BREAKING NEWS
Search

தனி ஈழம் கோரிக்கையை திமுக கைவிடவில்லை… குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்! – கருணாநிதி

தனி ஈழம் கோரிக்கையை திமுக கைவிடவில்லை… குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்! – கருணாநிதி


சென்னை: தமிழ் ஈழம் குறிக்கோளை திமுக கைவிட்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடக்கவிருக்கும் டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஆனால் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை மீட்பு பற்றி விவாதிக்கப்படும் என கருணாநிதி நேற்று அறிவித்தது முதல், அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தனது பேட்டி குறித்தும், தனி ஈழ விஷயத்தில் திமுக நிலைப்பாடு குறித்தும் புதன்கிழமை கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் கோரிப் பெறுவற்கும், போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவதற்கும் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதுதான் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை டெசோ மாநாட்டின், திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.

ஈழக் கோரிக்கையை கைவிடவில்லை

மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் விவாதிக்கப்படுவதாலோ அல்லது நிறைவேற்றப்படுவதாலோ தமிழ் ஈழம் என்ற குறிக்கோளை திமுக கைவிட்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று நிருபர்களிடம்  நான் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆனால், சில  ஏடுகள் மற்றும் சில நண்பர்கள் தெளிவாக நான் அளித்த அந்தப் பேட்டியையே குழப்பம் என்று குதர்க்கவாதம் செய்வது, நாம் தமிழ் ஈழக் கோரிக்கையையே கைவிட்டு விட்டோம் என்பதைப் போல பேசுவதை பார்க்கும் போது, நமது கருத்தைக் கேலி செய்வதையோ வாடிக்கையாகக் கொண்டுள்ளவர்களிடமிருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த மாநாடு பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கு நான் கூட்டிய செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்த டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது, நான் விரிவாக அளித்த பதிலை மீண்டும் இப்போது நினைவூட்ட விரும்புகிறேன். அந்தப் பதில் வருமாறு :

தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போதே அழுத்தந்திருத்தமாகச் சொல்லி,  அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை.

ஏனென்றால் அங்கே நடைபெற்ற ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, ஆயுதப் போராளிகளை சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது,

இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத் தான் இந்த மாநாட்டைக் கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய நோக்கமாகும் என்று நான் தெளிவாகவே குறிப்பிட்டேன்.

நிறைவேறாத கனவு…

தமிழ் ஈழம் இதுவரை எனது நிறைவேறாத கனவு என்று நான் அன்று சொன்னதை எப்போதும் சொல்வேன், இப்போதும் சொல்கிறேன். என்னுடைய நிறைவேறாத ஆசை அது தான். தனித் தமிழ் ஈழம் என்று முன்பு நான் சொன்னதை இப்போதும் சொல்வதற்கு தயங்கவில்லை.

தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம். அதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும் என்றும் நான் திட்டவட்டமாக என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

பொது வாக்கெடுப்பு

மேலும் பொது வாக்கெடுப்பு பற்றிய எந்தக் கருத்தும் விவாதத்திற்கான கருத்துரு தொடர்பான அறிக்கையில் சொல்லப்படவில்லையே? என்று கேட்கப்பட்ட போது, இந்த மாநாட்டிற்கு வருகின்ற பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம் அறிந்த பிறகு, முடிவெடுப்பது தான் ஜனநாயகம் என்ற காரணத்தால், நான் எதையும் முன்கூட்டியே சொல்லி யாரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை, அது நல்லதுமல்ல என்றும் விளக்கியிருக்கிறேன்.

எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்..

தனித் தமிழ் ஈழம் வேண்டும்; அதுவும் இன்றைக்கே வேண்டும். அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இவர் இப்படிச் சொன்னதால் தான், இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு இவர் தான் காரணம் என்பர்.

முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்து சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், பார்த்தீர்களா, தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பர்.

இவ்வளவிற்கும் பிறகும் ஒரு சிலர் தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டுவிட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம்.

-என்வழி செய்திகள்
11 thoughts on “தனி ஈழம் கோரிக்கையை திமுக கைவிடவில்லை… குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்! – கருணாநிதி

 1. chenthil uk

  Agree.. MK saying the same… Media like Dinamalar and AV/JV started diplomacy….

 2. Raja gomez

  கலைஞர் அவர்கள் என்னதான் சொல்லவருகிறார் என்பது ஒன்றுமே புரியவில்லை……மொத்தத்தில் கலைஞர் அவர்கள் தமிழக மக்களிடமிருந்து தூரமாய் போயகொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது….ஒரு நாள் சொல்கிறார் மறுநாள் அவர் சொன்னதையே மறுத்து அறிக்கை விடுகிறார்…..மொத்தத்தில் அவர் மத்திய அரசிடம் இவருடைய பிடி இருக்கிறதோ ஒன்றும் புரியவில்லை…….

 3. மிஸ்டர் பாவலன்

  //மொத்தத்தில் கலைஞர் அவர்கள் தமிழக மக்களிடமிருந்து தூரமாய் போயகொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது…// (Raja Gomez)

  எங்கே செல்லும் இந்தப் பாதை?
  யாரோ யாரோ அறிவாரோ?

  -== மிஸ்டர் பாவலன் ===-

 4. SASI

  இந்த கொசு தொல்ல தங்க மாட்டேங்குது ….

  டெய்லி ஒரு அறிக்கை

  விதம் விதமா , ரகம் ரகமா முடியல …..

 5. தினகர்

  “மறுநாள் அவர் சொன்னதையே மறுத்து அறிக்கை விடுகிறார்”

  தீர்மானம் போட மாட்டோம் என்று சொல்லி விட்டு தீர்மானம் போடுவோம் என்று மாற்றி சொன்னாரா என்ன?

  மாநாடு என்பது ஒரு விஷயம், தீர்மானம் என்பது இன்னொரு விஷயம, தமீழீழ கோரிக்கை என்பது மற்றுமொரு விஷயம். ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தாலும் ’தீர்மானம்’ தமிழீழத்திற்கு உடனே வழி வகுக்கும் என்றால் கைவிட்டது தவறு எனலாம். நீங்க நினைக்கிற மாதிரி உடனடி தீர்வு என்றால் இந்த பிரச்சனை ஏன் ஐம்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் நீடிக்கிறது. தீர்வு காண்பதற்கு ’டெசோ மாநாடு’ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது..

  விவரம் தெரியாமல் கலைஞரை சாட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கூப்பாடு போடும் உங்களைப் போன்றவர்கள் தமிழர்களுக்காக ஏதாவது துரும்பையாவது கிள்ளிப்போட்டீர்களா?

 6. enkaruthu

  இந்த கொசு தொல்ல தங்க மாட்டேங்குது ….

  டெய்லி ஒரு அமைச்சரை நீக்கிவிட்டேன் என்ற அறிக்கை.அப்படி மாற்றியும் மக்களுக்கு ஒன்றும் நடக்கமாட்டுங்குது.

  விதம் விதமா , ரகம் ரகமா முடியல ….. தப்பான மந்திரியை இவரே நியமித்துவிட்டு அப்புறம் தனக்கு ஏற்றபடி (ஒரு வேலை அந்த அம்மா காலில் சரியாக விழவில்லையோ) இல்லை என்பதால் யாருக்கும் சந்தேகம் வராதபடி மக்கள் நலனில் இவர் குறிக்கிடுகிறார் என்று பழி போட்டு நீக்குவது.இப்படி இந்த ஐந்து வருடமும் மந்திரி மாற்றி அமைப்பதிலையே போய்விடும் போலவே.

 7. SASI

  எங்கருத்துக்கு…
  மு க இதுவரை முதல்வராக இருந்த பொது இருந்த அனைத்து அமைச்சர்களும் தவறே செய்ய வில்லைய ?
  அவர் தேர்ந்தெடுத்த எல்லாரும் நல்லவர்கள் மட்டும் தான ?
  செங்கோட்டையன் போன்ற சீனியர் அமைச்சர் தவறு செய்யும் பொது அவர்களை மாற்ற துணிவு உண்டா? ( பொது குழு கூடி முடிவு செய்யும் என்ற பதிலே கிடைக்கும் )
  repeated அமைச்சர் மாற்றம் ஆட்சிக்கு கெடுதலே இருந்தும், அது அமைச்சரே ஆனாலும் தவறு செய்பவர்களுக்கு தண்டனை நல்லதே .
  கெட்டவர்கள் என்று தெரிந்து யாருக்கும் பதவி தருவதில்லை ,
  பதவிக்கு வந்ததும் அட்மேடிக்கா கெட்டவர்கள் ஆகிறார்கள் ,
  செங்கோட்டையன் மாற்றம் தவறே இல்லை …
  ஆனால் இது போன்று தொடர்ந்து நடவாமல் இருக்க வேண்டும் ….

 8. மிஸ்டர் பாவலன்

  //( பொது குழு கூடி முடிவு செய்யும் என்ற பதிலே கிடைக்கும் )// (சசி)

  🙂 🙂 🙂

 9. Manoharan

  தனி ஈழம் என் கனவு..கருணாநிதி.
  ஆமாங்க உங்க கனவு மட்டும்தான். நினைவு எல்லாம் உங்க குடும்பம்தான்.
  நீ பேசாம போய் காங்கிரசில் சேருய்யா…சோனியா சேலைய பிடிச்சுட்டு திரியத்தான் லாயக்கு..

  இவரெல்லாம் டெசோ மாநாடு நடத்தி கிழிசிடாலும்……

 10. enkaruthu

  சசி அவர்களே நான் ஒன்னும் முந்தைய கம்மேண்டில் கலைஞர் தேர்வு செய்த அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்த அமைச்சரைவிட நல்லவர் என்று சொல்லவில்லையே.
  இன்னும் சொல்லப்போனால் நான் கலைஞர் என்ற ஒரு வார்த்தையையே சொல்லவில்லையே.கலைஞர் செய்தது தவறுதான்(இதை எனக்கு சொல்லி சலித்துவிட்டது) என்று மக்கள் ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்தாகிவிட்டதே.ஆனால் நீங்கள் மாட்டும் என்ன ஒழுங்கு என்று மக்கள் பல இடத்தில அதுவும் மளிகை கடையில் இவர்கள் ஒரு பொருளை வாங்கும்பொழுது கலைஞரின் ஆளாவது ஒருத்தரைத்தான் சுரண்டினார் ஆனால் இந்த அம்மா விலை ஏற்றத்தின் மூலம் அனைத்து மக்கள் வாழ்க்கையையும் சுரண்ட பார்கிறாரே என்று புலம்புகிறார்கள். மேலும் என் நண்பன் நேற்று eb பில் கட்டும்பொழுது அங்கே கூடிருந்த மக்கள் எப்படி இவர்கள் பில் போடுகிறார்கள் என்றே தெரியவில்லையே கட்டும் தொகை ரொம்ப அதிகமாக இருக்கிறதே என்று இந்த ஆட்சியையும் eb துறையையும் திட்டி தீர்த்தார்களாம் .ஆனால் இந்த அம்மா எதை பற்றியும் கவலை படாமல் கொட நாட்டில் படகு சவாரி போகிறார்.
  இதற்க்கு நாளை உங்களின் குழந்தைகள் இதே சமுதாயத்தில் வாழபோகிறதே என்று சிறிதும் கவலை படாமல் உங்கள் ஈகோ காரணமாக தப்பு செய்தாலும் ஜெயாவுக்கு புராணம் படுகிறீர்கள்.ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்குதான் இந்த தமிழ்நாட்டின் தலைஎழுத்தை முடிவு செய்யும் உரிமையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் .எனவே தமிழ் நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் ஜெயலலிதா அவர்கள்தான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு. அவரை கேள்வி கேளுங்கள் அதை விட்டு விட்டு எந்த அதிகாரமும் இல்லாத முன்னாள் முதல்வரை எதற்கெடுத்தாலும் இழுப்பது என்பது ஒரு அரசியல்வாதி செய்யும் காரியம்,ஆனால் ஒரு ஆட்சியில் இன்னலை சந்திக்கும் பொது மக்கள் செய்யும் காரியம் அல்ல.

 11. மிஸ்டர் பாவலன்

  துபாயில் இருந்து நண்பர் அமானுல்லா எழுதிய நகைச்சுவை கட்டுரை:

  Amanullah – Dubai,ஐக்கிய அரபு நாடுகள்:

  மத்திய அரசை பகைத்துக் கொள்ளாத வகையில், வார்த்தை
  ஜாலங்களுடன் கூடிய, “தனி ஈழ தீர்மானம் தயாரிப்பது குறித்து என்னால்
  முடிந்த ஐடியா இதோ…” தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் கனவு..அதனை
  செயல்படுத்த வேண்டியதற்கு சிங்களர்களுக்கு தேவையோ கனிவு…
  திமுக ஒன்றும் ஏகதிபத்திய சிந்தனை உடைய கட்சி அல்ல சிங்களர்களை
  நிர்பந்திப்பதற்கு..அது ஒரு ஜனநாயக கட்சி..அதனால் தான் இந்த
  பிரச்சனையினை மென்மையாக அணுக முனைகிறது..அதற்க்காக
  தனி ஈழம் கோரிக்கையினை எங்களால் வலியுறுத்தாமல் இருக்க
  முடியாது. அதே நேரத்தில் மத்திய அரசுக்கு ஒரு தர்ம சங்கடமான
  நிலைமையினை ஏற்பட நாங்கள் காரணமாகவும் இருக்க
  கூடாது..பாதிக்கபட்ட தமிழர்களுக்கு தேவையான நிவாரணத்தினையும்
  உதவியினையும் சிங்கள அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை
  எங்களால் கோரிக்கை தான் வைக்க முடியும். அதனை செயல்படுத்த
  வேண்டியது ராஜபக்சேவின் விருப்பு. இதற்கு நாளையே ராஜபக்சேவிடம்
  ஒரு கண்டனம் வந்தால் அதனை சமாளிக்க வேண்டியது
  நாராயணசாமியின் பொறுப்பு. ஈழப் பிரச்சணையில் எங்களுடைய
  நிலையை கண்டு பொறாமைப்படும் நெடுமாறன் வைகோ
  போன்றவர்களுக்கு எங்கள் மீது உள்ளது வெறுப்பு..மீண்டும் கூறுகிறோம்
  தனி ஈழம் என்பது எங்கள் கனவு மட்டுமல்ல கோடான கோடி தமிழர்களின்
  கனவு..அதனை செயல்படுத்த வேண்டாமா இல்லையா என
  முடிவெடுப்பது ராஜபக்சேவின் தனிப்பட்ட உரிமை..
  இதனை சொல்ல வேண்டியது எங்களது கடமை”..

  -== அமானுல்லா, துபாய் ====-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *