BREAKING NEWS
Search

இந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! – சூப்பர் ஸ்டார் ரஜினி

இந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! – சூப்பர் ஸ்டார் ரஜினி

rajini-ndtv2

டெல்லி: வாழும் சிறந்த இந்தியர் விருதினை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

என்டிடிவியின் கிரேட்டஸ்ட் குளோபல் லிவிங் லெஜன்ட்ஸ் கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, சச்சின், ரஹ்மான் உள்ளிட்ட 25 சாதனையாளர்கள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் விருது கொடுத்து கவுரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

இந்த விழாவுக்கு வட இந்திய தலைவர்கள் பாணியில் உடையணிந்து வந்திருந்தார் ரஜினி. விருது பெற்றுக் கொண்டு  பேசிய சூப்பர் ஸ்டார், “சில சமயங்களில் அதிசயங்கள் நடக்கும். பாருங்கள், ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவரும் சாதனையாளர்களுடன் ஒரே மேடையில் அமர முடியும் என்பது அதிசயம்தானே!

இந்த கவுரவத்தை எனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட், கே பாலச்சந்தர் சார், தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இவர்கள் இல்லாமல் இந்தப் பெருமை இல்லை, நன்றி (“Miracles do happen. See an ordinary bus conductor sharing the dais with the greatest living legends is a miracle. I dedicate this award to my brother, my guru Balachander and the Tamil people. Without their support I wouldn’t be here, Thank you”),” என்றார்.

rajini-ndtv3

-என்வழி ஸ்பெஷல்
16 thoughts on “இந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! – சூப்பர் ஸ்டார் ரஜினி

 1. Deen_uk

  தலைவர் படம் வரவில்லையே என எனக்கிருந்த கவலை மறைந்து விட்டது.தலைவர் பிறந்தநாள் தருணத்தில் இப்படி ஒரு கவுரவம் தலைவருக்கு கிடைத்தது மிகுந்த சந்தோசமாக உள்ளது..தலைவரின் பிறந்தநாள் பரிசாக இந்திய மக்கள் கொடுத்த அன்பு பரிசு இது.தலைவர் மென்மேலும் புகழுடனும் ஆரோக்கியத்துடன் வாழவும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துக்கள் தலைவா…

 2. Jey

  தலைவருக்கும் நமக்கும் இதைவிட பெருமை இருக்க முடியாது! வாழ்த்துகள் தலைவா…

 3. Dinesh Murugesan

  பெருமிதம் கொள்கிறேன் தலைவா …… மறுபடியும் ஒரு முறை உணர்த்தி விட்டீர் இந்த உலகிற்கு நீங்கள் யார் என்று .

 4. saktheeswaran

  மரியாதை தானாகவே தேடி வருவது சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே

 5. saktheeswaran

  ரஜினி அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து மத்திய அரசு அவரை கௌரவிக்க வேண்டும்

 6. J.Venkatesh

  உங்களை தலைவராக பெற்றதுக்கு என்ன தவம் செய்தோம் . கடவுளே அவருக்கு நல்ல உடல்நிலை , சந்தோசம் கிடைக்க அருள் புரிவாய் .

 7. நாஞ்சில் மகன்

  மிகச்சிறந்த இந்தியர் விருது: தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்து ரஜினி நெகிழ்ச்சி7

  பிரபல செய்தி சேனலான என்டிடிவி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. தனது வெள்ளிவிழாவையட்டி அந்த சேனல் தனது நேயர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் 25 பேரை மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறந்த இந்தியர்களுக்கு விருது வழங்கினார்.
  விருதை பெற்றுக்கொண்ட ரஜினி பேசியதாவது: மனித வாழ்க்கையில் எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். எனக்கு அடிக்கடி நடக்கிறது. அந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சாதாரண பஸ் கண்டக்டராக இந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான். எனக்கு தாயும் தந்தையுமாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட், என் குரு பாலச்சந்தர், என் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சர்ப்பிக்கிறேன்.
  இவ்வாறு ரஜினி பேசினார்.

 8. Rajadurai

  tamilan perumaiyai ippadi kattanum. Rajini ovoru asaivum mattrathai erpatuthum sakthi kondathu. kalai mattrum anmigathai makkalitam parapum sakthi ulla thalavaruku bharatha ratna vegu viraivil kidaikum ena nambukiren.

  Indians call him the ‘God’ of cricket but Sachin Tendulkar is clearly in awe of superstar Rajinikanth. The 40-year-old retired cricketing legend saluted the film star by saying he was ‘floored by Rajini sir’s humility’

  சச்சின் சொன்னது…..
  இருவரும் முதல் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் யங்கர்ஸ் மற்றும் ரிடைர்மென்ட் காரணமாக சச்சின் தலைவருடன் பகிர்ந்து உள்ளதாக சொன்னது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

  http://www.ndtv.com/video/player/news/floored-by-rajinikanth-s-humilty-says-sachin-tendulkar/301425

 9. srikanth1974

  என் அன்புச் சகோதரர் திரு.deen uk அவர்கள் சொல்வதுபோல்
  தலைவருக்கு இந்திய மக்கள் கொடுத்த பிறந்தநாள் பரிசுதான்
  இந்த விருது.

 10. மிஸ்டர் பாவலன்

  உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் இதைப் போன்ற விருதுகள்
  கிடைக்க வாழ்த்துகிறேன் – நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *