BREAKING NEWS
Search

கோச்சடையான் வெற்றிக்குப் பிரார்த்தனை… 200 ரசிகர்கள் திருமலைக்கு நடைபயணம்!

கோச்சடையான் வெற்றிக்குப் பிரார்த்தனை… 200 ரசிகர்கள் திருமலைக்கு நடைபயணம்!

IMG_9962

திருப்பதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் கோச்சடையான் படம் பெரும் வெற்றி பெற வேண்டி சோளிங்கர் ரஜினி ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.

தலைவர் ரஜினி உடல் நலனுக்காக, அவரது படங்களின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் பாத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர். காரணம், இவர்கள் வெறும் ரசிகர்கள் அல்ல… ரஜினியே சொன்னதுபோல அன்பு மிகுந்த வெறியர்கள்!

IMG_9948
அவர் உடல்நலம் குன்றியபோது, மண்சோறு சாப்பிட்டனர். முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். முழங்காலில் மலைப் படி ஏறினர். கொளுத்தும் வெயிலில் கோவில்களுக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.

அந்த வகையில், இப்போது ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வெளிவரும் கோச்சடையானுக்காக பிரார்த்தனைகளை ஆரம்பித்துவிட்டனர். சில இடங்களில் கிடா வெட்டுடன் பூஜை, மக்களுக்கு விருந்து நடத்தியுள்ளனர்.

unnamed (2)

இப்போது சோளிங்கர் பகுதி ரஜினி ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு நடந்தே சென்று படத்தின் வெற்றிக்குப் பிரார்த்தனை செய்து கொண்டனர் (எந்திரன் பட வெற்றிக்காகவும் இதே ரசிகர்கள்தான் பல பிரார்த்தனைகளைச் செய்தனர்).

வேலூர் மாவட்ட ரஜினி மன்ற பொருளாளரும், சோளிங்கர் பகுதி நிர்வாகியுமான என் ரவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் நேற்று திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர்.

அவர்களுக்கு, திருப்பதியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பாதயாத்திரைக்கு வேண்டிய உதவிகளையும் செய்து உற்சாகப்படுத்தினர்.

IMG_9911

உலக அளவில் பெரிய வெற்றிப்படமாக கோச்சடையான் அமைய வேண்டும் என அவர்கள் பிரார்த்தனை கோஷங்கள் எழுப்பினர். பாதயாத்திரை முடிந்ததும் திருமலையில் சிறப்பு பூஜை நடத்தினர்.

இதுகுறித்து சோளிங்கர் என் ரவியிடம் கேட்டபோது, ” இந்திய சினிமாவில் ஒரு புதிய தொழில்நுட்பம் தலைவரால் அறிமுகமாவது எங்களுக்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்கள் அத்தனை பேருக்குமே பெருமை. ஒவ்வொரு தமிழனையும் தலைநிமிர வைத்திருக்கிறார் அவர். வெறும் பெருமை பேசுவதோடு போகக் கூடாது.. வர்த்தக ரீதியாக இந்திய அளவில், சர்வதேச அளவில் இந்தப் படம் சாதனைகளைப் படைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பாதயாத்திரை,” என்றார்.

இந்த பயணத்தின்போது குடிப்பழக்கம், புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்த பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர் ரஜினி ரசிகர்கள்.

-என்வழி
6 thoughts on “கோச்சடையான் வெற்றிக்குப் பிரார்த்தனை… 200 ரசிகர்கள் திருமலைக்கு நடைபயணம்!

 1. anbudan ravi

  தன்னலம் இல்லாத இந்த சகோதரர்களுக்கும் தலைவனுக்கும் ஆண்டவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.

  கோச்சடையானின் மாபெரும் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

  அன்புடன் ரவி.

 2. suresh kumar sampath

  தலைவர் ரஜினி உடல் நலனுக்காக மற்றும் கோச்சடையான் மாபெரும் வெற்றி அடைய திருப்திக்கு பாத யாத்திரை சென்று வந்த தலைவரின் அன்பு நெஞ்சங்களுக்கு admin@vellorerajinifans.com சார்பாக எண்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.இப்படிக்கு தலைவரின் அன்பு நெஞ்சங்கள்
  admin@vellorerajinifans.com
  20/1,Gandhi Road, Vellore:632004
  SH Kumar,Venkat Somu Jewellery,Suresh Kumar,GK Kumar,Prakash Babu H,.VR.Kannan,Arumugam,Sudhakar.R.G

 3. Deen_uk

  கோச்சடையான் இந்தி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தலைவரை புகழும் அமிதாப் அவர்கள்…லிங்க் கீழே..(தலைவரின் பணிவை இதில் காணலாம்!ரொம்ப நாள் கழித்து தலைவரை விழாவில் பார்ப்பது சந்தோசமாக இருந்தது.!)
  http://www.youtube.com/watch?v=gzR8SUFMdfs

  விழாவில் தலைவரின் சிறிய பேச்சு..! மற்றும் தலைவரை பற்றி இந்தி சினிமாவின் ஜாம்பவான்கள் பேசிய பேச்சு ..:

  http://www.youtube.com/watch?v=c0K-1zftVoU

  ஹாலிவுட் மற்றும் பாலிவுட் இரண்டிலும் கலக்கும் சேகர் கபூர் அவர்களின் பேச்சு:

 4. மிஸ்டர் பாவலன்

  //(தலைவரின் பணிவை இதில் காணலாம்//

  ரஜினியின் பணிவு சிறப்பு!
  அதே போல் – உலக நாயகன் கமல் அவர்களின் பணிவும்
  ஹாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்களையும் வியக்க வைக்கிறது..

  “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து” (வள்ளுவர்)

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 5. கணேசன் நா

  மே 9 முதல் கோச்சடையானின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *