BREAKING NEWS
Search

’10 மணிக்கு ஏரியா அலர்ட்… 7 நிமிட போன் பேச்சு… 10 நிமிடத்தில் ஐவரையும் கட்டி வைத்துக் கொன்றது போலீஸ்!’

‘கொள்ளையரைக் கட்டி வைத்து நேருக்கு நேர் பார்த்து சுட்டுக் கொன்றது போலீஸ்!’- அதிர்ச்சி தகவல்கள்

ங்கிக் கொள்ளையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஐவரை போலீசார் சுட்டுக் கொன்ற என்கவுன்டர் சம்பவத்தில், சென்னை போலீசுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் போலீசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வந்த பொதுமக்களில் கணிசமானோர், என்கவுன்டரில் எழுந்துள்ள சந்தேகங்கள் காரணமாக, போலீசார் அவசரப்பட்டு விட்டனர். உயிருடன் பிடித்து அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த என்கவுன்டர் நடந்தது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பிலேயே இப்போது சில உண்மைகளை கசியவிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட இலங்கையில் தமிழர்களை கட்டி வைத்து பின்னாலிருந்து சிங்களப்படையினர் சுட்டுக் கொன்றதற்கு நிகரான கொலையை போலீசார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது, நாடு முழுக்க அதிர்ச்சியையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தையும் தமிழக போலீசுக்கு பெற்றுத் தந்துள்ளது.

எப்படி நடந்தது என்கவுன்டர்?

வேளச்சேரியிலிருந்து கொள்ளையர் குறித்த தகவல் வந்ததுமே, சாதாரண உடை அணிந்த போலீஸ் டீம், வினோத் குமார் தங்கியிருக்கும் வீட்டை அடையாளம் கண்டு தீவிரமாகக் கண்காணித்தது. அதே சமயம் அந்தப் பகுதி முழுக்க இரவு 9 மணியிலிருந்தே போலீசார் அங்கங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

பத்துமணிவாக்கில், அந்தப் பகுதி பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கதவு, ஜன்னல்களைத் திறக்கக் கூடாது என வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டனர். சாலை, தெருக்களில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமும் அங்கே முற்றாக நிறுத்தப்பட்டது.

11 மணியளவில் உயரதிகாரிகள் தலைமையில் ஆயுதம் தாங்கிய போலீஸ்சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. ஒருசில நிமிட ஆலோசனைக்குப் பின், போலீஸ் டீம் அந்த மாடி வீட்டின் கீழ்போர்ஷன் கதவைத் தட்டியுள்ளது.

போலீஸை எதிர்பார்க்காத இளைஞர்கள் கதவைத் திறந்தனர். சடசடவென உள்ளே புகுந்த போலீஸ் துப்பாக்கி முனையில் அவர்களை வளைத்துள்ளது. அதிர்ச்சியில்  இருந்து விலகாத அவர்களிடம், வங்கிக் கொள்ளையில் அவர்களின் பங்கு பற்றி சில கேள்விகள் கேட்டது போலீஸ்.

அடுத்த நொடியே அவர்களில் ஒருவனை சட்டையைக் கழற்ற  வைத்து அவனது கைகளும் மற் றொருவனின் சட்டையால் அவனது கால்களும் கட்டப்பட, அவன் தரையில் உருட்டப்பட்டான். படபடவென துப்பாக்கி குண்டுகள் மூலம் அவன் என்கவுன்டர் செய்யப்பட்டான். கண்ணெதிரில் தங்கள் ஆள் சுடப்பட்டு சாவதைப் பார்த்து மற்றவர்கள் உறைந்து நின்றனர்.

அடுத்து ஒரு அதிகாரி வெளியே சென்று செல்போனில் 7 நிமிடம் பேசினாராம். போனில் வந்த உத்தரவுப்படி, கிடுகிடுவென மற்ற 4 பேரும் அதே பாணியில் கை, கால்கள் கட்டப்பட்டு தரையில் உருட்டப்பட்டனர். கீழே கிடந்தவர்கள், விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும், அவர்களுக்கு அவகாசமே கொடுக்காமல் வரிசையாக பட்பட்டென்று சுட்டு முடித்துவிட்டனர். 15 நிமிடத்துக்குள் மொத்தமும் முடிந்துவிட்டது.

சிறிய ரக கைத்துப்பாக்கியால் போலீசார் இந்த என்கவுன்டரை நடத்தியுள்ளனர்.  இந்த ரக துப்பாகிகளால் மிக அருகில் வைத்துதான் சுட்டுக் கொல்ல முடியும். எதிரிகளை ஜன்னல் வழியாக சுடுவது என்றால் ரைபிளால்தான் சுட முடியும். அப்போதுதான் அது ஜன்னலைக் கூட துளைத்துக்கொண்டு பாயும். போலீஸ் அப்படி ரைபிளால் சுட்டிருந்தால் சுவரெல்லாம் ரத்தம் சிதறியிருக்கும். அவர்களை கயிறுக்கு பதில் துணியால் கை, காலைக் கட்டியதற்கு காரணம் கட்டிப்போட்டு சுட்ட தடயங்கள் உடம்பில் இருக்காது என்பதற்குத்தான் என்கிறார்கள்.

அதேநேரம் அந்த இளைஞர்கள் போலீசாரை திருப்பிச் சுடவில்லை என்றும் அப்படி சுட்டிருந்தால், சுடப்பட்டவர்களின் உடம்பில் துகள்கள் படிந்திருக்கும், படிந்த இடம் கருகிப்போயிருக்கும். ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டாரா இல்லையா என்பதை ஜி.எஸ்.ஆர். என்கிற டெஸ்ட் மூலம் கண்டுபிடித்துவிடலாம், என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறந்த ஐந்து பேருமே பேண்ட்-சட்டை அணிந்தபடி இருந்திருக்கிறார்கள். மேலும் கால்களில் ஷூக்களும் உள்ளன. லேஸ் கூட கழற்றப்படாமல் கட்டியபடி இருக்கிறது. இப்படி இரவில் யாரேனும் தூங்குவார்களா என்று மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு போலீஸிடம் பதில் இல்லை.

அடுத்தடுத்த கொள்ளைச் சம்பவங்கள், நாளொன்றுக்கு குறைந்தது ஒரு டஜன் கொள்ளை, செயின்பறிப்பு என குற்றங்கள் தொடர்வதால்,  காவல்துறைக்கு பெரும்  அவமானத்தை மறைக்கவே ஆத்திரத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதனால்தான் யாரையோ திருப்திப்படுத்த இந்த என்கவுன்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் குழு அறிக்கை தந்துள்ளது.

ஆக, கொள்ளைச் சம்பவங்களிலிருந்து மக்களை திசை திருப்ப, மிகப்பெரிய என்கவுன்டரை பெரும் ஓட்டைகளுடன் செய்துவிட்டு, கையும் களவுமாக மாட்டிக் கொண்டு திருதிருவென விழிக்கிறது தமிழக போலீஸ்!

-என்வழி செய்திகள்
11 thoughts on “’10 மணிக்கு ஏரியா அலர்ட்… 7 நிமிட போன் பேச்சு… 10 நிமிடத்தில் ஐவரையும் கட்டி வைத்துக் கொன்றது போலீஸ்!’

 1. Manoharan

  என்னவோ காந்தியை சுட்டுக்கொன்ற மாதிரி பதறுகிறீர்களே. கொன்றது தப்பு என்று வைத்துக் கொண்டாலும் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை அடித்தவர்கள்தானே ..? உங்கள் மொத்த சேமிப்பும் நகையாக மாற்றப்பட்டு வங்கியில் லாக்கரில் வைத்திருந்து அது திருடப்பட்டு இருந்தால், அதனால் உங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம் தடைபடும் நிலை இருந்தால் நீங்கள் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவீர்களா ? என்னை பொறுத்தவரை கொள்ளையில் என்றில்லை, கொலை, மானபங்கம், கொள்ளை, ஈவ் டீசிங் என வகை பிரித்து ஒவ்வொரு வகைக்கும் ஒருவனை போட்டு தள்ளினால் பின் அடுத்தவனுக்கு அதை செய்ய எப்படி தைரியம் வரும் என்று பார்க்கலாம். இங்கே பாதிக்கப் பட்டவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை விட குற்றவாளிகளுக்கு கிடைக்கும் ஆதரவு அதிகம்.

 2. senthilbabu

  அந்த ஐந்து பேரும் கைது செய்ய பட்டால் அவர்களுக்கு வாதாட வக்கீலும் வருவார்கள் அதை நியாப்படுத்த …. சுட்டு தள்ளுவதில் தவறே இல்லை. இல்லை என்றால் இவர்கள் தண்டிக்கப்பட இந்த நாட்டில் வாய்ப்பே இல்லை.

 3. kannan

  என்றல் நாட்டில் கொள்ளை அடிக்கும் அரசியல் வாந்திகள் எல்லாம் சுட்டு கொல்லலாமா?
  விசாரணை
  என்றால் கசாபை ஏன் யுன்னமும் கொள்ளவில்லை …
  மனித இனத்தைவிட அவன் வைத்துள்ள பணத்துக்கு இவளோ மரியதைய ….
  அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் …தான் ஆனால் தப்பு செய்யும் அனைவரையும் கொள்ளலாம் என்றல் அபுர என்ன இதுக்கு கோர்ட் சட்டம் மட்டை எல்லாம் …………….
  அரசியில் வாதி கொள்ளை அடிச்சா வாயா பொளந்துகிட்டு நாம் ஒட்டு போடுவோம் இதன் நாம ….

 4. S.ALAVUDEEN

  ஒவ்வொரு என்கவுன்ட்டர் பின்னாலும் ஆயிரம் ஆயிரம் உண்மைகள் மறைக்கப்படுகின்றது…….
  சின்ன திருடன் சிக்கிகொள்கிறான்…..
  பெரிய திருடன் தப்பி போகிறான்

 5. தினகர்

  “சின்ன திருடன் சிக்கிகொள்கிறான்” .. ஹலோ வங்கி கொள்ளையன் சின்ன்த்திருடனா? இதெல்லாம் ரொம்ப ஒவரா தெரியல்லீங்களா .

 6. மிஸ்டர் பாவலன்

  ///“சின்ன திருடன் சிக்கிகொள்கிறான்” .. ஹலோ வங்கி கொள்ளையன் சின்ன்த்திருடனா? இதெல்லாம் ரொம்ப ஒவரா தெரியல்லீங்களா .////

  ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் கேம்ஸ் ஊழல், ஆதர்ஷ் ஊழல்,
  தேவாஸ் ஊழல் என இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது
  அவர் கண்ணுக்கு வங்கிக் கொள்ளையன் சின்னத் திருடனாகத்
  தெரிகிறான். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 7. தினகர்

  “இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது.”

  அப்பாடா, காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ள உண்மையை எப்படியோ ஒத்துக்கொண்டீர்களே. அது வரைக்கும் நல்லது தான். இடையிலே வாஜ்பாய் கொஞ்ச காலம் ஆண்டார் அப்போது தான் வளர்ச்சின்னு நீங்க ஒரு வேளை சொல்ல நினைச்சீங்கன்னா இதையும் கேட்டுக்கோங்க.

  முந்தைய நரசிம்ம ராவ் ஆட்சியில் இந்திய புதிய பொருளாதாரத்தின் தந்தை டாக்டர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய அத்தனை திட்டங்களையும் ஈ அடிச்சான் காப்பி போல் நடைமுறைப்படுத்தி மன்மோகன் சிங்கிற்கு பெருமை சேர்த்தவர் தான் வாஜ்பாய்..

 8. மிஸ்டர் பாவலன்

  ///..இந்திய புதிய பொருளாதாரத்தின் தந்தை டாக்டர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய அத்தனை திட்டங்களையும்…///

  Twitter-ல் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி (@Swamy39) ஜனதா
  பார்ட்டியில் புதிய பொருளாதாரத்தை (globalization போன்றவை)
  அவர் propose செய்ததாகவும் (அவர் Harvard-ல் பல ஆண்டுகள்
  ப்ரொபசராக பணி செய்தார்), பின்னாள்களில் மன்மோகன் அதை
  implement செய்து பெயர் வாங்கியதாகவும் குறிப்பிட்டு வருகிறார்.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 9. anaani

  ///சுட்டு தள்ளுவதில் தவறே இல்லை. இல்லை என்றால் இவர்கள் தண்டிக்கப்பட இந்த நாட்டில் வாய்ப்பே இல்லை.///

  இந்தச்சிந்தனை எங்கு கொண்டு சேர்க்கும் என்பதை “அம்பேத்கர்” இருந்தால் கேட்டாவது அறிந்துகொள்லலாம்?

 10. மிஸ்டர் பாவலன்

  ///இந்தச்சிந்தனை எங்கு கொண்டு சேர்க்கும்
  என்பதை “அம்பேத்கர்” இருந்தால் கேட்டாவது
  அறிந்துகொள்லலாம்?////

  அம்பேத்கார் ஒரு சட்ட மேதை. நாட்டிற்கு அவர்
  பல தொண்டு ஆற்றியிருக்கிறார். அவர் செய்த
  சட்ட சீர்திருத்தங்கள் பற்றி வழக்கறிஞர்
  குமரன் சில வரிகள் எழுதினால் நலம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *