BREAKING NEWS
Search

யாரையும் நான் ஆதரிக்கவில்லை… அனைவரும் வாக்களியுங்கள்! – ரஜினி

யாரையும் நான் ஆதரிக்கவில்லை… அனைவரும் வாக்களியுங்கள்! – ரஜினி

24-rajini-voting-600

சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை… அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள் என்று தலைவர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இன்று நடக்கும் வாக்குப் பதிவில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை..,” என்றார்.

அப்போது நீங்கள் தேர்தலில் யாரை ஆதரிக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘நான் யாரையும் ஆதரிக்கவில்லை’ என்றார்.

தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.

111

அதற்கு முன்னதாக மதிமுக பொதுச்செயலர் வைகோவும் ரஜினியை நேரில் சந்தித்தார். இதனால் ரஜினி தங்களது அணியை ஆதரிப்பதாக பாஜகவினர் கூறிவந்தனர். இந்த சந்திப்பு பாஜக செல்வாக்கு உயர உதவும் என்றும் கூறினர்.

ஆனால் மோடியுடனான சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது என்றே ரஜினி கூறிவந்தார். இன்றும் வாக்களித்த பின்னரும் தாம் தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

-என்வழி
19 thoughts on “யாரையும் நான் ஆதரிக்கவில்லை… அனைவரும் வாக்களியுங்கள்! – ரஜினி

 1. M.MARIAPPAN

  அய்யா இளங்கோ கோச்சடையான் அனிமேஷன் படம் தான் என்று எங்களுக்கு தெரியும் நீ வந்து புதுசா எதுவும் சொல்ல தேவை இல்லை .மேலும் விஜயகாந்த் கட்சி நின்ன 14 தொகிதியும் தோற்பது நிஜம் . கோச்சடையான் ஜெயபபது நிஜம் இது அந்த ஆண்டவனின் கட்டளை . சம்போ மகா தேவா .என்றும் தலைவரின் வெறியன் .

 2. Krishna

  இன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் திருமதி லதா ரஜினிகாந்த் – மோடியை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதுவதாக சொல்லியிருக்கிறார்.

  http://www.newindianexpress.com/cities/chennai/Modiji-is-Like-Part-of-Our-Family-Latha-Rajinikanth/2014/04/27/article2191633.ece

 3. srikanth1974

  திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கும்,

  திரு.m .மாரியப்பன் அவர்களுக்கும்,

  rajini fan என்றப் பெயரில் கருத்துக் கூறிய அந்த அன்பு நண்பருக்கும்,
  எனது மனமார்ந்த நன்றி.

 4. SIVA

  சினிமாவில் ரஜினி எங்கள் சூப்பர்ஸ்டார் ,என் குழந்தைகளுக்கும் அவரை
  பிடிக்கும். ஆனால் அரசியலில் அவர் ஒரு குழந்தை. அவர் எதிர்ப்பை கண்டு பயப்படுகிறார் .
  தன்னுடைய இமேஜ் சரிந்துவிட்டால் ,
  தன்னால் தன் ரசிகர்களுக்கு பிரச்சினை .
  கலைநரையும்,.ஜெவையும் எதிர்த்து அவரால் இன்றைய நிலைமையில் ஒன்றும் செய்ய முடியாது .
  அவர் இந்த நாட்டிற்கும் ஒன்றும் செய்ய தேவை இல்லை.,
  அவர் படம் ரிலீஸ் ஆனாலே
  எங்களுக்கு போதும்,.
  அவரை பார்த்துக் கொண்டிரிந்தாலே ,அவரை பற்றி பேசிக் கொண்டுஇருந்தால் போதும் .,

  விஜயகாந்த் எதற்காக அரசியலுக்கு வந்தார்
  என்பது முக்கியமல்ல.கருணாநிதி,.ஜெயலலிதா இவர்களை சலாம் போடாமல் எதிர்க்கும் துணிச்சல் ஒன்றே போதும்.அதுவே அவரின் வெற்றி.

 5. மிஸ்டர் பாவலன்

  //விஜயகாந்த் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பது முக்கியமல்ல.//

  கேப்டன் அரசியலுக்கு வந்து என்ன செய்தார் என்பது தான் முக்கியம்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 6. மிஸ்டர் பாவலன்

  //மக்களே …. சினிமா என்றால் நான் இன்னும் ரஜினி ரசிகன் தான்!// (இளங்கோ)

  “மக்களே” என இவர் எடுக்கறதை பார்த்தால் பெரிய கேப்டன் ரசிகர்
  போல் இருக்கே!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. குமரன்

  இப்போதெல்லாம் பொதுவாக “மக்களே” என்பது “மக்கழே” என்றே வழங்கப் பட்டு வருகிறது.

  வழக்கமாக “ழ” வராமல் வளக்கமாக ஆகி விடுவதுதான் வழக்கம்.

  இப்பொது சமீபகாலமாக “மக்களே”வில் “ள” வராமல் “மக்கழே” ஆகிப் போனது …..
  காலம் செய்த கோலமடா …
  கடவுள் செய்த மாயமடா …
  அந்தக் கடவுள் செய்த மாயமடா …

  டாஸ்மாக்கைக் கடவுளாகக் குடிமகனும் கும்பிடுகிறார்…
  அரசாங்கமும் கும்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *