BREAKING NEWS
Search

கலாமை பற்றி நான் சொன்னதை திரித்துப் பேசுகிறார்கள்! – கருணாநிதி

கலாமை பற்றி நான் சொன்னதை திரித்துப் பேசுகிறார்கள்! – கருணாநிதி

சென்னை: அப்துல் கலாம் பற்றி அந்த சூழலுக்கேற்ப நான் சொன்னதை சிலர் திரிக்கப் பார்க்கிறார்கள், என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும், அடுத்த குடியரசுத் தலைவருக்கான யுபிஏ வேட்பாளர் பிரணாப் முகர்ஜி முதன் முதலாக வருகிற 30-ந் தேதி சென்னை வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருக்கிறதே?

பதில்: எனக்குத் தெரியாது.

‘கலாமை மதிக்கக்கூடியவன் நான்’

கேள்வி: உங்கள் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: பிரகாசமாக உள்ளது.

கேள்வி:- புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளருக்கு “டெபாசிட்” கிடைத்திருப்பதைப் பற்றி?

பதில்: அதற்கெல்லாம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: “கலாம்” என்ற வார்த்தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி நீங்கள் கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் திசை திருப்புவது பற்றி?

பதில்: அந்த சூழலில் நான் சொன்ன ஒரு வார்த்தையை சில பேர், திசை திருப்ப முயலுகிறார்கள். அப்துல் கலாம் வகித்த உயர்ந்த பதவி மீதும், அவர் மீதும் நான் வைத்துள்ள மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவரே அறிவார். அவரை எப்போதும் மதிக்கக்கூடியவன் நான்.

கேள்வி: கடந்த முறை குடியரசு தலைவர் வேட்பாளராக இருந்த பிரதிபா பட்டீல் முதன் முதலாக தமிழகத்திற்குத்தான் வாக்கு கேட்க வந்தார். அது போல இந்த முறையும் பிரணாப் தமிழகத்திற்கு வருவாரா?

பதில்: வரும் 30-ந் தேதி சென்னைக்கு முதன் முதலாக வாக்காளர்களைச் சந்திப்பதற்காக பிரணாப் முகர்ஜி வருகிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வாக்குகளைக் கேட்பார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பதோடு, விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

கேள்வி: குடியரசு தலைவர் தேர்தல் குறித்து காங்கிரசில் குழப்பம் இருப்பதாக அத்வானி சொல்லியிருக்கிறாரே?

பதில்: நோ கமெண்ட்ஸ் (கருத்து சொல்ல விரும்பவில்லை).

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்




4 thoughts on “கலாமை பற்றி நான் சொன்னதை திரித்துப் பேசுகிறார்கள்! – கருணாநிதி

  1. குமரன்

    இது கருணாநிதியின் வழக்கமான பசப்பு விளக்கங்கள்தான்.

  2. பாவலன்

    ///இது கருணாநிதியின் வழக்கமான பசப்பு விளக்கங்கள்தான்./// (குமரன்)

    உண்மையில் கலைஞர் இப்படி ஏதாவது ஒரு “விளக்கம்” கொடுப்பார் என
    நான் எதிர்பார்த்தேன். அது சரியாகப் போய்விட்டது. நன்றி.

    -பாவலன்

  3. enkaruthu

    என்னை பொறுத்தவரை சிறுபான்மை மக்களளுக்கு ஆதரவு கொடுக்கும் கலைஞர் தன் நிலை மறந்தும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தும் சொல்லமாட்டார். இது நிதர்சனம்.இங்கே கமெண்ட் போடும் ஹிந்து மதத்தின் மீது தீவிரம் வைத்திருக்கும் சில நண்பர்கள் ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைபட்டுதாம் என்பதற்கேற்ப நல்ல நடிக்கிறார்கள்.

  4. Ganesh Shankar

    இந்த விடயத்தில் யாரும் மதத்தை இல்லை சிறுபான்மை,பெரும்பான்மை என்றெல்லாம் “எல்லாம் ஒருவரே என்பவர்கள்” இப்படி பார்க்கவில்லை.
    இதில் கூட இப்படி பார்க்க தோன்றும் என்று எவ்வாறு தான் தோன்றுகிறது என்று புரியவில்லை.

    மேலும் இப்படி பட்ட ஒருவருடைய தனிப்பட்ட விடயத்தை பற்றி கருணாநிதி போன்றவர்கள் தான் பார்பார்கள்.
    என்ன செய்வது,தனக்கு(குடும்பத்துக்கு) பதவிக்கும், பணத்துக்கும் இப்படி பட்ட பொழப்பு அவருக்கு.

    தன வாயில் கூட விஷம் வைத்திருக்கும் நபராக தான் இருக்கிறார்.அவருடைய பண்பு இதில் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *