BREAKING NEWS
Search

தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி? விநியோகஸ்தரின் ஒப்புதல் வாக்குமூலம்!!

தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி? விநியோகஸ்தரின் ஒப்புதல் வாக்குமூலம்!!

thalaivar poster

சென்னை: தமிழகத்தில் லிங்கா படத்தின் வசூல் எவ்வளவு என்பதை, அதை வாங்கி விநியோகித்த ஒருவரை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்.

அவர் கணக்குப்படி இந்தப் படம் ரூ 140 கோடி வரை தமிழகத்தில் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்துள்ளது!!

மெரீனா பிக்சர்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம் மூலம் திருச்சி தஞ்சாவூப் பகுதியில் லிங்கா படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லிங்கா படத்தின் வசூலில் 21 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

படத்துக்கு வரிவிலக்கு கொடுத்ததன் மூலம் இந்தத் தொகை தமிழக அரசுக்கு இழப்பாக ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள்தான் இத்தனை நாளும் லிங்கா படத்தில் எங்களுக்கு பெரும் நஷ்டம் என்று கூறி பிச்சையெடுக்கும் போராட்டத்தை அறிவித்து வந்தனர்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும், ஒரு படத்தின் தியேட்டர் வசூல் எவ்வளவோ, அதற்குத்தான் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது அல்லது விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் யு சான்று பெற்ற படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

அப்படித்தான் விலக்குப் பெற்றது லிங்கா.

இந்த நிலையில், அந்தப் படம் வெளியானபோது குறைந்தது ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 1000 வரை டிக்கெட் விலையை நிர்ணயித்து வசூல் செய்து பெரும் லாபம் பார்த்தனர் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.

ஆனால் படம் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என மூன்றாவது நாளிலிருந்தே திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்ததாக லிங்கா தயாரிப்பாளர் குற்றம் சாட்டினார்.

இப்போது லிங்கா நஷ்டப் பிரச்சினை, பிச்சையெடுப்பது போன்றவற்றை விட்டுவிட்ட லிங்கா விநியோகஸ்தர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, லிங்காவுக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரி விலக்கை ரத்து செய்துவிட்டு, பட வசூலில் ரூ 21 கோடியை வரியாக வசூலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஒரு படம் ரூ 21 கோடியை கேளிக்கை வரியாகச் செலுத்த வேண்டும் என்றால் அதன் உண்மையான வசூல் எவ்வளவு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர்கள் சொல்வதுபடி கணக்கிட்டுப் பார்த்தால்..

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் படி புதிய படங்களுக்கு 15 சதவீதம் வரை வசூலிக்கலாம். ரஜினியின் லிங்கா படம் ரூ 140 கோடி வசூலித்திருந்தால் மட்டுமே, அதில் 15 சதவீதமான ரூ 21 கோடியை வரியாகக் கட்ட முடியும்.

‘ஒருவேளை ரஜினி படம் என்பதால் அதிகபட்ச கேளிக்கை வரி’யாக 30 சதவீதம் விதியுங்கள் என இந்த விநியோகஸ்தர்கள் புது வழக்கு தொடர்ந்தால்கூட படத்தின் மொத்த வசூல் ரூ 70 கோடிக்கு மேல் என வருகிறதே!

இதையொட்டி ரஜினியின் ரசிகர்கள் பகிரங்கமாக சமூக வலைத் தளங்களில் கீழ்வரும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

லிங்கா விநியோகஸ்தர்கள் கூறுவதில் எதுதான் உண்மை..?

படம் படு நஷ்டம் என்றார்களே… அதுவா?

அல்லது படம் ரூ 140 கோடியைக் குவித்திருக்கிறது, அதில் ரூ 21 கோடியை தமிழக அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்கிறார்களே, அதுவா?

அப்படிப் பார்த்தால் வசூலித்த தொகை முழுவதும் யாரிடம் இருக்கிறது? தியேட்டர்காரர்களிடமா, விநியோகஸ்தர்களிடமா? மீதிப் பணத்தை எப்போது திருப்பித் தருவார்கள்?

சரி வரி கட்டுவதாகவே வைத்துக் கொள்வோம்.. அதைக் கட்ட வேண்டியது தயாரிப்பாளரோ, ரஜினியோ அல்ல.. தியேட்டர்கள்தானே!

இதற்கான பதிலை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் தரப்பு வெளியிட்டால், நாமும் வெளியிடத் தயாராக உள்ளோம்!

-என்வழி

 
14 thoughts on “தமிழகத்தில் லிங்கா வசூல் ரூ 140 கோடி? விநியோகஸ்தரின் ஒப்புதல் வாக்குமூலம்!!

 1. Vasanth

  இப்படி இல்லாத ஒன்ன சொல்லி … அதுக்காக பணம் போடு புப்ளிசிட்டி பண்றான் பா அவன்..
  இதே பணத்தை செலவு பண்ணா. ரெண்டு நாள் Pizza Ad மாறி போடுவனா? டிவில?
  இப்போ இத பத்தி எழுதுற FB, Magazines, National Magazines, TV debates, this comment, website.. all places he has his name stapled to this topic.
  This is his plan.
  Thalaivar கிட்ட ஓரசினா international popularity கிடைக்கும்னு பிளான் பண்ணான்! செஞ்சுடான்… Everyone became helpless and he has executed a well laid plan!

 2. Vasanth

  செம Calculation!
  இது ஒரு முகம் இல்லாதவன், முகம் தேட செய்யும் சதி !

 3. sethu

  Dear சார்,

  very good information. please bring out the real motive of that idiot singararavelan & group. we should make public understand how selfish vijay is also involved with them by publishing in all newspapers.

 4. மிஸ்டர் பாவலன்

  ஒரு பிராடு பய தொடர்ந்து உளறி வருகிறான்! அவன் சுய ரூபம்
  விரைவில் மக்கள் அறிவார்கள்! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 5. ramesh

  தலைவரின் unmaiyana அன்புக்கு கட்டுப்பட்டு …அனைத்து ரசிகர்களும் அமைதிகாத்து உள்ளார்கள்…..தலைவர் மட்டும் ஒரு வார்த்தை சொல்லடூம்…..அப்புறம் பாருங்கள்….இந்த சிங்கரவேலங்களை என்ன என்ன பண்ணுவார்கள் நம் ரசிகர்கள்………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்………………..தலைவா….நீ வாழ்க……..ரஜினி என் கடவுள்…………..

 6. kumaran

  புலி பதுங்குவது பாய்வதற்காக என்பது தெரியாமல் தலைவரை அவமதித்து வருகிறார்கள் (சிலர் ), கண்டிப்பாக அசிங்காரவேலன் & கோ சிக்குவார்கள் .

 7. Vazeer Kuwait

  இந்த ஆளை சும்மா விடக் கூடாது நடுத்தெருவுக்கு கொண்டு வரணும். ராக்லைன் வெங்கடேஷும் ஒரு நய பைசாவும் தரக்கூடாது.

 8. S.dhinesh kumar

  தலைவர் next படம் ஈடுதுதன் இவனுங்க வாய moodanum

 9. மிஸ்டர் பாவலன்

  ரஜினி அடுத்த படம் பற்றி ஒரு announcement கொடுத்தாலே போதும்.
  தலைப்பு, டைரக்டர், தயாரிப்பாளர் பிறகு பார்த்துக்கலாம்..
  சிங்காரவேலன் ஒடுங்கி அடங்கியபின் தான் அடுத்த படம் என்றால்
  அதற்கு சில ஆண்டுகள் ஆகும்.. ரசிகர்கள் பொறுமை இழக்கலாம்..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 10. sethu

  What happened sir, no new post/updates from you in envazhi. I visit daily to see whether any new information is there about thalaivar. pls post regularly so that we rajini fans can read and know what is happening.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *