testing the patience levels..worse were those scenes with that eunuch character..More efforts have been put for different makeups of hero & villain, but i didnt find it pleasant to watch them…
  fight scenes were too lengthy..the beast get up was completely unwanted…
  rahman BGM was better than the songs…he lost his magic…
  as i said b4 , rahman’s BGM was big let down in thalaivar’s lingaa as well
  santhanam was saving grace and vikram was better as body builder..tat portion of story was little watchable

  finally it was like a star hotel buffet…huge spread , excellent presentation but when u start having the food it will be tasteless…i felt pity for vikram for putting so much hard work for this movie…shankar’s USP is movies with social message combined with grandeur…

  I hope Shankar comes back strong…next thalaiavr movie should be with shankar or gautam vasudev menon with Anirudh or Harris music…i suggest that they do a movie based on social media evils …thalaivar should be shown as a 45+ year old person so that they dont torchure and degrade his health too much..something like a crime thriller genre..vino sir, please pass this fans wish through your sources 🙂

 9. ganesh

  Sir,
  movie is boring. Fake websites and media is going to create an illusion of being a hit. In jaya tv advt for kathi screenig shortly has come. you please write the status of lingaa every now and then.

 10. srikanth1974

  திரு.ரிஷி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

 11. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. ஷங்கர் படத்திற்கும், மணிரத்னம் படத்திற்கும் இசை போட
  ரகுமான் எடுத்துக்கொள்ளும் முயற்சி ரஜினி படங்களுக்கு எடுத்துக்
  கொள்வதில்லை.. லிங்கா படத்தின் இசை படு சுமார் ராகம்.. பாட்டு சரியில்லை.. நண்பா பாடலையும் காப்பாற்றியது எஸ்.பி. பாலாவும்,
  ரஜினியும்.. இல்லை என்றால் அது வெறும் சாதாரண பாட்டு..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 12. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. ஷங்கருக்கு இவ்வளவு நாள் மறைந்த எழுத்தாளர் சுஜாதா பெரும் கை கொடுத்தார்.. சுஜாதா மறைவுக்கு பின் ‘ஐ’ படம் வந்திருப்பதால் படம் சுமார் ரகத்தில் வந்திருக்கிறது.. சுஜாதா எந்திரன் படம் முடியும் வரை இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 13. SIMBU

  படம் சூப்பர் , விக்ரம் அசத்தி இருக்கிறார் ….. கமலஹாசனை மிஞ்சும் அளவிற்கு நடித்திருக்கிறார். அவரை நாம் பாராட்டுவோம் …. ரஹ்மான் இசை லிங்கா படத்தில் சரி இல்லை…. ஏனோ தெரியவில்லை…. நாம் அனைவரும் இணைத்து ரஜினி எப் எம் தொடங்கி ரஜினியின் பாடல்களை ஒலி பரப்ப வேண்டும்…. அவரின் புகழை அன்றாடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

 14. RAJA

  லிங்காவும் சில இடங்களிலில் நீளம் அதை அப்போது சொல்லவில்லையே , எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

 15. மிஸ்டர் பாவலன்

  //கமலஹாசனை மிஞ்சும் அளவிற்கு நடித்திருக்கிறார்.//

  கமலஹாசனை நடிப்பில் யாரும் மிஞ்சியதில்லை இது வரை..
  ஸ்ரீ தேவி தவிர…

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 16. மிஸ்டர் பாவலன்

  குஷ்பூ அட்டை போட்ட குமுதம் இந்த வார இதழில்
  அடுத்த ரஜினி படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
  ஷங்கர் இயக்க இருக்கிறார் என்பது தான் அந்த தகவல்.

  இந்த செய்தி உண்மை என்றால் மிக மிக சந்தோசம்! நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 17. குதிரை மணி

  விக்ரம் நடிப்பு பிரமாதம் …. விஜய் சூப்பர் ஸ்டார் பட்டதை ஏற்க விழா எடுக்க போவதாக மீண்டும் செய்தி….

  வாழ்த்துக்கள் விக்ரம், மென் மேலும் வளர வாழ்த்துக்கள்….

 18. குதிரை மணி

  இது தொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

 19. Srinivas

  //
  //கமலஹாசனை மிஞ்சும் அளவிற்கு நடித்திருக்கிறார்.//

  கமலஹாசனை நடிப்பில் யாரும் மிஞ்சியதில்லை இது வரை..
  ஸ்ரீ தேவி தவிர…

  -=== மிஸ்டர் பாவலன் ==-
  //

  ரஜினிகாந்த் என்ற நடிகன் ஐ மறந்து விட்டீரா !!

 20. மிஸ்டர் பாவலன்

  ஸ்ரீனிவாஸ் அவர்களே.. மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த்
  தொடர்ந்து நடித்து வந்திருந்தால் கமல்ஹாசன் பெற்றது போல்
  நடிப்பில் பாராட்டு பெற்றிருப்பார். ஆனால் ரஜினிகாந்த் எஸ்.பி.
  முத்துராமன் இயக்கத்தில் (ஆறிலிருந்து, எங்கேயோ கேட்ட குரல்
  என்ற இரு படங்கள் தவிர) பெரும்பாலும் கமெர்சியல் படமே
  நடித்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்று வசூலில் சாதனை செய்தார்.
  மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி கடைசியாக நடித்த “கை கொடுக்கும் கை”
  மிக சிறந்த நடிப்பு. சூப்பர் ஸ்டார் இமேஜ் இல்லாமல் நடித்திருந்தார்.
  ஆனால் படம் படுதோல்வி அடைந்தது.

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *